Monday, June 29, 2009

சீக்கிரமாகவே பிரிவோமா..

சேர்ந்தால் பிரிவு நிச்சயம்
என்று தெரிந்துமே
பழக ஆரம்பித்தோம்
ஆனால்
அந்தப் பிரிவே
இவ்வளவு சீக்கிரமேவா..?

எதிர்பார்ப்பே இல்லாத
உறவுகளில் காதலும்
ஒன்று என்பார்கள்
ஆனால்
அந்தக் காதலுக்காக
பல எதிர்பார்ப்புகளை
விட்டு வரமுடியாதடா...?

Sunday, June 28, 2009

நேர மாற்றம்...

என்னடா இவள் நேர மாற்றம் என்றாலே என்று பாக்கிறீங்களா... ? கொஞ்சம் பொறுத்திருங்க காரணத்தை சொல்றேன்..
அப்படியே கீழ போங்களேன்,,,, (என் கல்லூரியில் நடக்கின்ற சோகக் கதை..)அது தாங்க பங்களாதேஷ் இன் அரசாங்கம் பங்களாதேஷ் நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரித்துள்ளது (அது தான் இப்ப ஸ்ரீ லங்கா மற்றும் இந்தியா ஆக்கிய நாடுகளுக்கும் பங்களாதேஷ் க்குமான நேர இடைவெளி ஒன்றரை மணித்தியாலம் (ஆமா நேரம் அதிகரிப்பை எண்டா இவள் இப்ப சொல்றாளே என்று பாக்கிறீங்களா.. ஒரு முக்கியமான விடயம் வரப் போகிறதே...)
அது வேறை ஒன்றும் இல்லை. வெளிநாட்டவர்களில், காதலில் விழுந்தவர்கள் (அது தானுங்க காதலர்கள் இருப்பவர்கள்) படும் பாடு இருக்கே, கொடுமையுங்க.. என்ன அது என்று ஆவலா... அது வேறு ஒன்றுமல்ல. வழமையாக தெற்காசிய நாடுகளில் அரசாங்க வேலையாகவோ அல்லது கல்லூரிகளோ முடிவது கிட்டத் தட்ட ஒரே நேரமாகவே இருக்கும், ஆனால் இப்போது பங்களாதேஷ் இல் இருப்பவர்களுக்கு எல்லாமே முன்கூட்டியே முடிந்துவிட்டும்.. அதனால் காதலர்களுடன் chat பண்ணுகின்ற நேரங்களில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. காதலர்களால் chat பன்னாவலும் இருக்க முடியாது, அதே நேரம் நேர அட்டவணையுடன் படிப்பவர்கள் நண்பர்களுடன் படிப்பவர்களுக்கும் கொஞ்சம் சிக்கல் தான். உதாரணமாக பங்களாதேஷ் இல் 3.30 pm என்றால் ஸ்ரீ லங்காவில் 2.00pm ஆக இருக்கும், அங்கே iruppavarkalaal sri lanka nerappadi 3.00 pm க்குத் தான் வர முடிகிறது, அப்போது பங்களாதேஷ் இல் 4.30 ஆகிவிடும் அதனால் செய்கின்ற வேலை எல்லாமே ஒரு மணித்தியாலத்தால் தாமதமாகிக் கொண்டே போகும். வள்ளியாக தேநீர் இடைவேளைக்கு முன் chatting முடியும் என்றால் இப்போதெல்லாம் இரவு உணவு நேரம் தான் முடிகிறது. இதாவது பரவாயில்லை எப்படியாவது வீட்டு வேலைகளை இரவு முளித்திருந்தாலாவது செய்வார்கள்.
வழமையாக 9.30pm இலிருந்து 11.00 pm மட்டும் chat பண்றவங்க பாடிருக்கே, அவர்களின் காதலர்கள் இப்போதும் வழமையான நேரத்துக்குத் தான் வர முடிவதால் பங்களாதேஷ் இல் 10.00 pm ஆகிவிடுவதால் ஒரு மணித்தியாலங்களே chat பண்ண முடிகிறது. ஏன் 11.00 pm க்கு அப்புறமாக chat பண்ணலாமே என்று நீங்க கேட்ப்பது புரிகிறது. அதுக்கும் காரணம் இருக்கே. எண்கள் கல்லூரியில் 11.00 pm க்கு அப்புறமாக கணணி பயன்படுத்த அனுமதி கிடையாது.
இந்த விடயத்தில் நான் அதிச்டசாளிங்க. எனக்குத் தான் காதலன் இல்லையே. அதனால் நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவிட முடிகிறது.
நண்பர்களுடன் இருக்கும் போது ஒரு தெம்பு எப்போதுமே எமக்குள்ளே இருக்கும். அது போதும் எனக்கு.. (காதல் அனுபவம் இருப்பவர்கள் எனக்கு அடிக்க வரக் கூடாது)

Saturday, June 27, 2009

கடவுளை எப்போதும் கும்பிடும் நீ
காதல் விடயம் பேசும் போது மட்டும்
கிட்டவே கடவுளைக் கூப்பிடாதது
கீழ்த் தரம் என்பதா...
குறும்புகளுடன் இருந்த நீ
கூறிய அம்பாக மாறியதற்கு காரணமும் அவனா
கெட்டவர்களானோம் உன் காதால்
கேட்பதற்கு யாரும் இல்லை என்றா
கையைப் பிடிக்கவே முடிந்தது
கொடுமையடி
கோடையில் இலையுதிர்வது போல
கௌரி யாக இருந்த நீ காந்தமாக அவனால் இழுக்கப் பட்டது தான் ஏனோ..?

Thursday, June 25, 2009

நினைவுகள்

நிறைய நாட்களின் பின் என் கிறுக்கலைப் படிக்க வந்தவங்களே... கவனம்...

பாடப் புத்தகம்
தூக்கும் நேரம் எல்லாம்
உன் நினைவு..
காரணம் கேட்கிறாயா
படிக்க வந்து தானே
உன்னைப் படிக்க ஆரம்பித்தேன்
*************************************
நித்திரைக்காக எதையுமே
தூக்கி எரியும் நான்
உனக்காக நித்திரையைத்
தூக்கி எறிந்தேன்
நித்திரை என்னுடன்
கோவித்துக் கிண்டு
வர மாட்டேன் என்கிறதடா...

பி.கு:பரீட்சை காரணமாக வலைத் தளப் பக்கம் வர முடியாமல் இருந்தது. (அப்படி எண்ணத்தைத் தான் படிச்சு கிளித்திட்டீங்க என்றெல்லாம் கேக்கக் கூடாது) இன்னும் பதினான்கு நாட்களில் வீட்டுக்குப் போக இருக்கிறேன், அதனால் இன்னும் ஒரு மாதத்துக்கு பதிவுகள் குறைவாகவே இருக்கும். அப்புறமாக வந்து பார்க்கலாம்..