Sunday, July 26, 2009

நினைவுகள்

பள்ளிப் பருவமா? இதைத் தான் நான் இப்போது அதிகமாக நினைத்துக் கொள்வேன், காரணமே இல்லாமல். எனக்கு இது இரண்டாவது தொடர் பதிவு. என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்தவர் சுபாங்கன் அவர்கள். நன்றிகள் கோடி (காரணம் என்னை எல்லாம் தொடர் பதிவுக்கு அழைக்கிறீங்க...)

பள்ளிப் பருவம் என்று எடுத்துக் கொண்டால் சொல்வதற்கு நிறைய விடயங்கள் இருக்கும், ஆனால் எதை சொல்வது என்று தெரியவில்லை.
பள்ளிப் பருவத்தின் ஒவ்வொரு வருடத்திலும் நிகழ்ந்த ஒவ்வொரு விடயங்கள் உங்களுடன் இப்போது...

நாட்டு சூழலின் காரணமாக அளவெட்டி, வலிகாமம் இலிருந்து இடம் பெயர்ந்து துன்னாலை, கரவெட்டி க்கு எனது நான்காவது வயதில் என் அம்மாவுடனும் அண்ணாவுடனும் வந்தேன். அழுகையுடன் ஆரம்பமான பாலர் பாடசாலை அறிமுகங்கள் இப்போதும் இனிமையான நினைவுகளாக (காரணம் கேக்கிறீங்களா என்னுடன் அப்போது படித்த நண்பர்கள் சிலர் இப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள்). கற்றல் என்பது என்ன என்று தெரியாத காலத்திலேயே கற்றது வேடிக்கையாக இருந்தாலும், அதுவே இன்றைய கல்விக்கு அத்திவாரம் என்கின்ற போது பெருமையாக இருக்கின்றது.

பாலர் பாடசாலையை முடித்த பின்னர், என் அண்ணா படித்த காசிநாதர் வித்தியாலயத்திலேயே என்னையும் அம்மா சேர்த்துவிட்டார். ஆரம்ப காலத்திலேயே அம்மாவுடன் பாடசாலைக்கு சென்றிருந்தாலும் பின்னர் அண்ணாவுடன் செல்லப் பழகிக் கொண்டேன்.

இரண்டாவது ஆண்டிலே வகுப்பறைகள் மாறுவது புதிய விடயம் - முதலாம் ஆண்டில் ஒரு வகுப்பில் விடுவார்கள், அப்புறம் ஒரு வருடத்தின் பின்னர் வேறு இடத்துக்கு மாற வேண்டும் . இரண்டாவது ஆண்டில் அது தான் முதல் அனுபவம், வகுப்பு மாறி அதற்காக எம்மைப் பழக்கப் படுத்த வேண்டும் (இங்க தாங்க எனக்கு பிரச்சனையே வந்திச்சு). என்னால் அந்த வகுப்பறையை சாதாரணமாகப் பழக்கப் படுத்திக் கொள்ள முடியவில்லை.

அப்புறம் மூன்றாவது ஆண்டு. அந்தப் பாடசாலையின் நடுத்தர ஆண்டு, நன்கே பாடசாலை பலகிவிட்டலும். தவணை முடிவில் அம்மாவின் பின்னர் நின்று கொண்டு தான் ஆசிரியரிடம் மதிப்பெண் அட்டையை வாங்குவேன் (ரிப்போர்ட்) (ஏனடி நீ அம்மாவின் சீலையை விட்டு எப்ப வெளியே வருவாய் என்று அதிபர் கேட்டது இப்போதும் மனதிலே...)

அப்படியா நான்காம் ஆண்டுக்கு வந்தாச்சு. முன்பெல்லாம் கோவம், நேசம் என்று பலருடன் சண்டை போடும் காலம். அப்படித் தான் ஒரு நடனத்துக்காக என் தோழியின் அத்தையின் உதவியை நாடினேன், சில நாட்களின் பின்னர் அவளுடன் கதைக்காமல் விடவே அவள் என் அத்தை தானே உனக்கு அன்று சேலை கட்டிவிட்டார், அதற்கான கூலியத் தா என்று (இப்போது நினைக்கையில் சிருப்பாக இருந்தாலும், அக்காலத்தில் அது பெரியதே....)

ஐந்தாம் ஆண்டு, ச்சொலர்ச்திப் (Scholarship), நாங்கள் படிப்பதை விட எங்கள் பெற்றோர்கள் தான் படிப்பார்கள். என்னை விட என் அம்மா கஷ்டப்பட்டார் என்று தான் சொல்லுவேன். எவ்வளவு தூரம் படித்தேன் என்று தெரியவில்லை, சித்தியடைந்ததால் வந்த பணம் மாத்திரம் என் படிப்புக்கு கை கொடுத்தது என்பேன்.

அந்நாளில் அதிகம் பேசாதவளாக இருந்தாலும் இந்நாளில் அதிகம் பேசுபவளாக மாற்றிக் கொண்டேன் (அப்படியே பேசாமல் இருந்திருக்கலாமோ என்று நினைப்பதும் உண்டு - முடிவதில்லை)
இப்படியே நீண்ட வாழ்க்கையில் இப்போது பல மாற்றங்கள். அந்த சிறு வயது வாழ்க்கையையே இப்போதும் விரும்புபவளாக இருந்தாலும்முடியாதவளாக..


இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பவர்கள்
ஹிஷாம்
சதீஷன்
கலை

பி.கு: இந்த பதிவுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. என் வாழ்க்கையிலே என்னால் மறக்க முடியாத பதிவு; காரணம் நான் முதன் முதலாக வீட்டிலிருந்து இந்தப் பதிவை எழுதியுள்ளேன்..

Tuesday, July 7, 2009

பயணம்

இந்தப் பயணம் ஒன்று தான் எப்போதுமே எங்களுடன் இருப்பது என்றாகிவிட்டது. நாங்கள் தவிர்க்க நினைத்தாலும் அதுவாக வந்து அமைந்துவிடும். பயணங்கள் பல காரணங்கள் இல்லாமல் ஏற்பட்டாலும், சிலருக்கு அது வாழ்க்கையாகவே அமைகிறது; குறிப்பாக தமிழர்களுக்கு.
ஏன் இதை எல்லாம் சொல்கிறாள் என்று நினைக்கிறீங்களா? காரணம் இருக்கிறது. வாழ்க்கையில் பல இடங்களுக்கு சென்றிருந்தாலும், வாழ்க்கையிலே எனக்கான மூன்றாவது முக்கிய பயணம் இப்போது நான் ஸ்ரீ லன்காவுக்குப் போவது தான்.
பயணம் ஒரு படிப்பனை. இதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்க.
சொல்ல வந்த விடயத்தை சொல்லவில்லையே. நான் வரும் வியாழக் கிழமை ஊருக்குப் போகிறேன், இவ்வளவு நாட்களாக பறேட்சை காரணமாக வலைத் தளப் பக்கம் வர முடியவில்லை, இனி ஊருக்குப் போனால் பதிவுகள் குறைவாக இருக்கும் (இருக்காது என்று உண்மைய சொல்ல விரும்பல்ல), (என்ன நீ உருப்படியாவ எழுதிறியா, நீ எழுதினாலும் எழுதாவிட்டாலும் ஒன்று தான் என்கிறீங்களா?)
பயணம்
உறவுகளை
உருவாக்கவும்
உன்னதமாக்கவும்
உதவிய உன்னை
உதருவதா? உறவாக்குவதா?

உறவுகளின் வலிமை
உணர்வுகளின் தேடல்
உயிரின் மகத்துவம்
யாவையும் பரிசாக்கப் பட்டது
உன்னாலே...

Monday, July 6, 2009

மீண்டும் கிடைத்த பொக்கிஷம்

தவறுகள் எங்கு என்பதை விட
தவறைத் திருத்திக் கொண்டமையே
உன்னையும் என்னையும்
சேர்த்தது

நண்பர்களிடையே என்ன
பேதம் என்று நினைத்த காலம் போய்
எதிரிகளாகவே மாற்றப் பட்ட காலம்
யாராலும் மறக்கப் பட முடியாதது

நண்பர்களிடையே

அதிக பாசம்
நிரம்பிய நம்பிக்கை

இவை தான் மறுபடியும் நம்முடன்

யார் வந்தாலும் பிரியோமடி இனி
நம்முடன் எத்தனை உறவுகள் சேர்ந்தாலும்
நம் உறவு என்றுமே
நிலைக்கும் நம் வாழ்வின் இறுதி வரை...

Thursday, July 2, 2009

சந்தோசம்...

இந்த மாதம் நல்ல மாதமாக மாறி இருப்பதற்கு பல காரணங்கள்..

என்னடா இவள் பல காரணங்கள் என்றாளே என்கிரீன்களா?

என்ன செய்ய பல கவலையான நிகழ்வுகளை சுமந்து வந்தது இந்த 16 மாதங்கள்..... (என்ன எந்த வித சந்தோசமான விடயங்களும் நடந்ததே இல்லையா என்று கேக்கிறீங்களா.......... நடந்தன சந்தோசமான விடயங்களை விட சோகமான விடயங்களா அதிகமாக நடந்தன.

வாங்க காரணங்களைப் பாத்திடலாம்..


  • ஊருக்குப் போறேன்

  • அம்மா, அண்ணா ஆகியோரின் அருமை புரிந்த பின்னர் அவர்கள் இருவரையும் பார்க்கப் போகிறேன்.

  • அதிக நாட்களின் பின்னர் என் நண்பர்களைப் பார்க்கப் போகிறேன்

  • கொழும்பை நண்பிகளுடன் சுத்தியதில்லை. எங்கு போனாலும் உறவுக் காரர்களுடன் தான். இந்த முறை நண்பிகளுடன் ஊர் சுத்தும் வாய்ப்புக் கிட்டியுள்ளது

  • இங்கு வந்தவுடன் கோயிலுக்குப் போவது குறைந்துவிட்டது. அப்படி சென்றாலும் மன நின்மதி கிட்டியதில்லை. கோயிலுக்குப் போகவுள்ளதால் மனதில் இப்போதே ஒரு உற்சாகம் கிட்டியுள்ளது

  • பாடசாலை போகப் போகிறேனே. எப்பவுமே மறக்க முடியாத இடம்.

  • அம்மா அண்ணாவுடன் அலட்டிய நாட்களை மீண்டும் பெறப் போகிறேனே என்ற ஆர்வம் (எல்லா விடயங்களையுமே அலசும் இடம் என் வீடு, என் வீட்டில் என்ன கேட்ட விடயம் செய்தாலும் அதை சொல்லி மன்னிப்பு கேட்க்கும் பழக்கம் உண்டு அதனால் பெரிதாக எந்தப் பிரச்சனையும் வருவதில்லை. என் அம்மாவின் கருத்துக் கணிப்பின் படி, வேறு ஒருவர் என்னையும் என் அண்ணாவைப் பற்றி அவரிடம் சொல்ல முன்னர் தன் பிள்ளைகள் தன்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைப்பார். - அது எனக்கு தப்பாகப் படவில்லை, அதனால் எல்லா விடயங்களையும் சொல்லி வாங்கிக் கட்டுவேன்.)

  • 16 மாதங்கள் நடந்தவற்றை வீட்டார்டன் பகிரப் போவதே இந்த மாதத்தில் தான்.

இன்னும் நிறைய இருக்கிறது, நீங்க நான் எழுதி இருப்பதைப் படித்து கஷ்டப் படுவது தெரிகிறது என்பதால் இவ்வளவும் போதும் என்றிருக்கிறேன். சந்திக்கலாம்...

காதலா...

காதலர்களைப் பார்த்து
நானும் காதல் கொண்டால்
என்ன என்று யோசிக்க நேர்ந்தது

காதலிக்கமலே பலரின்
காதலியாக்கப் பட்டது
யார் தப்பு....

சகோதரர்களையே
காதலர்களாகப் பார்க்கின்ற
இவ்வுலகத்தில்
பிறந்த - நான்
காதலிப்பது சரியானதா...
வேண்டாமடா...