Monday, July 6, 2009

மீண்டும் கிடைத்த பொக்கிஷம்

தவறுகள் எங்கு என்பதை விட
தவறைத் திருத்திக் கொண்டமையே
உன்னையும் என்னையும்
சேர்த்தது

நண்பர்களிடையே என்ன
பேதம் என்று நினைத்த காலம் போய்
எதிரிகளாகவே மாற்றப் பட்ட காலம்
யாராலும் மறக்கப் பட முடியாதது

நண்பர்களிடையே

அதிக பாசம்
நிரம்பிய நம்பிக்கை

இவை தான் மறுபடியும் நம்முடன்

யார் வந்தாலும் பிரியோமடி இனி
நம்முடன் எத்தனை உறவுகள் சேர்ந்தாலும்
நம் உறவு என்றுமே
நிலைக்கும் நம் வாழ்வின் இறுதி வரை...

Thursday, July 2, 2009

சந்தோசம்...

இந்த மாதம் நல்ல மாதமாக மாறி இருப்பதற்கு பல காரணங்கள்..

என்னடா இவள் பல காரணங்கள் என்றாளே என்கிரீன்களா?

என்ன செய்ய பல கவலையான நிகழ்வுகளை சுமந்து வந்தது இந்த 16 மாதங்கள்..... (என்ன எந்த வித சந்தோசமான விடயங்களும் நடந்ததே இல்லையா என்று கேக்கிறீங்களா.......... நடந்தன சந்தோசமான விடயங்களை விட சோகமான விடயங்களா அதிகமாக நடந்தன.

வாங்க காரணங்களைப் பாத்திடலாம்..


  • ஊருக்குப் போறேன்

  • அம்மா, அண்ணா ஆகியோரின் அருமை புரிந்த பின்னர் அவர்கள் இருவரையும் பார்க்கப் போகிறேன்.

  • அதிக நாட்களின் பின்னர் என் நண்பர்களைப் பார்க்கப் போகிறேன்

  • கொழும்பை நண்பிகளுடன் சுத்தியதில்லை. எங்கு போனாலும் உறவுக் காரர்களுடன் தான். இந்த முறை நண்பிகளுடன் ஊர் சுத்தும் வாய்ப்புக் கிட்டியுள்ளது

  • இங்கு வந்தவுடன் கோயிலுக்குப் போவது குறைந்துவிட்டது. அப்படி சென்றாலும் மன நின்மதி கிட்டியதில்லை. கோயிலுக்குப் போகவுள்ளதால் மனதில் இப்போதே ஒரு உற்சாகம் கிட்டியுள்ளது

  • பாடசாலை போகப் போகிறேனே. எப்பவுமே மறக்க முடியாத இடம்.

  • அம்மா அண்ணாவுடன் அலட்டிய நாட்களை மீண்டும் பெறப் போகிறேனே என்ற ஆர்வம் (எல்லா விடயங்களையுமே அலசும் இடம் என் வீடு, என் வீட்டில் என்ன கேட்ட விடயம் செய்தாலும் அதை சொல்லி மன்னிப்பு கேட்க்கும் பழக்கம் உண்டு அதனால் பெரிதாக எந்தப் பிரச்சனையும் வருவதில்லை. என் அம்மாவின் கருத்துக் கணிப்பின் படி, வேறு ஒருவர் என்னையும் என் அண்ணாவைப் பற்றி அவரிடம் சொல்ல முன்னர் தன் பிள்ளைகள் தன்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைப்பார். - அது எனக்கு தப்பாகப் படவில்லை, அதனால் எல்லா விடயங்களையும் சொல்லி வாங்கிக் கட்டுவேன்.)

  • 16 மாதங்கள் நடந்தவற்றை வீட்டார்டன் பகிரப் போவதே இந்த மாதத்தில் தான்.

இன்னும் நிறைய இருக்கிறது, நீங்க நான் எழுதி இருப்பதைப் படித்து கஷ்டப் படுவது தெரிகிறது என்பதால் இவ்வளவும் போதும் என்றிருக்கிறேன். சந்திக்கலாம்...

காதலா...

காதலர்களைப் பார்த்து
நானும் காதல் கொண்டால்
என்ன என்று யோசிக்க நேர்ந்தது

காதலிக்கமலே பலரின்
காதலியாக்கப் பட்டது
யார் தப்பு....

சகோதரர்களையே
காதலர்களாகப் பார்க்கின்ற
இவ்வுலகத்தில்
பிறந்த - நான்
காதலிப்பது சரியானதா...
வேண்டாமடா...

Monday, June 29, 2009

சீக்கிரமாகவே பிரிவோமா..

சேர்ந்தால் பிரிவு நிச்சயம்
என்று தெரிந்துமே
பழக ஆரம்பித்தோம்
ஆனால்
அந்தப் பிரிவே
இவ்வளவு சீக்கிரமேவா..?

எதிர்பார்ப்பே இல்லாத
உறவுகளில் காதலும்
ஒன்று என்பார்கள்
ஆனால்
அந்தக் காதலுக்காக
பல எதிர்பார்ப்புகளை
விட்டு வரமுடியாதடா...?

Sunday, June 28, 2009

நேர மாற்றம்...

என்னடா இவள் நேர மாற்றம் என்றாலே என்று பாக்கிறீங்களா... ? கொஞ்சம் பொறுத்திருங்க காரணத்தை சொல்றேன்..
அப்படியே கீழ போங்களேன்,,,, (என் கல்லூரியில் நடக்கின்ற சோகக் கதை..)



















அது தாங்க பங்களாதேஷ் இன் அரசாங்கம் பங்களாதேஷ் நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரித்துள்ளது (அது தான் இப்ப ஸ்ரீ லங்கா மற்றும் இந்தியா ஆக்கிய நாடுகளுக்கும் பங்களாதேஷ் க்குமான நேர இடைவெளி ஒன்றரை மணித்தியாலம் (ஆமா நேரம் அதிகரிப்பை எண்டா இவள் இப்ப சொல்றாளே என்று பாக்கிறீங்களா.. ஒரு முக்கியமான விடயம் வரப் போகிறதே...)
அது வேறை ஒன்றும் இல்லை. வெளிநாட்டவர்களில், காதலில் விழுந்தவர்கள் (அது தானுங்க காதலர்கள் இருப்பவர்கள்) படும் பாடு இருக்கே, கொடுமையுங்க.. என்ன அது என்று ஆவலா... அது வேறு ஒன்றுமல்ல. வழமையாக தெற்காசிய நாடுகளில் அரசாங்க வேலையாகவோ அல்லது கல்லூரிகளோ முடிவது கிட்டத் தட்ட ஒரே நேரமாகவே இருக்கும், ஆனால் இப்போது பங்களாதேஷ் இல் இருப்பவர்களுக்கு எல்லாமே முன்கூட்டியே முடிந்துவிட்டும்.. அதனால் காதலர்களுடன் chat பண்ணுகின்ற நேரங்களில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. காதலர்களால் chat பன்னாவலும் இருக்க முடியாது, அதே நேரம் நேர அட்டவணையுடன் படிப்பவர்கள் நண்பர்களுடன் படிப்பவர்களுக்கும் கொஞ்சம் சிக்கல் தான். உதாரணமாக பங்களாதேஷ் இல் 3.30 pm என்றால் ஸ்ரீ லங்காவில் 2.00pm ஆக இருக்கும், அங்கே iruppavarkalaal sri lanka nerappadi 3.00 pm க்குத் தான் வர முடிகிறது, அப்போது பங்களாதேஷ் இல் 4.30 ஆகிவிடும் அதனால் செய்கின்ற வேலை எல்லாமே ஒரு மணித்தியாலத்தால் தாமதமாகிக் கொண்டே போகும். வள்ளியாக தேநீர் இடைவேளைக்கு முன் chatting முடியும் என்றால் இப்போதெல்லாம் இரவு உணவு நேரம் தான் முடிகிறது. இதாவது பரவாயில்லை எப்படியாவது வீட்டு வேலைகளை இரவு முளித்திருந்தாலாவது செய்வார்கள்.
வழமையாக 9.30pm இலிருந்து 11.00 pm மட்டும் chat பண்றவங்க பாடிருக்கே, அவர்களின் காதலர்கள் இப்போதும் வழமையான நேரத்துக்குத் தான் வர முடிவதால் பங்களாதேஷ் இல் 10.00 pm ஆகிவிடுவதால் ஒரு மணித்தியாலங்களே chat பண்ண முடிகிறது. ஏன் 11.00 pm க்கு அப்புறமாக chat பண்ணலாமே என்று நீங்க கேட்ப்பது புரிகிறது. அதுக்கும் காரணம் இருக்கே. எண்கள் கல்லூரியில் 11.00 pm க்கு அப்புறமாக கணணி பயன்படுத்த அனுமதி கிடையாது.
இந்த விடயத்தில் நான் அதிச்டசாளிங்க. எனக்குத் தான் காதலன் இல்லையே. அதனால் நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவிட முடிகிறது.
நண்பர்களுடன் இருக்கும் போது ஒரு தெம்பு எப்போதுமே எமக்குள்ளே இருக்கும். அது போதும் எனக்கு.. (காதல் அனுபவம் இருப்பவர்கள் எனக்கு அடிக்க வரக் கூடாது)

Saturday, June 27, 2009

க

கடவுளை எப்போதும் கும்பிடும் நீ
காதல் விடயம் பேசும் போது மட்டும்
கிட்டவே கடவுளைக் கூப்பிடாதது
கீழ்த் தரம் என்பதா...
குறும்புகளுடன் இருந்த நீ
கூறிய அம்பாக மாறியதற்கு காரணமும் அவனா
கெட்டவர்களானோம் உன் காதால்
கேட்பதற்கு யாரும் இல்லை என்றா
கையைப் பிடிக்கவே முடிந்தது
கொடுமையடி
கோடையில் இலையுதிர்வது போல
கௌரி யாக இருந்த நீ காந்தமாக அவனால் இழுக்கப் பட்டது தான் ஏனோ..?

Thursday, June 25, 2009

நினைவுகள்

நிறைய நாட்களின் பின் என் கிறுக்கலைப் படிக்க வந்தவங்களே... கவனம்...

பாடப் புத்தகம்
தூக்கும் நேரம் எல்லாம்
உன் நினைவு..
காரணம் கேட்கிறாயா
படிக்க வந்து தானே
உன்னைப் படிக்க ஆரம்பித்தேன்
*************************************
நித்திரைக்காக எதையுமே
தூக்கி எரியும் நான்
உனக்காக நித்திரையைத்
தூக்கி எறிந்தேன்
நித்திரை என்னுடன்
கோவித்துக் கிண்டு
வர மாட்டேன் என்கிறதடா...

பி.கு:பரீட்சை காரணமாக வலைத் தளப் பக்கம் வர முடியாமல் இருந்தது. (அப்படி எண்ணத்தைத் தான் படிச்சு கிளித்திட்டீங்க என்றெல்லாம் கேக்கக் கூடாது) இன்னும் பதினான்கு நாட்களில் வீட்டுக்குப் போக இருக்கிறேன், அதனால் இன்னும் ஒரு மாதத்துக்கு பதிவுகள் குறைவாகவே இருக்கும். அப்புறமாக வந்து பார்க்கலாம்..