பார் காதலித்துப் பார் என்ற கவிதையை லோஷன் அண்ணா ஃபெயில் பண்ணிப்பார் என்று மாற்றி அமைத்ததைத் தொடர்ந்து ஆதிரை (கடலேறி) அண்ணா பல்கலை வந்து பார் என்ற தலைப்பைத் தத்துருவமாக வடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அண்ணா 3 A எடுத்துப்பார் என்ற தலைப்பிலும் சுபாங்கன் அண்ணா பதிவு எழுதிப்பார் என்ற தலைப்பிலும் எழுது கலக்கிவிட்டார்கள். இப்படியான திறமையான பதிவர்களின் வரிசையிலே நீயும் எழுதலாமே சிந்து (நீ திறமையானவலா என்ற கேள்வியை இங்கே கேக்க வேண்டாமே) என்று ஒரு சின்ன ஆசை. அது தான் உங்க......... சும்மா........
கவிப் பேரரசு வைரமுத்து தன பாவம் இந்தக் கவிக் கீல்கரசி கூட கவிதை எழுத வந்திட்டாலே என்று வாசித்து நொந்து போகாமல் இருக்கட்டும் என்பதற்காக இந்தக் கவிதையை இங்கே பிரசுரிக்கிறேன்..
hostel இலிருந்து பார்
உன் வாழ்க்கை
வட்டமே மாறியதை
உன்னுள்ளே
உணர்வாய்
எத்தனை பேர் இருந்தாலும்
நீ மட்டும்
சுதந்திரப் பறவையாய் உணர்வாய்
நீ சாதரணமானவளாக இருந்தும்
வானிலிருப்பதாய் உணர்வாய்
உன் நடத்தை உனக்கே வியப்பாய்த்
தெரியும்
வாழ்க்கையே புதிதாய்
உணர்வாய்
hostel இலிருந்து பார்
இனி எங்கு சென்றாலும்
வாழ்ந்துவிடலாம் என்பாய்
சந்தூச்த்தைக் கொண்டாட
நண்பிகளை அழைப்பாய்
நள்ளிரவில் நண்பிகளின்
குரலுக்காய் விளித்திருபபாய் - வரும் வரை
missedcall இடுவாய்
வந்துவிட்டால் தூங்கிவிடுவாய்
பல மாடிகள் தள்ளி இருந்தும்
ஒரே அறையில் இருப்பதாய் உணர்வாய்
நீயே வாழ்க்கையின் அதிஷ்டசாலி என்பாய்
சோகம் வரும் வரை
சந்தோசத்துக்காய் மட்டுமே
hostalகள் என்பாய்
இது என் மாடி வீடு என்பாய்
hostel இலிருந்து பார்
சந்தோசத்தில் மோதி மோதியே
உடைந்து போக
உன்னால் முடியுமா?
உண்மை நட்பை
புரிந்து கொள்ள வேண்டுமா?
குதுகலத்தின் உச்சத்தை
அடைய வேண்டுமா?
நண்பர்களே
வாழ்க்கையாக வேண்டுமா?
உன்னுள்ளே தன்னம்பிக்கை
hostel இலிருந்து பார்
உன் மொழியில் கலப்படம் தெரியும்
சந்திப்புகள் மெல்ல மெல்ல சகயமாகும்
புதிய நட்புகளில் இணைந்து இணைந்தே
சண்டை சச்சரவுகளில் நுழைந்து நுழைந்தே
மீண்டு வர வேண்டுமா?
உனக்குப் பிரதியீடாக நீயே வேண்டுமா?
எதிரிகளை நண்பிகளாக்கவும்
முடிய வேண்டுமா?
hostel இலிருந்து பார்
சின்னச் சின்ன சந்தோசங்களில்
மூழ்க முடியுமே
அதற்காகவேனும்
உன்னைப் பார்த்து முறைத்த பெண்ணின்
வாயிலிருந்து ஒரு hi வேண்டுமா
அதற்காகவேனும்
எதிரியும் உன்னுடன் உனக்காக
நடை போட வேண்டுமா
அதற்காகவேனும்
புதிய புதிய
அனுபவங்களில் நீ
இணைக்கப் பட வேண்ட
அதற்காகவேனும்
அழுதுகொண்டே சிரிக்கவும்
சிரித்துக்கொண்டே அழவும்
அதற்காகவேனும்
இன்ப துன்பங்களை
மாற்ற முடியுமே
அதற்காகவேனும்
hostel இலிருந்து பார்
சொர்க்கம் நரகம்
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்
பி.கு: இக்கவிதை பொதுவாகப் பெண்களுக்கு, அதுவும் வெளிநாடு சென்று hostel இல் தங்கிப் படிப்பவர்களுக்கும் பெண்களுக்கு மிகப் பொருத்தமானது..
இதுவே என் கடைசிப் பதிவாகவும் இருக்கலாம்.. சில மாற்றங்கள், சில கஷ்டங்கள் இந்த பதிவுலகாலும் ஒரு பெண் என்ற வகையில்......
11 comments:
கலக்கல் சிந்து. வைரமுத்துவின் நடை அப்படியே வந்திருக்கிறது.
//இதுவே என் கடைசிப் பதிவாகவும் இருக்கலாம்.. சில மாற்றங்கள், சில கஷ்டங்கள் இந்த பதிவுலகாலும் ஒரு பெண் என்ற வகையில்.....//
ஒரு பதிவராக இல்லை, நண்பராக கூறுகிறேன், நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும். பதிவுலகு என்பது ஒரு Virtual world. அதை ஒரு அளவோடு வைத்துக்கொண்டால் பிரச்சினைகள் இருக்காது. அப்படி இருந்து எழுதிப்பாருங்கள்.
மேலே சொன்னவரது கருத்துக்களை நானும் வழிமொழிகிறேன்
//இதுவே என் கடைசிப் பதிவாகவும் இருக்கலாம்.. சில மாற்றங்கள், சில கஷ்டங்கள் இந்த பதிவுலகாலும் ஒரு பெண் என்ற வகையில்.....//
தொடர்ந்து எழுதுங்கள்.....எமது எழுத்துகளால் விமர்சனங்கள் கிடைக்குதா அப்போதே எமது எழுத்துக்களுக்கு சமுதாயத்தில் இடம் உண்டு என்பது நிரூபணமாகிவிட்டது. அப்படியிருக்க ஒதுங்கி கொள்வது என்பது எம்மை நாமே தாழ்த்தி கொள்வது போன்றது.
//hostel இலிருந்து பார்
homesick என்ற வார்த்தை மனப்படமாகும்
உன் மொழியில் கலப்படம் தெரியும்
உன் பேச்சில் கருத்துக்கள் மறையும்//
நல்லாயிருக்கு வரிகள்...
//இதுவே என் கடைசிப் பதிவாகவும் இருக்கலாம்.. சில மாற்றங்கள், சில கஷ்டங்கள் இந்த பதிவுலகாலும் ஒரு பெண் என்ற வகையில்.....//
என்ன இது.. சிறந்த பதிவரை நாம் இழப்பதா.. சுபாங்கன் சொன்னது போல பதிவுலகம் என்பது Virtual world. அதில் ஏற்படும் சிக்கல்கள் மெல்ல தாமாக நாளையே கலைந்து போகும்.. இதற்காக பதிவுலகில் இருந்த வெளியேறுவதா.. சற்று மீள் பரிசீலனை செய்தால் நல்லது..
அனைத்தும் உண்மை.
வன்மையாக ஆமோதிக்கிறேன்.
நீங்கள் கூறிய அனைத்தும் ஹாஸ்டல்/மேன்சனில் தங்கி இருக்குற பசங்களுக்கும் பொருந்தும் இல்லையா?
பதிவுகளை வாசித்துப் பார் பரவசமும் அடையலாம்: பைத்தியமும் பிடிக்கலாம் பதிவுகளை வாசித்துப் பார்.
////உண்மையைச் சொல்லிட்டு போங்கோ.............. ஏச விருப்பமானவர்களும் ஏசலாம்.////
தங்களின் வலைமனைக்கு முதற்தடவையாக வந்தேன். மொழி நடை அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் சிந்து. தங்களை ஏங்க எசப்போறோம். மீண்டும் வாழ்த்துக்கள்.
பி.கு: இக்கவிதை பொதுவாகப் பெண்களுக்கு, அதுவும் வெளிநாடு சென்று hostel இல் தங்கிப் படிப்பவர்களுக்கும் பெண்களுக்கு மிகப் பொருத்தமானது..
இதுவே என் கடைசிப் பதிவாகவும் இருக்கலாம்.. சில மாற்றங்கள், சில கஷ்டங்கள் இந்த பதிவுலகாலும் ஒரு பெண் என்ற வகையில்......
///
Hi!
Sinthu!! I am just seeing your post!!
Verynice!!
Come soon!!!
சிந்து நீங்கள் இந்த பதிவைப் போட்ட அன்றே பார்த்தேன். இது இருதிப்பதிவாகவும் இருக்கலாம் என்று சொன்னதால் பின்னூட்டமிட மனசு வரல்ல. தொடர்ந்தும் பதிவிடுங்கள்.
nice one, suits us so well :)
பின்னூட்டிய அனைவருக்குமே நன்றி, உங்களின் சொல்லிலிருந்த உண்மை என்னை சிந்திக்க வைத்ததால் இன்று மீண்டும் இங்கே..
Post a Comment