Sunday, May 10, 2009

கேள்வியும் பதிலும்..

தொடர் பதிவு தாங்க இது..

இந்த தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நிலாவன் அண்ணாவுக்கு நன்றிகள்...
நிலாவும் அம்மாவும் அவர்கள் அவர்களுக்கு என் நன்றிகள் .
காரணம் இந்த தொடர் பதிவை ஆரம்பித்து வைத்தவர் நிலாவும் அம்மாவும் அதன் பின் எனக்கு தெரிந்து தொடர்ந்தவர்கள்
ரவீ
அத்திரி
கடையம் ஆனந்த்
கார்த்திகை பாண்டியன்
தேவன் மாயம்
இவங்க எல்லாருமே பெரியவங்க அதனால் எல்லோருக்கும் சேர்த்து அவர்கள் எண்டு போடோட்டுக்கலாமா? அவர்கள் என்று போட்டு வாசியுங்கள்...
வாங்க என்னைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்திட்டுப் போங்கோ...

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் இயற்பெயர் சிந்துகாவாக இருந்தாலும் எனக்குப் பிடித்த பெயர் சிந்து தான். சிந்துகா என்ற பெயர் பிடிக்காததட்கும் சிந்து என்ற பெயர் பிடிப்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன...

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நேற்று முன் தினம்...விஜய் டிவி இல் நடத்தப்ப்படும் யார் உங்களில் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் ராம்கோபால் அவர்களின் நடனத்தின் போது.. (இலங்கைத் தமிழர்களின் நிலைமையை இலங்கையில் இருந்த போது நான் அறிந்ததை விட இப்போது அதிகமாகவே அறிகிறேன். அங்கு இருப்பவர்களாலும் எதுவும் செய்யமுடியாது என்பதும் உண்மையே.)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
சந்தர்ப்பத்தைப் பொறுத்து...

4.பிடித்த மதிய உணவு என்ன?
என் அம்மா மற்றும் அண்ணா சமைத்த எல்லா உணவுகளும்...இங்கு இருக்கும் போது தான் புரிகிறது. அம்மா அடிக்கடி சொல்லுவார் "நீ இங்கு செய்யும் அடாவடித் தனத்துக்கு எல்லாம் அனுபவிப்பாய்." அது தான் அனுபவிக்கிறேனோ?

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இல்ல. பழகுவேன், பிடித்திருந்தால் மட்டுமே நண்பர்களாக முடியும்...

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இரண்டுமே, ஆனால் பயத்துடன்... ஆனால் நான் இதுவரை காலமும் அருவியில்க் குளித்தது இல்லை...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகம், ஆடை..

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
இரண்டுக்கும் ஒரே விடை தான். எல்லோருடனும் அக்கறையுடன் பேசுவது. அதுவும் அதிகமாகப் பேசுவது.. பலர் தப்பாகப் புரிந்த சந்தர்ப்பங்களும் உண்டு..

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
யாருங்க அது..

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அம்மா, அண்ணா, நண்பர்கள், இன்னும் ஒருத்தர் ஆனால் யார் எண்டு சொல்ல மாட்டேனே..

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?கருப்பு நிற ஜீன்ஸ் உம் பச்சை நிற மேலாடை (Black jeans and green T - shirt)

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கணனித் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வெற்றி வானொலி கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கடல் நீல நிறம், பச்சை நிறம்

14.பிடித்த மணம்?
மல்லிகையின் நறுமணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
கவின்
- ஈழத்தில் இருக்கும் பற்று, உண்மைகளை உளறல். அக்கறை (யார் மேல எண்டு கேக்காதீங்க) தமிழில் வழக் கொழிந்து வரும் சொல்ட்களைத் தேடிக் கொண்டிருப்பவர் (தெரிந்தவர்கள் யாராவது சொல்லி உதவலாம்), யாருக்காவது பிரச்சனை என்றால் உதவுதல், ஆனால் தன பிரச்சனைகளைச் சொல்லவே மாட்டார் இவர்.

கமல் - அதே தமிழ் மற்று தமிழீழப் பற்று. நல்ல வர்ணனை - பேச்சுத் திறமை எண்டும் எடுத்துக் கொள்ளலாம். அதிகமாகப் பேசுவது.. தமிழர்களின் நிலைமைகளை வெளிக் கொண்டுவரத் தன்னாலான உதவிகளை செய்பவர்.

கலை - எனக்கு மன உளைச்சல் என்ற நேரம் தியானம் என்ற பதிவினூடு உதவியமை. மலையகத்தின் மேலுள்ள பற்று. பெரியவர்களின் நினைவு நாள்களை நினைவுபடுத்துதல்.. என்னைப் போல அவரும் ஒரு தனிமை விரும்பி.
(இந்த மூன்று பேருக்கும் இரு ஒற்றுமை.. கண்டு பிடியுங்க..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

முயற்சி ... என்ற கவிதை

வெற்றியின் தேடலில்

ஒவ்வொரு முறை

தோற்கும்போதும்

எங்காவது ஓடிச்சென்று

அழுது திர்த்துவிடுவதென்று

தனி இடம் அமர்கின்ற

மனது

அடுத்த தோல்விக்கு தயாராகிவிடுகிறது

உண்மையை சொல்லி இருக்கிறார். அது மட்டும் அல்ல அதை சொன்ன விதமும் பிடித்திருக்கிறது..

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட், கரப்பந்தாட்டம், கால்ப்பந்தாட்டம், கொல்ப் (golf), சதுரங்கம், மற்றும் டென்னிஸ்

18.கண்ணாடி அணிபவரா?

ஆமாம்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நாள்ல கதை உள்ள படம். நகைச்சுவையான படம், எனக்குப் பிடித்தவர்களின் படம்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

அபியும் நானும்

21.பிடித்த பருவ காலம் எது?

வசந்தகாலம், மற்றும் மழைக்காலம்

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

கடைசியாக வாசித்த தமிழ் புத்தகம் - அனைத்துக்கும் ஆசைப்படி - புத்தகம் தந்து உதவியவர் கவின் அவர்கள்...

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

நான் மாற்றுவதில்லை.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது - குயிலோசை

பிடிக்காதது - இராணுவத் தளபாடங்களினால் ஏற்படுத்தப் படும் கொடிய சத்தம் (அனுபவம் தான் - என் வீடுக்குப் பக்கத்தில் இருக்கும் வைத்தியசாலைக்குப் பக்கத்தில் வைத்து ஏற்படுத்திய அந்த ஓசையை எந்தக் காலத்திலும் என்னால் மறக்க முடியாது - அது தான் பலரை ஒழித்த சத்தமாச்சே)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
யாழ்ப்பாணத்துக்கு சிட்டகொங்க்கும் (Chittagong) இடையிலான தூரம். என்னவோ அது தான் நான் பயணித்த அதிகபட்ச தூரம்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
பாடுதல், பழகிய சிறு காலப் பகுதியிலேயே எல்லோருடனும் சகயமாகப் பழகுதல், மதியாதார் வாசல் மிதியாதே என்றமைக்கு அமைவாக வாழ்பவள், அதிகம் அலட்டுதல்

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தாங்கள் செய்யும் அதே தப்பை மற்றவர்கள் செய்யக் கூடாது எண்டு சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
போலியான பாசங்களையும் இலகுவில் நம்பிவது..
கடைசி நேரத்தில் எல்லாம் செய்வது.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
Opera House - ஆஸ்திரேலியா

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
யாரையும் காயப் படுத்தாமல் இருக்க ஆசை, என்னை அறியாமலே நிறையப் பேரைக் காயப் படுத்தி இருக்கிறேன். அவர்கள எல்லாம் என்னை மன்னிப்பாங்களா எண்டு தெரியவில்லை..

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
----------------

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அனைத்துக்கும் ஆசைப்பட அரியதொரு வாய்ப்பு

இந்தத் தொடருக்கு நான் அழைப்பவர்கள்
கவின்
கமல்
கலை
இவங்க மூன்று பேரும் என்னை விட நல்லாவே அசத்துவாங்க..

19 comments:

thevanmayam said...

என் அம்மா மற்றும் அண்ணா சமைத்த எல்லா உணவுகளும்.//

சிந்து சமைத்தால்.....

thevanmayam said...

சிந்து பதிலெல்லாம் நச்!!!

டக்ளஸ்....... said...

Super Answers..!

டக்ளஸ்....... said...

I think his name is not "Ram Gopal"
it is "Prem Gobal"...!

வேத்தியன் said...

கேள்விகளும் பதில்களும் நன்றாக இருந்தது தோழி...

வாழ்த்துகள்...

வேத்தியன் said...

இத்தொடரின் என்னோட பதிவு புதன்கிழமை வரும்...

பார்க்கவும்..

:-)

குமரை நிலாவன் said...

பதில்கள் அனைத்தும் நல்லா இருக்கு சிந்து

குறிப்பா இந்த பதில் வித்தியாசம்

அனைத்துக்கும் ஆசைப்பட அரியதொரு வாய்ப்பு

Sinthu said...

"thevanmayam said...
என் அம்மா மற்றும் அண்ணா சமைத்த எல்லா உணவுகளும்.//

சிந்து சமைத்தால்....."
உண்மையை சொல்லப் போனால் எனக்கு சமையல் அவ்வளவாகத் தெரியாது, ஆனால் எதோ சமைப்பேன்...

"thevanmayam said...
சிந்து பதிலெல்லாம் நச்!!!"
உண்மையாவா?

"டக்ளஸ்....... said...
Super Answers..!"
Thanks
"I think his name is not "Ram Gopal"
it is "Prem Gobal"...!"
Yes, I'm wrong.
Thanks for ur informing.

"வேத்தியன் said...
கேள்விகளும் பதில்களும் நன்றாக இருந்தது தோழி...

வாழ்த்துகள்..."
நன்றி..

"குமரை நிலாவன் said...
பதில்கள் அனைத்தும் நல்லா இருக்கு சிந்து

குறிப்பா இந்த பதில் வித்தியாசம்

அனைத்துக்கும் ஆசைப்பட அரியதொரு வாய்ப்பு"
உண்மையாவா?
இந்தத் தத்துவத்தை நானே சில நாட்க்களுக்கு முன்னர் தான் அறிந்தேன்....
அனைத்துக்கும் ஆசைப்படு என்ற புத்தகத்தைப் படித்த பின்னர்..
நீங்களும் விரும்பினால் படிக்கலாம்...

http://documents.scribd.com/docs/sgfggvud0xg1b6jdrjh.pdf

பிடித்திருந்தால் வாழ்த்தை நண்பர் கவினுக்கு சொல்லவும்.. (புத்தக உதவி அவர்தானுங்கோ.. அது தான் சொன்னேன்..)

கவின் said...

நல்ல பதிவு
தொடர் பதிவா?? நானும் தொடரனுமா?? முயற்சிக்கிறேண்

Sinthu said...

நீங்க தான் போடணும், வேறயாராவது வந்தா போடுவாங்க?

பிரபா said...

hai sinthu hw r u ? anaiththum asaththal.....

www.prapaactions.blogspot.com

Sinthu said...

Thanks Praba anna...
Sorry I didn't visit ur blog for a long time, because I didn't have time..

shanthru said...

உங்கள் பதிவு சூப்பர்...... தொடருங்கள்....

எனது வலைப்பதிவு மாயமாகிவிட்டது புதிய வலைப்பதிவில் சந்திக்கிறேன் என்னை தொடருங்கள்.....

Sinthu said...

No idea Santru anna,
I don't have time..
Wt has happened to ur blog? Is that same as Praba anna'?

Sinthu said...

Don't worry Santhru anna..

Subankan said...

அருமையான பதில்கள் சிந்து, வாழ்த்துக்கள்.

//shanthru said...
உங்கள் பதிவு சூப்பர்...... தொடருங்கள்....

எனது வலைப்பதிவு மாயமாகிவிட்டது புதிய வலைப்பதிவில் சந்திக்கிறேன் என்னை தொடருங்கள்.//

உங்கள் பிளாக்கிலுள்ள Ntamil vote buttonஇனை அகற்றாவிட்டால் உங்களுக்கும் இந்த நிலமைதான் சிந்து. அகற்றிவிடுங்கள்.

கலை - இராகலை said...

என்னை இந்த தொடர்பதிவிற்கு அழைத்தமைக்கு மிக்க நன்றிகள் சிந்து! பதிவுவை நீங்கள் போட்ட 4 நாட்களிளே நான் வாசித்தேன். பின்னூட்டம் இட காலம், மனம், வேலைப்பளு எதுவுமே இடம் தரவில்லை! விரைவில் இப்பதிவை தொடர்கின்றேன்..

///.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
பாடுதல்///

பாடுவிங்களா?? வாழ்த்துக்கள்

Sinthu said...

நன்றி சுபாங்கன் அன்ன...
NTamil ஐ அகற்றிவிட்டேன்...

பரவாயில்லை கலை அண்ணா, அது தான் சொல்லிட்டீங்களே பதிவு போடுவேன் என்று அப்புறம் என்ன..?
நல்ல எழுதுங்க..

பாடுவேன் என்று சொன்னேன், அதை யாராவது கேப்பாங்க என்று சொன்னேனா?

சந்ரு said...

என்ன சிந்து உங்கள காணவே இல்லை