என்னடா இவள் நேர மாற்றம் என்றாலே என்று பாக்கிறீங்களா... ? கொஞ்சம் பொறுத்திருங்க காரணத்தை சொல்றேன்..
அப்படியே கீழ போங்களேன்,,,, (என் கல்லூரியில் நடக்கின்ற சோகக் கதை..)
அது தாங்க பங்களாதேஷ் இன் அரசாங்கம் பங்களாதேஷ் நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரித்துள்ளது (அது தான் இப்ப ஸ்ரீ லங்கா மற்றும் இந்தியா ஆக்கிய நாடுகளுக்கும் பங்களாதேஷ் க்குமான நேர இடைவெளி ஒன்றரை மணித்தியாலம் (ஆமா நேரம் அதிகரிப்பை எண்டா இவள் இப்ப சொல்றாளே என்று பாக்கிறீங்களா.. ஒரு முக்கியமான விடயம் வரப் போகிறதே...)
அது வேறை ஒன்றும் இல்லை. வெளிநாட்டவர்களில், காதலில் விழுந்தவர்கள் (அது தானுங்க காதலர்கள் இருப்பவர்கள்) படும் பாடு இருக்கே, கொடுமையுங்க.. என்ன அது என்று ஆவலா... அது வேறு ஒன்றுமல்ல. வழமையாக தெற்காசிய நாடுகளில் அரசாங்க வேலையாகவோ அல்லது கல்லூரிகளோ முடிவது கிட்டத் தட்ட ஒரே நேரமாகவே இருக்கும், ஆனால் இப்போது பங்களாதேஷ் இல் இருப்பவர்களுக்கு எல்லாமே முன்கூட்டியே முடிந்துவிட்டும்.. அதனால் காதலர்களுடன் chat பண்ணுகின்ற நேரங்களில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. காதலர்களால் chat பன்னாவலும் இருக்க முடியாது, அதே நேரம் நேர அட்டவணையுடன் படிப்பவர்கள் நண்பர்களுடன் படிப்பவர்களுக்கும் கொஞ்சம் சிக்கல் தான். உதாரணமாக பங்களாதேஷ் இல் 3.30 pm என்றால் ஸ்ரீ லங்காவில் 2.00pm ஆக இருக்கும், அங்கே iruppavarkalaal sri lanka nerappadi 3.00 pm க்குத் தான் வர முடிகிறது, அப்போது பங்களாதேஷ் இல் 4.30 ஆகிவிடும் அதனால் செய்கின்ற வேலை எல்லாமே ஒரு மணித்தியாலத்தால் தாமதமாகிக் கொண்டே போகும். வள்ளியாக தேநீர் இடைவேளைக்கு முன் chatting முடியும் என்றால் இப்போதெல்லாம் இரவு உணவு நேரம் தான் முடிகிறது. இதாவது பரவாயில்லை எப்படியாவது வீட்டு வேலைகளை இரவு முளித்திருந்தாலாவது செய்வார்கள்.
வழமையாக 9.30pm இலிருந்து 11.00 pm மட்டும் chat பண்றவங்க பாடிருக்கே, அவர்களின் காதலர்கள் இப்போதும் வழமையான நேரத்துக்குத் தான் வர முடிவதால் பங்களாதேஷ் இல் 10.00 pm ஆகிவிடுவதால் ஒரு மணித்தியாலங்களே chat பண்ண முடிகிறது. ஏன் 11.00 pm க்கு அப்புறமாக chat பண்ணலாமே என்று நீங்க கேட்ப்பது புரிகிறது. அதுக்கும் காரணம் இருக்கே. எண்கள் கல்லூரியில் 11.00 pm க்கு அப்புறமாக கணணி பயன்படுத்த அனுமதி கிடையாது.
இந்த விடயத்தில் நான் அதிச்டசாளிங்க. எனக்குத் தான் காதலன் இல்லையே. அதனால் நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவிட முடிகிறது.
நண்பர்களுடன் இருக்கும் போது ஒரு தெம்பு எப்போதுமே எமக்குள்ளே இருக்கும். அது போதும் எனக்கு.. (காதல் அனுபவம் இருப்பவர்கள் எனக்கு அடிக்க வரக் கூடாது)
12 comments:
ஓகே ஓகே முன்னொரு காலத்தில் நம்ம தாய்நாட்டிலும் இப்படி இருந்திச்சே ஞாபகம் இருக்கா? எது எவ்வாறாக இருந்தாலும் நேரத்தை திட்டமிட்டு செலவு செய்யவும்.
சிந்து முன்பிருந்த எனது பிரபாவின் வலைபூ இப்ப இல்ல , இப்ப "விழியும் செவியும்"
நீங்கள் பார்பவையில் இப்பவும் "பிரபா" தான் இருக்கு முடிந்தால் மாற்றி விடுங்க....
www.prapaactions.blogspot.com
வாசிக்க தொடக்கி ஆரமபத்தில் நான் வாசிக்கும்போது பின்நூட்டத்திலே உங்களுக்கும் நேரம் பிரட்சனயாகிவிட்டதோ என்று கேட்க நினைத்தேன்........(இந்த விடயத்தில் நான் அதிச்டசாளிங்க. எனக்குத் தான் காதலன் இல்லையே.) ?????????????? ஒருமாதிரியா தப்பிடிங்க உங்களுக்கு நேரம் சரியாக இருந்தால் சரிதான்.
நீங்கள் அவசரப்பட்டு பதிவிட்டு இருக்கிங்க என்பது புரிகிறது உங்களுக்கும் நேரமாற்றம் விளையாடுகிறதோ..... எழுத்து பிழைகள் இருக்கின்றன திருத்திக்கொள்ளுங்க....
இங்கு நேரம் மாற்றிய போது நாங்களும் இதைத் தான் கதைத்தோம்..
" சந்ரு said... "
எழுத்துப் பிழைக்கு நேரம் தான் காரணம், ஊருக்குப் போவதால் கணனியில் இருக்க நேரம் இல்லை...
உங்கள் வரவு நல்வரவாகட்டும். மிகவும் சந்தோசமாக இருப்பிங்க எண்டு நினைக்கின்றேன்.
உருக்கு வந்தாலும் பதிவிட மறந்துடாதிங்க
சிந்து, இன்று தான் உங்கள் பக்கம் என்னால் வரமுடிந்தது. உங்கள் எழுத்துக்கள் நன்றாக இருக்கின்றன. வாழ்த்துக்கள். அத்துடன் இன்னும் வித்தியாசங்களை சுவாரஷ்யங்களை உங்களிடம் எதிர்பார்க்கின்றேன்.
உண்மையை சொல்லுங்கள் இது உங்கள் நண்பர்களை பற்றிய கவலையா அல்லது உங்கள் கவலையா?
"சந்ரு said...
உங்கள் வரவு நல்வரவாகட்டும். மிகவும் சந்தோசமாக இருப்பிங்க எண்டு நினைக்கின்றேன்.
உருக்கு வந்தாலும் பதிவிட மறந்துடாதிங்க"
ஊருக்குப் போனால் எழுதுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று தெரியவில்லை..
"sshathiesh said...
சிந்து, இன்று தான் உங்கள் பக்கம் என்னால் வரமுடிந்தது. உங்கள் எழுத்துக்கள் நன்றாக இருக்கின்றன. வாழ்த்துக்கள். அத்துடன் இன்னும் வித்தியாசங்களை சுவாரஷ்யங்களை உங்களிடம் எதிர்பார்க்கின்றேன்."
எழுத்துக்கள் நன்றாக இருக்கின்றனவா..? எப்போது பாத்தீங்க, நான் கணனியில் தட்டச்சு செய்வது தான் வழக்கம்..
என்ன வித்த்யாசங்களை சுவாரசியங்களை எதிர்பாக்கிறீங்க..>?
" சத்தியமூர்த்தி சதீஷன். said...
உண்மையை சொல்லுங்கள் இது உங்கள் நண்பர்களை பற்றிய கவலையா அல்லது உங்கள் கவலையா?"
நம்புங்க, என் நன்பிகளது தான், எனக்கு நம்பர்கள் தான் இருக்கிறார்கள், காதலன் இல்லை..
காதலிக்கும் நிலைமையில் இல்லை...(அப்புறம் என்ன காதல் தோல்வியா என்றெல்லாம் கேக்கப்படாது..)
காதலர்கள் சாட் பண்ண முடியல்ண்ணா அது பெரும் பிரச்சனையில்ல, உடனே ஒரு போராட்டம் அறிவிச்சு, இந்த நேர மாற்றத்த கைவிட சொல்லுவோமா?
இதுக்கெல்லாமா போராட்டம், என் நீங்க காதலர்களை சேர்த்து வைக்கும் சங்கத்தை சேர்ந்தவரா>
வெளிநாட்டவர்களில், காதலில் விழுந்தவர்கள் (அது தானுங்க காதலர்கள் இருப்பவர்கள்) படும் பாடு இருக்கே, கொடுமையுங்க.. என்ன அது என்று ஆவலா...//
உங்க கஷ்டம் புரிகிறது தோழி...
ஹா ஹா ...
"மயாதி said...
வெளிநாட்டவர்களில், காதலில் விழுந்தவர்கள் (அது தானுங்க காதலர்கள் இருப்பவர்கள்) படும் பாடு இருக்கே, கொடுமையுங்க.. என்ன அது என்று ஆவலா...//
உங்க கஷ்டம் புரிகிறது தோழி...
ஹா ஹா ..."
இந்தவருடத்தின் சிறந்த நகைச்சுவை இது தான் என்று சொல்லலாமா..?
யாரும் மாட்ட மாட்டேன் என்கிறாங்களே. என் சோகம் என்னுடன்...
Post a Comment