Tuesday, April 21, 2009

நீயா..

யாருடனும் பேசாத
பேச்செல்லாம் - நீ
பேசியதாலேயே
வியந்தேன்
நீயா என்று......

சம்பந்தமே இல்லா
விடயங்கள்
தாமாகவே சம்பந்தமாகின
சம்பந்தமே இல்லாமல்..
நம்மால் என்று சொல்லலாமா?
புரியாதவளாக...
புரியத் தெரியாதவளாக....
தெரிந்தும் புரியாதவளாக....
யாதுமே அறியாதவளாய்...

பதில் எங்கோ...?
அது கூடத் தெரியாது அவளுக்கு..

Saturday, April 18, 2009

இரண்டு...

எல்லா விடயங்களுக்கும் ஒரு எதிர்க் கருத்து இருப்பது போல வாழ்வதுக்கும் சாவதுக்கும் கூட எதிர்க் கருத்தான கேள்விகளும் கருத்துக்களும் இருக்கின்றன...நீங்க ஒருவரிடம் போய் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கு என்று சொன்னீங்க என்றால், அவர் சொல்லுவார் - நாளை வருவதே பெரிய விஷயமா இருக்கு அதற்க்குள் நீர் என் எதிர் காலத்தைப் பற்றி எல்லாம் கவலை என்பாங்க.. அது மட்டும் இல்லாமால் நிறைய விளக்கம் வேறு சொல்வார்கள். உதாரணமாக தங்கள் வாழ்க்கையைப் பற்றி எல்லாம் சொல்லுவாங்க..


கொஞ்ச நாள் கழித்து அதே நபரிடம் வேறு ஒருவர் போய் எதிர் காலமே பொய் தானே எண்டு சொன்னேங்க என்றால் அவர் சொல்லுவார் - யார் அப்படிச் சொன்னது என்று கேட்பார்?


அப்படித் தான் என் அசிரியரிடன் என் நண்பி கேட்டாள் "எதிர் காலத்தை நினைத்து பயமா இருக்கு"
அதுக்கு ஆசிரியார் சொன்னார் "நீர் உம்மளுடைய நாளாந்த வேலையப் பாரும்"

கடந்த புதன் கிழமை நான் அந்த ஆசிரியரிடம் மாறி வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேன். அன்று எனக்கு உடல் நலம் குறைவாக இருந்தது. ஆனாலும் ஆசிரியரிடம் சில சந்தேகங்களைக் கேட்க்க வேண்டிய நிலைமையில் அவருடைய அலுவலக நேரத்துக்குப் போனேன். என் அன்பு நண்பிகள் எனக்கு வருத்தம் என்று சொல்லிவிட்டார்கள் (இத்தனைக்கு வியாழக் கிழமை செயல்த்திட்டம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டி இருந்தது - அதற்கான சந்தேகங்களைத் திருத்தவே போயிருந்தேன்). அதற்கு ஆசிரியர் "ஏன் நீர் உமது செத்தவீட்டுக்கு சொல்லி அனுப்பப் போறீரோ உமது செயல்த்திட்டத்தை என்னிடம் தர முன்." என்று சொன்னார். நான் என் நண்பிகளைத் தமிழில் தான் ஏசினேன் ஆனால் அந்தப் புத்திசாலி ஆசிரியர் புரிந்து கொண்டார் (அவரின் முன் தமிழ் பேசி இருக்கக் கூடாது தான் - என்ன செய்ய).

அப்படியாக படிப்பு விடயத்துக்கு வந்தாச்சு. சரி என்று சில சந்தேகங்களைக் கேட்டு சில சந்தேகங்களுடன் வெளியேறுகையில் மறுபடியும் சாவுவீடு பற்றியும் அன்றைய இரவு அதிகமாகப் படிக்க வேண்டாம் என்றும் சொன்னார். என் வாய் தான் சும்மா இருக்காதே "I don't like to be here. I would like to die.' என்று சொல்லிவிட்டேன். என் நண்பிகள் தான் பாவம். என்னை அறையில் வைத்துக் கதவையும் அடைத்து கேள்வி மலை தொடர்ந்தது.

நான் சொன்னேன் "Future never comes." enru

Miss Carly சொன்னார் "Future always comes." அதுக்கு அப்புறமா வாழ்க்கை வரலாறு மாதிரி எதோ கலந்துரையாடல் தொடர்ந்தது.

அவருடன் கதைத்ததில் கொஞ்சம் மன நின்மதி தான், ஆனால் இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் மாத்தியில் வாழ்வது கடினம் என்பது தான் உண்மை..

வாழ்க்கை என்பது என்ன? நாங்க எதற்காக வாழ்கிறோம்?

பி.கு: வாசித்தவர்களுக்கு நன்றி..... என் என்றால் அதிக நாள் பதிவு போடாததால் எதோ தோன்றியது அது தான் இந்த அலம்பல்....

Saturday, April 4, 2009

நல்லது..

பங்களாதேசத்தில் பிச்சை எடுக்கத் தடை என்பது அருண் அண்ணாவின் வலைத்தளம் பார்த்த பின்னரே எனக்குத் தெரிய வந்தது. சில நாட்களாக கல்லூரிக்குள்ளேயே இருந்ததால் தான் இந்த செய்தி தெரிய வராமல் விட்டது. வீதிகளில் காவல்த்துறையினர் (போலீஸ் என்றால் தான் விளங்கும் சிலருக்கு) நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாக நண்பிகள் சொன்னார்கள் (அது மட்டும் இல்லீங்க, பிச்சை எடுப்பவர்களை அடிக்கிறார்களாம்.)

இவ்வளவு நாளும் அவர்களைப் பிச்சை எடுக்க விட்டு ஊக்கிவித்ததே பங்களாதேசத்து அரசாங்கம் தானே..அது மட்டும் இல்லை, நாளுக்கு நாள் பிச்சை எடுக்கும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் இருந்தது. (ஒரு நாள் ஏதாவது கொடுத்தல் தினமும் பின்னே வரும் சிறுவர்கள்)

தினம் தினம் வெளியே போகும் போது வயதானவர்களிலிருந்து தவழும் குழந்தை வரை கையை நீட்டும். அந்த சின்னப் பிள்ளை தான் என்ன செய்கிறேன் என்று தெரியாமல் எங்களுடைய கையைப் பிடிக்கும். அந்த பிள்ளையைத் தூக்கி இருக்கும் அம்மா அந்தப் பிள்ளையை பார்த்து எதோ பங்களா மொழியில் சொல்லுவாங்க (எங்களுக்கு இந்த மொழி அவ்வளவாகத் தெரியாது என்பது தான் உண்மை). ஆனால் ஆன்டி (Aunty) என்று கூப்பிடச் சொல்றாங்க எண்டு மட்டும் விளங்கும். அந்தப் பிள்ளைக்கு என்ன தெரியும், அதுவும் கூப்பிடும் (எங்களுக்குத் தலை எழுது பாருங்க. என்ன செய்யக் கேட்டுக் கொண்டு தான் வர வேண்டும்).
அதுவும் எங்களிடம் தான் கேட்பார்கள். இந்த நாட்டு யாராவது என்றால் ஏசி விடுவார்கள். நாங்க கொஞ்சம் புத்திசாலிகள் என்று தான் நினைக்கிறேன், இப்படி யாரவரு பிச்சை கேட்டல் ஏதாவது ஒரு கடைக்குள் போவோம் (போனதுக்காக ஏதாவது வாங்கிக் கொண்டு வாறது.)

எழ்மை என்பதை ஏழைகள் நினைத்தால் ஒழிக்கலாம் என்பது என் கருத்து. பங்களாதேசத்தில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகிக் கொண்டிருப்பது உண்மை தான். ஆனால் பணக்காரர்களால் கட்டப் படும் கட்டடங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு போகின்ற வேலை அந்தக் கட்டிடப் பணியில் வேலையாட்களாக வேலை செய்தாலாவது தங்கள் குழந்தைகளைக் கொஞ்சமாவது முன்னிக்கு வரச் செய்யலாமே..(அதை விட்டிட்டு வீதியில்)
இந்த அரசாங்கம் செய்தது சரியா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் இருக்கிற நாட்டுப் பிரச்சனை அச்சே அது தான் இந்தப் பதிவு. (ஆனால் நாங்க இனி நின்மதியாக வெளியே போகலாம்)

Thursday, April 2, 2009

நினைவுகள்

யாராகவோ இருந்த - நீ
நானாக மாறுகையில்
உனக்காகவே வாழ்ந்த நான்
நீயாக மாறுவதில்
தப்பு எதுவும் இல்லையே..

எனக்காக நீ இருந்த
காலம் போய்
உனக்காக நான்
என்ற நிலைமை வருவதற்கு
யார் காரணமாகினார்கள்.....

உனக்காக நன்றி சொல்கிறேன்
யார் யாரிடமோ எல்லாம்....