Sunday, September 6, 2009

காண்பதெல்லாம் கனவா?

வருகைக்காகக் காத்திருந்த நாள் போய்
நினைவுகள் மட்டுமே இன்று
என்று நினைத்தேன்
அவையும் கனவாகினவோ...

வாழ்க்கை என்பது
எது எனப் புரிகையில்
நடந்தவை கனவு தான்
எனக்கிது நிஜம்

காரணமில்லாத பேச்சு
கரிசனையாக அமைய
காதல் என்ற
கருத்து நம்மிடையே...

Saturday, August 22, 2009

வார்த்தை இல்லை சொல்ல..

காலத்தைக் காரணம் காட்டிய - நீ
காலம் சேர்த்து வைத்த
நம்மை நினைக்காதது
உன் தவறே
என்கிறாயா...

நினைவுகளுடன் இருந்த என்னை
நிஜங்களுடன் இணைக்க
நினைத்த நீயா
கனவென மறந்தாய் அனைத்தையும்
என்கிறாயா....

கனவுகள் மறந்தாலும்
நனவுகள் மறவாது
என்று
வசனம் பேசிய உன்னால்
நனவையே கனவாக்க
முடிந்ததேயானால்
நிஜத்துக்கு ஆதாரம்
என்னவென்று கேட்கிறாயா
பதில் இல்லை என்னிடம்

Thursday, August 20, 2009

யாரை நம்ப...

அனைத்தையும் அடையலாம்
நட்பால் என்று
உன்னைக் கண்டதுமே
நினைக்கத் தோன்றியது
எல்லாமே பறந்ததடி
உன் காதால்
பொய்யே உருவானாய்
காரணமே இலலாமல்

சாதாரனமாகின - உன்
பொய்ச் சத்தியங்கள்
அதையும் நம்பினர் - நம்
நண்பிகள்
காரணமே இல்லாத - உன்
மாற்றத்துக்கு காரணம் தேடின
அந்த நல்ல

நகரம் நரகமாக்கியது
உன் நுழைவால்
காரணமற்ற பேச்சுகள்
உன் சார்பில் எழுந்தாலும்
பேச மறுத்தன நம் உதடுகள்
பிடிக்கவில்லையடி - உன்
முகம் காண
தெரியவில்லையடி - உன்னைத்
திருத்தி எடுக்க

அறியாமல் செய்த தவறு
எவராலும் திருத்தப் படலாம்
அறிந்தே செய்த தவறை
யார் சொல்லித் திருத்த
முகம் காண ஆசை என்று
நீ விடுமுறையில் அனுப்பிய
sms ஐ அழிக்க முயல்கிறேன்
முடியாதவளாகிறேன்
எனக்கு பல நண்பிகள்
இருக்கிறார்கள் என்ற ஒரே
காரணத்துக்காக......

யாரை நம்ப...

அனைத்தையும் அடையலாம்
நட்பால் என்று
உன்னைக் கண்டதுமே
நினைக்கத் தோன்றியது
எல்லாமே பறந்ததடி
உன் காதால்
பொய்யே உருவானாய்
காரணமே இலலாமல்

சாதாரனமாகின - உன்
பொய்ச் சத்தியங்கள்
அதையும் நம்பினர் - என்
நண்பிகள்
காரணமே இல்லாத - உன்
மாற்றத்துக்கு காரணம் தேடின
அந்த நல்ல

நகரம் நரகமாக்கியது
உன் நுழைவால்
காரணமற்ற பேச்சுகள்
உன் சார்பில் எழுந்தாலும்
பேச மறுத்தன நம் உதடுகள்
பிடிக்கவில்லையடி - உன்
முகம் காண
தெரியவில்லையடி - உன்னைத்
திருத்தி எடுக்க

அறியாமல் செய்த தவறு
எவராலும் திருத்தப் படலாம்
அறிந்தே செய்த தவறை
யார் சொல்லித் திருத்த
முகம் காண ஆசை என்று
நீ விடுமுறையில் அனுப்பிய
sms ஐ அழிக்க முயல்கிறேன்
முடியாதவளாகிறேன்
எனக்கு பல நண்பிகள்
இருக்கிறார்கள் என்ற ஒரே
காரணத்துக்காக......

Wednesday, August 19, 2009

இனி என்ன இருக்கிறது சொல்ல..

தலைப்பு வில்லங்கமாக இருந்தாலும் சொல்ல "நன்றி" என்ற வார்த்தை இருக்கிறதே என்பது தான் உண்மை. எதற்காக இந்த நன்றி என்று கேக்கிறீங்களா? எனக்கும் ஒருவர் விருது வழங்கி இருக்கிறார். சுவாரசியமான வலைத்தளம் எனக்குத் இந்த விருதை பதிவர் சுபாங்கன் அவர்கள் (மரியாதை என்று நினைக்காதீங்க) எனக்குத் தந்திருக்கிறார் (உண்மையாவா என்று என்னைக் கேக்காதீங்க). நன்றிகள் கோடி...




இந்த விருதைப் பதிவர் செந்தழல் ரவி அவர்கள் ஆரம்பித்து வைத்தாலும் எனக்கு இதனை வழங்கியவர் மாண்புமிகு(சும்மா build up தான்) பதிவர் சுபாங்கன் தான். இந்த விருது எனக்கு கிடைத்துள்ளது என்று நினைக்கும் போது பெருமையாக இருந்தாலும், என்னுடன் விருது வழங்கப் பட்டவர்களின் தளங்களைப் பார்க்கும் போது பயமாக இருக்கிறது.
இந்த விருதை மேலும் ஆறு பதிவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கடைப்பாடு எனக்கு இருப்பதால் எனக்குத் தெரிந்த நல்ல பதிவர்கள் அறுவருக்கு இந்த விருதை வழங்கலாம் என்றிருக்கிறேன்.

பிரபா

புதிய பல விடயங்களை அலசி ஆராய்வதில் இவருக்கு ஆர்வம் அதிகம். அது மட்டுமல்லாது தான் அறிந்த விடயங்களை மற்றவர்களுக்குத் தெரியப் படுத்துவதும் இவர் வழமை.

பிரசாத்

இவர் ஒன்றுக்கும் சளைத்தவர் அல்ல என்று பல இடங்களில் நிறுபனமாகி இருக்கின்றன. பேய்களைப் பற்றி ஆராய்வதில் இவருக்கு உள்ள நாட்டம் யாராலும் விஞ்சப்பட முடியாது. இதற்காகப் புதிய வலைத் தளத்தையே உரிவாக்கியவர் இந்த வல்லவர்.

தேவா

வைத்தியர் என்ற காரணத்தைக் காட்டி நோய்களைப் பற்றி எழுதும் இவர் கவிதைத் தொடர்களுக்கு நான் அடிமை.

ஹிஷாம்

வேலைப்பளு காரணமாகவும் சில பிரச்சினைகளின் காரணமாகவும் இப்போது இவர் பதிவிடுவது குறைவு, ஆனாலும் இவர் பதிவுகள் யாவும் ஏதாவது கருத்தை சொல்லும்.

வதீஸ்வருணன்

இவரும் இப்போது பேய்களைப் பற்றி எழுதத் தொடங்கியுள்ளார். நல்ல எழுத்தாளர். அதிக வேலை காரணமாக நான் இப்போது எழுதுவதில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்.

கார்க்கி

இவர் ஒரு சகலதுறை ஆட்டக் காரர். எல்லாவிதமான பதிவுகளையும் இவர் தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.

எப்படியோ ஆறு பேருக்கு விருதை வழங்கி இருக்கிறேன். நீங்களும் இந்த விருத்த அருவரிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Sunday, July 26, 2009

நினைவுகள்

பள்ளிப் பருவமா? இதைத் தான் நான் இப்போது அதிகமாக நினைத்துக் கொள்வேன், காரணமே இல்லாமல். எனக்கு இது இரண்டாவது தொடர் பதிவு. என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்தவர் சுபாங்கன் அவர்கள். நன்றிகள் கோடி (காரணம் என்னை எல்லாம் தொடர் பதிவுக்கு அழைக்கிறீங்க...)

பள்ளிப் பருவம் என்று எடுத்துக் கொண்டால் சொல்வதற்கு நிறைய விடயங்கள் இருக்கும், ஆனால் எதை சொல்வது என்று தெரியவில்லை.
பள்ளிப் பருவத்தின் ஒவ்வொரு வருடத்திலும் நிகழ்ந்த ஒவ்வொரு விடயங்கள் உங்களுடன் இப்போது...

நாட்டு சூழலின் காரணமாக அளவெட்டி, வலிகாமம் இலிருந்து இடம் பெயர்ந்து துன்னாலை, கரவெட்டி க்கு எனது நான்காவது வயதில் என் அம்மாவுடனும் அண்ணாவுடனும் வந்தேன். அழுகையுடன் ஆரம்பமான பாலர் பாடசாலை அறிமுகங்கள் இப்போதும் இனிமையான நினைவுகளாக (காரணம் கேக்கிறீங்களா என்னுடன் அப்போது படித்த நண்பர்கள் சிலர் இப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள்). கற்றல் என்பது என்ன என்று தெரியாத காலத்திலேயே கற்றது வேடிக்கையாக இருந்தாலும், அதுவே இன்றைய கல்விக்கு அத்திவாரம் என்கின்ற போது பெருமையாக இருக்கின்றது.

பாலர் பாடசாலையை முடித்த பின்னர், என் அண்ணா படித்த காசிநாதர் வித்தியாலயத்திலேயே என்னையும் அம்மா சேர்த்துவிட்டார். ஆரம்ப காலத்திலேயே அம்மாவுடன் பாடசாலைக்கு சென்றிருந்தாலும் பின்னர் அண்ணாவுடன் செல்லப் பழகிக் கொண்டேன்.

இரண்டாவது ஆண்டிலே வகுப்பறைகள் மாறுவது புதிய விடயம் - முதலாம் ஆண்டில் ஒரு வகுப்பில் விடுவார்கள், அப்புறம் ஒரு வருடத்தின் பின்னர் வேறு இடத்துக்கு மாற வேண்டும் . இரண்டாவது ஆண்டில் அது தான் முதல் அனுபவம், வகுப்பு மாறி அதற்காக எம்மைப் பழக்கப் படுத்த வேண்டும் (இங்க தாங்க எனக்கு பிரச்சனையே வந்திச்சு). என்னால் அந்த வகுப்பறையை சாதாரணமாகப் பழக்கப் படுத்திக் கொள்ள முடியவில்லை.

அப்புறம் மூன்றாவது ஆண்டு. அந்தப் பாடசாலையின் நடுத்தர ஆண்டு, நன்கே பாடசாலை பலகிவிட்டலும். தவணை முடிவில் அம்மாவின் பின்னர் நின்று கொண்டு தான் ஆசிரியரிடம் மதிப்பெண் அட்டையை வாங்குவேன் (ரிப்போர்ட்) (ஏனடி நீ அம்மாவின் சீலையை விட்டு எப்ப வெளியே வருவாய் என்று அதிபர் கேட்டது இப்போதும் மனதிலே...)

அப்படியா நான்காம் ஆண்டுக்கு வந்தாச்சு. முன்பெல்லாம் கோவம், நேசம் என்று பலருடன் சண்டை போடும் காலம். அப்படித் தான் ஒரு நடனத்துக்காக என் தோழியின் அத்தையின் உதவியை நாடினேன், சில நாட்களின் பின்னர் அவளுடன் கதைக்காமல் விடவே அவள் என் அத்தை தானே உனக்கு அன்று சேலை கட்டிவிட்டார், அதற்கான கூலியத் தா என்று (இப்போது நினைக்கையில் சிருப்பாக இருந்தாலும், அக்காலத்தில் அது பெரியதே....)

ஐந்தாம் ஆண்டு, ச்சொலர்ச்திப் (Scholarship), நாங்கள் படிப்பதை விட எங்கள் பெற்றோர்கள் தான் படிப்பார்கள். என்னை விட என் அம்மா கஷ்டப்பட்டார் என்று தான் சொல்லுவேன். எவ்வளவு தூரம் படித்தேன் என்று தெரியவில்லை, சித்தியடைந்ததால் வந்த பணம் மாத்திரம் என் படிப்புக்கு கை கொடுத்தது என்பேன்.

அந்நாளில் அதிகம் பேசாதவளாக இருந்தாலும் இந்நாளில் அதிகம் பேசுபவளாக மாற்றிக் கொண்டேன் (அப்படியே பேசாமல் இருந்திருக்கலாமோ என்று நினைப்பதும் உண்டு - முடிவதில்லை)
இப்படியே நீண்ட வாழ்க்கையில் இப்போது பல மாற்றங்கள். அந்த சிறு வயது வாழ்க்கையையே இப்போதும் விரும்புபவளாக இருந்தாலும்முடியாதவளாக..


இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பவர்கள்
ஹிஷாம்
சதீஷன்
கலை

பி.கு: இந்த பதிவுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. என் வாழ்க்கையிலே என்னால் மறக்க முடியாத பதிவு; காரணம் நான் முதன் முதலாக வீட்டிலிருந்து இந்தப் பதிவை எழுதியுள்ளேன்..

Tuesday, July 7, 2009

பயணம்

இந்தப் பயணம் ஒன்று தான் எப்போதுமே எங்களுடன் இருப்பது என்றாகிவிட்டது. நாங்கள் தவிர்க்க நினைத்தாலும் அதுவாக வந்து அமைந்துவிடும். பயணங்கள் பல காரணங்கள் இல்லாமல் ஏற்பட்டாலும், சிலருக்கு அது வாழ்க்கையாகவே அமைகிறது; குறிப்பாக தமிழர்களுக்கு.
ஏன் இதை எல்லாம் சொல்கிறாள் என்று நினைக்கிறீங்களா? காரணம் இருக்கிறது. வாழ்க்கையில் பல இடங்களுக்கு சென்றிருந்தாலும், வாழ்க்கையிலே எனக்கான மூன்றாவது முக்கிய பயணம் இப்போது நான் ஸ்ரீ லன்காவுக்குப் போவது தான்.
பயணம் ஒரு படிப்பனை. இதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்க.
சொல்ல வந்த விடயத்தை சொல்லவில்லையே. நான் வரும் வியாழக் கிழமை ஊருக்குப் போகிறேன், இவ்வளவு நாட்களாக பறேட்சை காரணமாக வலைத் தளப் பக்கம் வர முடியவில்லை, இனி ஊருக்குப் போனால் பதிவுகள் குறைவாக இருக்கும் (இருக்காது என்று உண்மைய சொல்ல விரும்பல்ல), (என்ன நீ உருப்படியாவ எழுதிறியா, நீ எழுதினாலும் எழுதாவிட்டாலும் ஒன்று தான் என்கிறீங்களா?)
பயணம்
உறவுகளை
உருவாக்கவும்
உன்னதமாக்கவும்
உதவிய உன்னை
உதருவதா? உறவாக்குவதா?

உறவுகளின் வலிமை
உணர்வுகளின் தேடல்
உயிரின் மகத்துவம்
யாவையும் பரிசாக்கப் பட்டது
உன்னாலே...