Saturday, March 28, 2009

திருப்பு முனை


என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள்.. காரணம், என் வாழ்க்கையையே திருப்பிப் போட்ட இந்த நாளை எப்படி மறக்க முடியும். இவள் என்ன சொல்கிறாள் என்று நினைக்கிறீர்களா? அது தானுங்க இந்த சிந்து என்றவள் இந்த பங்களாதேசத்துக்கு வந்து இன்றுடன் ஒரு வருடம் முடிகிறது, அதைப் பற்றித் தான் இங்க அலம்பலாம் என்று பதிவை எழுதத் tதொடங்கினேன். அது எப்படிப் போய் முடியும் என்று தெரியாது.
வாழ்க்கையில் பிரச்சனைகள் இருந்த போதும், அம்மாவும் அண்ணாவும் இருக்கிறார்கள் தானே என்ற துணிவில் இருந்த அந்த நாட்களை நினைக்கையில், எதையோ இன்று இழந்த உணர்வு. (எல்லா விடயங்களையும் நான் பகிர்ந்துகொள்ளும் உறவுகள் - காதல் விடயங்களாக இருந்தாலும் கூடவே.. என் காதலா என்று கேட்க்கக் கூடாது, அது என் வகுப்பு நண்பர்களுடைய காதல்கள்..)
என் வாழ்க்கையைத் திருப்பியது மட்டும் அல்லாமல் வாழ்கை என்பதை சிறிதளவேனும் கற்பித்த காலப் பகுதியும் இதுவே (வாழ்க்கை என்பதை அறிந்ததால் தான் வாழ்க்கையே வேண்டாம் என்று தோன்றியதோ)
சாதிக்க வேண்டும் என்று தோன்றிய காலம் போய் வாழ்க்கையின் வேதனையான காலம் என்னையும் எட்டிப் பார்க்கத் தொடங்கியதும் இந்த நாசமாகிப் போன காலப் பகுதியில் தான்.
இங்கு வந்ததில், நான் அறிந்து ஒரே ஒரு நன்மை மட்டும் தான். பல நல்ல உறவுகள் கிடைத்தன, முக்கியாமாக் வெற்றிக் குடும்பத்தின் (வானொலித் துறையில் நாட்டம் அதுகம் என்பதால் அம்மாவை தொடர் நாடகம் பார்க்க விடாமல் சூரியன் பண்பலை கேட்ட காலம், அம்மா கேட்பார் "நீ அவங்களைப் பற்றி எதுக்கு என்கிடா சொல்ற, அவங்களுக்கு உன்னைத் தெரியுமா?" நான் யாரு நான் சொல்வேன் "எனக்குப் பிடித்தவர்களைப் பற்றி நான் கதைப்பதில் என்ன தப்பு இருக்கிறது. சினிமா நடிகர்களைப் பற்றி எல்லோரும் கதைக்கிறாங்களே, அது எதுக்கு?" அம்மா பாவம் எதுவும் பேச மாட்டாங்க (இப்ப எல்லாக் கதைகளையும் அவங்களிடம் சொல்ல முடியாமல் இருப்பதையிட்டும் கவலை தான். இந்த ஒரு வருட காலப் பகுதியில் நடந்தவற்றைச் சொல்வதற்கு ஒரு மாத காலப் பகுதி காணுமா என்பது கேள்விக் குறிதான் (அது தான் வருகிற ஆடியில் ஊருக்குப் போறேனே) நட்பு மற்றையது பதிவுலக உறவுகள்...(நான் அதிகம் கற்றுக் கொண்டது இங்கே தான்) இதை எல்லாம் விட்டால் என்ன நல்ல விடயங்கள் என்று பார்க்கப் போனால், யாவுமே மனதில் நிற்காதவை (கேட்ட விடயங்கள் அதிகமாக நடந்ததால் தான்) ஆனால் கிடைத்த பல உறவுகளைத் தவற விட்டதும் இங்கு தான் என்பது சோகக் கதை சொந்தக் கதை..

ஒரு வருடம் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகிறது என்று புரிந்துகொண்டேன். (அப்புறம் ஒரு நிமிடமே மாத்துகிறது, நீங்கள் என்ன ஒரு வருடம் என்றீங்க என்று குண்டக்க மண்டக்க எல்லாம் கேட்கப்படாது)
iந்த ஒரு வருடத்தில் நடந்த பல விடயங்களை மறக்க வேண்டியுள்ளது, ஆனால் முடியாவில்லை (மன வலியைக் குறைக்க வழி சொல்லுங்கள்)....
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று" (வள்ளுவர் நிச்சயமாக இப்படி எழுதி இருக்க மாட்டார் - எனக்குத் தெரிந்த தமிழில் எழுதியுள்ளேன். தமிழ்ப் பற்றாளர்கள் மன்னிக்க வேண்டும்.)
வாழ்க்கைக்கு ஒத்து வருமா என்பது சந்தேகம் தான்....

பி.கு: எழுத்துப் பிழைகள் அதிகம் இருந்திருந்தால் மன்னிக்கவும்.... அவசரமான பதிவு..

Friday, March 27, 2009

நண்பியே....

எங்கிருந்தோ வந்த - இரு
சுதந்திரப் பறவைகள்
கூண்டுப் பறவைகளானதால்
அன்றொரு நாள் உறவாளிகளாக
வேறொரு கூண்டுப் பறவை
வந்தந்ததால்
இன்னொரு நாள் பகையாளிகளாக
சமாதானக் கூண்டுப் பறவைகளால்
வேறொரு நாள் அயலாளிகளாக
இன்னும் எத்தனை
கூண்டுப் பறவைகளால்
பிறிதொரு நாள் ............

Thursday, March 26, 2009

யாரடி....?

உன்னிடம்
சொல்லக் கூடாத விடயங்கள்
சொல்லப்படும் போது
நான் கூட
சிந்திப்பதில்லை
நீ கூடவா சிந்திக்கவில்லை..
எதற்காகச் சொல்கிறேன் என்பதை..

உன்னிடம்
சொல்லக் கூடாது
என்று நினைத்த
பல விடயங்கள்
தானாகவே
வெளிவருகின்றனவே
எதற்காக என்பதை
அறிவாயா?

Monday, March 23, 2009

காதலர்கள்...

என்ன பதியலாம்..............................

என்ன பதியலாம் என்று நினைத்த போது எந்த விடயமுமே மனதில் எட்டவில்லை, எனவே வழமை போல என் வீட்டு வேலையைச் செய்யத் தொடங்கிய போது தான் என் அறைத் தோழிக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது தான் என் நீண்ட நாள் சந்தேகம் நினைவுக்கு வந்தது. எனக்கு வந்த சந்தேகத்தை உங்கள் முன்னிலையில் வைத்து உங்கள் கருத்துக்களையும் அறியலாம் என்ற நோக்கத்தில் எழுதும் பதிவு தான் இது.

என் பங்களாதேசத்து வாழ்க்கையிலிருந்து அறிந்த / பெற்ற அனுபவம் தான் இது என்று சொல்லலாம். (என் சொந்த அனுபவம் தான் ஆனால் இந்த சம்பவம் எனக்குத் தான் என்று கருதுவது தப்பு)

என்ன சும்மா அலட்டுகிறேனோ? வாங்க விசயத்துக்குப் போகலாம்..

முதலாவது கேள்வி இது தான்...

காதலிப்பவர்கள் தொலைபேசியில் பேசும் போதோ அல்லது இணையத்தில் கதைக்கும் போதோ மெல்லமாகப் பேசுவது ஏன்? அவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்று நான் ஒட்டுக் கேட்பதும் இல்லை அப்படிக் கேட்டாலும் எனக்கு விளங்கப் போவது இல்லை, காரணம் அவர்கள் பேசுவது அவர்களுக்கே விளங்குகிறதா என்பது மட்டுமல்ல, பலர் பிற மொழிகளில் பேசுவார்கள் ( சிங்களம், பங்களா அல்லது பங்காளி, கமாய், நேபாளி, உருது).

மற்றவர்களுடன் பேசும் போதே மெதுவாகப் பேசும் அவர்கள் தங்கள் காதலர்களுடன் பேசும் போது என்றால் கேட்கவா வேண்டும். அவர்கள் பேசுகிறார்களா என்ற சந்தேகம் பலமுறை எனக்கு மட்டுமல்ல என் நண்பிகளுக்கும் தான்.

இதன் காரணம் என்ன, (மற்றவர்கள் கேட்டுவிடுவார்கள் என்றோ)?

காதலித்தால் அந்த இயல்பு தானாகவே வந்துவிடுமா? அப்படி மெல்லமாகக் கதைக்க வேண்டும் என்றால் காதலிக்கத் தான் வேண்டுமா? (இந்தக் கேள்வி கேட்பதற்குக் காரணம், நான் பொதுவாக சத்தமாகத் தான் கதைப்பேன் - மெதுவாகப் பேச நினைத்த போதும் முடிவதில்லை - உதவிலக் வரவேற்கப்படுகின்றன)

காதலிக்கும் பெண்கள் மட்டுமா இல்லை ஆண்களும் மெல்லமாகத் தான் பேசுவார்களா? உங்களுக்குத் தான் இந்தக் கேள்வி? பதில் சொல்வது உங்கள் கையில்த் தான் இருக்கிறது.....

Saturday, March 21, 2009

ஏனடா..?

ஏன் சந்தித்தாள் உன்னை

தானாகவே

வாழவிரும்பியவளை

நீயாக மாற்றியதால்

தன்னை இழந்தவளாய்....


எதையுமே சாதிக்கத்

தெரியாதவளாயிருந்தவள்

உன்னைக் கண்டதும்

எப்படி

சாதிக்கத் தொடங்கினாள்

தன்னாலேயே

கட்டுப்படுத்த முடியாத

அவள் கோபம்

எங்கு போனது

உன்னைக் கண்டதும்

உன்னுள்ளே உறங்தவளாக

உன் எண்ணங்களுக்குக்

கட்டுப்பட்டவளாக....

Thursday, March 19, 2009

காதலா..?

கவிதைக்கு - நீ

காதலியாகலாம் உனக்கு

உனக்குக் காதலியாக

வரவேண்டும் என்பது...

பேராசை

****************************

காதல் பாடல்களுக்கே

தடையான

இடத்தில் இருக்கும் - நீ

காதலித்தால்...

*****************************

உன்னை நான்

வெறுப்பதற்கு - நீ

போட்ட நாடகம்

எனக்கு உன்மீதான

காதலைப் பெருக்கியதேடா..

Tuesday, March 17, 2009

எழுதத் தெரியாமல் எழுவது..

தன்மையாம் என்னுள்
முன்னிலையாம் - நீ
கலந்ததால்
படர்க்கைச் சிலர்
அள்ளித் தெளித்த
வார்த்தைகள்
நம்மை மீண்டும்
தன்மையாகவே
மாற்றிவிட்டதடா..




கண்ணுக்குள்

நீயடி என்று

பொய் சொல்ல

மறுத்த நீ

என் இதயமே

நீயடி என்று

சொன்ன பொய்யை

நினைத்து

யோசிக்கிறேன்

யோசிக்கத் தெரியாதவளாக..

என்னை யோசிக்க வைக்க

யோசிக்காமல் - நீ

எடுத்த முடிவு கூடப்

பலரை யோசிக்க வைத்ததடா?

Sunday, March 15, 2009

பூமி வெப்பமடைதல்

நான் இப்போது இருக்கும் நாடு என்ற வகையில் பங்களாதேசத்தைப் பற்றிய ஒரு திடிக்கிடும் செய்தி பங்களாதேசம் என்பது இன்னும் கொஞ்சக் காலத்துக்குத் தான் என்பதும் உண்மை. அதாவது கடலுடன் மூழ்குவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது, ஏன் எனில் பூமி வெப்பமடைந்து வருவதால் பனிக்கட்டி உருகி நாட்டின் நிலப் பரப்பைக் குறைக்கிறது. தாழ் பிரதேசம் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். பல மேற்கத்தேய நாடுகளின் CO2 வெளியீட்டால் அதிகளவு பாதிக்கப்படும் நாடுகளில் இந்த நாடும் ஒன்று.


அடிக்கடி வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படும் நாடு எது என்று கேட்டீங்க என்றால் எல்லோரும் சொல்லுவாங்க ( நான் இங்கே வரும் போதும், பங்களாதேசமா அது தான் வெள்ளம் வர்ற நாடு ஆச்சே.. எதுக்கு போறீங்க என்றார்கள் பங்களாதேசம் எங்கிருக்கிறது என்று தெரியாத மனிதர்கள் கூட. இதில் இருந்து என்ன தெரிகிறது. பெயரை வைத்தே பொது அறிவை வளர்த்திருக்கிரார்களோ?)

மேலை நாட்டவர்களின் CO2 வெளிப்பாட்டால் அவர்களது நாட்டவர்கள் மட்டும் பாதிக்கப் படப் போவதில்லை. காரணம், அவை வளியுடன் கலக்கும் போது தனியாக இந்த நாட்டவர்கள் தான் என்னை வெளியிட்டவர்கள் அதனால் நான் அவர்களின் நாட்டுக்கு மேலத் தான் இருப்பேன் என்று நிற்பதில்லை. Ahmed என்பவர் சொன்னார், மேலை நாடுகள் பூமி வெப்பமடைவதால் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்கின்றங்க. ஆனால் பங்களாதேசத்தைப் பொறுத்த வரை இந்நாட்டு மக்கள் தங்கள் வாழ்க்கையையே தொலைக்கின்றனர். அது மட்டும் அல்லாது பூமி வெப்பமடைதலுக்கு எந்தவிதக் காரணமாகவும் இல்லாத நான் மக்கள் ஏன் பாதிக்கப் பட வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பினார்? (யாராவது பதில் வைத்திருந்தால் சொல்லலாம்)

இது ஆரம்பம் தான் இன்னும் வரும் இந்த நாட்டைப் பற்றியும் பூமியைப் பற்றியும்..

Saturday, March 14, 2009

பொய்

பொய் சொல்லடி
என்ற - நீ
பொய்யை வெறுக்க
காரணமானவள் அவள்

மெய் விரும்பியை
பொய்மை வாதியாக்கியது
உன் பேச்சு

வாய்மை வெல்லும்
என்றவளே வாய்மைக்கு
எதிரியாக

பொய்மையின்
இருப்பிடமாம் - நீ
சாட்சிக் கூண்டிலா...

Thursday, March 12, 2009

உயிரினங்கள்

மனிதர்கள் கொல்லப் படுவதைக் கண்டிக்கும் நாங்க எப்போதாவது பிற உயிரினங்களைப் பற்றி யோசித்துப் பார்த்திருக்கிறோமா? (என்கேயோ சமயத்தில் படித்த மாதிரி இருக்கா? நானும் படித்தேன் ஆனால் சிந்தித்ததே கிடையாது)

மாணவர்கள் எல்லோரும் உயர் தரத்தில் கலைத் துறையை படிப்பதிலும் விஞ்ஞான கணிதத் துறைகளில் ஆர்வம் காட்டுவது வழக்கம் தான (அதுவும் அதைத் தொடர முடியாமல் மாறிப் படிப்பவர்களும் உண்டு, அதேன்றாலும் பரவாயில்லை, சிலர் இல்லை நான் படிப்பேன் என்று படித்துக் கவிளுபவர்களும் உண்டு - நான் அப்படித் தான் - யாழ் பல்கைலைக் கழகத்துக்கு கிடைத்தாலும் கவிழ்ந்தேன் என்பது உண்மை தான்.) ஆமா என் இதை இப்ப சொல்றேன்..? ஆ ஆ இப்படி உயிரியல் என்று படித்தாலும் அதை வெட்டிக் கொத்தி பார்க்கிறதோட சரி, அப்படி இப்படி என்று கணிதத்துக்கு வந்தா தரவுகள் அது இது தான். உந்த உயிரினங்கள் எப்படி வாழ்கின்றன அதை எப்படிப் பாதுகாப்பது என்பதை பற்றி யோசிப்பதே கிடையாது ( ஸ்ரீ லங்காவில் நான் படித்த வரை நான் கேள்விப்பட்டதே இல்லை)

ஆனால் சூழலில் நான் வாழ்கிறோம் என்பதிலிருந்து நான் அறிந்து கொள்ள வேண்டியவை அதிகம். காரணம் ஒரு உயிரினம் இல்லை என்றால் அதில் தங்கி இருக்கின்ற மற்றைய உயிரினங்களும் பாதிக்கப்படும் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல பிற உயிரினங்களுக்கும் தான். உணவுச் சங்கிலி என்பதைப் படித்தால் மட்டும் போதாது அதன் உள்ளார்ந்த கருத்தையும் அறிய வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியவேண்டும். எதோ படிச்சமா புள்ளியை வாங்கினமா என்பது வாழ்க்கை இல்லை. படித்ததை எங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

மனிதனின் வளர்ச்சியாலும் மனிதனால் வளர்க்கப்படும் விஞ்ஞானத்தாலும் தான் இந்தப் பிரச்சனையே..
மனிதனால் உயிரினங்கள் நேரடியாக அழிக்கப்படுவது மட்டுமல்லாமல் மறைமுகமாகவும் அழிக்கப்படுகின்றன. காடழிப்பு, CO2 வாயுவுன் வெளியேற்றம் என்பது மனிதனின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பொதுவாக யாருமே சிந்திப்பதில்லை. (இப்ப தாங்க விடயத்துக்கே வாறன்..)

அடடா இது என்ன இப்படி வெக்கையா இருக்கே ஐயயோ அந்த விசிறி (இது கை விசிறி இல்லீங்க, மின் விசிறி அது தான் fan) அப்புறம் AC ஐப் போடுங்க என்றெல்லாம் சொல்லுவாங்க, ஆனால் அதன் காரணத்தைக் கேட்டால் தெரியாது. பூமி வர வர வெப்பமடைந்துகொண்டு போகிறது ஆனால் நாங்க தான் சிந்தித்தபாட்டைக் காணவில்லை. பூவி வெப்பமடையும் ஒவ்வொரு கணமும் பனி உருகிய வண்ணமே இருக்கும் அதுவும் விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பதை விட அதிக மடங்குகளால். அதனால் பல உரியினங்கள் அளிக்கப் பட்டுக்கொண்டிருப்பது கசப்பான, பலர் அறியாத உண்மை.


ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 50, 000 - 55, 000 உயிரின வகைகள் அழிவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன ஏன் அழிகின்றன என்றே சொல்லலாம்...
இவை எம்மால் சிந்திக்க முடியாதவை தான ஆனால் அவை தான் நடந்துகொண்டிருக்கின்றன.

Tuesday, March 10, 2009

விஞ்ஞானம் தேவை தானா?

விஞ்ஞானம் வளராமல் மனிதன் ஆதிவாசியாகவே இருந்திருந்தால் எந்தப் பிரச்சனையுமே வந்திருக்காது என்று யாராவது யோசித்திருக்கிறீர்களா?

நிறைய நாட்களாக இதைப் பற்றி சிந்தித்ததே இல்லை (பிறந்த நாள்த் தொடக்கம் சிந்தித்ததே இல்லை). ஆனால் அண்மித்த காலங்களில் அடிக்கடி இதைப் பற்றி எல்லாம் யோசிக்கிறேன் ( காரணம் - என் கல்வியாகக் கூட இருக்கலாம்)
விஞ்ஞான உலகம் தொழினுட்ப உலகம் என்றெல்லாம் சொல்லும் பொது கோபம் கோபமாக வருகிறது ( ஏன் என்று புரிகிறதா? புரியும் புரியும், முழுமையாக வாசியுங்க)

விஞ்ஞான வளர்ச்சியால் நன்மைகள் இருப்பதால் நம்மவர்கள் அதனால் பூமிக்கு வரப் போகின்ற பாரதூரமான விளைவுகள் பற்றி சிந்திப்பதே இல்லை. (எதைப் பார்த்தாலும் நல்ல விடயங்களை எடுத்துக் கொண்டு தீய விடயங்களை விட்டு விடவும் என்று பெற்றோர் சொல்வதால் தான் எந்த விளைவுகளை யோசிக்காமல் விட்டு விட்டார்களோ. உதாரணமாக, ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்லாமே என்றால் இது எனக்கு நடந்தது தான். அம்மாவிடம் சொன்னேன் "அம்மா இங்கு படமே பாக்கிறது இல்லை அப்படிப் பார்த்தாலும் ஆங்கிலப் படம் தான் பார்ப்பது ஏன் என்றால் ஆங்கில அறிவை வளர்க்கத் தான்" என்று. அதற்கு அம்மா சொன்னவே ஒரு பதில் ஒரே அதிர்ச்சி நான் "என பிள்ளை அதில இருக்கிற நல்ல விடயங்களை எடுத்திட்டு கேட்டதை எல்லாம் விட்டிடு சரியா?" நானும் பதிலுக்கு "ஓம் அம்மா எனக்குத் தெரியாதா?" என்றுவிட்டு எதோ சொல்வது என்று "அம்மா எல்லாம் இந்தப் பாடங்களில் சகயமாக இருக்கிதே அதையும் தான் அம்மா பார்ப்பது" என்று சொல்லிவிட்டேன் (அதுக்கு அம்மா என்ன சொன்னங்க என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்க))

வாழ்க்கை என்பது வாழ்வதற்குத் தான் என்று சொல்லும் நாங்க தினம் தினம் நாம் வாழும் பூமியின் வாழ் நாளைக் கொறித்துக் கொண்டிருக்கிறோமே. எப்பவாவது சிந்தித்திருக்கிறீர்களா (சிந்தித்தவர்கள் ஏசக்கூடாது)

இந்த மாசடைதல், உயிர்களின் கொலை (மனிதன் மட்டும் இல்லீங்கோ), வேலை இல்லாமை, வறுமை அப்படி இப்படி என்று பல பிரச்சனைகள் எல்லாம் வருகிறதே எப்படி என்று பெரும்பாலானவர்கள் யோசித்ததே இல்லை. என்னைப் பொறுத்த வரை எல்லாவற்றுக்கும் காரணம் இந்த விஞ்ஞான வளர்ச்சி தான். ஆனால் ஒரு விஞ்ஞானி சொன்னார் "விஞ்ஞானத்தை வைத்து நாங்க பூமியை அளிக்காமல், அதைப் பயன்படுத்தி பூமியைப் பாதுகாக்க வேண்டும்" (விஞ்ஞானியின் பெயர் மறந்துவிட்டது. மன்னிக்கவும்). இதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் தான்..

சிந்தியுங்கள்.... உயிரினங்களைப் பாதுகாப்பதன் மூலமாக உங்கள் சந்ததியினரைக் (மனிதன் தானே சுயநலவாதி அது தான் அவர்களின் வம்சம் என்றாலாவது சிந்திப்பானா? நம்புவோம், நம்பிக்கை தான் வாக்கை என்று சொல்கிறார்களே) காப்பாற்றுங்கள்.

Monday, March 9, 2009

நியம்

நியங்கள் யாவுமே
உன்னை
ஏமாற்றியதால்..
கனவை நீ ஏமாற்றலாமா..?

நீச்சல் தெரிந்த
உன்னால்
எதிர் நீச்சல்
போட முடியவில்லையா..?
வாழ்க்கையில்

நியத்தை ரசியடி
பெண்ணே
முடியவில்லையா கனவை
வாழ்க்கையாக்கிக் கொள்...
சந்தோசப்படுவாய் தினமும்..

Sunday, March 8, 2009

பெண்

பெருமை கொள்ளடி
மகளீர் என்பதனா
சிறுமை உனக்கல்லடி
பெண்ணே

வாழ்கையைப் படிக்க
உன் பிறப்பு
உதவியது - நீ
பெண் ஆதலினாலே....

வர்ணிப்புப் பொருளாக
இருக்கும் - நீ
உதாரணமாக
எவ்வளவு நேரம்

எழ்மை உனக்கானதல்ல
வெல்வாய் - நீ
பெண்ணென - நீ
பெருமை கொண்டால்

அனைவருக்கும் மகளீர் தின நாள் வாழ்த்துக்கள்...
(குறிப்பாகப் பெண்களுக்கு - பெண்கள் வருகை குறைவாக இருந்தாலும் கூட..)

பி.கு: கலை அண்ணா நன்றி முதலாவதாக மகளீர் தின வாழ்த்துச் சொன்னதற்கு0

திருமணமான பெண்கள்.....

திருமணத்துக்குப் பின்னர் பெண்கள் வேலைக்குப் போவது சரியா? தவறா? என்று என்னை வதீஸ் அண்ணா கேட்டாரு............
அந்தக் கேள்விக்குப் பதிலாக வேருவது தான் இந்தப் பதிவு..

பெண்கள் வேலைக்குப் போவதில் தப்பு என்ன இருக்கு என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் என்றால் ஆண்களுக்கு சமமாகப் படிக்கும் பெண்கள் ஆண்களுக்கு சமமாக ஏன் உழைக்கக் கூடாது? அதுவும் கல்யாணத்துக்குப் பின்னர் ( கல்யாணத்துக்கு முன்னர் என்பதை விட..)

கல்யாண நாள் அன்று மணமகனும் மணமகளும் வாக்குறுதி எடுத்து கொள்வார்களே: நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையின் இன்ப துன்பங்களை சரி சமனாக மதிப்போம் என்று சத்தியம்செய்வார்கள்.
(எதோ இப்படித் தான் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்)

இப்ப உதாரணத்துக்கு குழந்தைகளை எடுத்துக் கொண்டால், சிலருக்கு அவர்கள் சந்தோசமானவர்கள். சிலருக்கு அவர்களில் குழந்தையைப் பராமரிப்பதே பெரும் பாடா இருக்கிதாம் ( பலர் வாழ்க்கையைப் பார்த்திருக்கிறேன்). என்ட இவள் இப்படி எல்லாம் சொல்றாளே என்று பார்க்கிறீன்கா? கொஞ்சம் பொறுங்க....

கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணு என்றால் பிள்ளைகளிப் பார்க்க வேண்டும். அது மட்டுமா கணவனையும் பார்க்கணும் என்று பெரிய பெண்கள் தான் சொல்லுவார்கள் ( அவர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்த்தார்கள் என்பது பெரிய விடயம்). அது தான் இன்ப துன்பங்களை எல்லாம் பகிர்ந்து கொள்வோம் என்று சொன்னார்களே. குழந்தைகளை வளர்ப்பது இன்பமானாலும் துன்பமானாலும் பகிர்த்து கொள்ள வேண்டியது தானே..

இன்னுமொரு விடயாம் கணவன் வேலை செய்கிறாரோ இல்லையோ, ஒரு பெருமைக்காக என் மனைவி கல்யாணத்துக்கு அப்புறமா வேலைக்கு போக வேண்டியதில்லை என்னால் என் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். காலப் போக்கில் அவரது உழைப்பு காணாமல் போக வீட்டில் சண்டை சச்சரவு அப்புறம் மணமகள் வீட்டிலிருந்து பணம் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பு..

இப்படியான பிரச்சனைகளை எல்லாம் தடுக்க வேண்டும் என்றால் பெண்கள் வேலைக்குப் போகத் தான் வேண்டும்.

பெண்களாக விருப்பப் பட்டு வேலைக்குப் போகாமல் இருந்தாலும், காலம் பூராகவும் கணவனால் அதிகளவு சம்பாதிக்க முடியும் என்றாலும் பெண்கள் வேலைக்குப் போகாமல் இருக்கலாம்.

வாழ்க்கையில் படித்துவிட்டு வேலைக்குப் போதாமல் இருப்பது கொடுமை (ஆண்களாக இருந்தாலும் கூட)
வாழ்க்கையே பணமாகாவிட்டாலும் வாழ்வதற்குப் பணம் தேவை என்பது எழுதப் படாத உண்மை. அதனால் எல்லோரும் படிக்க வேண்டும். அதுவும் அதை பங்களாதேசத்துக்கு வந்ததற்கு அப்புறமாக நான் நன்கே உணர்ந்தேன்.

ஆண்களைப் போல பெண்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு இருக்கலாமே... (அதுக்காக நீங்க என்ன சாத்திக்கப் போறீங்க என்றெல்லாம் கேக்காக கூடாது) அதனால் பெண்கள் திருமணத்துக்கு அப்புறம் வேலைக்குப் போகலாம் என்பது என் கருத்து...

வதீஸ் அண்ணா ஏதோ உளறி இருக்கிறேன் என்பது மட்டும் தெரிகிறது. நீங்கள் கேட்டதற்கு விடை கிடைத்ததா?கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்க (பயப்படாதீங்க இன்னொரு பதிவு எல்லாம் போட மாட்டேன்- நீங்க கேள்வி கேட்ட பதில் சொல்றேன், பதிவாக இல்லை செய்தியாக)

Friday, March 6, 2009

மௌனம்

உன் விழிகளின்

முன் மட்டுமே - என் நா

தடுமாறுவது ஏனோ...

மௌன மொழியால்

தோற்கடிக்கும் - நீ

என் மௌனத்தைச்

சோதிப்பது

அருமையடி....

என் மௌனத்தைக்

கலைக்க - நீ

உன் மௌனத்தைக்

கையாண்டது

மறக்கக் கூடிய

விடயமா....?

Thursday, March 5, 2009

காதலி

உன் முகம் தெரியாததால்
இத்தனை கற்பனையா
நனவை விரும்பும் - நான்
கனவை ரசிக்க
ஆரம்பித்தேன்
உன் முகத்தை
மட்டுமே
தேடுவதற்காக...


காதலுக்கு முகவழகு
தேவையில்லை என்கிறாயா
அகத்தின் அழகு
முகத்தில் தெரியுமடி
உன் மனதை
முகம் காட்டாதா என்ன......

Tuesday, March 3, 2009

உண்மை

நினைவுகளுடன்

வாழ்ந்த நாட்கள்

நனவுகளைத்

தோற்கடித்து விட்டன..

++++++++++++++++++++++

வேகமும் தாக்கமும்

குறைந்தால்

ரசனைக்குத்

தட்டுப்பாடு வந்துவிடுமோ....

+++++++++++++++++++++++++++

குழம்பினால் தான்

தெளியலாம் என்பதால்

என் வாழ்க்கையையே - நீ

குழப்பியது

கானல் நீரையே

சாக்கடையாக்கியதடி....

Monday, March 2, 2009

பிடித்த கோப்புக்கள்

நான் Al Gore என்பவரது "Inconvenient Truth" என்ற documentary ஐப் பார்த்த போது தான் பூமி வெப்பமாதல் பற்றி பேசலாமே என்று யோசித்தேன் (அதை நான் இப்போ சொல்ல மாட்டேன் ஆனால் இன்னுமொரு பதிவில் கண்டிப்பாக வரும்). ஸ்ரீ லங்காவில் இருக்கும் போது இதைப் பற்றியே கவலைப் படாத நான், இங்கு சூழல் வெப்பமடைதல் பற்றிப் படிக்கும் போது தான் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி அறியக் கூடியதாக இருக்கிறது.

Al Gore தன் வாழ்க்கையையும் தனது நாட்டையும் உதாரணமாகக் காட்டி உண்மைகளை நன்கே வெளிக் காட்டி இருந்தார். விளக்கங்கள் யாவுமே அருமையாக இருந்தன. அமெரிக்கா நினைத்தால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் (இந்த documentary ஐ இவர் election க்கு முதல் செய்திருந்தால் சிலவேளைGeorge Bush க்குப் பதிலாக இவரே அமெரிக்காவின் அதிபராக வந்திருப்பாரோ ) அமெரிக்காவின் ஒவ்வொரு குறைகளையும் சொல்லி விட்டு சிரிப்பார் அப்பப்பா........ அது மட்டுமா அந்த நேரம் அரங்கத்தில் கைதட்டல்கள் வேறு ...

Documentary 90 நிமிடங்களாக இருந்தாலும் சலிப்பே இல்லாமல் பார்க்கக் கூடியதாக இருந்தது.

வாழ்க்கையில் நாங்க எங்களை அறியாமல் செய்யும் தவறுகள் மற்றவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை அறிந்து கொண்டேன் அந்த documentary ஐப் பார்த்த பின்னர் (ஆனால் இந்த விடயம் documentary இல் இல்லை, ஆனால் அதைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது.

இந்த documentary ஐப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் தவற விடாதீர்கள்..... வடிவமைப்பு விதம் அருமை.. இப்படி எல்லாம் நடக்கிறதா என்று எண்ணத் தோன்றும்.
நான் முன்பு அறிந்திராத விடயங்கள் பலவற்றை அறிந்து கொண்டேன். பார்த்தால் நீங்களும் அறிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

பி.கு: Al Gore க்கு இதற்காக நோபல் பரிசு கிடைத்தது. அவரின் வாழ்நாள் சாதனைகளில் இதுவும் ஒன்றாம் .

பூமி வெப்பமடைதல் பற்றிய தகவல்கள் கூடிய சீக்கிரமே வரும்...