Monday, June 29, 2009

சீக்கிரமாகவே பிரிவோமா..

சேர்ந்தால் பிரிவு நிச்சயம்
என்று தெரிந்துமே
பழக ஆரம்பித்தோம்
ஆனால்
அந்தப் பிரிவே
இவ்வளவு சீக்கிரமேவா..?

எதிர்பார்ப்பே இல்லாத
உறவுகளில் காதலும்
ஒன்று என்பார்கள்
ஆனால்
அந்தக் காதலுக்காக
பல எதிர்பார்ப்புகளை
விட்டு வரமுடியாதடா...?

9 comments:

குமரை நிலாவன் said...

சிந்து வந்தாச்சா சொல்லவேஇல்லை
நாளை வந்து பதிவுகளை படிக்கிறேன்

Admin said...

//எதிர்பார்ப்பே இல்லாத
உறவுகளில் காதலும்
ஒன்று என்பார்கள்
ஆனால்
அந்தக் காதலுக்காக
பல எதிர்பார்ப்புகளை
விட்டு வரமுடியாதடா...///

இந்த வரிகள் பிடித்திருக்கின்றது.... தொடருங்கள் வாழ்த்துக்கள்....

மயாதி said...

அதுசரி பிரிவு இல்லாமல் சேர்க்கை இல்லை ...

மயாதி said...

அட நம்ம ஊரு பொண்ணா..?
இன்னும் நிறைய எழுதுங்கோ தோழி..

Sinthu said...

" குமரை நிலாவன் said...
சிந்து வந்தாச்சா சொல்லவேஇல்லை
நாளை வந்து பதிவுகளை படிக்கிறேன்"
அமாம் நிலாவன் அண்ணா, பரீட்சை அது தான் இந்தப் பக்கம் வர முடியவில்லை...

"சந்ரு said...
//எதிர்பார்ப்பே இல்லாத
உறவுகளில் காதலும்
ஒன்று என்பார்கள்
ஆனால்
அந்தக் காதலுக்காக
பல எதிர்பார்ப்புகளை
விட்டு வரமுடியாதடா...///

இந்த வரிகள் பிடித்திருக்கின்றது.... தொடருங்கள் வாழ்த்துக்கள்...."
சும்மா கிறுக்கினேன், அதைப் போய்.....

"மயாதி said...
அதுசரி பிரிவு இல்லாமல் சேர்க்கை இல்லை ..."
அதே மாதிரி சேர்க்கை இல்லாமல் பிரிவும் இல்லையே..

" மயாதி said...
அட நம்ம ஊரு பொண்ணா..?
இன்னும் நிறைய எழுதுங்கோ தோழி.."
நண்பா நீங்க எந்த ஊர்..?

Admin said...

கிறுக்கலே இப்படி என்றால் கவிதை எப்படி இருக்கும்...

sshathiesh said...

என்ன சிந்து காதலை அனுபவித்து எழுதுவதுபோல இருக்கு நடக்கட்டும் நடக்கட்டும்.

குமரை நிலாவன் said...

பதிவுகளை படித்துவிட்டேன்
நீ நன்றாக படி பாடங்களை

Sinthu said...

"சந்ரு said...
கிறுக்கலே இப்படி என்றால் கவிதை எப்படி இருக்கும்"
அண்ணா எனக்குத் தான் கவிதை எழுதத் தெரியாதே, அது தான் சும்மா கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்..

" sshathiesh said...
என்ன சிந்து காதலை அனுபவித்து எழுதுவதுபோல இருக்கு நடக்கட்டும் நடக்கட்டும்."
என்ன சதீஷ் உங்களுக்கு சொல்லாமலா...?

" குமரை நிலாவன் said...
பதிவுகளை படித்துவிட்டேன்
நீ நன்றாக படி பாடங்களை"
என்ன அண்ணா வீட்டுக்கிப் போகும் சந்தோசத்தில் இருக்கிறேன், படிப்பைப் பற்றி நினைவு படுத்துவது நியாயமா..?