Tuesday, January 5, 2010

நாள்

நாள் என்றவுடன் என்னடா இவள் சொல்ல வாறாள் என்று நினைக்கிறீங்களா? சும்மா நாள் என்றவுடன் நினைவு வந்ததை சிறு வரிகளாக.........

அதிகாலை
சூரியனின் வருகையால்
ஒளி பெரும் நேரம்
நாளின் தொடக்கமாக.
நமக்குத் தான்
சிறிது சலிப்பு
எழும்பி அந்நாளை
தொடங்குவதற்கு...

மதியம்
விடுமுறை நாட்களின் அதிகாலை
கல்லூரி நாட்களின் நீண்ட நேரம்
குட்டித் தூக்கம் என்றென்றும் வரவேற்க
தூங்கலாம் கனி திறந்தே.

மாலை
சுகந்தமான காற்றுடன்
அளவான வெளிச்சம்
என்றென்றும்
பசுமையான நினைவுகளையே
மீட்க சுவையான நேரம்.

இரவு
வீட்டு வேலைகளின் நச்சரிப்புகள் தீர
கனவுலகுக்கு தாவ
நினைக்கும் மனங்களுக்கு
இதுவே மனநின்மதி
அவசரமான மறுநாளை எதிர் கொள்ள முன்...

5 comments:

அண்ணாமலையான் said...

காலை
விட்டுட்டீங்களே?

Subankan said...

//விடுமுறை நாட்களின் அதிகாலை
கல்லூரி நாட்களின் நீண்ட நேரம்
குட்டித் தூக்கம் என்றென்றும் வரவேற்க
தூங்கலாம் கனி திறந்தே.
//

ஆகா, ஆகா சேம் பிளட்

:))

Sinthu said...

மன்னிக்கணும்...
அது தானே இப்ப எழுதினா போச்சு
காலை
அனைவருக்கும் அவசரம்
இதைக் கடக்கும் போது மட்டும்
அவசரமான நாளில்
இது மட்டும் நிதானமாக.
இப்ப சரீங்களா?

//Subankan said...//விடுமுறை நாட்களின் அதிகாலை
கல்லூரி நாட்களின் நீண்ட நேரம்
குட்டித் தூக்கம் என்றென்றும் வரவேற்க
தூங்கலாம் கனி திறந்தே.
//
ஆகா, ஆகா சேம் பிளட்

:)) //
நல்லது, நல்ல முன்னுக்கு வருவீங்க.

கருணையூரான் said...

ம்.....வித்தியாசமான ஒரு சிந்தனை சிந்துவிடம் இருந்து சிந்தி இருக்கிறது......தொடருங்கள் ..வாழ்த்துக்கள்

Sinthu said...

//கருணையூரான் said...
ம்.....வித்தியாசமான ஒரு சிந்தனை சிந்துவிடம் இருந்து சிந்தி இருக்கிறது......தொடருங்கள் ..வாழ்த்துக்கள்//
நன்றி...