Wednesday, September 30, 2009

கணிதம் பொய்யாகிறது..

என்ன பயந்திட்டீங்களா? தலைப்பு அப்படியானாலும் நான் இங்கே சொல்ல வரும் விடயமே வேறு..


முன்னைய காலத்திலேயே அதிகமான சித்திரங்களை நோக்கியிருந்தாலும், பதிவுலகில் நான் இல்லாததினால் அந்த சித்திரங்களை இது தாங்க. கணித் இப்படிப் பின்னர் இரண்டு படங்கள் மாத்திரம் சிக்கியுள்ளன. இதோ உங்களுடன், ஏன் இவை கணித ரீதியில் தவறானவை என்று பார்க்கலாம் வாங்க...

இந்த சித்திரத்தில் நீரருவி ஒன்று உள்ளது, அதைக் கண்டுபிடித்தவுடன், அந்த நீர் எப்பாதை வழியே செல்கிறது என்பதையும் தெளிவாகப் பாருங்கள். அந்த நீர் மீள மீள சுற்றிக் கொண்டிருக்கின்றமை புரிகிறதா? ஒரு பட்சில்லின் உதவியுடன் நீரானது கடத்தப் படுவது இயல்பாக இருந்தாலும், உண்மையிலே கணிதத்தின் படி, நீர் சம பாதையிலோ அல்லது மேலிருந்து கீழோ தான் செல்லுமே தவிர, கீழிருந்து மேலாக செலுத்தப் பட முடியாது எந்த வித பிரவிசைகளையும் பிரயோகிக்காதவிடத்து . இந்த சித்திரத்தில் மேலிருந்து விழுகின்ற நீரானது மறுபடியும் மேலே செல்வதாக வரையப் பட்டிருக்கிறது. அந்தக் கட்டடத்தின் தூண்களை நன்கு அவதானித்தீர்களாயின் நீரானது கீழிருந்து மேலாக செல்கின்றமையை அவதானிப்பீர்கள்.

இது தாங்க, இந்தப் படத்தில் பிழை. ஆரம்ப காலத்திலேயே, கணிதத்துக்கும் சித்திரத்துக்கும் எந்த தொடர்புமே இல்லை என்று நினைத்திருந்தேன், ஆனால் இப்போது தான் புரிந்தது, முன்னைய ஓவியர்களில் பலரும், இப்போதைய ஓவியர்களும் கணிதத்தின் உதவியுடன் தான் ஓவியங்களை வரைகிறார்கள் என்று. ஆனால் அது இந்த சித்திரத்தில் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருந்தாலும், பார்ப்பவர்கள் இதைக் கவனிக்க மாட்டார்கள் (நாங்கள் தான் எத்தையுமே உன்னிப்பாகப் பார்ப்பத்தில்லையே.. அப்ப நீ எப்படிப் பார்த்தாய் என்றீங்களா? அது சும்மா, இப்ப தான் எல்லாவற்றையுமே உன்னிப்பாகப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது..)
இப்படியான பல சித்திரங்கள் இருக்கலாம், இப்பவே தேடத் தொடங்குங்க..


மறைந்திருப்பவை என்ன?

1.
2.


3.
4.
5.
6.

இந்தப் பாடங்களில் என்ன பார்த்தீர்கள்...?


படங்களைப் பெரிது படுத்திப் பாருங்கள். கண்டுபிடிக்க முடியல்லையா, கீழே வாங்க..


  1. ஜேசுவின் முகத்திலே பல போதகர்கள் இருக்கிறார்கள்.

  2. அந்த மரத்துக்கு அருகில் பாருங்க ஒரு முகம் இருக்கிறது.

  3. ஜேசுவின் முகத்திலே மக்கள் கூட்டமும் ஒரு வழிப் போக்கனோ, செய்தி கடத்துனரோ குதிரையில் இருக்கிறார்.

  4. இது கடற்கரையின் ஒரு பாகமாக இருந்தாலும், அந்த பாறை குதிரையின் முகம் போல தெரிகிறது பாருங்க..

  5. அந்தப் பனி மேடையில் பல குதிரைகள் அணியாக நிற்பது தெரிகிறதா?

  6. அந்த எலும்புக் கூடை கவனமாகப் பாருங்கள், இரண்டு சிறுமிகள் ஒரு நாய்க் குட்டியுடன் இருக்கிறார்கள்

வெண்மையான பகுதியைத் தெரிவு செய்து பாருங்கள்...

பி.கு:

இவ்வாறான படங்களை ஆங்கிலத்தில் optical illusion என்பார்கள். தமிழில் எப்படி சொல்வார்கள் என்று யாருக்காவது தெரிந்தால், கூற முடியுமா? தமிழ் தெரியாதா உனக்கு என்று பலர் கேக்கிறீர்களா? இந்த சொல் எனக்குத் தெரியாது. அதனால் தான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்....

Saturday, September 26, 2009

சந்திப்பு


பார்வைகளால் மோதும்
சந்திப்பு
ஈர்ப்பு

கேட்டலில் மெருகேறிய
சந்திப்பு
கவி

இதழ்களின் நெருங்கிய
சந்திப்பு
முத்தம்

மெய் திருடிய
சந்திப்பு
காமம்

நுகர் வாசனைகளின்
சந்திப்பு
பூந்தோட்டம்

இவையுடன் சேர்ந்த
மனங்கள் இடம் மாறும்
சந்திப்பு
காதல்

Tuesday, September 22, 2009

சந்தோசம்

இது ஒரு சதாப்தம் முடிந்து தொடங்கும் பதிவு, அதனால் இன்பமான ஒரு விடயம் எழுதலாமே என்று ஆரம்பிக்கிறேன். கவிதையை வாசித்திவிட்டு இது உண்மையிலையே சந்தோசமான கவிதை தானா என்ற சந்தேகம் வந்தால் நான் பொறுப்பல்ல.

வாழ்க்கையில்
பலர் எதிர்பார்க்கும்
அற்புதமான
வசந்தம்
சந்தோசம்

சிலர் வாசலை
மட்டுமே தட்டும்
அறிய
பொக்கிஷம்
சந்தோசம்

வாழ நினைப்பவனை
பணத்தைக் காட்டியே
கொள்ளும்
பேய்
சந்தோசம்

வாழ்க்கையே
ஒரு பகுதி என்று
பலர் சொன்னாலும்
சிலர்கையைஈதொடாத்
........................................
சந்தோசம்

பி.கு: இடைவெளியில் ஒரு சொல்லையோ, சொற்றொடரையோ,
வசனத்தையோ இட்டு கவிதையை நிறைவு செய்க...

Monday, September 21, 2009

சதம் அடிச்சச்சோ...


என்னடா இது என்று பாக்கிறீங்களா.....................

இது தான் என்னுடைய நூறாவது பதிவுங்க. நம்ப முடியல்லையா (நம்பித் தான் ஆகணும்...)

நான் இந்த நூறாவது பதிவை எழுதிறதுக்கு காரணமா இருக்கிறவர்களே இந்தப் பதிவுலகத்தினர் தான். எனக்கும் ஒரு பதிவகர் என்ற அங்கிகாரம் கொடுத்து எழுத வைத்தவர்கள் பலர். அவர்களை எல்லோருக்கும் நன்றி... அவர்களது ஆதரவு இல்லை என்றால் இந்தப் பதிவே இருந்திருக்காது..


இது எனது நூறாவது பதிவாக இருந்தாலும், நான் எழுதியவை பல அர்த்தமற்றவை என்பது தான் உண்மை. நல்ல பதிவுகள் என்று பார்க்கப் போனால் விரல் விட்டு எண்ணக் கூடியனவாகவே இருக்கும்.


பதிவுலகம் எனக்குப் புகட்டிய பாடம் பல, என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக தன்னை மாற்றிக் கொண்டதும் அதுவே... எந்தக் காரணத்தைக் கொண்டும் தன்னை நான் மறக்கக் கூடாது என்பதற்காக நிறைய அனுபவங்களைத் தந்துவிட்டது.


என்னையும் எழுதத் தூண்டும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள்..


Sunday, September 20, 2009

அநாதை

யாரும் அநாதை
இல்லை என்பதற்காகவே
ஒருவனுக்கு அம்மா அப்பா
என்ற உறவு
என்றான் இறைவன்
பாசத்துக்கு கோயில்
கட்டு என்றான் அவன்
இங்கோ..............

அம்மா அப்பாவால் வந்த

ரத்த உறவுகளை

உடன் பிறப்பாக்கியதால்

காரணமே இல்லாமல்

உறவுகளின் எண்ணிக்கை

அதிகரித்தது

பாசமே பணம் கொடுத்து

வாங்கும் பொருளானது

தரும் பணமும்

பாசத்துக்காய் என்றது

அந்த அறியா மனது

காவலுக்கு விட்டவனே

கூட்டிக் கொடுப்பவனானான்

வாங்கிய கடனை

மீட்க்க முடியாத

அவனால் உறவுகளுக்குப் பணம்

கொடுக்க முடிந்தது

மனைவியைத் தவிக்க

விடவும் முடிந்தது

பணத்தால் ஆரம்பமான

சண்டை

பாசத்துக்கு கட்டுப்பட

மறுத்தது

பணத்துக்காக சேர்ந்த

உறவு தானே

பாதியிலே போனது

மீண்டும் பணம் வரும் வரை...............

பி.கு: இது பாசத்தையோ, பணத்தையோ கொச்சைப் படுத்தும் நோக்கமல்ல. இப்படியும் நடக்கின்றன என்பதற்காகத் தான்.

Saturday, September 19, 2009

முற்காலப் பதிவு


எனது கடந்த பதிவு தொடர் பதிவு என்பதை மறந்துவிட்டேன். அதனால் நண்பர்களை அழைக்கவும் தவறிவிட்டேன். கவலைப் படாதீங்க... இவங்க தான் இந்தப் பதிவைத் தொடரப் போறவங்க.....
பதியப் பார்வையிட... முக்கியமாக இந்த திடர் சங்கிலியில் இணைக்கப் பட்டவர்கள்...

காதல், அழகு, கடவுள், பணம் ஆகியவை பற்றிய உங்கள் கருத்து என்ன என்பதைப் பகிர்ந்துகொள்ள நான் அழைப்பவர்கள்..

லோஷன் அண்ணா - இவரைப் பற்றி சொல்லனும் என்றால்.................... இவர் ஒரு சகலகலாவல்லவர்...

சுபாங்கன் அண்ணா - எல்லோருடனும் சகயமாகப் பேசக் கூடியவர். நல்ல தேடலாளர். ஆனாலும் இந்தப் பதிவில் தேடலை விசுத்து சொந்த அனுபவத்தைத் தருவதற்காக அழைக்கிறேன்...

தேவா அண்ணா - வைத்தியராக இருந்தாலும் நன்றாகவே காதல்க் கவிதைகள் எழுதுவார், காதலைப் பற்றிய இவர் கருத்து என்ன என்பதையும் பார்க்கலாமே..
தொடரட்டும் உங்கள் பணி...

காதல், அழகு, கடவுள், பணம் - நினைவில் இருப்பவை...

தொடர் பதிவு ஒருவகை உத்தி - காரணம், நம்மளை மாட்டி விடுபவர்களை நாம் மாட்டி விட எங்களுக்குக் கிடைக்கின்ற அறிய சந்தர்ப்பம். நான் இப்போ சொன்னது போல வழமையாக நான் தான் சதீஸ் ஐ வம்பில் மாட்டி விடுவேன், இப்போது அவர் என்னை மாட்டி விட்டுவிடர். அது தாங்க என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்ததே அந்தப் புண்ணியவான் தான்..

ஒருவர் கேட்டு அதை உடனே செய்யவில்லை என்றால் அவரது மனம் கஷ்டப் படுமே அது தான் பதிவை உடனேயே போட்டு விடலாம் என்று தொடங்கிவிட்டேன்..(உண்மையான காரணம் யாருக்குத் தெரியும் - புனித ரமழானின் காரணத்தால் பல்கலைக்கழகத்தில் ஏழுநாட்கள் விடுமுறை... அது தான் உடனேயே பதிவு போடுவதற்குக் நேரம் கிடைத்தது.)

காதல்

இந்த வார்த்தை தான் இந்த உலகம் முழுவதும் பரவி வாழ்கின்ற ஒன்று... யாரையாவது பார்த்து நீங்கள் காதலிக்கிறீர்களா என்றால் இல்லை என்பார்கள், இல்லை என்றால் ஆம் என்பார்கள்.. இல்லை என்பவர்களிடம் ஏன் நீங்கள் உங்களுடைய அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, தங்கை, தம்பி யாரையுமே காதலிக்கவில்லையா என்றால், அது வேறை இது வேறை என்பார்கள்.. திருமணம் என்று பார்க்கப் போனால், காதல் திருமணம் என்ற பெயரில் கல்யாணம் முடிந்து, அதற்கு அப்பால், சண்டைகளே வாழ்க்கையான பல யோடிகளைப் பார்த்திருக்கிறேன். அதை எல்லாம் பார்த்து காதல்த் திருமணம் செய்தால் இது தான் நிலை என்று சொல்பவர்களையும் பார்த்திருக்கிறேன்; ஆனால் என்னைப் பொறுத்த வரை இது காதலாகவே முடியாது, எதோ ஒரு ஈர்ப்பின் காரணமாக் ஒன்று சேர்ந்த யோடிகள், குடும்பம் என்று வரும் போது வருகின்ற கஷ்டங்களால், அன்பை விற்று விற்றுவிடுகின்றன.
காதல் எந்தக் காலகட்டத்திலும் அன்பால் மட்டுமே நிரப்பப்பட்ட ஒன்று, ஆனால் அதே அதிகமானால் எதிபார்ப்புகலாலேயே அருந்துவிடுக்கிறது (நிறையக் காதலர்களைப் பார்த்த பின் எடுக்கப் பட்ட முடிவு.)


அழகு
அழகாய் ரசிக்கலாம், ஆனால் அபகரிக்க நினைக்கக் கூடாது என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்; அது உண்மை தான். மனிதன் என்பவன் எவ்வளவு அழகாய் அடைத்திருந்தாலும் அதை விட அழகானதை அடைய வேண்டும் என்று நினைப்பவன், ஆனால் இயற்கையில் எவ்வளவு அழகான விடயங்கள் இருக்கின்றனவே, அதை சேமிக்க வேண்டும் என்று நினைத்ததே கிடையாது. எல்லா அழகையும் விட இயற்கையின் அழகே என்னை அதிகம் வசப்படுத்துவது, காரணமே இல்லாமல் இரசித்து அம்மாவிடம் ஏச்சு வாங்கிய நாட்கள் பல (எமிலாந்தாமல் நடந்து வா சிந்து என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள்.) இப்போதும் நண்பிகளிடமும் ஏச்சு வாங்குவதுண்டு.

கடவுள்
எம்மை மீறிய சக்தி, நமக்காகவே படைக்கப் பட்ட சக்தி, வாழ்க்கையின் பயங்கரத்தை உணர்த்தும் சக்தி...என்னைவிட அதிகமாக நம்புகின்ற ஒருவர் கடவுள் தான். எதற்காகவும் விட்டுக் கொடுக்காத ஒருவரும் அவரே.. கடவுள் ஒருவர் என்ற நோக்கத்துடன், எல்லா ஆலயங்களுக்கும் செல்வது என் வழமை. எல்லா விடயங்களையும் நான் பகிர்ந்து கொள்வதும் அவரே. அடிக்கடி நான் கேட்டவற்றைக் கொடுக்காவிட்டால் சின்னச் சின்ன சண்டைகளுடன் தொடர் கதையாக நிகழும். நான் தவறு செய்ததினால் தான் கடவுள் நான் கேட்டதைத் தரவில்லை என்ற நம்பிக்கையில் அவர் மீதான நம்பிக்கை இப்போதும் பெருகிக் கொண்டே செல்கிறது. எந்தக் கால கட்டத்திலும் அன்பு செலுத்தப் பட வேண்டியவர் என்று அடிக்கடி நினைப்பேன். எவெரேனும் கடவுளைக் குறை சொன்னால் அவர்கள் மேல் தான் தப்பு என்பதைப் புரிய வைப்பதில் முன்னிட்பேன்.

பணம்
இது இல்லாவிட்டால் எவ்வளவு பெரிய புண்ணியவானாக இருந்தாலும் வாழ முடியாது. பணமா குணமா என்று கேட்க்கப்படும் கேள்விக்கு அதிகமானவர்களின் பதில் பணமாகவே அமைகிறது. பணம் இல்லாத காரணத்தால் மட்டுமே பலர் பலரால் புறக்கணிக்கப் பட்டத்தை என் வாழ்நாளின் பல பாகங்களில் கண்டிருக்கிறேன். பணம் இல்லாததால் நான் அனுபவித்த துன்பங்களும் பல (இதானால் குணத்துக்கு நான் முன்னுரிமை கொடுக்கவில்லை என்று நினைக்க வேண்டாம் - எனக்கு இந்த இரண்டுமே வேண்டும் என்பது தான் உண்மை..)வாழ்க்கையின் எந்த மூளையையும் இது தட்டும் வரை மக்களிடையே பிரச்சனை தான். உறவுகள் பாசத்தால் இணைக்கப் பட்டவை என்று கூறுவதெல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதது (அதற்காக எல்லா உறவுகளையும் சொல்ல வரவில்லை...) இப்போதெல்லாம் சில உறவுகள் பணத்தை நம்பியே என்பது தான் உண்மை...

Thursday, September 17, 2009

நன்றி சொல்ல ...................

எனக்கும் விருதா..............?
அதிசயம் ஆனால் உண்மை என்று பத்திரிகையில் படித்து தான் தெரிந்த எனக்கு, இந்த வலையுலகத்தில் பல அதிசயங்கள் நிகழ்ந்துவிட்டன (இந்த
விருதுகளைத் தான் சொன்னேன்....)
எனக்கு சந்ரு அண்ணா ஒரு விருது கொடுத்து இருக்கிறார். எதுக்காகக் கொடுத்தார் என்று என்க்குத் தெரியாது. அவருக்கு ஒரு நன்றி சொல்லாவிட்டால் எப்படி.. நன்றி அண்ணா....

இந்த வலையுலகத்தில் என்னையும் ஆர்வப்படுத்தப் பலர் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது ரொம்பவே சந்தோசமா இருக்கிறது. விருதில ஒரு சொல் "scrumptious" இந்த சொல்லை நான் சாப்பாட்டுக்குத் தான் அதிகமாகப் பயன்படுத்துவேன். (என்னடா இவள் சாப்பாட்டைப் பற்றியே அதிகம் நினைப்பீர்களோ? என்று கேக்கிறீங்க என்று புரிகிறது.) ஆனால் விருதில போட்டிருப்பதன் அர்த்தம் வேறாக இருந்தாலும், இந்த சொல்லைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது சாப்பாடு தான் (உண்மையை சொல்லி இருக்கிறேன், நம்புங்க..)


இந்த விருதை இன்னும் பத்து பேருக்குக் கொடுக்கணுமாம், ஆனால் நான் இதை ஆறு பேருக்குத் தான் கொடுக்கப் போகிறேன். அவங்க இவங்க தான்.......

தமிழ்த்துளி
அருண் பிரசாத்
ஹிஷாம் முஹம்மத்
கலை - இராகலை
வதீஸ்வருணன்
கார்க்கி

பி:கு: நான் ஆறு பாருக்குத் தான் விருது வழங்கி இருக்கிறேன் என்பதற்காக் நீங்களும் ஆறு பேருடன் நிறுத்தி விடாதீங்க. பத்து பேருக்கு கொடுங்க.

Sunday, September 13, 2009

ஆண்.... பெண்

என்ன தலைப்பே வில்லங்கமாக இருக்கிறது என்று பாக்கிறீங்களா? இவங்க இரண்டு பேரும் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லையே.. வாழ்க்கைக்கு முக்கியமானவர்கள் சந்திக்கின்ற போது ஏற்படுகின்ற பிரச்சனைகளே (பிரச்சனை மட்டுமா என்று கேக்காதீங்க) வாழ்க்கையின் பெரிய பகுதியை அடக்கி விடுகின்றன..

முதலாவதாக சொன்னதெல்லாம் சும்மா.. இப்ப விடயத்துக்கு வரலாம். எனக்கு ஒரு சந்தேகம் நீண்ட காலமாக இருக்கின்றது. அதை முன்வைக்க இது ஒரு சிறந்த இடம் என்பதால் தான் இந்தப் பதிவு. கேள்வி இதோ..?

பெண்கள் ஆண்களுடன் கதைப்பது தவறா? (இது தாங்க கேள்வி....)

பழகினா என்ன நடக்கும் என்று நான் சொல்றேன், சரியா தவறா என்று நீங்க சொல்லுங்க...

பழகினால் இரண்டு விடயங்கள் நடக்கலாம்..

  • பார்ப்பவர்கள் தப்பாகப் பேசுவார்கள்.. (எப்படியா) அவங்களையே கதை கட்டி மற்றும் பலருக்கும் சொல்வார்கள் (இது தான் அவர்களுடைய தொழிலாகவும் சிலர் கருதுவார்கள்) எப்பவுமே பெண்கள் ஆண்களுடன் கதைத்தால் அவர்களை எதிர் மறையான கோணத்தில் பார்ப்பது எங்கள் சமுதாயத்தினருக்குப் பழக்கமாகிவிட்டது. நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் பழகுபவர்களைக் கூட தப்பாகப் பார்க்கும் நல்ல உள்ளங்கள்.. எல்லோரது பார்வைகளும் வித்தியாசமானாலும், இந்த விடயத்தில் ஒன்றாக்குவது ஏன்?
  • பழகுபவர்களே தப்பாக நினைக்கிறார்கள். ஒரு பெண் ஒருவனுடன் சிரித்துப் பேசினால் அதை அவன் தப்பாகப் புரிந்து கொள்வான் என்று என் நண்பர் ஒருவர் சொன்னார். அப்போதெல்லாம் தெரிவதில்லை, இப்போது சிந்திக்கும் போது அது தான் உண்மை என்று இப்ப தான் புரிகிறது. இதற்குக் காரணம் பெண்களாகவும் இருக்கலாம் என்பது என் கருத்து. ஒருவன் நல்ல பேசினால், அவனுடன் பேசிக் கொண்டிருப்பாங்க. அவள் பேசுவதை அவன் தப்பாகப் புரிந்து கொள்வான். அடடா இந்தப் பொண்ணு என்கூட நல்ல பேசுகிறாளே. அதனால இவள் என்னைக் காதலிக்கிறாளோ.. என்ற பல கேள்விகளுடன் திக்கி திணறி கடைசியாக அவங்க காதலிக்கத் தொடங்குவார்கள்... அங்க தான் பிரச்சனையே ஆரம்பம். அவள் பழகிய விதம் அவளுக்கு சரியாக இருந்தாலும், அவனுக்கு அது அசாதரணமாகவே தான் இருக்கிறது. காதலிக்க ஆரம்பித்தவனால் எப்படி விட முடியும்.. (அது கூட ஒரு வகைப் பிரச்சனை தான்).

இப்படி இரு வேறு வழிகளால் பிரச்சனையாகவே வருவதால், பெண்கள் ஆண்களுடன் கதைப்பதை நிறுத்தி விடலாமா?

இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தர முடியுமானவர்கள் தரலாம்....

பி.கு: இத்தளத்தை அதிகமாக ஆண்கள் வாசிப்பதால், உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப் படுகின்ரான..

Thursday, September 10, 2009

சாலையோரம்


புதுமைப் பெண்ணிவள் என்று
பலர் சொன்னதனால்
நிமிர்ந்த நடையுடனும்
நேர் கொண்ட பார்வையுடனும்
சென்ற அவளை
அன்று தலை குனிய
ைத்தவன் அவன்

யாருக்கும் அடங்காதவள்
இவள் என்ற கூற்று
பொய்யானது
அந்த சாலையோரத்தில்
யார் சொல்லியும்
குறையாத அவள் வீரம்
அந்தக் கணத்தில்

சாலையோர ஆண்களையே
குற்றவாளிகளாக்கும்
அவள் பார்வை
அன்று மட்டும்
குற்றவாளியாக்கியது
அவன் பார்வை
அவள் மீது பட்டதாலா...................?

Sunday, September 6, 2009

காண்பதெல்லாம் கனவா?

வருகைக்காகக் காத்திருந்த நாள் போய்
நினைவுகள் மட்டுமே இன்று
என்று நினைத்தேன்
அவையும் கனவாகினவோ...

வாழ்க்கை என்பது
எது எனப் புரிகையில்
நடந்தவை கனவு தான்
எனக்கிது நிஜம்

காரணமில்லாத பேச்சு
கரிசனையாக அமைய
காதல் என்ற
கருத்து நம்மிடையே...