Thursday, August 20, 2009

யாரை நம்ப...

அனைத்தையும் அடையலாம்
நட்பால் என்று
உன்னைக் கண்டதுமே
நினைக்கத் தோன்றியது
எல்லாமே பறந்ததடி
உன் காதால்
பொய்யே உருவானாய்
காரணமே இலலாமல்

சாதாரனமாகின - உன்
பொய்ச் சத்தியங்கள்
அதையும் நம்பினர் - நம்
நண்பிகள்
காரணமே இல்லாத - உன்
மாற்றத்துக்கு காரணம் தேடின
அந்த நல்ல

நகரம் நரகமாக்கியது
உன் நுழைவால்
காரணமற்ற பேச்சுகள்
உன் சார்பில் எழுந்தாலும்
பேச மறுத்தன நம் உதடுகள்
பிடிக்கவில்லையடி - உன்
முகம் காண
தெரியவில்லையடி - உன்னைத்
திருத்தி எடுக்க

அறியாமல் செய்த தவறு
எவராலும் திருத்தப் படலாம்
அறிந்தே செய்த தவறை
யார் சொல்லித் திருத்த
முகம் காண ஆசை என்று
நீ விடுமுறையில் அனுப்பிய
sms ஐ அழிக்க முயல்கிறேன்
முடியாதவளாகிறேன்
எனக்கு பல நண்பிகள்
இருக்கிறார்கள் என்ற ஒரே
காரணத்துக்காக......

3 comments:

தேவன் மாயம் said...

நகரம் நரகமாக்கியது
உன் நுழைவால்
காரணமற்ற பேச்சுகள்
உன் சார்பில் எழுந்தாலும்
பேச மறுத்தன நம் உதடுகள்
பிடிக்கவில்லையடி - உன்
முகம் காண
தெரியவில்லையடி - உன்னைத்
திருத்தி எடுக்க///

தவறான வழியில் எவ்வளவு தூரம் சென்றாலும் திரும்பிவா! - என்று யாரோ சொன்னது ஞாபகம் வருது.

Admin said...

என்ன சிந்து இப்படி எல்லாம் ஆச்சுதோ.... (சும்மா லொள்ளு)

கவிதை அருமை அதிலும் அருமை இந்த வரிகள்.
//அறியாமல் செய்த தவறு
எவராலும் திருத்தப் படலாம்
அறிந்தே செய்த தவறை
யார் சொல்லித் திருத்த
முகம் காண ஆசை என்று
நீ விடுமுறையில் அனுப்பிய
sms ஐ அழிக்க முயல்கிறேன்
முடியாதவளாகிறேன்
எனக்கு பல நண்பிகள்
இருக்கிறார்கள் என்ற ஒரே
காரணத்துக்காக......//


அப்படியா சிந்து...

Sinthu said...

"
தேவன் மாயம் said...
நகரம் நரகமாக்கியது
உன் நுழைவால்
காரணமற்ற பேச்சுகள்
உன் சார்பில் எழுந்தாலும்
பேச மறுத்தன நம் உதடுகள்
பிடிக்கவில்லையடி - உன்
முகம் காண
தெரியவில்லையடி - உன்னைத்
திருத்தி எடுக்க///

தவறான வழியில் எவ்வளவு தூரம் சென்றாலும் திரும்பிவா! - என்று யாரோ சொன்னது ஞாபகம் வருது."
சும்மா எழுதினேன், அதற்கும் அர்த்தம் கண்டு பிடிச்சிட்டீங்களே..

"
சந்ரு said...
என்ன சிந்து இப்படி எல்லாம் ஆச்சுதோ.... (சும்மா லொள்ளு"
எதுக்குமே ஆகவில்லை, அதனால் தான் இந்தக் கவிதை..