Saturday, January 2, 2010

புதிய ஆரம்பம்

தவறுகள் திருத்தப் பட வேண்டியவை என்ற வகையில் தவறாக எடுக்கப் பட்ட என் முடிவை திருத்திக் கொள்ளலாமே என்ற முடிவுடன் இவ்வருட முதல்ப் பதிவு இதோ...
அனைவருக்கும் என் இனிய பிந்திய புதுவருட வாழ்த்துக்கள்.
இது இந்த வருடத்துக்கான முதல்ப் பதிவு மட்டுமல்ல இதுவே நான் பதிவு எழுதத் தொடக்கி ஒரு வருடம் கடந்து எழுதும் முதல்ப் பதிவு (இதை முதலே சந்தோசமாக கொண்டாடியிருக்கலாமோ?)

கலக்கலுடன் தொடங்கலாமே இந்த பதிவை..
உண்மை வடிவங்களை மாற்றும் கலை நம்மளுக்கு அத்துப்படி என்று சொல்லும் சிலர் இப்படி எல்லாம் சொல்றாங்களாம், வாசியுங்க.

1. தோடுடைய செவியின், இவன் யாருடைய பொடியன், காடுடைய சுடலை, இது யாருடைய படலை.
2. பாலும் தெளி தேனும் பாணும் பருப்புமிவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன், கோலம் செய், துங்கக் கருபுகத்துத் தூமகனே, சங்கக் கடைத் திறப்பைத் தா.
3. ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவர், கோபம் வரும் பொது மட்டும் தூசனம் பேசுவார்.

இதை நான் சொல்லவில்லை, யாரோ சொன்னாங்க, தட்டச்சு செய்தது மட்டுமே என்னது (நான் நல்ல பிள்ளைங்க; சொன்னால் நம்பவா போறீங்க..)

நம் வாழ்க்கையின் தொடக்கம் அம்மா, அவருடனேயே இந்த தொடக்கத்தியும் ஆரம்பிக்கலாமே என்று தான், அம்மாவுக்காக.

பாசத்தின் இருப்பிடம்
அன்னை என்ற பெயருடன்
ஆதரவாய் நமக்கு
இன்பத்தியே தரும் அவளுக்கு
ஈகை கடமியாகிறது
உதவியை மட்டுமே செய்து
ஊக்கிவிக்கும்
எல்லாமே நமக்காக
ஏனென்றே கேட்காமல்
ஐயமும் இல்லாமல்
ஒரு கதை பேசாமல்
ஓடி ஓடி செய்யும் அவளுக்கு
ஔவியம் கூட செய்வதில்லை சில பிள்ளைகள்.

பி.கு: "அவள்" என்ற சொற்பதம் கவிதைக்காக மட்டுமே.

13 comments:

Subankan said...

நல்வரவு சிந்து, இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

Sinthu said...

மிக்க நன்றி.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

நீங்களும் எண்ட கேசுதானோ.. ரண்டு மாதத்துக்கொரு பதிவு.. நல்லது நல்லது.. புதுவருசத்தில தொடர்ந்து எழுதுறதா எண்ணமா.. வாழ்த்துக்கள்

Admin said...

உங்களைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்தோம். வந்துட்டிங்களே கலக்குங்க....

புதுவருட வாழ்த்த்துக்கள் சிந்து... தொடர்ந்து பதிவெழுதுங்கள்..

Anonymous said...

நாங்க சநந்தோசம இருந்தது பிடிக்கலையா!!!!????

தமிழ் said...

அன்னையைப் ப‌ற்றி வ‌ரிக‌ளுக்கு

வார்த்தை இல்லை

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Sinthu said...

// மதுவதனன் மௌ. / cowboymathu said...
நீங்களும் எண்ட கேசுதானோ.. ரண்டு மாதத்துக்கொரு பதிவு.. நல்லது நல்லது.. புதுவருசத்தில தொடர்ந்து எழுதுறதா எண்ணமா.. வாழ்த்துக்கள்//
ஒரே ஒரு பதிவைத் தானே இரண்டு மாதத்துக்கு அப்புறமாக இட்டேன், அதுக்குள்ளேயா? கொஞ்சம் முன்னாடி போய் பாருங்க.


நன்றி சந்ருஅண்ணா

சந்தோசத்தைக் குலைப்பது தான் என் தொழிலே, அதை எப்படி மாத்திறது.

நன்றி திகழ்.

அண்ணாமலையான் said...

ஹாய் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

சுபானு said...

மீண்டும் ஒரு நல்வரவு.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் தொடங்குங்கள்...

சுபானு said...

“பெண்கள் வேகமாக முடிவெடுப்பார்கள்.. ஆனால் அது தவறாகப் போய்விடுமாம்..”

எங்கேயோ படித்தது. கோபிக்க வேண்டாம்.. சும்மா கலாய்க்கலாம் என்று.. அப்புறம் புது வருடம் எப்படிப் போகுது.. ?

Sinthu said...

// அண்ணாமலையான் said...
ஹாய் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....//
உங்களுக்கும் உரித்தாகுக..

//சுபானு said...மீண்டும் ஒரு நல்வரவு.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் தொடங்குங்கள்..//
வாழ்த்துக்கள் உங்களுக்கும்.

//சுபானு said...“பெண்கள் வேகமாக முடிவெடுப்பார்கள்.. ஆனால் அது தவறாகப் போய்விடுமாம்..”
எங்கேயோ படித்தது. கோபிக்க வேண்டாம்.. சும்மா கலாய்க்கலாம் என்று.. அப்புறம் புது வருடம் எப்படிப் போகுது.. ?//
காதல் விடயத்தில் இது மாறி என்று நினைக்கிறேன், உண்மையா? இது நான் படித்ததல்ல, கேள்விப்பட்டது.
புது வருடம் நன்கே ஆரம்பித்தது, ஆனால் எப்படி போகும் என்று தெரியாது. உங்களுடைய கொண்டாட்டம் எப்படி?

கருணையூரான் said...

///நான் நல்ல பிள்ளைங்க; சொன்னால் நம்பவா போறீங்க///
உங்க மனசு நம்பிசுதா ..அதுவே போதும்...லொல்.....

இன்னும் பல தேவாரங்கள் பலவாறு சொல்லலாம் ...ஆனால் நீங்க பெண்ணாக இருப்பதால் விடுகின்றேன்......

புத்தாண்டு வாழ்த்துக்கள்..தொடருங்கள்

Sinthu said...

அடடா. தேவாரத்தை எப்படி எல்லாம் நாசமாக்கிறங்கப்பா..