என்னடா இவள் பல காரணங்கள் என்றாளே என்கிரீன்களா?
என்ன செய்ய பல கவலையான நிகழ்வுகளை சுமந்து வந்தது இந்த 16 மாதங்கள்..... (என்ன எந்த வித சந்தோசமான விடயங்களும் நடந்ததே இல்லையா என்று கேக்கிறீங்களா.......... நடந்தன சந்தோசமான விடயங்களை விட சோகமான விடயங்களா அதிகமாக நடந்தன.
வாங்க காரணங்களைப் பாத்திடலாம்..
- ஊருக்குப் போறேன்
- அம்மா, அண்ணா ஆகியோரின் அருமை புரிந்த பின்னர் அவர்கள் இருவரையும் பார்க்கப் போகிறேன்.
- அதிக நாட்களின் பின்னர் என் நண்பர்களைப் பார்க்கப் போகிறேன்
- கொழும்பை நண்பிகளுடன் சுத்தியதில்லை. எங்கு போனாலும் உறவுக் காரர்களுடன் தான். இந்த முறை நண்பிகளுடன் ஊர் சுத்தும் வாய்ப்புக் கிட்டியுள்ளது
- இங்கு வந்தவுடன் கோயிலுக்குப் போவது குறைந்துவிட்டது. அப்படி சென்றாலும் மன நின்மதி கிட்டியதில்லை. கோயிலுக்குப் போகவுள்ளதால் மனதில் இப்போதே ஒரு உற்சாகம் கிட்டியுள்ளது
- பாடசாலை போகப் போகிறேனே. எப்பவுமே மறக்க முடியாத இடம்.
- அம்மா அண்ணாவுடன் அலட்டிய நாட்களை மீண்டும் பெறப் போகிறேனே என்ற ஆர்வம் (எல்லா விடயங்களையுமே அலசும் இடம் என் வீடு, என் வீட்டில் என்ன கேட்ட விடயம் செய்தாலும் அதை சொல்லி மன்னிப்பு கேட்க்கும் பழக்கம் உண்டு அதனால் பெரிதாக எந்தப் பிரச்சனையும் வருவதில்லை. என் அம்மாவின் கருத்துக் கணிப்பின் படி, வேறு ஒருவர் என்னையும் என் அண்ணாவைப் பற்றி அவரிடம் சொல்ல முன்னர் தன் பிள்ளைகள் தன்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைப்பார். - அது எனக்கு தப்பாகப் படவில்லை, அதனால் எல்லா விடயங்களையும் சொல்லி வாங்கிக் கட்டுவேன்.)
- 16 மாதங்கள் நடந்தவற்றை வீட்டார்டன் பகிரப் போவதே இந்த மாதத்தில் தான்.
இன்னும் நிறைய இருக்கிறது, நீங்க நான் எழுதி இருப்பதைப் படித்து கஷ்டப் படுவது தெரிகிறது என்பதால் இவ்வளவும் போதும் என்றிருக்கிறேன். சந்திக்கலாம்...
3 comments:
சொந்தங்களை பிரிந்து வாழ்வது கொடுமையிலும் கொடுமை......
இத்தனை ஆசைகளா சிந்து....
These are not a lot of desires anna,,
:-)
Post a Comment