Sunday, December 28, 2008

தன் காதலியை கூட இனம் காண தெரியாதவன்...

தலைப்பைப் பார்த்தவுடன் என்னடா இது வம்பாக இருக்கே என்று நினைக்காதீங்க. சொல்ல போகின்ற விடயம் நம்பமுடியாதவை போல் தான் இருக்கும். நீங்கள் எல்லோரும் ஒருவரை போல் ஏழு பேர் இருப்பாங்க என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இங்கு இரண்டே இரண்டு பேர் தான் ஆனா ஒரே மாதிரி பேசுகிறார்களாம் என்ற ஒரே காரணத்தால் அவன் குழம்பி போனான். அவன் யாரென்று சொல்லட்டா......... பேரு....... தீபன், ஒரு இந்தியன்.
நான் என்ன சொல்ல வாறன் என்று உங்களில் யாருக்காவது புரிகிறதா?
வேண்டாம் நானே சொல்லிட்டா பிரச்சனை இல்லப்பா....
நான் முதலில் "ஒரே மாதிரி பேசுகிறார்கள்" என்று சொன்னேனே தவிர எங்க எப்படி என்றெல்லாம் சொல்லவில்லையே. அது வந்து பாருங்கோ இந்த குறும் தகவல் (chatting எண்டு சொல்லுவாங்களே) அனுப்புவமே அங்க தான்.
சரி கதைக்கு வருவம்.
ஆரம்ப காலத்தில் இந்த குறும் தகவல் அனுப்புவது பற்றியே தெரியாத ஆர்த்தி தன் நண்பியிடமிருந்து கேட்டு அறிந்து கொண்டிருந்தாள். அப்போதெல்லாம் சும்மா பேசும் முகம் தெரியாதவர்களுடன் எல்லாம் பொய் சொல்லி தான் chat பண்ணுவதை வழக்கமாக கொண்டிருந்தவள் பலரிடம் மாட்டியிருக்கிறாள். எனவே உண்மைகளை சொல்லுவதாக முடிவு பண்ணி எல்லோருக்கும் உண்மை தான் சொல்லுவாள்.
அப்படியாக உண்டான நட்பு தான் தீபனுடனும். தீபன் ஆர்த்தியின் நன்பிகளுடனும் நட்புறவை பேணினான். தீபன் நாட்கள் கடக்க கடக்க தன் குடும்பம், காதலி பற்றி ஆர்த்தியிடம் சொல்ல ஆரம்பித்தான். இத்தனைக்கும் அவன் காதலி வேறு ஒருவனை காதலிப்பதாகவும் அவள் என்ன ஏமாற்றிவிட்டாள் என்பதாகவும் புலம்பல்கள் வேறு. அவளை நான் இப்போதும் காதலிப்பதாகவும் சொல்லி ஆர்த்தியிடம் ஏச்சு வாங்கிய நாட்கள் பல. அவன் ஆர்த்தியுடனும் அவள் நண்பிகளுடனும் கதைத்ததத்கு ஒரு காரணம் அவன் காதலி ரேவதியும் ஒரு இலங்கை பெண். இப்படியாக பலவிடயங்களை தீபனும் ஆர்த்தியும் பரிமாறிக்கொள்வது வழக்கமானது. ஆர்த்தி ரேவாவை (தீபன் ரேவதியை ரேவா என்று தான் கூப்பிடுவான்) எவ்வளவு தான் ஏசினாலும் அவன் இடம் கொடுக்கமாட்டான் ஆனால் அதே சமயம் ஆர்த்தியையும் ஏசமாட்டான். அவள் சொல்வதற்கு எல்லாம் சரி என்று சொல்வதை மட்டும் வாடிக்கையாக்கி கொண்டிருந்தான். இப்படியாக அவன் ஒவ்வொரு கதைகளையும் சொல்ல சொல்ல பாவம் ஆர்த்திக்கு கவலையாக இருக்கும் ஆனால் அவளால் என்ன செய்யமுடியும் ஏன் என்றால் அவள் பல தடவைகள் அவனிடம் ரேவதியை மறக்க சொல்லியும் அவன் ரேவதியை தான் காதலிப்பேன் என்கிறான்.
இப்படியாக நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் " நீ என்ன ரேவா மாதிரியே பேசிறா" என்றான் தீபன். ஆர்த்திக்கு ஒன்றுமே புரியவில்லை. " இரண்டு பேருமே இலங்கை தமிழ் தானே அது தான் சில வேலை ஒரே மாதிரி இருக்கலாம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் ஆர்த்தி. அப்புறம் சில நாட்களின் பின் "ஏன்டா ரேவா என்கூட விளையாடிற உண்மையை சொல்லு நீ ஆர்த்தி இல்ல ரேவா தானே" என்றான். இது என்னடா வம்ப போச்சு இவனிடம் உண்மையை பேசியும் இவன் என்னை இப்படி சொல்லிட்டனே என்று மனம் நொந்து போனால் ஆர்த்தி. இத்தனைக்கு அவன் விடவில்லை " dey plz da சொல்லு உன் அப்பா எங்க இருக்கிறார்" என்று கேட்டவுடன் ஆர்த்திக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என் எனில் அவளுக்கு அப்பாவே இல்லை. அவர் காலமாகி நாட்களாகிவிட்டன. அவள் அவனிடம் முன்பே சொல்லியிருக்கிறாள்.
அது தான் பரவாயில்லை அவன் பித்து பிடித்தவன் போல் இருக்கிறான் என்றால் அவளிடம் காதல் வார்த்தைகள் வேறு (இது வேற தேவையா அவனுக்கு நீங்களே சொலுங்க)
பி. கு : இதில் வந்த தீபன், ஆர்த்தி என்ற பெயர்கள் உண்மையானவை அல்ல. பெயர் மாற்றப்படுள்ளன. ஆனால் சத்தியமா சொல்றான் ரேவதி என்பது உண்மை தான்....கதையும் உண்மை தான். யாரிடம் சொல்லி அழ...

இப்படியும் சிலர் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் என்ன செய்யவேணும்.
எனக்கு வழி தெரியாததால் உங்களிடம் விட்டிருக்கிறேன். ஏதாவது பண்ணுங்க..

2 comments:

keerthana said...

சிந்து, பலர் நீங்களா ஆர்த்தி என்று கேட்டிருப்பார்களே.....இல்லையா?

Sinthu said...

"keerthana கூறியது...
சிந்து, பலர் நீங்களா ஆர்த்தி என்று கேட்டிருப்பார்களே.....இல்லையா?"

இல்ல கீதா நீங்க தான் முதலாவதாக கேட்டிருக்கிரீங்கோ...........
அது நான் இல்லம்மா......................