இந்தப் பயணம் ஒன்று தான் எப்போதுமே எங்களுடன் இருப்பது என்றாகிவிட்டது. நாங்கள் தவிர்க்க நினைத்தாலும் அதுவாக வந்து அமைந்துவிடும். பயணங்கள் பல காரணங்கள் இல்லாமல் ஏற்பட்டாலும், சிலருக்கு அது வாழ்க்கையாகவே அமைகிறது; குறிப்பாக தமிழர்களுக்கு.
ஏன் இதை எல்லாம் சொல்கிறாள் என்று நினைக்கிறீங்களா? காரணம் இருக்கிறது. வாழ்க்கையில் பல இடங்களுக்கு சென்றிருந்தாலும், வாழ்க்கையிலே எனக்கான மூன்றாவது முக்கிய பயணம் இப்போது நான் ஸ்ரீ லன்காவுக்குப் போவது தான்.
பயணம் ஒரு படிப்பனை. இதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்க.
சொல்ல வந்த விடயத்தை சொல்லவில்லையே. நான் வரும் வியாழக் கிழமை ஊருக்குப் போகிறேன், இவ்வளவு நாட்களாக பறேட்சை காரணமாக வலைத் தளப் பக்கம் வர முடியவில்லை, இனி ஊருக்குப் போனால் பதிவுகள் குறைவாக இருக்கும் (இருக்காது என்று உண்மைய சொல்ல விரும்பல்ல), (என்ன நீ உருப்படியாவ எழுதிறியா, நீ எழுதினாலும் எழுதாவிட்டாலும் ஒன்று தான் என்கிறீங்களா?)
பயணம்
உறவுகளை
உருவாக்கவும்
உன்னதமாக்கவும்
உதவிய உன்னை
உதருவதா? உறவாக்குவதா?
உறவுகளின் வலிமை
உணர்வுகளின் தேடல்
உயிரின் மகத்துவம்
யாவையும் பரிசாக்கப் பட்டது
உன்னாலே...
4 comments:
நன்றி அன்ன, ஆனால் தகுதி இருக்கா எனக்கு?
ஆஹா ...
தகுதி நிறையவே இருக்கிறது...
Really...?
நிட்சயமாக தகுதி இருக்கிறது... விருது பெரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்...
Post a Comment