Sunday, May 10, 2009

கேள்வியும் பதிலும்..

தொடர் பதிவு தாங்க இது..

இந்த தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நிலாவன் அண்ணாவுக்கு நன்றிகள்...
நிலாவும் அம்மாவும் அவர்கள் அவர்களுக்கு என் நன்றிகள் .
காரணம் இந்த தொடர் பதிவை ஆரம்பித்து வைத்தவர் நிலாவும் அம்மாவும் அதன் பின் எனக்கு தெரிந்து தொடர்ந்தவர்கள்
ரவீ
அத்திரி
கடையம் ஆனந்த்
கார்த்திகை பாண்டியன்
தேவன் மாயம்
இவங்க எல்லாருமே பெரியவங்க அதனால் எல்லோருக்கும் சேர்த்து அவர்கள் எண்டு போடோட்டுக்கலாமா? அவர்கள் என்று போட்டு வாசியுங்கள்...
வாங்க என்னைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்திட்டுப் போங்கோ...

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் இயற்பெயர் சிந்துகாவாக இருந்தாலும் எனக்குப் பிடித்த பெயர் சிந்து தான். சிந்துகா என்ற பெயர் பிடிக்காததட்கும் சிந்து என்ற பெயர் பிடிப்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன...

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நேற்று முன் தினம்...விஜய் டிவி இல் நடத்தப்ப்படும் யார் உங்களில் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் ராம்கோபால் அவர்களின் நடனத்தின் போது.. (இலங்கைத் தமிழர்களின் நிலைமையை இலங்கையில் இருந்த போது நான் அறிந்ததை விட இப்போது அதிகமாகவே அறிகிறேன். அங்கு இருப்பவர்களாலும் எதுவும் செய்யமுடியாது என்பதும் உண்மையே.)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
சந்தர்ப்பத்தைப் பொறுத்து...

4.பிடித்த மதிய உணவு என்ன?
என் அம்மா மற்றும் அண்ணா சமைத்த எல்லா உணவுகளும்...இங்கு இருக்கும் போது தான் புரிகிறது. அம்மா அடிக்கடி சொல்லுவார் "நீ இங்கு செய்யும் அடாவடித் தனத்துக்கு எல்லாம் அனுபவிப்பாய்." அது தான் அனுபவிக்கிறேனோ?

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இல்ல. பழகுவேன், பிடித்திருந்தால் மட்டுமே நண்பர்களாக முடியும்...

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இரண்டுமே, ஆனால் பயத்துடன்... ஆனால் நான் இதுவரை காலமும் அருவியில்க் குளித்தது இல்லை...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகம், ஆடை..

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
இரண்டுக்கும் ஒரே விடை தான். எல்லோருடனும் அக்கறையுடன் பேசுவது. அதுவும் அதிகமாகப் பேசுவது.. பலர் தப்பாகப் புரிந்த சந்தர்ப்பங்களும் உண்டு..

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
யாருங்க அது..

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அம்மா, அண்ணா, நண்பர்கள், இன்னும் ஒருத்தர் ஆனால் யார் எண்டு சொல்ல மாட்டேனே..

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?கருப்பு நிற ஜீன்ஸ் உம் பச்சை நிற மேலாடை (Black jeans and green T - shirt)

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கணனித் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வெற்றி வானொலி கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கடல் நீல நிறம், பச்சை நிறம்

14.பிடித்த மணம்?
மல்லிகையின் நறுமணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
கவின்
- ஈழத்தில் இருக்கும் பற்று, உண்மைகளை உளறல். அக்கறை (யார் மேல எண்டு கேக்காதீங்க) தமிழில் வழக் கொழிந்து வரும் சொல்ட்களைத் தேடிக் கொண்டிருப்பவர் (தெரிந்தவர்கள் யாராவது சொல்லி உதவலாம்), யாருக்காவது பிரச்சனை என்றால் உதவுதல், ஆனால் தன பிரச்சனைகளைச் சொல்லவே மாட்டார் இவர்.

கமல் - அதே தமிழ் மற்று தமிழீழப் பற்று. நல்ல வர்ணனை - பேச்சுத் திறமை எண்டும் எடுத்துக் கொள்ளலாம். அதிகமாகப் பேசுவது.. தமிழர்களின் நிலைமைகளை வெளிக் கொண்டுவரத் தன்னாலான உதவிகளை செய்பவர்.

கலை - எனக்கு மன உளைச்சல் என்ற நேரம் தியானம் என்ற பதிவினூடு உதவியமை. மலையகத்தின் மேலுள்ள பற்று. பெரியவர்களின் நினைவு நாள்களை நினைவுபடுத்துதல்.. என்னைப் போல அவரும் ஒரு தனிமை விரும்பி.
(இந்த மூன்று பேருக்கும் இரு ஒற்றுமை.. கண்டு பிடியுங்க..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

முயற்சி ... என்ற கவிதை

வெற்றியின் தேடலில்

ஒவ்வொரு முறை

தோற்கும்போதும்

எங்காவது ஓடிச்சென்று

அழுது திர்த்துவிடுவதென்று

தனி இடம் அமர்கின்ற

மனது

அடுத்த தோல்விக்கு தயாராகிவிடுகிறது

உண்மையை சொல்லி இருக்கிறார். அது மட்டும் அல்ல அதை சொன்ன விதமும் பிடித்திருக்கிறது..

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட், கரப்பந்தாட்டம், கால்ப்பந்தாட்டம், கொல்ப் (golf), சதுரங்கம், மற்றும் டென்னிஸ்

18.கண்ணாடி அணிபவரா?

ஆமாம்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நாள்ல கதை உள்ள படம். நகைச்சுவையான படம், எனக்குப் பிடித்தவர்களின் படம்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

அபியும் நானும்

21.பிடித்த பருவ காலம் எது?

வசந்தகாலம், மற்றும் மழைக்காலம்

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

கடைசியாக வாசித்த தமிழ் புத்தகம் - அனைத்துக்கும் ஆசைப்படி - புத்தகம் தந்து உதவியவர் கவின் அவர்கள்...

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

நான் மாற்றுவதில்லை.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது - குயிலோசை

பிடிக்காதது - இராணுவத் தளபாடங்களினால் ஏற்படுத்தப் படும் கொடிய சத்தம் (அனுபவம் தான் - என் வீடுக்குப் பக்கத்தில் இருக்கும் வைத்தியசாலைக்குப் பக்கத்தில் வைத்து ஏற்படுத்திய அந்த ஓசையை எந்தக் காலத்திலும் என்னால் மறக்க முடியாது - அது தான் பலரை ஒழித்த சத்தமாச்சே)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
யாழ்ப்பாணத்துக்கு சிட்டகொங்க்கும் (Chittagong) இடையிலான தூரம். என்னவோ அது தான் நான் பயணித்த அதிகபட்ச தூரம்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
பாடுதல், பழகிய சிறு காலப் பகுதியிலேயே எல்லோருடனும் சகயமாகப் பழகுதல், மதியாதார் வாசல் மிதியாதே என்றமைக்கு அமைவாக வாழ்பவள், அதிகம் அலட்டுதல்

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தாங்கள் செய்யும் அதே தப்பை மற்றவர்கள் செய்யக் கூடாது எண்டு சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
போலியான பாசங்களையும் இலகுவில் நம்பிவது..
கடைசி நேரத்தில் எல்லாம் செய்வது.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
Opera House - ஆஸ்திரேலியா

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
யாரையும் காயப் படுத்தாமல் இருக்க ஆசை, என்னை அறியாமலே நிறையப் பேரைக் காயப் படுத்தி இருக்கிறேன். அவர்கள எல்லாம் என்னை மன்னிப்பாங்களா எண்டு தெரியவில்லை..

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
----------------

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அனைத்துக்கும் ஆசைப்பட அரியதொரு வாய்ப்பு

இந்தத் தொடருக்கு நான் அழைப்பவர்கள்
கவின்
கமல்
கலை
இவங்க மூன்று பேரும் என்னை விட நல்லாவே அசத்துவாங்க..

அன்னைக்கு ஒரு நாள்



வாழ்வு என்று தெரியாத வயது
இல்லை இல்லை
அன்று எனக்கு பூச்சியமாவது வயது
இன்றும் அப்படியே வாழ ஆசை
உன் மடியில்த் தலை வைத்து
நீ ஊட்டும் உணவு மட்டுமே சக்தி
தருவது போல ஒரு உணர்வு

எந்த எதிர் பார்ப்பும் இல்லாத
உன்னத உறவு
தன் பிள்ளையை
வளப்பால் மாற்றக் கூடிய
மந்திர சக்தி அவளிடம்
அவளுக்கும் ஒரு நாள்..

நாள் முழுதும் கடமைப் பட்ட ஒரு உறவுக்கு ஒரு நாள் போதுமா?இன்றாவது நன்றி சொல்ல வாய்ப்புக் கிடைக்கிறதே..

Friday, May 1, 2009

வாழ்த்துக்கள்

"உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே."

ஏன் இது இப்ப என்று யாரும் கேட்க மாட்டீங்க என்று நம்பிகிறேன்.


நேரத்தின் அருமை

காலத்தின் தேவை

உறவின் வலிமை

உழைப்பின் மேன்மை

உழைத்தால் தெரியும்

நீயும் பெருமைப் படலாம்


என்ன உழைப்புக்கு இதெல்லாம் இருக்கா என்று கேட்கிறீர்களா... நிட்சயமாக.


அனைவருக்கு இனிய தொழிலாளர் நாள் வாழ்த்துக்கள்

உழையுங்கள்

Tuesday, April 21, 2009

நீயா..

யாருடனும் பேசாத
பேச்செல்லாம் - நீ
பேசியதாலேயே
வியந்தேன்
நீயா என்று......

சம்பந்தமே இல்லா
விடயங்கள்
தாமாகவே சம்பந்தமாகின
சம்பந்தமே இல்லாமல்..
நம்மால் என்று சொல்லலாமா?
புரியாதவளாக...
புரியத் தெரியாதவளாக....
தெரிந்தும் புரியாதவளாக....
யாதுமே அறியாதவளாய்...

பதில் எங்கோ...?
அது கூடத் தெரியாது அவளுக்கு..

Saturday, April 18, 2009

இரண்டு...

எல்லா விடயங்களுக்கும் ஒரு எதிர்க் கருத்து இருப்பது போல வாழ்வதுக்கும் சாவதுக்கும் கூட எதிர்க் கருத்தான கேள்விகளும் கருத்துக்களும் இருக்கின்றன...நீங்க ஒருவரிடம் போய் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கு என்று சொன்னீங்க என்றால், அவர் சொல்லுவார் - நாளை வருவதே பெரிய விஷயமா இருக்கு அதற்க்குள் நீர் என் எதிர் காலத்தைப் பற்றி எல்லாம் கவலை என்பாங்க.. அது மட்டும் இல்லாமால் நிறைய விளக்கம் வேறு சொல்வார்கள். உதாரணமாக தங்கள் வாழ்க்கையைப் பற்றி எல்லாம் சொல்லுவாங்க..


கொஞ்ச நாள் கழித்து அதே நபரிடம் வேறு ஒருவர் போய் எதிர் காலமே பொய் தானே எண்டு சொன்னேங்க என்றால் அவர் சொல்லுவார் - யார் அப்படிச் சொன்னது என்று கேட்பார்?


அப்படித் தான் என் அசிரியரிடன் என் நண்பி கேட்டாள் "எதிர் காலத்தை நினைத்து பயமா இருக்கு"
அதுக்கு ஆசிரியார் சொன்னார் "நீர் உம்மளுடைய நாளாந்த வேலையப் பாரும்"

கடந்த புதன் கிழமை நான் அந்த ஆசிரியரிடம் மாறி வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேன். அன்று எனக்கு உடல் நலம் குறைவாக இருந்தது. ஆனாலும் ஆசிரியரிடம் சில சந்தேகங்களைக் கேட்க்க வேண்டிய நிலைமையில் அவருடைய அலுவலக நேரத்துக்குப் போனேன். என் அன்பு நண்பிகள் எனக்கு வருத்தம் என்று சொல்லிவிட்டார்கள் (இத்தனைக்கு வியாழக் கிழமை செயல்த்திட்டம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டி இருந்தது - அதற்கான சந்தேகங்களைத் திருத்தவே போயிருந்தேன்). அதற்கு ஆசிரியர் "ஏன் நீர் உமது செத்தவீட்டுக்கு சொல்லி அனுப்பப் போறீரோ உமது செயல்த்திட்டத்தை என்னிடம் தர முன்." என்று சொன்னார். நான் என் நண்பிகளைத் தமிழில் தான் ஏசினேன் ஆனால் அந்தப் புத்திசாலி ஆசிரியர் புரிந்து கொண்டார் (அவரின் முன் தமிழ் பேசி இருக்கக் கூடாது தான் - என்ன செய்ய).

அப்படியாக படிப்பு விடயத்துக்கு வந்தாச்சு. சரி என்று சில சந்தேகங்களைக் கேட்டு சில சந்தேகங்களுடன் வெளியேறுகையில் மறுபடியும் சாவுவீடு பற்றியும் அன்றைய இரவு அதிகமாகப் படிக்க வேண்டாம் என்றும் சொன்னார். என் வாய் தான் சும்மா இருக்காதே "I don't like to be here. I would like to die.' என்று சொல்லிவிட்டேன். என் நண்பிகள் தான் பாவம். என்னை அறையில் வைத்துக் கதவையும் அடைத்து கேள்வி மலை தொடர்ந்தது.

நான் சொன்னேன் "Future never comes." enru

Miss Carly சொன்னார் "Future always comes." அதுக்கு அப்புறமா வாழ்க்கை வரலாறு மாதிரி எதோ கலந்துரையாடல் தொடர்ந்தது.

அவருடன் கதைத்ததில் கொஞ்சம் மன நின்மதி தான், ஆனால் இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் மாத்தியில் வாழ்வது கடினம் என்பது தான் உண்மை..

வாழ்க்கை என்பது என்ன? நாங்க எதற்காக வாழ்கிறோம்?

பி.கு: வாசித்தவர்களுக்கு நன்றி..... என் என்றால் அதிக நாள் பதிவு போடாததால் எதோ தோன்றியது அது தான் இந்த அலம்பல்....

Saturday, April 4, 2009

நல்லது..

பங்களாதேசத்தில் பிச்சை எடுக்கத் தடை என்பது அருண் அண்ணாவின் வலைத்தளம் பார்த்த பின்னரே எனக்குத் தெரிய வந்தது. சில நாட்களாக கல்லூரிக்குள்ளேயே இருந்ததால் தான் இந்த செய்தி தெரிய வராமல் விட்டது. வீதிகளில் காவல்த்துறையினர் (போலீஸ் என்றால் தான் விளங்கும் சிலருக்கு) நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாக நண்பிகள் சொன்னார்கள் (அது மட்டும் இல்லீங்க, பிச்சை எடுப்பவர்களை அடிக்கிறார்களாம்.)

இவ்வளவு நாளும் அவர்களைப் பிச்சை எடுக்க விட்டு ஊக்கிவித்ததே பங்களாதேசத்து அரசாங்கம் தானே..அது மட்டும் இல்லை, நாளுக்கு நாள் பிச்சை எடுக்கும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் இருந்தது. (ஒரு நாள் ஏதாவது கொடுத்தல் தினமும் பின்னே வரும் சிறுவர்கள்)

தினம் தினம் வெளியே போகும் போது வயதானவர்களிலிருந்து தவழும் குழந்தை வரை கையை நீட்டும். அந்த சின்னப் பிள்ளை தான் என்ன செய்கிறேன் என்று தெரியாமல் எங்களுடைய கையைப் பிடிக்கும். அந்த பிள்ளையைத் தூக்கி இருக்கும் அம்மா அந்தப் பிள்ளையை பார்த்து எதோ பங்களா மொழியில் சொல்லுவாங்க (எங்களுக்கு இந்த மொழி அவ்வளவாகத் தெரியாது என்பது தான் உண்மை). ஆனால் ஆன்டி (Aunty) என்று கூப்பிடச் சொல்றாங்க எண்டு மட்டும் விளங்கும். அந்தப் பிள்ளைக்கு என்ன தெரியும், அதுவும் கூப்பிடும் (எங்களுக்குத் தலை எழுது பாருங்க. என்ன செய்யக் கேட்டுக் கொண்டு தான் வர வேண்டும்).
அதுவும் எங்களிடம் தான் கேட்பார்கள். இந்த நாட்டு யாராவது என்றால் ஏசி விடுவார்கள். நாங்க கொஞ்சம் புத்திசாலிகள் என்று தான் நினைக்கிறேன், இப்படி யாரவரு பிச்சை கேட்டல் ஏதாவது ஒரு கடைக்குள் போவோம் (போனதுக்காக ஏதாவது வாங்கிக் கொண்டு வாறது.)

எழ்மை என்பதை ஏழைகள் நினைத்தால் ஒழிக்கலாம் என்பது என் கருத்து. பங்களாதேசத்தில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகிக் கொண்டிருப்பது உண்மை தான். ஆனால் பணக்காரர்களால் கட்டப் படும் கட்டடங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு போகின்ற வேலை அந்தக் கட்டிடப் பணியில் வேலையாட்களாக வேலை செய்தாலாவது தங்கள் குழந்தைகளைக் கொஞ்சமாவது முன்னிக்கு வரச் செய்யலாமே..(அதை விட்டிட்டு வீதியில்)
இந்த அரசாங்கம் செய்தது சரியா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் இருக்கிற நாட்டுப் பிரச்சனை அச்சே அது தான் இந்தப் பதிவு. (ஆனால் நாங்க இனி நின்மதியாக வெளியே போகலாம்)

Thursday, April 2, 2009

நினைவுகள்

யாராகவோ இருந்த - நீ
நானாக மாறுகையில்
உனக்காகவே வாழ்ந்த நான்
நீயாக மாறுவதில்
தப்பு எதுவும் இல்லையே..

எனக்காக நீ இருந்த
காலம் போய்
உனக்காக நான்
என்ற நிலைமை வருவதற்கு
யார் காரணமாகினார்கள்.....

உனக்காக நன்றி சொல்கிறேன்
யார் யாரிடமோ எல்லாம்....