Saturday, April 4, 2009

நல்லது..

பங்களாதேசத்தில் பிச்சை எடுக்கத் தடை என்பது அருண் அண்ணாவின் வலைத்தளம் பார்த்த பின்னரே எனக்குத் தெரிய வந்தது. சில நாட்களாக கல்லூரிக்குள்ளேயே இருந்ததால் தான் இந்த செய்தி தெரிய வராமல் விட்டது. வீதிகளில் காவல்த்துறையினர் (போலீஸ் என்றால் தான் விளங்கும் சிலருக்கு) நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாக நண்பிகள் சொன்னார்கள் (அது மட்டும் இல்லீங்க, பிச்சை எடுப்பவர்களை அடிக்கிறார்களாம்.)

இவ்வளவு நாளும் அவர்களைப் பிச்சை எடுக்க விட்டு ஊக்கிவித்ததே பங்களாதேசத்து அரசாங்கம் தானே..அது மட்டும் இல்லை, நாளுக்கு நாள் பிச்சை எடுக்கும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் இருந்தது. (ஒரு நாள் ஏதாவது கொடுத்தல் தினமும் பின்னே வரும் சிறுவர்கள்)

தினம் தினம் வெளியே போகும் போது வயதானவர்களிலிருந்து தவழும் குழந்தை வரை கையை நீட்டும். அந்த சின்னப் பிள்ளை தான் என்ன செய்கிறேன் என்று தெரியாமல் எங்களுடைய கையைப் பிடிக்கும். அந்த பிள்ளையைத் தூக்கி இருக்கும் அம்மா அந்தப் பிள்ளையை பார்த்து எதோ பங்களா மொழியில் சொல்லுவாங்க (எங்களுக்கு இந்த மொழி அவ்வளவாகத் தெரியாது என்பது தான் உண்மை). ஆனால் ஆன்டி (Aunty) என்று கூப்பிடச் சொல்றாங்க எண்டு மட்டும் விளங்கும். அந்தப் பிள்ளைக்கு என்ன தெரியும், அதுவும் கூப்பிடும் (எங்களுக்குத் தலை எழுது பாருங்க. என்ன செய்யக் கேட்டுக் கொண்டு தான் வர வேண்டும்).
அதுவும் எங்களிடம் தான் கேட்பார்கள். இந்த நாட்டு யாராவது என்றால் ஏசி விடுவார்கள். நாங்க கொஞ்சம் புத்திசாலிகள் என்று தான் நினைக்கிறேன், இப்படி யாரவரு பிச்சை கேட்டல் ஏதாவது ஒரு கடைக்குள் போவோம் (போனதுக்காக ஏதாவது வாங்கிக் கொண்டு வாறது.)

எழ்மை என்பதை ஏழைகள் நினைத்தால் ஒழிக்கலாம் என்பது என் கருத்து. பங்களாதேசத்தில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகிக் கொண்டிருப்பது உண்மை தான். ஆனால் பணக்காரர்களால் கட்டப் படும் கட்டடங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு போகின்ற வேலை அந்தக் கட்டிடப் பணியில் வேலையாட்களாக வேலை செய்தாலாவது தங்கள் குழந்தைகளைக் கொஞ்சமாவது முன்னிக்கு வரச் செய்யலாமே..(அதை விட்டிட்டு வீதியில்)
இந்த அரசாங்கம் செய்தது சரியா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் இருக்கிற நாட்டுப் பிரச்சனை அச்சே அது தான் இந்தப் பதிவு. (ஆனால் நாங்க இனி நின்மதியாக வெளியே போகலாம்)

10 comments:

கீர்த்தனா said...

"பங்களாதேசத்தில் பிச்சை எடுக்கத் தடை என்பது அருண் அண்ணாவின் வலைத்தளம் பார்த்த பின்னரே எனக்குத் தெரிய வந்தது."

எனக்கு இப்போது தான் தெரிய வந்தது சிந்து!

ttpian said...

கருனனிதிக்கு புலிகல் கொலை மிரட்டல்?
மலிவு விளம்பரம் தேடுவதில்,தமிழக அரசியல்வாதிகள்,மிக மிக மட்டமானவர்கள்

Prapa said...

சிலவேளை நாட்டின் பாதுகாப்புக்காக இருக்கும் .
ஆனால் இதெல்லாம் உங்க நாட்டுல ஒரு பெரிய " பிரச்சனை "!! அப்பா நம்ம நாட்டுல ......ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .ஓகே . சிந்துகா.

Sinthu said...

உண்மையா கீதா?
உங்க நாடும் ஏன் நாடு தானே பிரபா அண்ணா..

தேவன் மாயம் said...

எழ்மை என்பதை ஏழைகள் நினைத்தால் ஒழிக்கலாம் என்பது என் கருத்து. பங்களாதேசத்தில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகிக் கொண்டிருப்பது உண்மை தான். ஆனால் பணக்காரர்களால் கட்டப் படும் கட்டடங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு போகின்ற வேலை அந்தக் கட்டிடப் பணியில் வேலையாட்களாக வேலை செய்தாலாவது தங்கள் குழந்தைகளைக் கொஞ்சமாவது முன்னிக்கு///

நல்ல சிந்தனை!

தேவன் மாயம் said...

பிச்சைக்காரர்கள் இல்லாமை நல்லதுதான்!

kuma36 said...

///அம்மா அந்தப் பிள்ளையை பார்த்து எதோ பங்களா மொழியில் சொல்லுவாங்க (எங்களுக்கு இந்த மொழி அவ்வளவாகத் தெரியாது என்பது தான் உண்மை). ஆனால் ஆன்டி (Aunty) என்று கூப்பிடச் சொல்றாங்க எண்டு மட்டும் விளங்கும்///

ஓ அப்ப நீங்க ஆன்டியா? தெரியாம போச்சே, இவ்வளவு நாளா பெயரைச் சொன்னதற்காக கோவிக்காதிங்க ஆன்டி.

Anonymous said...

ஹாய் ஆண்டி!
என்ன இது ச்சின்னபிள்ளைதன்மாய் இருக்கே!
பிச்சை எடுக்கிறவ்க்களை தடுக்குறதனைவிட, பிச்சை கொடுகாமல் விட்டால் அவர்களாக வேறு தொழிலிற்கு போவார்கள்!
(பதிவு ஒன்ரு எழுதிட்டு இருகிறன்!)
உங்களை மட்டும் தான்அண்டி எண்ரு சொன்னாங்களா இல்லை உங்க நண்பர்களையுமா????

Sinthu said...

நல்லம் தான் பிச்சைக் காரர் இல்லாத உலகம் ஒன்று உருவாக்கினால்..


எனக்கு இப்ப தான் கோபமா வருகிறது (கோபம் வந்து என்ன செய்யா....)

நல்ல பதில் தான்..
நண்பிகளையும் தான்னுங்கோ.....

SASee said...

சிந்து
நல்லதொரு விடயத்தை அறியத்தந்தமைக்கு நன்றி..
எல்லாவற்றுக்கும் ஆரம்பம் ஒன்று
இருப்பது போல முடிவொன்றும் இருக்க வேண்டுமே......
இது நல்ல தொரு முடிவு...!