இந்த விருதைப் பதிவர் செந்தழல் ரவி அவர்கள் ஆரம்பித்து வைத்தாலும் எனக்கு இதனை வழங்கியவர் மாண்புமிகு(சும்மா build up தான்) பதிவர் சுபாங்கன் தான். இந்த விருது எனக்கு கிடைத்துள்ளது என்று நினைக்கும் போது பெருமையாக இருந்தாலும், என்னுடன் விருது வழங்கப் பட்டவர்களின் தளங்களைப் பார்க்கும் போது பயமாக இருக்கிறது.
இந்த விருதை மேலும் ஆறு பதிவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கடைப்பாடு எனக்கு இருப்பதால் எனக்குத் தெரிந்த நல்ல பதிவர்கள் அறுவருக்கு இந்த விருதை வழங்கலாம் என்றிருக்கிறேன்.
புதிய பல விடயங்களை அலசி ஆராய்வதில் இவருக்கு ஆர்வம் அதிகம். அது மட்டுமல்லாது தான் அறிந்த விடயங்களை மற்றவர்களுக்குத் தெரியப் படுத்துவதும் இவர் வழமை.
இவர் ஒன்றுக்கும் சளைத்தவர் அல்ல என்று பல இடங்களில் நிறுபனமாகி இருக்கின்றன. பேய்களைப் பற்றி ஆராய்வதில் இவருக்கு உள்ள நாட்டம் யாராலும் விஞ்சப்பட முடியாது. இதற்காகப் புதிய வலைத் தளத்தையே உரிவாக்கியவர் இந்த வல்லவர்.
வைத்தியர் என்ற காரணத்தைக் காட்டி நோய்களைப் பற்றி எழுதும் இவர் கவிதைத் தொடர்களுக்கு நான் அடிமை.
வேலைப்பளு காரணமாகவும் சில பிரச்சினைகளின் காரணமாகவும் இப்போது இவர் பதிவிடுவது குறைவு, ஆனாலும் இவர் பதிவுகள் யாவும் ஏதாவது கருத்தை சொல்லும்.
இவரும் இப்போது பேய்களைப் பற்றி எழுதத் தொடங்கியுள்ளார். நல்ல எழுத்தாளர். அதிக வேலை காரணமாக நான் இப்போது எழுதுவதில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்.
இவர் ஒரு சகலதுறை ஆட்டக் காரர். எல்லாவிதமான பதிவுகளையும் இவர் தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.
எப்படியோ ஆறு பேருக்கு விருதை வழங்கி இருக்கிறேன். நீங்களும் இந்த விருத்த அருவரிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
6 comments:
ஹை.. எனக்கு விருது.. ரொம்ப நன்றி சிந்து..
பயணம் எல்லாம் எப்படி இருந்துச்சு?
பயணமா? அதை ஏன் கேக்கிறீங்க. அந்தக் கொடுமையை இன்னொரு தடவை நினைத்துப் பார்க்க நான் தயாராக இல்லை. ஆனால் வீட்டில் இருந்த நாட்கள் யாவுமே சுகம்..
விருது பெற்ற உங்களுக்கும், விருது பெறப்பட்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்....
எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.
:)
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதி வாங்கி தந்த பெருமையெல்லாம் உன்னை சேரும்.....
நன்றி சிந்து ....வெற்றி பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..
@ சப்ராஸ் அபூ பக்கர் said...
@ டக்ளஸ்... said...
@ பிரபா said...
Thanks a lot.
Post a Comment