கடவுளை எப்போதும் கும்பிடும் நீ
காதல் விடயம் பேசும் போது மட்டும்
கிட்டவே கடவுளைக் கூப்பிடாதது
கீழ்த் தரம் என்பதா...
குறும்புகளுடன் இருந்த நீ
கூறிய அம்பாக மாறியதற்கு காரணமும் அவனா
கெட்டவர்களானோம் உன் காதால்
கேட்பதற்கு யாரும் இல்லை என்றா
கையைப் பிடிக்கவே முடிந்தது
கொடுமையடி
கோடையில் இலையுதிர்வது போல
கௌரி யாக இருந்த நீ காந்தமாக அவனால் இழுக்கப் பட்டது தான் ஏனோ..?
9 comments:
அவசர அவசரமாக பதிவொன்று.....
இன்னும் உங்கள் கவிதைகள் ரசிக்கப்படுகின்றன அடியேனால் அக்கா ......
அடிக்கடி வந்து போங்க...
நன்றி தம்பி.. அக்கா ஊருக்கு போகப் போறேனே..
கோடையில் இலையுதிர்வது போல
கௌரி யாக இருந்த நீ காந்தமாக அவனால் இழுக்கப் பட்டது தான் ஏனோ.//
நல்லா எழுதியுள்ளீர்கள் சிந்து!
விடுமுறையில் நிறைய எழுதவும்!!
அது என்ன ”க”?
"கோடையில் இலையுதிர்வது போல
கௌரி யாக இருந்த நீ காந்தமாக அவனால் இழுக்கப் பட்டது தான் ஏனோ.//
நல்லா எழுதியுள்ளீர்கள் சிந்து!"
நன்றி அண்ணா, ஆனால் எல்லாமே கிறுக்கல் தான், சும்மா எழுதினேன்...
"thevanmayam said...
விடுமுறையில் நிறைய எழுதவும்!!"
ஊருக்குப் போவதனால் எழுத முடியாது என்று நினைக்கிறேன்...
"thevanmayam said...
அது என்ன ”க”?"
க் என்று போட்டிருந்தால் நன்றாக இருக்குமோ....?
கஷ்டம் வரும்போது மட்டுமே கடவுளை நினைக்கின்றார்கள். காதலர்கள் பேசும்போது கடவுள்தான் நேரில் வந்தாலும் கடவுளிடம் யார் நீ என்று கேட்பார்கள் காதலர்களே ஒருவருக்கொருவர் கடவுளாக இருக்கின்றார்கள்.???????????
நீங்க சொல்வது உண்மை தான்...
காதல் செய்ய கோவிலைப் பயன்படுத்துவது அதை விடக் கொடுமை..
Sinthu said...
//நீங்க சொல்வது உண்மை தான்...
காதல் செய்ய கோவிலைப் பயன்படுத்துவது அதை விடக் கொடுமை..//
உண்மைதான் சிந்து காதல் புனிதமானது அதை அசிங்கப்படுத்துவதொடு கோவில் என்கின்ற ஒரு புனிதமான இடத்தையே சிலர் தமது காதலுக்கு ?????????? பயன்படுத்துகிறார்கள்... இவர்களாகவே திருந்தினால் சரிதான்
Post a Comment