Wednesday, January 27, 2010

இயற்கை

அடிமையாகிறேன் உனக்கு
நீ அழகாய் இருப்பதால்
கடவுள் உன்னை மட்டும்
அழகைப் படித்ததன்
நோக்கம் தான் என்னவோ?

செயற்கையே அறியாத உன்னை
இயற்கை என்கிறது மனிதம்

உன்னை அழிக்க வந்த
மனிதனை நம்பும் நீ
ஏமாளியா?
கொலையாளியையும்
அரவணைக்கும் கருணையளியா?

அழகு படுத்த வேண்டிய
உன்னை அழிப்பதன் நோக்கம்

உன் புற அழகில்
திளைக்கும் மனிதன்
உன் அக அழகால்
உயிர் வாழ்வதால்
ஈனமற்றவனாகிரானோ?

பதில் சொல்லாமலே
உறையும் உன்னை காப்போம்

Sunday, January 24, 2010

கடவுளுடன் ஒரு உரையாடல்

கற்பனைகளும் யதார்த்தங்களும் கூடிய பதிவு இது. கடவுளுடன் சம்பந்தமாக எழுதலாமே என்று ஒரு எண்ணம் தோன்றியது. இப்போது தான் நேரம் கிடைத்ததால், எழுதலாமே என்று. கடவுள் ஒருவர் கண்ணெதிரே தோன்றும் சந்தர்ப்பங்களையும், அந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வகையில் எப்படிப் பேசுவார் என்பதையுமே இப்பதிவு கொண்டு வருகிறது.


நாத்திகன் ஒருவன் கடவுளை சம்பந்த சம்பந்தமில்லாமல் ஏசிக் கொண்டிருப்பதைப் பொறுக்க முடியாத கடவுள், அவன் முன்னே தோன்றினார்.
கடவுள் - என்ன உரிமை இருப்பதால் நீ என்னை ஏசுகிறாய்?
நாத்திகன் - எந்த உரிமையும் இல்லாததாலே எசுகிறேன், நீ யார் கேட்பதற்கு? உன்னை நம்பிற ஆத்திகனே உன்னை ஏசுகிறான், நான் ஏசினால் என்ன?
கடவுள் - அவன் என்னை நம்புபவன், அவனுக்கு என் மேல் உரிமை இருக்கிறது. என்மேல் உரிமை இருக்கும் என்னை நம்பும் யாருக்கும் என்னைப் பற்றிப் பேசும் உரிமை உண்டு. என்னைப் பற்றிப் பேசும் அவனுக்கு என்னை ஏசும் உரிமை இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
எதுவுமே சொல்ல முடியாமல் திக்கு முக்காடியவனை, அரவணைத்த கடவுள் என்னை நம்புவதும் நம்பாததும் உன் விருப்பம், ஆனால் ஒருவரைப் பற்றிப் பேசும் அல்லது ஏசும் முன் சிந்தனை செய் என்றார்.
*****************************************************************************************

ஆத்திகன் ஒருவன் எவ்வளவு தான் கடவுளை நம்பி இருந்தும் என் என் வாழ்க்கை இப்படிப் போகிறது என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
என்னை இப்படி நம்பும் இவனா இப்படிப் பேசுகிறான் என்ற கவலையுடன் அவனை நெருங்கிய கடவுள் அரவணைக்க முற்படுகிறார்.
ஆத்திகன் - இப்ப மாத்திரம் வந்து என்ன பயன், எல்லாமே போச்சு...
கடவுள் - மனிதன் வழிநடத்தப் படுவதற்காகவே மனிதனால் உருவாக்கப் பட்டவன் நான். என்னை நம்பி நீ இருந்தது மட்டுமல்லாது, உன் மேல் நீ நம்பிக்கை வைத்து, கடினமாக உழைக்காமல் விடும் பட்சத்தில் என்னால் மட்டுமல்ல யாராலும் உன் பிரச்சனையிலிருந்து உன்னைக் காப்பாற்ற முடியாது. கடவுள் கடவுள் என்று தன அன்றாட நடவடிக்கைகளை மறந்த இவனுக்கு அப்போது தான் ஞானம் பிறந்தது.
தன் வாழ்க்கையை அவனே வழி நடத்த வேண்டும் என்பதை அறிந்த அவன், தன் வெற்றிப் பாத்தியை நோக்கி நடைபோடுகிறான்.
****************************************************************************************

தங்கள் காதலை இதுவரை காலமும் மறைத்து வைத்த காதலர்கள், எப்படியாவது தங்கள் காதலை சேர்த்து வைக்கும் படி கடவுளிடம் கேட்ட போது.
கடவுள் - நீங்கள் காதலிக்கும் ஆரம்பத்தில் என்னிடம் கேட்கவில்லையே (காதல் சொல்லிக் கொள்ளாமல் வருவது தானே என்று வாதித்தால், அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை), என்னையாவது விடுங்கள் உங்களை வளர்த்து ஆளாக்கிய உங்கள் பெற்றோரிடம் சொன்னீர்களா?
காதலர்கள் - கடவுளே, உதவி கேட்கும் நேரத்தில் இப்படிக் காலைவாரி விடுவது நியாயமா?
கடவுள் - அப்படி இல்லைக் குழந்தாய், காரணம் இல்லாமல் வருவது தான் காதல், ஆனால் வாழ்க்கையின் நியதிகள் பல. எல்லா விருப்பங்களையுமே பூர்த்தி செய்யும் உங்கள் பெற்றோருக்கு செய்யும் நன்றிக் கடன நீங்கள் செய்யும் நன்றிக் கடன் இது தானா? [என்ன பழைய டயலாக் மாதிரி இருக்கா, அட்ஜஸ்ட் (adjust) பண்ணுங்க.. ]
காதலர்கள் - எங்கள் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் அவர்கள் ஏன் இதை மட்டும் மறுக்கிறார்கள்?
கடவுள் - தவறான பொருள்களை வாங்கிய பின்னோ பெற்ற பின்னோ தவிர்த்து விடலாம் அல்லது வேறு பொருளை வங்கி விடலாம், ஆனால் வாழ்க்கை ஒரு முறை தவறினால் திருப்பி வாங்கப் பட முடியாதது.
காதலர்கள் - நாங்கள் எங்களை நன்கே புரிந்து கொண்டு தானே காதலிக்கிறோம், அதனால் எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் வரத்து.
கடவுள் - இப்படித் தான் பல காதலர்கள் சொல்லி, கடைசியில் பெற்றோரிடமே பிச்சை கேட்கும் நிலைமையில் இருக்கிறார்கள்.
காதலர்களுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை, இளங்காதல் முடிவெடுக்க மறுத்ததை உணர்ந்த கடவுள் தானாகவே விலகிக் கொண்டார்.

பி.கு - கடவுள் சம்பந்தமா போடுவமா? என்று யோசித்தேன், சும்மா ஒரு மொக்கை போடலாமே என்று தான் போட்டேன். வாசித்ததுக்கு அப்புறமா இங்க வந்திடாதேங்க, எதுக்கா? அடிக்கத் தான்..

Monday, January 18, 2010

மரமா? உன்னை விட உயர்ந்ததடா அது.

வைரமுத்துவின் ஒரு கவிதை கேட்ட பின் மரத்தைப் பற்றி என்ன எழுதலாம் என்று யோசித்தே, வைரமுத்துவுக்கும் என்றைக்கும் மனிதனை விட மரங்களை விருப்பமோ என்னவோ, மரத்துக்கு சார்பாக எழுதலாம் என்று நினைத்தேன். எல்லா பாகங்களுமே மனிதனை விட சிறந்ததாகவே இருக்கிறது மரத்துக்கு என்பதைப் புரிந்தும் கொண்டேன்.



வேர்
தன்னை எல்லோரும்
பார்க்கவேண்டும் என்று
மனிதன் போல்
வேர் நினைத்தால்
சோலைகளும்
பாலைவனங்களாக

கிளை
மனிதன் போல்
தங்களுக்கு
முந்தியடித்துக் கொண்டாலும்
பிறருக்கு நிழல் தருவதற்கே
மனிதன் போல் தன்னை உயர்த்தவல்லவே

இலை
மனிதன் போலல்லாது
இளமையிலும் முதுமையிலும்
அழகாக இருக்கும் இலை
இறக்கும் போதும்
மரண ஓலம் இல்லாமல்

காய்
கனியிருக்கும் மரங்களில்
தனக்கு மதிப்பில்லை
என்ற போதும்
தன்னை அழிக்காது
உருமாறும் உதவியாளி
(அடிச்சு சாப்பிடும் மாங்காய் தான் சுவை மாம்பழத்தை விட என்று சொன்னால், அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை)

கனி
அரியது
மனிதனின் நற்குணங்கள் போல்
இனியது
அறுசுவைகளில் ஒன்றாக
தப்பினால் குப்பையில்
வேண்டாப்பொருளாக

Thursday, January 14, 2010

தைத்திருநாள் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

உழவர்களுக்கான பண்டிகை என்று சொன்னாலும், எல்லோராலும் கொண்டாடப் படவேண்டிய பண்டிகை இது. சூரியனுக்கு உழவர்கள் மட்டுமல்ல எல்லோருமே நன்றி சொல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு பண்டிகை தான் இந்த தைப் பொங்கல்.
தமிழர்களுக்கு தை மாதத்தின் முதல் நாள், தவறுகளைத் திருத்துவதாக பலர் சொல்லிக் கொள்ளும் நாட்களில் இதுவும் ஒன்று.



நமக்கெல்லாம் திருநாள்
அது உழவனுக்கு மட்டுமல்ல
பெற்ற உதவி நேரடியானது
இல்லை என்கிறாயா?
நேரடியை விட
மறைமுகத்தை விரும்பும்
மனிதா
இந்த மறைமுக உதவிக்கும்
நன்றி சொல்

எரிக்கிறாய் என்றவனும்
போற்றுகிறான் உன்னை இன்று
எதிரியும் நண்பனாகலாம்
என்று சொல்லாமல் சொல்லும் திருநாள்


எவ்வளவு தான்
தொலைவில் இருந்தாலும்
அருகிலேயே இருக்கிறேன்
என்றுணர்த்தும்
சூரியனுக்கு
இன்று திருநாளாம்
குளிர் காலத்தில்
பலர் எதிர்பார்க்கும்
ஒருவன்
கோடைகாலம் வந்ததும்
ஏன் வெறுக்கப்படுகிறான்?

வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா

Wednesday, January 13, 2010

காரணம்

காரணமில்லாமல்
காரியமோ மனிதனோ வாழ்க்கையோ
யாவுமே பொய்யடி என்றாள் அன்று
அதே காரணம் காரணமின்றி
இன்று

ஏன் எதற்கு எப்படி
என்று
கேள்வி கேட்டு வளர்ந்தும்
காரணம் ஏதும் தெரியாமல்
இன்று

எப்படி என்றாலும்
எதற்காக என்றாலும்
ஏன் என்றாலும்
மௌனமே பதில்
இன்று

எதிர்காலம் பற்றி
முன்னே திட்டமிடுபவள்
எதிர்காலமா?
அது என்ன என்கிறாள்
இன்று

இதற்கெல்லாம் காரணம் கேட்டால்
என்னிடமே காரணமா
என்ற வெறித்துக் கிடக்கும்
சிரிப்பு தான் மீதமாக
இன்று

காரணமில்லாத பலர்
காரணமில்லாத விடயங்கள்
காரணமில்லாத காரணிகள்
காரணமில்லாத சந்தர்ப்பங்கள்
காரணமில்லாத சந்திப்புகள்
யாவுமே
அவள் காரணம் சொல்லாமைக்கு
காரணம் இன்று

Monday, January 11, 2010

Cherie Blair உம் ஆண்களும்




என்னடா தலைப்பு கொஞ்சம் சிக்கலா இருக்கிறதே என்று நினைக்கிறீங்களா ? Cherie Blair உம் பெண்களும் என்று போட்டால் அது ஒரு விசயமே இல்லை என்று கண்டுக்க மாட்டீங்க என்ற பயம் தான்.

இந்த வருடத்தில் (சீ சீ என் வாழ்வில்) மறக்க முடியாத ஒரு நாளாக இன்று மாறியதே எதிர்பார்த்திராதது. எல்லாவற்றுக்கும் காரணம் அம்மணி Cherie Blair தான். மிக அருகில் ஒரு சந்தர்ப்பம், தவற விட மறுக்குமா நெஞ்சம். வாழ்க்கையில் சந்திப்புகள் சகஜமானாலும் சிலருடனான சந்திப்புகள் எப்போதுமே மனதில் நீங்காதவை. அப்படித் தான் இதுவும்.

எவ்வளவு தான் வயது வந்தாலும் இப்பவும் நல்ல இளமையாகவே இருக்கிறார் என்று சொன்னால் நம்புவீங்களா தெரியவில்லை (அவரை முதுமையாக தோற்றும் சில படங்கள் இணையத்தில் இருப்பதால் சொன்னேன்.) அவர் மட்டும் தான் இளமை என்றால் அவர் பேச்சு இருக்கிறதே அது இப்பவுமே சுறுசுறுப்பாகத் தான் இருக்கிறது.

Cherie Blair ஐ அறிமுகப் படுத்தும் போது distinguish என்று சொல்லி அறிமுகப் படுத்தியதால், எதோ மொழிகளில் பேதம் இல்லை என்று பேசுவாரோ என்று நினைத்தேன்; அவர் ஆண்கள் பெண்கள் என்ற பேதம் இல்லை என்று ஆரம்பித்தவர் தான் பெண்களின் முன்னேற்ற வழிகளையும் ஆங்காங்கே தன அனுபவங்களையும் பகிர ஆரம்பித்தார். பெண்களின் நிலைமைகளில் அதிகமாக நாட்டமுடையவர் என்று எனக்கு இப்ப தானே தெரிந்தது (என் அவரைப் பற்றிக் கேள்விப் பட்டதே இல்லையா என்று கேட்டால், உண்மையாகவே இது வரை காலமும் Cherie Blair மீது எனக்கு நாட்டம் இல்லை, அதனால் அறிந்து கொள்ள நினைக்கவுமில்லை.

அவரது குடும்பத்திலேயே முதலாவதாக பல்கலைக்கழகம் சென்ற பெண் இவர் தானாம், ஆனாலும் பெண் என்ற வகையில் படித்து முடித்தவுடன், வேலை இல்லாமல் திண்டாடியதாகவும் சொன்னார். வேலை தேடும் வேளையில் எல்லா வேலைத் தலங்களும்
WOMEN ARE NOT SUPPOSSED TO BE HERE என்ற வசனத்தையும்
WHY SHOULD WOMEN BE HERE? என்ற கேள்வியும் மட்டுமே கொண்டிருந்ததாகக் கூறினார் (சத்தியமாக இந்த சொட்பதங்கலையே சொன்னார்; இதே வசனம் இதே கேள்வி - நம்பித் தானாகனும், ஏனென்றால் அது தான் உண்மை....) இறுதியாக வந்த இடம் தான் அவர் கணவரது. இனிய காதல் கதை அது (அதைக் கேட்டு நீங்க மயங்கக் கூடாதே, ஆகையால் அது வேண்டாம்.) கல்யாணத்தின் பின்னர் அங்கே வேலை இல்லை (அது தான் அவர் கணவன் அலுவலகத்தில்). ஆனாலும் இவர் யார் பெண்ணுரிமை என்றே வாழ்பவராச்சே, வேலை செய்யாமளிருப்பாரா?
கடைசியாக ஒரு விடயம் (ஆண்கள் பாவம் அதனால சொல்கிறேன்..)
எப்படித் தான் பெண்ணுரிமைக்காக உழைத்தாலும், அவரின் கொள்கை நியாயமாக இருந்தது, ஏன் என்று கேக்கிறீங்களா? ஒரு வசனம் சொன்னார், என்ன என்று தானே கேக்கிறீங்க.............
இனி வரும் காலத்தில் எல்லா பெண்களும் வேலை செய்ய வேண்டும் ஆண்களுக்குப் பதிலாக அல்ல ஆண்களுக்கு சமனாக (இப்படித்தான சொன்னாங்க என்றீங்களா.......... இந்தக் கருத்துப் பட தான் எதோ ஆங்கிலத்தில் சொன்னாருங்க................)
இன்னும் நிறைய இருக்கு, அப்புறமாக சொல்கிறேனே...
பங்களாதேசத்தில் இன்று ஒரு முக்கிய நிகழ்வு ஆசிய பெண்கள் பல்கலைக்கழகவளாகத்தில் நடைபெற்றது. சிட்டகாங் (Chittagong) நகரத்தின் திறப்பு Cherie Blair க்கு வழங்கப் பட்டது. அதாவது "Key of the city Chittagong" - இந்த நகரத்தில் இவர் எல்லா உரிமைகளும் உடையவராக்கப்பட்டார் (ஏதாவது புரிகிறதா? - குழப்பிவிட்டேன் போல இருக்கிறது, பரவாயில்லை - முடிந்தளவு பின்னூட்டத்தில் விபரிக்கிறேன்.)

Saturday, January 9, 2010

இருந்தும் இல்லாமல்

உணர்வு நரம்புடையதாயினும்
உறவிலா இடத்தில்
இருந்தும் இல்லாமல்

உறவுகளுடன் பிணைந்த
உணர்வால் பிரிவென்பது
இருந்தும் இல்லாமல்

பிரிவென்பது உடலுடையதாயினும்
மனமிருக்கையில் கானல் நீர்
இருந்தும் இல்லாமல்

நான் ஏது நீ இன்றி
நீ ஏது நான் இன்றி
நீ இல்லாத நானும் நானில்லாத நீயும்
இருந்தும் இல்லாமல்

Thursday, January 7, 2010

நட்புக்குள் பொறாமை ஏது?

மொட்டை மாடியிலிருந்து அந்த நகரத்தையே ஆராய்ச்சி செய்வபவள் போல வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் புவி.அவளின் மன ஓட்டத்தில் எதோ ஓரிடத்தில் எதோ தடங்கள் ஏற்பட்டது போல "What the hell is going around me?" என்று கத்தினாள்.

எதை நினைத்து இப்படி ஓலமிட்டாள் என்று அவளும் அறிந்திருக்கவில்லை, ஆனால் ஏதோ ஒன்று அவள் மனதை நெருடிக் கொண்டிருப்பதை உறைந்தவள் முன்னையநாள் பிற்பகல் நடந்த நிகழ்வை நினைவுபடுத்த முற்படுகிறாள்.

அன்றும் வழமை போல வேலையை முடித்துவிட்டு தன்னிருப்பிடம் திரும்பியவள் திடீர் என்று நண்பிகளின் அறைக்கு விரைந்தாள் (அது அவளுடைய வழைமையும்
கூட). அங்கு நடைபெற்ற உரையாடல் அவளின் மனதை அழமாகப் பதித்தது.

"ஏனடி புவி நம்மகிட்ட இதை மறைத்தாள்," வேணியின் அழுகையுடன் கூடிய குரல் மூடியிருந்த கதவையும் தாண்டி ஒலித்தது.

சந்தியா ஏதோ சொல்லி முடிக்க "அப்படி என்ன மறைத்திட்டாள்? அப்படி மறைத்தாலும் என்ன? அவள் என் உண்ட Best friend ஓ? ஏன் அழுகிறாய்?" இது சந்தியாவின் பொன்னான வாயால் வந்த அற்புதமான வார்த்தைகள்.

அழுகையிலும் அவளுக்கு வந்த கோவம் அனைவரையும் சுட்டெரிப்பது போல் இருந்தது. ஏதாவது ஏசிவிடுவாளோ என்று ஒருகணம் எல்லாரும் திகைத்திருக்க, ஏமாற்றமே பதிலானது.

"சொன்னாலும் சொல்லாட்டிலும் புவி என் best firend தான்," என்று வேணியின் மனம் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

"அவள் யாரிட்டையோ கடன் எல்லாம் வாங்கினாளாமே, உனக்கு தெரியுமடி," என்கிறாள் இன்னொருத்தி.

"ஏன்டி இது என்ன அவளுக்கு புதுசா?" மறுபடியும் சந்தியா குறுக்கிட்டாள்.

புவிக்கு எதுவுமே விளங்கவில்லை. அவள் எப்போது யாரிடம் கடன் வாங்கினால் என்று யாருக்குமே புரியாத நிலையில் அந்த சுவரோரத்தில் அப்படியே இருந்துவிட்டாள்.
உரையாடல் நீண்ட நேரமாக நீடித்துக் கொண்டிருந்தது.அன்று அவள் நண்பிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது, அவர்கள் புவியைப் பற்றிப் பேசத் தொடங்கியிருந்தனர்.

அவளுக்கு அப்படி காசு வேண்டும் ஏன்டா அவள் நம்ம யார் கிட்டையாவது கேட்டிருக்கலாமே. என் கேக்கல்ல என்று கேட்டுவிடலாமா? என்றாள் வேணி.

"அவள் எப்படிக் கேட்பாள், அவள் தான் என்கிட்ட நிறையத் தாரம் வாங்கிட்டாளே, மறுபடியும் எப்படிக் கேக்கிறது எண்டு தான் ஜோதியிடம் வாங்கிட்டாள்," மறுபடியும் சந்தியா குறுக்கிடவே மௌனமானாள் வேணி.

அவள் சின்ன சின்ன களவு வேறை செய்கிறது மட்டுமில்லாமல் எங்களைப் பற்றி வேறை பிள்ளையளிடம் சொல்கிறாளாம் என்ற முறைப்பாடுகளும் புவி மீது சுமத்தப்படுகின்றது.
இனி எதையும் கேட்க முடியாதவள் தன் அறைக்கு திரும்பினாள் புவி. நேரம் எவ்வளவோ தாண்டியும் அறைக்கு வராத வேணிக்கு தவறிய அழைப்பு (Missed call) ஒன்றையும் போட்டுவிட்டு அவள் வரும் முன்னரே உறங்கிவிட்டாள்.

ஒருவாறாக எல்லாம் முடிய, இன்றைக்கு ஒரு வழி செய்ய வேண்டும் என்று முடிவுடன் வந்தால் வேணி. இவள் என்ன இப்பவே நித்திரை கொள்கிறாள் என்று நினைத்த வேணி "எழும்படி புவி, ஏன் இப்படி தூங்கிறாய்" என்று எதுவும் தெரியாதவள் போல எழுப்ப புவியின் தூக்கமும் கலைத்தது. ஆனால் எழுந்திருந்தாலும் அவள் எழுந்ததாகக் காட்டிக் கொள்ளவுமில்லை.
தூங்கிறவனை எழுப்பலான் தூங்கிற மாதிரி நடிப்பவனைத் தான் எழுப்ப முடியாதே, அது தான் இங்கேயும்.
பல நிமிடங்களின் பின்னர் எதுவுமே தெரியாதவள் போல எழும்பினாள் புவி. அருகில் அப்போதும் அவளுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேணி இருந்தாள். அவளைப் பொருள்ப் படுத்தாதவளாக மெல்ல குளியலறைக்கும் நுழைந்தாள் புவி.

"என்ன இவள் எதுவுமே கேண்டுக்காமல் போறாள்," இது வேணியின் புலம்பல். அந்தக் கசப்பான உரையாடலைக் கேட்ட பின் புவியால் வேணியுடன் வழமை போல பேச முடியவில்லை.ஆனாலும் செய்யாத குற்றங்களுக்குப் பலியாக அவள் விரும்பவுமில்லை. உரையாடலின் இடையில் புகுத்தப் பட்ட ஜோதி என்பவளை சந்திப்பதே முடிவாக முடியும் என்று புறப்பட்டாள்.

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல புவி அவளின் அறையை நீங்கவும் ஜோதி தென்பட்டாள்.
"Jhoti, I have to talk to you darling," என்றாள் புவி.
"Ok, sure dear. I also have come to discuss with you something, so what's up? You look awful," என்றாள் ஜோதி.
"Nothing da, but..." என்று இழுத்த புவியை இடைமறித்தாள் ஜோதி.
"But what?"
"Did I borrow something from you? I mean money or something,"
ஜோதி யோசித்துவிட்டு "Yep, Santhya borrowed for you."
"What are you saying, Jyoti? என்றால் புவி எதுவுமே தெரியாதவளாக.
"She said like that da," என்றவளை இடைமரித்தாளாள் புவி, "what did she say?"
"She said that you needed some money."
எதுவும் அறியாதவளாக "Ok, but I didn't get that money. Anyhow you will be given your money. Thanks da," என்று அவளிடமிருந்து விடைபெற்றாள்.

களவு என்றும் எதோ பேசப் பட்டது அவள் நினைவுக்கு வர அதைப் பற்றி ஆராய முனைதாள். அன்று ஒரு நாள் அவளும் சந்தியாவும் கணணியரையிலிருந்த பேனாவை எடுத்தனர் (அன்று என் பேனையை யாரோ எடுத்திட்டாள், so நான் இதை எடுக்கிறேன் என்று சந்தியா தான் எடுத்தாள்.)
வேறு ஒரு நாள், சந்தியா பசிக்கிறது என்று சொல்ல புவி தான் dining hall இலிருந்து biscuit எடுத்துக் கொடுத்தாள் (வழமையாக அவள் நண்பிகள் செய்வதைத் தான் அவளும் செய்தாள் என்பது சந்தியாவைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது.தனிமையில் யோசிக்கும் போது தான் புவிக்கு எல்லாமே ஞாபகத்துக்கு வந்தது. சந்தியா ஏன் இப்படி தன் நண்பிகளிடம் சொல்கிறாள் என்று.
ஜோதியிடமிருந்து காசு வாங்கிய விடயமோ, biscuit எடுத்த விடயமோ யாருக்கும் தெரியாக் கூடாது என்று சந்தியா சொல்லியிருந்ததை நினைவுபடுத்தினாள் புவி.
அதற்கான காரணம் இப்போது அவளுக்கு எல்லாமே புரிய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் புவி என்பவள் அந்த நண்பிகள் குழுவில் இல்லாத நேரம் சந்தியாவுக்கு வேணி தான் நெருங்கிய நண்பி. இப்போது புவி தன் இடத்தைப் பிடித்துவிட்டளோ என்ற பயம் சந்தியாவுக்கு வரவே அவர்களைப் பிரிக்க இந்த நாடகம்.
எல்லாவற்றையும் நினைக்க அவள் கண்ணிலிருந்து கண்ணீர் அருவியாகப் பாய்ந்தது.
"இதை எல்லாம் சொன்னால் யார் தான் நம்புவார்களோ," என்று வீரிட்டு அழுதாள் அந்த அப்பாவி.
யாரோ அழும் குரல் கேட்ட அவ்வழியே சென்ற ஜோதி மெல்ல எட்டிப் பார்த்தாள்.
விவரங்கள் யாவற்றையும் சொல்லி கதறிக் கதறி அழுதாள் புவி. அன்று முழுதுமே அறைக்கு வராத புவியைத் தேடி வந்த வேணியின் காதில் புவி சொன்ன அத்தனையுமே இடியாக விழுந்தது.
நேற்று புவி சந்தியாவின் அறைக்கு வந்த விடையத்தையும் ஊகித்துக் கொண்டவள், ஓடிவந்து புவியைக் கட்டி அணைத்தாள்.
தனக்கு மட்டுமே நெருங்கிய நண்பியாக இருக்க வேண்டும் என்ற சந்தியாவின் கற்பனை நனவாகவே முடியாமல் கானல் நீராகியது.

Tuesday, January 5, 2010

நாள்

நாள் என்றவுடன் என்னடா இவள் சொல்ல வாறாள் என்று நினைக்கிறீங்களா? சும்மா நாள் என்றவுடன் நினைவு வந்ததை சிறு வரிகளாக.........

அதிகாலை
சூரியனின் வருகையால்
ஒளி பெரும் நேரம்
நாளின் தொடக்கமாக.
நமக்குத் தான்
சிறிது சலிப்பு
எழும்பி அந்நாளை
தொடங்குவதற்கு...

மதியம்
விடுமுறை நாட்களின் அதிகாலை
கல்லூரி நாட்களின் நீண்ட நேரம்
குட்டித் தூக்கம் என்றென்றும் வரவேற்க
தூங்கலாம் கனி திறந்தே.

மாலை
சுகந்தமான காற்றுடன்
அளவான வெளிச்சம்
என்றென்றும்
பசுமையான நினைவுகளையே
மீட்க சுவையான நேரம்.

இரவு
வீட்டு வேலைகளின் நச்சரிப்புகள் தீர
கனவுலகுக்கு தாவ
நினைக்கும் மனங்களுக்கு
இதுவே மனநின்மதி
அவசரமான மறுநாளை எதிர் கொள்ள முன்...

Saturday, January 2, 2010

புதிய ஆரம்பம்

தவறுகள் திருத்தப் பட வேண்டியவை என்ற வகையில் தவறாக எடுக்கப் பட்ட என் முடிவை திருத்திக் கொள்ளலாமே என்ற முடிவுடன் இவ்வருட முதல்ப் பதிவு இதோ...
அனைவருக்கும் என் இனிய பிந்திய புதுவருட வாழ்த்துக்கள்.
இது இந்த வருடத்துக்கான முதல்ப் பதிவு மட்டுமல்ல இதுவே நான் பதிவு எழுதத் தொடக்கி ஒரு வருடம் கடந்து எழுதும் முதல்ப் பதிவு (இதை முதலே சந்தோசமாக கொண்டாடியிருக்கலாமோ?)

கலக்கலுடன் தொடங்கலாமே இந்த பதிவை..
உண்மை வடிவங்களை மாற்றும் கலை நம்மளுக்கு அத்துப்படி என்று சொல்லும் சிலர் இப்படி எல்லாம் சொல்றாங்களாம், வாசியுங்க.

1. தோடுடைய செவியின், இவன் யாருடைய பொடியன், காடுடைய சுடலை, இது யாருடைய படலை.
2. பாலும் தெளி தேனும் பாணும் பருப்புமிவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன், கோலம் செய், துங்கக் கருபுகத்துத் தூமகனே, சங்கக் கடைத் திறப்பைத் தா.
3. ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவர், கோபம் வரும் பொது மட்டும் தூசனம் பேசுவார்.

இதை நான் சொல்லவில்லை, யாரோ சொன்னாங்க, தட்டச்சு செய்தது மட்டுமே என்னது (நான் நல்ல பிள்ளைங்க; சொன்னால் நம்பவா போறீங்க..)

நம் வாழ்க்கையின் தொடக்கம் அம்மா, அவருடனேயே இந்த தொடக்கத்தியும் ஆரம்பிக்கலாமே என்று தான், அம்மாவுக்காக.

பாசத்தின் இருப்பிடம்
அன்னை என்ற பெயருடன்
ஆதரவாய் நமக்கு
இன்பத்தியே தரும் அவளுக்கு
ஈகை கடமியாகிறது
உதவியை மட்டுமே செய்து
ஊக்கிவிக்கும்
எல்லாமே நமக்காக
ஏனென்றே கேட்காமல்
ஐயமும் இல்லாமல்
ஒரு கதை பேசாமல்
ஓடி ஓடி செய்யும் அவளுக்கு
ஔவியம் கூட செய்வதில்லை சில பிள்ளைகள்.

பி.கு: "அவள்" என்ற சொற்பதம் கவிதைக்காக மட்டுமே.