Thursday, January 14, 2010

தைத்திருநாள் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

உழவர்களுக்கான பண்டிகை என்று சொன்னாலும், எல்லோராலும் கொண்டாடப் படவேண்டிய பண்டிகை இது. சூரியனுக்கு உழவர்கள் மட்டுமல்ல எல்லோருமே நன்றி சொல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு பண்டிகை தான் இந்த தைப் பொங்கல்.
தமிழர்களுக்கு தை மாதத்தின் முதல் நாள், தவறுகளைத் திருத்துவதாக பலர் சொல்லிக் கொள்ளும் நாட்களில் இதுவும் ஒன்று.



நமக்கெல்லாம் திருநாள்
அது உழவனுக்கு மட்டுமல்ல
பெற்ற உதவி நேரடியானது
இல்லை என்கிறாயா?
நேரடியை விட
மறைமுகத்தை விரும்பும்
மனிதா
இந்த மறைமுக உதவிக்கும்
நன்றி சொல்

எரிக்கிறாய் என்றவனும்
போற்றுகிறான் உன்னை இன்று
எதிரியும் நண்பனாகலாம்
என்று சொல்லாமல் சொல்லும் திருநாள்


எவ்வளவு தான்
தொலைவில் இருந்தாலும்
அருகிலேயே இருக்கிறேன்
என்றுணர்த்தும்
சூரியனுக்கு
இன்று திருநாளாம்
குளிர் காலத்தில்
பலர் எதிர்பார்க்கும்
ஒருவன்
கோடைகாலம் வந்ததும்
ஏன் வெறுக்கப்படுகிறான்?

வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா

9 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உண்மையாவே இந்த கருத்து ரொம்ப நல்லா இருக்கு சிந்து..

தூரமா இருந்தாலும் அருகில்..எதிரியும் நண்பனாகலாம்.. ஹ்ம்.. தத்துவம்.. :)

Muruganandan M.K. said...

"எவ்வளவு தான்
தொலைவில் இருந்தாலும்
அருகிலேயே இருக்கிறேன் .." நல்ல வரிகள்.
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கல்.

Subankan said...

இனிய தைத்திருநாள் வாழ்த்துகள் சிந்து

Sinthu said...

நன்றி முத்துலட்சுமி
நன்றி Dr.எம்.கே.முருகானந்தன்
தைத்திருநாள் வாழ்த்துக்கள்
// Subankan said...
இனிய தைத்திருநாள் வாழ்த்துகள் சிந்து//
உங்களுக்கு உரித்தாகட்டும்

ரிஷபன் said...

நேரடியை விட
மறைமுகத்தை விரும்பும்
மனிதா
இந்த மறைமுக உதவிக்கும்
நன்றி சொல்
மனதைப் படிக்கும் வரிகள்!

அண்ணாமலையான் said...

நல்ல கருத்து, வாழ்த்துக்கள்....

நிலாமதி said...

உங்களுக்கு இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள் .

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்...

Sinthu said...

நன்றி ரிஷபன்.
நன்றி, உங்களுக்கு தைத்திருநாள் வாழ்த்துக்கள் அண்ணாமலையான்.
தைத்திருநாள் வாழ்த்துக்கள் நிலாமதி