Tuesday, December 30, 2008

தனிமை

ஒரு தடவையேனும் அந்த சந்தர்ப்பம்
கிடைத்திருக்கும் யாவருக்குமே..
ஆனால் இவளுக்கோ
பல தடவைகள் கிடைத்திருந்தன.
அழுகையுடனும் நினைவுகளுடனும்
வெறுப்புகளுடனும் அவள் வாழ்க்கை......
அவையும் உதவின சில சந்தர்ப்பங்களில்
பாடம் புகட்டின அறிவுரைகளும் உட்பட....
பலவற்றை அறிந்துக்கொண்டாள்.
பலர் பற்றியும் அறிந்துக்கொண்டாள்.


அவள் அறிந்திருக்கவில்லை அவளைச்
சுற்றி என்ன நடக்கிறது என்பதை.
அவளுக்கு உதவ முடியவில்லை
நண்பிகளால் கூட.
புரிந்துகொள்ள கூட
முடியவில்லை அவர்களால்.
அவள் முகம் முழுவதும் புன்னகை.
மனம் முழுவதும் சோகக் கடல்.
அதனால் தான் என்னவோ அவளை
யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.


அவளை பொறுத்த வரை
எல்லாமே வெறுமையாகிப் போயின.
அவளைச் சுற்றி பலர்
இருந்த போதிலும் கூட.
தவறு யாரிடம் அவளிலா
அவளைச் சுற்றி நின்று
வேடிக்கை பார்ப்பவர்களிடமா....?


உங்களிடமே விடுகிறேன் சொல்லுங்க....
தவறு யாரிடம்..?

சிநேகமுடன்
சிந்து
பி. கு: இதுவும் முன்னையது போல ஒரு கிறுக்கல் தான்.

4 comments:

தேவன் மாயம் said...

அவளை பொறுத்த வரை
எல்லாமே வெறுமையாகிப் போயின.
அவளைச் சுற்றி பலர்
இருந்த போதிலும் கூட.
தவறு யாரிடம் அவளிலா
அவளைச் சுற்றி நின்று
வேடிக்கை பார்ப்பவர்களிடமா....? ///

தவறு அவளிடம் இல்லை!!!
அவளை சுற்றி இருப்பவர்களிடம்தான்!!!

Sinthu said...

thanks theva anna........
I also thought like u thought..

Hisham Mohamed - هشام said...

என் அன்புப் பதிவரே பதிவுலகிற்கு தங்களை வரவேற்கிறேன்.

Sinthu said...

"HISHAM கூறியது...
என் அன்புப் பதிவரே பதிவுலகிற்கு தங்களை வரவேற்கிறேன்"
அண்ணா நீங்க என் வலைப்பூவுக்கு வருவீர்கள் என்று நினைக்கவே இல்லை.. வந்ததில் சந்தோசமே..
ஆனால்
என்னைப் பொறுத்தவரை கற்பிப்பவர்கள் எல்லோரும் ஆசிரியராகி விட முடியாது ஏன் என்றால் ஒழுங்காக கட்பிக்கணும் அதே போல தான் ஒழுங்காக பதிந்தால் மட்டுமே பதிவர் ஆகலாம் என்பது என் கருத்து.