Saturday, April 18, 2009

இரண்டு...

எல்லா விடயங்களுக்கும் ஒரு எதிர்க் கருத்து இருப்பது போல வாழ்வதுக்கும் சாவதுக்கும் கூட எதிர்க் கருத்தான கேள்விகளும் கருத்துக்களும் இருக்கின்றன...நீங்க ஒருவரிடம் போய் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கு என்று சொன்னீங்க என்றால், அவர் சொல்லுவார் - நாளை வருவதே பெரிய விஷயமா இருக்கு அதற்க்குள் நீர் என் எதிர் காலத்தைப் பற்றி எல்லாம் கவலை என்பாங்க.. அது மட்டும் இல்லாமால் நிறைய விளக்கம் வேறு சொல்வார்கள். உதாரணமாக தங்கள் வாழ்க்கையைப் பற்றி எல்லாம் சொல்லுவாங்க..


கொஞ்ச நாள் கழித்து அதே நபரிடம் வேறு ஒருவர் போய் எதிர் காலமே பொய் தானே எண்டு சொன்னேங்க என்றால் அவர் சொல்லுவார் - யார் அப்படிச் சொன்னது என்று கேட்பார்?


அப்படித் தான் என் அசிரியரிடன் என் நண்பி கேட்டாள் "எதிர் காலத்தை நினைத்து பயமா இருக்கு"
அதுக்கு ஆசிரியார் சொன்னார் "நீர் உம்மளுடைய நாளாந்த வேலையப் பாரும்"

கடந்த புதன் கிழமை நான் அந்த ஆசிரியரிடம் மாறி வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேன். அன்று எனக்கு உடல் நலம் குறைவாக இருந்தது. ஆனாலும் ஆசிரியரிடம் சில சந்தேகங்களைக் கேட்க்க வேண்டிய நிலைமையில் அவருடைய அலுவலக நேரத்துக்குப் போனேன். என் அன்பு நண்பிகள் எனக்கு வருத்தம் என்று சொல்லிவிட்டார்கள் (இத்தனைக்கு வியாழக் கிழமை செயல்த்திட்டம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டி இருந்தது - அதற்கான சந்தேகங்களைத் திருத்தவே போயிருந்தேன்). அதற்கு ஆசிரியர் "ஏன் நீர் உமது செத்தவீட்டுக்கு சொல்லி அனுப்பப் போறீரோ உமது செயல்த்திட்டத்தை என்னிடம் தர முன்." என்று சொன்னார். நான் என் நண்பிகளைத் தமிழில் தான் ஏசினேன் ஆனால் அந்தப் புத்திசாலி ஆசிரியர் புரிந்து கொண்டார் (அவரின் முன் தமிழ் பேசி இருக்கக் கூடாது தான் - என்ன செய்ய).

அப்படியாக படிப்பு விடயத்துக்கு வந்தாச்சு. சரி என்று சில சந்தேகங்களைக் கேட்டு சில சந்தேகங்களுடன் வெளியேறுகையில் மறுபடியும் சாவுவீடு பற்றியும் அன்றைய இரவு அதிகமாகப் படிக்க வேண்டாம் என்றும் சொன்னார். என் வாய் தான் சும்மா இருக்காதே "I don't like to be here. I would like to die.' என்று சொல்லிவிட்டேன். என் நண்பிகள் தான் பாவம். என்னை அறையில் வைத்துக் கதவையும் அடைத்து கேள்வி மலை தொடர்ந்தது.

நான் சொன்னேன் "Future never comes." enru

Miss Carly சொன்னார் "Future always comes." அதுக்கு அப்புறமா வாழ்க்கை வரலாறு மாதிரி எதோ கலந்துரையாடல் தொடர்ந்தது.

அவருடன் கதைத்ததில் கொஞ்சம் மன நின்மதி தான், ஆனால் இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் மாத்தியில் வாழ்வது கடினம் என்பது தான் உண்மை..

வாழ்க்கை என்பது என்ன? நாங்க எதற்காக வாழ்கிறோம்?

பி.கு: வாசித்தவர்களுக்கு நன்றி..... என் என்றால் அதிக நாள் பதிவு போடாததால் எதோ தோன்றியது அது தான் இந்த அலம்பல்....

6 comments:

Subankan said...

//வாழ்க்கை என்பது என்ன? நாங்க எதற்காக வாழ்கிறோம்?//

சத்தியமாக எனக்குத் தெரியாது சிந்து, ஆனால் அண்மையில் திருமலை சென்றிருந்த போது எனக்கும், எனது மாமாவின் மகனுக்கும் (வயது 4+ ) இடையில் இடம்பெற்ற உரையாடல்

அப்பா எங்கே?

வேலைக்குப் பொட்டார்.

ஏன் வேலைக்குப் பொட்டார்?

உழைக்கத்தான்

ஏன் உழைக்கோணும்?

சாப்பிடத்தான்.

ஏன் சாப்பிடோணும்?

வாழத்தான்.

ஏன் வாழோணும்?

அப்பதானே நிறைய விளையாடலாம்.

.............
............


வாழ்க்கை என்பது ஆளாளுக்கு மாறுபடும் இல்லையா?

Subankan said...

ஆமா, உங்க UNIல இப்படியெல்லாம் பேராசிரியர்களோடு பேசலாமா?

உங்கள் நண்பிகள் பாவம் வா.வி.சி (lol)

Subankan said...

விரைவில் உடல்நலம் தேறப் பிரார்த்திக்கின்றேன்.

தேவன் மாயம் said...

அவருடன் கதைத்ததில் கொஞ்சம் மன நின்மதி தான், ஆனால் இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் மாத்தியில் வாழ்வது கடினம் என்பது தான் உண்மை.///

சிந்து !! நல்லா பீதியைக் கிளப்புறியே!!!
இது ஞாயமா?

தேவன் மாயம் said...

அப்படித் தான் என் அசிரியரிடன் என் நண்பி கேட்டாள் "எதிர் காலத்தை நினைத்து பயமா இருக்கு"
அதுக்கு ஆசிரியார் சொன்னார் "நீர் உம்மளுடைய நாளாந்த வேலையப் பாரும்"///

இதை நீயும் கடைப்பிடி சிந்து!! எதையும் கண்டுக்காத!! எதிகாலமும் மக்களும் உனக்காக் காத்திருக்கிறார்கள்!

Sinthu said...

சுபாங்கன் அண்ணா..
அந்த இடைவெளியில் என்ன வரும் என்றும் சொன்னால் நன்றாக இருக்குமே...

தாராளமாகப் பேசலாம், அதற்காக முதலே அனுமதி பெற வேண்டு இருக்கும்..

நன்றி.... ஆனால் தேறியதால் தான் பதிவு எழுத முடிந்தது..

என்ன பீதி தேவா அண்ணா...?

முயற்சிக்கிறேன்..