Wednesday, December 31, 2008

வலைப்பூவுக்கு புதியவள்................

இந்த வருடம் எனக்கு முக்கியமாகியதட்கு ஒரு காரணம் நான் இந்த வலைப்பதிவுக்கு வந்தது தான். வாழ் நாளிலே நினைத்துப் பார்க்காத ஒன்று.
லோஷன் அண்ணா, கார்க்கி அண்ணா, ஹிஷாம் அண்ணா, தூயா அக்கா மற்றும் பலரது வலைப்பூக்களைப் பார்த்த பின்னர் சும்மா இருக்கின்ற நேரத்தில் எதோ சும்மா என்னால் முடிந்ததை எழுதலாமே என்ற சின்ன ஆசை ஒன்று தோன்றியது. வீராப்பாக தொடங்கினே. முதல் பதிவில் என்ன எழுவது என்றே தெரியவில்லை. முன் அனுபவம் இல்லாதது தான் (பொய் பேசவே தெரியாத சின்ன பொண்ணு நான்)காரணம்.

வலையமைப்பை எப்படி வடிவமைப்பது என்று தெரியாவிடாலும் ஏதோ எழுதி கிழிப்பது என்று ஒரு முடிவு எடுத்திருக்கிறேன் (தப்பான முடிவா என்று தெரியவில்லை). எந்த காலகட்டத்திலுமே மறக்க முடியாத நாட்கள் (சிறிய காலப்பகுதியாக இருந்தாலும் கூட). எவ்வளவு கஷ்டமான் நிலைமைகளிலும் மகிழ்ச்சியாக இருந்த காலம் இது தான். யாரைப் பற்றியுமே கவலைப் பட்டாமல் யாருடனும் அதிகம் பேசாமல் நானும் என்பாடும் என்று இருந்த இந்த காலத்தை எப்படி.......... மறக்க முடியும்.


எனக்கு தங்களுடைய வலைப்பூவின் முகவரியை தந்த லோஷன் அண்ணாவுக்கும் ஹிஷாம் அண்ணாவுக்கும் நன்றி சொல்லவேண்டும். மற்றது அவர்களை பின்தொடர்பவர்கள் சிலருக்கும் (நல்ல தலைப்புகளை இட்டு என்னை பங்களாதேசத்திலிருந்து தங்கள் பதிவுகளை பார்க்க வைத்த நல்ல உள்ளங்கள்) கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த ஆண்டில் நடந்து முடிந்த கேட்ட தீய விடயங்களை மறந்து (நல்ல விடயங்களை மறந்திடாதீங்க..) இனிய இரு நல்ல ஆண்டை ஆரம்பியுங்கள்..
முன்கூட்டிய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டிலாவது நம்மவர்கள் விடுதலை அடைவார்களா...........? வேண்டுவோம் (இறைவனிடம் தான்)
சமாதானமான இனிய வருடத்தை நோக்கிய பயணம்..........
வருடம்

Tuesday, December 30, 2008

தனிமை

ஒரு தடவையேனும் அந்த சந்தர்ப்பம்
கிடைத்திருக்கும் யாவருக்குமே..
ஆனால் இவளுக்கோ
பல தடவைகள் கிடைத்திருந்தன.
அழுகையுடனும் நினைவுகளுடனும்
வெறுப்புகளுடனும் அவள் வாழ்க்கை......
அவையும் உதவின சில சந்தர்ப்பங்களில்
பாடம் புகட்டின அறிவுரைகளும் உட்பட....
பலவற்றை அறிந்துக்கொண்டாள்.
பலர் பற்றியும் அறிந்துக்கொண்டாள்.


அவள் அறிந்திருக்கவில்லை அவளைச்
சுற்றி என்ன நடக்கிறது என்பதை.
அவளுக்கு உதவ முடியவில்லை
நண்பிகளால் கூட.
புரிந்துகொள்ள கூட
முடியவில்லை அவர்களால்.
அவள் முகம் முழுவதும் புன்னகை.
மனம் முழுவதும் சோகக் கடல்.
அதனால் தான் என்னவோ அவளை
யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.


அவளை பொறுத்த வரை
எல்லாமே வெறுமையாகிப் போயின.
அவளைச் சுற்றி பலர்
இருந்த போதிலும் கூட.
தவறு யாரிடம் அவளிலா
அவளைச் சுற்றி நின்று
வேடிக்கை பார்ப்பவர்களிடமா....?


உங்களிடமே விடுகிறேன் சொல்லுங்க....
தவறு யாரிடம்..?

சிநேகமுடன்
சிந்து
பி. கு: இதுவும் முன்னையது போல ஒரு கிறுக்கல் தான்.

Monday, December 29, 2008

காதலா, காதல் தோல்வியா....?

"கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு"
என்னடா இவள் இப்படி கொல்கிறாளே என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்.
பல கவிதைகளிலுள்ள பொய்களை ரசித்ததன் காரணத்தால் கொஞ்சம் பொய்பேசலாமே என்று நேற்று சில கவிதைகளை...... (மன்னிக்கணும் கிறுக்கல்களை ) அவை தான் கவிதைகள் என்று சொல்லி என்னால் எழுதப்பட்டவை.

எழுதி முடிந்த நேரம் தொடக்கி இப்போது வரை என்னை பலர் கேட்ட கேள்வி "உங்கட காதலன் யாரு" என்பது தான். அது மட்டுமா உங்களுக்கு காதல் தோல்வியா என்று வேறு ஒரு கேள்வி வேற. (என்னை சின்ன பொண்ணாவே இருக்க விடமாட்டேங்கிறாங்கப்பா.........) எப்பவுமே சின்ன பிள்ளையா இருந்தா பிரச்சனையே இல்ல இல்ல.......
அதை விடுங்க..

பொய் பொய்யாக எழுதுவதை வாடிக்கையாக்கி கொள்ளலாம் என்று முடிவு பண்ணிட்டேன்.......(சினிமாவில் கதாநாயகியின் அப்பா கதாநாயகனிடம் சொல்லுவர் என் பொண்ண விடற... அவளை நான் உனக்கு தர மாட்டேன் எண்டவுடன் எங்க கதாநாயகன் சொல்லுவாரு இதுவரைக்கும் நான் உண்ட பொண்ண love பண்ணனும் எண்டு நினைக்கல்ல இந்த நிமிடத்திலிருந்து அவ தான் என் காதலி என்பாரே அந்த மாதிரி எடுத்துக்கலாம். . )
என் கிறுக்கல்களை ஏற்றுகொள்வீர்கள் என்று நினைக்கிறேன். பிடிக்கல்லையா. ஏண்டி இப்படி எல்லாம் எழுதிறா எண்டு கேட்டிடுங்க.................

வாசிங்க...................................
பின்னூட்டல் போடுங்க...................
பிடிக்காவிட்டாலும் போடலாம்...

Sunday, December 28, 2008

கவிதை என்று சொல்லி உங்களை குழப்பும் ஒரு புது முயற்சி

உன்னை காதலிக்க வேண்டும்

என்பதற்காக தானோ

இதுவரை நான்

இயற்கையை கூட

காதலிக்கவில்லை.

________________________________________

நான் உன்னுள் அடக்கம் என்று - நீ

அன்று சொன்னதன் அர்த்தத்தை

இன்று தான்

உணர்ந்தேன் - ஆனால்

நான் இன்று உன்னை

அடையமுடியாத

இக்கட்டான சூழ்நிலையில்.

மீண்டும் வருவேன் - நீ

ஒரு சுதந்திர பறவையாக

மாறி இருக்கும் போது...

________________________________________

வருவாய் என்று காத்திருந்த

போது வராத நீ

வர வேண்டாம் என்று நினைத்த

போது வந்ததன் காரணம்..

________________________________________

என் கிறுக்கல்களையும்

கவிதையாக்கும் உனக்கு

நான்

என்ன கைமாறு செய்வது..

_________________________________________

பி.கு: சும்மா கிறுக்கினேன். பிடிக்கவில்லை என்றாலும் கருத்து தெரிவிக்கலாம். அதுக்காக குண்டக்க மண்டக்க என்று சொன்ன எனக்கு புரியாது. எதையும் தெளிவா சொல்லணும்.

தன் காதலியை கூட இனம் காண தெரியாதவன்...

தலைப்பைப் பார்த்தவுடன் என்னடா இது வம்பாக இருக்கே என்று நினைக்காதீங்க. சொல்ல போகின்ற விடயம் நம்பமுடியாதவை போல் தான் இருக்கும். நீங்கள் எல்லோரும் ஒருவரை போல் ஏழு பேர் இருப்பாங்க என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இங்கு இரண்டே இரண்டு பேர் தான் ஆனா ஒரே மாதிரி பேசுகிறார்களாம் என்ற ஒரே காரணத்தால் அவன் குழம்பி போனான். அவன் யாரென்று சொல்லட்டா......... பேரு....... தீபன், ஒரு இந்தியன்.
நான் என்ன சொல்ல வாறன் என்று உங்களில் யாருக்காவது புரிகிறதா?
வேண்டாம் நானே சொல்லிட்டா பிரச்சனை இல்லப்பா....
நான் முதலில் "ஒரே மாதிரி பேசுகிறார்கள்" என்று சொன்னேனே தவிர எங்க எப்படி என்றெல்லாம் சொல்லவில்லையே. அது வந்து பாருங்கோ இந்த குறும் தகவல் (chatting எண்டு சொல்லுவாங்களே) அனுப்புவமே அங்க தான்.
சரி கதைக்கு வருவம்.
ஆரம்ப காலத்தில் இந்த குறும் தகவல் அனுப்புவது பற்றியே தெரியாத ஆர்த்தி தன் நண்பியிடமிருந்து கேட்டு அறிந்து கொண்டிருந்தாள். அப்போதெல்லாம் சும்மா பேசும் முகம் தெரியாதவர்களுடன் எல்லாம் பொய் சொல்லி தான் chat பண்ணுவதை வழக்கமாக கொண்டிருந்தவள் பலரிடம் மாட்டியிருக்கிறாள். எனவே உண்மைகளை சொல்லுவதாக முடிவு பண்ணி எல்லோருக்கும் உண்மை தான் சொல்லுவாள்.
அப்படியாக உண்டான நட்பு தான் தீபனுடனும். தீபன் ஆர்த்தியின் நன்பிகளுடனும் நட்புறவை பேணினான். தீபன் நாட்கள் கடக்க கடக்க தன் குடும்பம், காதலி பற்றி ஆர்த்தியிடம் சொல்ல ஆரம்பித்தான். இத்தனைக்கும் அவன் காதலி வேறு ஒருவனை காதலிப்பதாகவும் அவள் என்ன ஏமாற்றிவிட்டாள் என்பதாகவும் புலம்பல்கள் வேறு. அவளை நான் இப்போதும் காதலிப்பதாகவும் சொல்லி ஆர்த்தியிடம் ஏச்சு வாங்கிய நாட்கள் பல. அவன் ஆர்த்தியுடனும் அவள் நண்பிகளுடனும் கதைத்ததத்கு ஒரு காரணம் அவன் காதலி ரேவதியும் ஒரு இலங்கை பெண். இப்படியாக பலவிடயங்களை தீபனும் ஆர்த்தியும் பரிமாறிக்கொள்வது வழக்கமானது. ஆர்த்தி ரேவாவை (தீபன் ரேவதியை ரேவா என்று தான் கூப்பிடுவான்) எவ்வளவு தான் ஏசினாலும் அவன் இடம் கொடுக்கமாட்டான் ஆனால் அதே சமயம் ஆர்த்தியையும் ஏசமாட்டான். அவள் சொல்வதற்கு எல்லாம் சரி என்று சொல்வதை மட்டும் வாடிக்கையாக்கி கொண்டிருந்தான். இப்படியாக அவன் ஒவ்வொரு கதைகளையும் சொல்ல சொல்ல பாவம் ஆர்த்திக்கு கவலையாக இருக்கும் ஆனால் அவளால் என்ன செய்யமுடியும் ஏன் என்றால் அவள் பல தடவைகள் அவனிடம் ரேவதியை மறக்க சொல்லியும் அவன் ரேவதியை தான் காதலிப்பேன் என்கிறான்.
இப்படியாக நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் " நீ என்ன ரேவா மாதிரியே பேசிறா" என்றான் தீபன். ஆர்த்திக்கு ஒன்றுமே புரியவில்லை. " இரண்டு பேருமே இலங்கை தமிழ் தானே அது தான் சில வேலை ஒரே மாதிரி இருக்கலாம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் ஆர்த்தி. அப்புறம் சில நாட்களின் பின் "ஏன்டா ரேவா என்கூட விளையாடிற உண்மையை சொல்லு நீ ஆர்த்தி இல்ல ரேவா தானே" என்றான். இது என்னடா வம்ப போச்சு இவனிடம் உண்மையை பேசியும் இவன் என்னை இப்படி சொல்லிட்டனே என்று மனம் நொந்து போனால் ஆர்த்தி. இத்தனைக்கு அவன் விடவில்லை " dey plz da சொல்லு உன் அப்பா எங்க இருக்கிறார்" என்று கேட்டவுடன் ஆர்த்திக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என் எனில் அவளுக்கு அப்பாவே இல்லை. அவர் காலமாகி நாட்களாகிவிட்டன. அவள் அவனிடம் முன்பே சொல்லியிருக்கிறாள்.
அது தான் பரவாயில்லை அவன் பித்து பிடித்தவன் போல் இருக்கிறான் என்றால் அவளிடம் காதல் வார்த்தைகள் வேறு (இது வேற தேவையா அவனுக்கு நீங்களே சொலுங்க)
பி. கு : இதில் வந்த தீபன், ஆர்த்தி என்ற பெயர்கள் உண்மையானவை அல்ல. பெயர் மாற்றப்படுள்ளன. ஆனால் சத்தியமா சொல்றான் ரேவதி என்பது உண்மை தான்....கதையும் உண்மை தான். யாரிடம் சொல்லி அழ...

இப்படியும் சிலர் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் என்ன செய்யவேணும்.
எனக்கு வழி தெரியாததால் உங்களிடம் விட்டிருக்கிறேன். ஏதாவது பண்ணுங்க..

Monday, December 15, 2008

வழி இருந்தால் சொல்லுங்கப்பா.........

உங்களுக்கு நான் மிகவும் நல்ல பழக்கவழக்கங்கள் கொஞ்சம் சொல்ல போகிறேன். எனக்கு இந்த பழக்கங்கள் இருக்கிறதா என்று கேகிறேங்க போல. சத்தியமாக சொல்கிறேன் அத்தனையும் என்னிடமே வீடு கட்டி குடிகொண்டுவிட்டன. நான் நினைத்தும் விரட்ட முடியவில்லை (அது தான் சொன்னேன்).
வாங்க சொல்கிறேன் ஏனென்றால் நல்ல குணங்கள் தானே...
அதிகம் பேசுவேன்
சில நேரங்களை என்ன பேசுகிறேன் என்று எனக்கே தெரியாது (அப்படி என்றால் மற்றவர்களுக்கு எப்படி விளங்கும். கொடுமை.....) முன்னைய பதிவில் சொல்லியிருக்கிறேன் எனவே மறுபடியும் அலம்புவது விரும்பவில்லை.
அதிகமாக கோவப்படுவேன்
யார்மீதாவது கோவம் வந்தால் உடனே வெளிக்காட்டிவிடுவேன். இடம், பொருள், ஏவல் என்றெல்லாம் சொல்வார்களே அதை எல்லாம் கணக்கிலேயே எடுப்பதில்லை இவள்(யாரது..? நான் தான் என்றால் நம்புவீர்கள் என்று தெரியும்).
பிறர் பிரச்சினைகளை தீர்க்க நினைத்து நான் பிரச்சினையை வாங்கி இருக்கிறேன்
அவர்களின் பிரச்சினையை என்னிடம் சொல்ல நான் அதற்கு தீர்வு சொல்ல அது எனக்கே பாதகமாய் முடிந்துவிடும். அவர்கள் சேர்ந்துவிடுவார்கள் (அப்போ என்பாடு .... இன்னும் புரியவில்லையா..? அது தான்).
எளிதில் எல்லோரையும் நம்புவது
பல சந்தர்ப்பங்களில் ஏமாந்திருக்கிறேன். இந்த காரணத்தால் சில வேளைகளில் சில விடயங்கள் உண்மையாக இருக்கும் ஆனால் நான் நம்புவதில்லை.
பிறருக்கு உதவி செய்ய நினைத்து என் வேலைகளை இறுதி நேரத்தில் செய்து முடிப்பேன்.
உதவி கேட்பவர்களுக்கு மறுப்பு தெரிவிப்பதில்லை (என்னால் செய்யக்கூடிய வேலையாக இருந்தால் சிலவேளைகளில் தெரியாத வேலை என்றாலும் முயற்சிப்பதுண்டு)- அவ்வளவு இலக்கிய மனம் சொன்னால் நம்பனும்.
எல்லோரிடமும் அதிக அக்கறை கொள்ளுதல்.
என்னவர்கள் என்று நான் நினைத்தவர்கள் தப்பு செய்தால் உடனே சொல்லிவிடுவேன். எப்படி எப்போது சொல்ல வேண்டும் என்று என்றெல்லாம் எனக்கு தெரியாதுப்பா ஆனால் சொல்லிவிடுவேன் (பாதிக்கப்பட்டவர்கள் மன்னிக்க வேண்டும்).
முக்கியமான ஒன்றை மறந்துவிட்டேனே..
தாழ்வு மனப்பாங்கு தான் என்னுடன் சிறு வயதிலிருந்தே ஒட்டிக்கொண்டிருக்கும் ஒட்டுண்ணி. சில விடயங்கள் தெரிந்திருந்தாலும் சொல்வதற்கு முன்வருவதில்லை. ஏன் என்ற கேள்வியை என்னுள்ளேயே பமுறை கேட்டும் விடை கிடைக்கவில்லை.

இன்னும் என்ன நல்ல குணங்கள் இருக்கின்றன என்னில்...? இப்போதைக்கு இவ்வளவு தான் தோன்றியது. என்ன எழுதி வைத்த சொல்லுவாங்க ஞாபகம் இருந்ததை சொன்னேன்பா....வழி இருந்தால் சொல்லுங்கப்பா என்று தான் சொன்னேன். வசித்தவர்கள் வழி சொல்லயுங்க இல்லை என்றால் உங்களின் நல்ல பழக்கவழக்கங்கள் கொஞ்சத்தை எடுத்துவிடுங்க.
வழி சொல்லுங்க ......

Saturday, December 13, 2008

"யாகாவாராயினும் நா காக்க.........."

என்னடா இவள் வள்ளுவரின் திருக்குறளை எல்லாம் சொல்லி பழைய பல்லவி பாட போகிறாள் என்று நினைக்க வேண்டாம். இது என் வாழ்க்கையில் (அனுபவம் தான்) நடந்தது. என் பேச்சு தான் எனக்கு பலமும் பலவீனமும் (ஏன் என்று கேட்பது புரிகிறது). என் பேச்சினால் நான் பலரை கவர்ந்தாலும் அதே பேச்சினால் பல நல்ல நண்பர்களை இளந்ததும் உண்டு. நான் இப்படி தான் பேசுவேன் என்று தெரிந்திருந்தாலும் எனது பேச்சினை தவறாக நினைத்தவர்கள் பலர் ( நண்பர்கள் உட்பட - அப்போ அவர்கள் நண்பர்களா என்று கேட்ட வேண்டாம்). சில சந்தர்ப்பங்களில் ஒரு விடயத்தை நேரடியாக சொன்னால் பலர் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்திருக்கும் ஆனால் பல சந்தர்ப்பங்களில் என்னை மறந்து ஏதோ பேசுவது என்று ஏதோ பேசியது நினைவிருக்கிறது (அதனால் நிறையவே பாதிக்கபட்டிருக்கிறேன், பலர் பாதிக்கபட்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை).
என்னை போல் பலர் பேச்சினால் மாட்டியிருப்பார்கள். நானும் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பது கசப்பான உண்மை தான் (சிரிக்காதீங்க). பேச்சை குறைக்க ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கப்பா...... இப்பகூட ஏதோ எழுதுவதென்று ஏதோ ஏதோ எல்லாம் எழுதுகிறேன்.
எனது பதிவுகள் பற்றி உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
ஏதாவது சொல்லுங்கபா. பரவாயில்லை நல்லா இல்லை என்றாவது சொல்லுங்களேன்.
நண்பர்களுடன் கூட எதையுமே சிந்தித்து கதையுங்க என்பது என்னுடைய சின்ன
அறுவுரை ( நீங்க எப்படி வேண்டும் என்றாலும் எடுக்கலாம்).

Thursday, December 11, 2008

என் பார்வையில் காதல் என்பது

காதல் என்பது புனிதமானது என்பதை நான் அறிவேன் ஆனால் அதற்கான வரைவிலக்கணம் அறியாது தேடுகிறேன் (அறிந்தவர்கள் சொல்லலாம்). காதலின் உள்ளார்ந்த தத்துவம் புரிதல் என்று நினைக்கிறேன். இரு மனங்கள் ஒன்றிக்கும் போது காதல் மலர்வதாக சொல்கிறார்கள். காதல் என்ற பெயரில் பலர் பலரது வாழ்க்கையை ஏலம் போடுகிறார்கள் என்பதை நான் நினைவறிந்து இவ்வுலகை பார்த்ததிலிருந்து சொல்கிறேன்(என்ன அனுபவமா என்று கேக்கிறீர்கள் அப்படி இருந்தால் சொல்கிறேனே). இங்கெல்லாம் ஒருவரின் மனதை காதலிக்கிறேன் என்று சொல்லி அவர்களின் சொத்துகளை காதலிப்பவர்கள் அதிகம் (உண்மையாக காதலிப்பவர்கள் அடிக்க கூடாது). என்னை காதலித்து அவன் அல்லது அவள் ஏமாற்றிவிட்டான் அல்லது ஏமாற்றிவிட்டாள் என்று ஒருவனோ அல்லது ஒருத்தியோ சொன்னால் எனக்கு கோபம் தான் வரும் (ஏன் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது) ஏன் என்றால் அவளோ அல்லது அவனோ உண்மையாக காதலிக்கவில்லையே. காதல் என்ற பெயரில் அத்தனை நாளும் என்ன செய்தார்கள் என்று என்னை கேட்க வேண்டாம். சினிமாக்களில் மட்டுமே காதலுக்காக எல்லாம் செய்யும் காதலர்களை காண முடிகிறது. நியமான வாழ்க்கையில் அவர்களை விரல் விட்டு எண்ணலாம்.
ஏன் பார்வையில் காதல் என்பது என்று தலைப்பை போட்டிவிட்டு சொல்லாமல் போகிறாளே என்று நினைக்கிறேர்களா? சொல்கிறேன் கேளுங்கள் காதலை சுவாசிக்கிறேன் அதனால் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
இன்னும் இருக்கின்றன அவை மற்றுமோர் பதிவில்......
வரட்டா.............?
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.