Tuesday, October 6, 2009

காதல் வராதா?

தன் கையே தனக்குதவி என்று
எல்லாம் என் செயல் என்றவன்
எல்லாம் அவள் செயல் என்றானே

அம்மா என்றெல்லவா அழைப்பான்
இன்றென்ன மாற்றமோ
அஞ்சலி என்கிறான்

அவனால் தொலைபேசி தூக்கப் படுவதே
அவன் அம்மா அழைத்தால் மட்டுமே
அது நேற்று வரையா...?
நான் அழைக்காவிட்டால்
யாரடா அழைப்பால் அவளை
என்கிறான் இன்று

காதலிக்கிறாயா?
என்று ஏளனம் செய்தவனா - இன்று
காதலியை பகல்க் கனவில் காண்கிறான்


கடவுள் நம்பிக்கை
இல்லாதவனே
அழைக்கிறான் "கடவுளே"
காதல் வராதா என்னுள்ளே என்று
புலம்புகிறான் இன்னொருவன்..........

Sunday, October 4, 2009

இவ்வுலகம்

பிடித்த சிலரிடமிருந்து
கிடைத்த உன் முகவரி
என்னுள்ளே
சிறிய ஈர்ப்பை
ஏற்படுத்தியதால் - நான்
இங்கே இக்கவிதையுடன்

எந்த எதிர்பார்ப்பும்
இல்லாமல் அறிமுகமான உன்னை
தினமும் சந்திக்க
துடித்தேன்
பலர் தடுத்த போதும் கூட

பல உறவுகள்
உன்னால் கிடைத்தது எனக்கு
அவை யாவுமே
மறக்க முடியாதவை என்னால்
எதிபார்ப்புகளற்ற அந்த
உறவுகளால்
நன்றி சொல்கிறேன் உனக்கு

சந்திப்புகளால் நிரப்பப்பட்டது
வாழ்க்கையானாலும்
சந்திப்புகள் அமைக்கப் பட்டும் விதம்
வித்தியாசமானதே தவிர்க்கப் படைக்க் கூடியவையுமே
நீ கொடுத்தாய் சந்திப்புகளை
தவிர்க்க முடியாத
அற்புதமான உறவுகளினூடு

பதிவுலேகே - நீ
கற்றுத்தந்தது
அளவிட முடியாதது
அளவிடப் பாடவும் கூடாது
நன்றி ஒன்று மட்டுமே
சொல்ல முடிகிறது உனக்கு

தேடலுக்கான முக்கியத்துவம்
உள்ளுனர்வுக்கான வெளிப்பாடு
சிந்தனைக்குள்ள வலிமை
யாவுமே உன்னால்
வெளிக்காட்டப் படுவது
உனக்கான சிறப்பே -
எனக்கானதல்ல..

தேவையானது - உன்
உறவு எப்போது
என் வாழ்க்கை வட்டப் பாதையில்..

Wednesday, September 30, 2009

கணிதம் பொய்யாகிறது..

என்ன பயந்திட்டீங்களா? தலைப்பு அப்படியானாலும் நான் இங்கே சொல்ல வரும் விடயமே வேறு..


முன்னைய காலத்திலேயே அதிகமான சித்திரங்களை நோக்கியிருந்தாலும், பதிவுலகில் நான் இல்லாததினால் அந்த சித்திரங்களை இது தாங்க. கணித் இப்படிப் பின்னர் இரண்டு படங்கள் மாத்திரம் சிக்கியுள்ளன. இதோ உங்களுடன், ஏன் இவை கணித ரீதியில் தவறானவை என்று பார்க்கலாம் வாங்க...

இந்த சித்திரத்தில் நீரருவி ஒன்று உள்ளது, அதைக் கண்டுபிடித்தவுடன், அந்த நீர் எப்பாதை வழியே செல்கிறது என்பதையும் தெளிவாகப் பாருங்கள். அந்த நீர் மீள மீள சுற்றிக் கொண்டிருக்கின்றமை புரிகிறதா? ஒரு பட்சில்லின் உதவியுடன் நீரானது கடத்தப் படுவது இயல்பாக இருந்தாலும், உண்மையிலே கணிதத்தின் படி, நீர் சம பாதையிலோ அல்லது மேலிருந்து கீழோ தான் செல்லுமே தவிர, கீழிருந்து மேலாக செலுத்தப் பட முடியாது எந்த வித பிரவிசைகளையும் பிரயோகிக்காதவிடத்து . இந்த சித்திரத்தில் மேலிருந்து விழுகின்ற நீரானது மறுபடியும் மேலே செல்வதாக வரையப் பட்டிருக்கிறது. அந்தக் கட்டடத்தின் தூண்களை நன்கு அவதானித்தீர்களாயின் நீரானது கீழிருந்து மேலாக செல்கின்றமையை அவதானிப்பீர்கள்.

இது தாங்க, இந்தப் படத்தில் பிழை. ஆரம்ப காலத்திலேயே, கணிதத்துக்கும் சித்திரத்துக்கும் எந்த தொடர்புமே இல்லை என்று நினைத்திருந்தேன், ஆனால் இப்போது தான் புரிந்தது, முன்னைய ஓவியர்களில் பலரும், இப்போதைய ஓவியர்களும் கணிதத்தின் உதவியுடன் தான் ஓவியங்களை வரைகிறார்கள் என்று. ஆனால் அது இந்த சித்திரத்தில் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருந்தாலும், பார்ப்பவர்கள் இதைக் கவனிக்க மாட்டார்கள் (நாங்கள் தான் எத்தையுமே உன்னிப்பாகப் பார்ப்பத்தில்லையே.. அப்ப நீ எப்படிப் பார்த்தாய் என்றீங்களா? அது சும்மா, இப்ப தான் எல்லாவற்றையுமே உன்னிப்பாகப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது..)
இப்படியான பல சித்திரங்கள் இருக்கலாம், இப்பவே தேடத் தொடங்குங்க..


மறைந்திருப்பவை என்ன?

1.
2.


3.
4.
5.
6.

இந்தப் பாடங்களில் என்ன பார்த்தீர்கள்...?






படங்களைப் பெரிது படுத்திப் பாருங்கள். கண்டுபிடிக்க முடியல்லையா, கீழே வாங்க..






  1. ஜேசுவின் முகத்திலே பல போதகர்கள் இருக்கிறார்கள்.

  2. அந்த மரத்துக்கு அருகில் பாருங்க ஒரு முகம் இருக்கிறது.

  3. ஜேசுவின் முகத்திலே மக்கள் கூட்டமும் ஒரு வழிப் போக்கனோ, செய்தி கடத்துனரோ குதிரையில் இருக்கிறார்.

  4. இது கடற்கரையின் ஒரு பாகமாக இருந்தாலும், அந்த பாறை குதிரையின் முகம் போல தெரிகிறது பாருங்க..

  5. அந்தப் பனி மேடையில் பல குதிரைகள் அணியாக நிற்பது தெரிகிறதா?

  6. அந்த எலும்புக் கூடை கவனமாகப் பாருங்கள், இரண்டு சிறுமிகள் ஒரு நாய்க் குட்டியுடன் இருக்கிறார்கள்

வெண்மையான பகுதியைத் தெரிவு செய்து பாருங்கள்...

பி.கு:

இவ்வாறான படங்களை ஆங்கிலத்தில் optical illusion என்பார்கள். தமிழில் எப்படி சொல்வார்கள் என்று யாருக்காவது தெரிந்தால், கூற முடியுமா? தமிழ் தெரியாதா உனக்கு என்று பலர் கேக்கிறீர்களா? இந்த சொல் எனக்குத் தெரியாது. அதனால் தான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்....

Saturday, September 26, 2009

சந்திப்பு


பார்வைகளால் மோதும்
சந்திப்பு
ஈர்ப்பு

கேட்டலில் மெருகேறிய
சந்திப்பு
கவி

இதழ்களின் நெருங்கிய
சந்திப்பு
முத்தம்

மெய் திருடிய
சந்திப்பு
காமம்

நுகர் வாசனைகளின்
சந்திப்பு
பூந்தோட்டம்

இவையுடன் சேர்ந்த
மனங்கள் இடம் மாறும்
சந்திப்பு
காதல்

Tuesday, September 22, 2009

சந்தோசம்

இது ஒரு சதாப்தம் முடிந்து தொடங்கும் பதிவு, அதனால் இன்பமான ஒரு விடயம் எழுதலாமே என்று ஆரம்பிக்கிறேன். கவிதையை வாசித்திவிட்டு இது உண்மையிலையே சந்தோசமான கவிதை தானா என்ற சந்தேகம் வந்தால் நான் பொறுப்பல்ல.

வாழ்க்கையில்
பலர் எதிர்பார்க்கும்
அற்புதமான
வசந்தம்
சந்தோசம்

சிலர் வாசலை
மட்டுமே தட்டும்
அறிய
பொக்கிஷம்
சந்தோசம்

வாழ நினைப்பவனை
பணத்தைக் காட்டியே
கொள்ளும்
பேய்
சந்தோசம்

வாழ்க்கையே
ஒரு பகுதி என்று
பலர் சொன்னாலும்
சிலர்கையைஈதொடாத்
........................................
சந்தோசம்

பி.கு: இடைவெளியில் ஒரு சொல்லையோ, சொற்றொடரையோ,
வசனத்தையோ இட்டு கவிதையை நிறைவு செய்க...

Monday, September 21, 2009

சதம் அடிச்சச்சோ...


என்னடா இது என்று பாக்கிறீங்களா.....................

இது தான் என்னுடைய நூறாவது பதிவுங்க. நம்ப முடியல்லையா (நம்பித் தான் ஆகணும்...)

நான் இந்த நூறாவது பதிவை எழுதிறதுக்கு காரணமா இருக்கிறவர்களே இந்தப் பதிவுலகத்தினர் தான். எனக்கும் ஒரு பதிவகர் என்ற அங்கிகாரம் கொடுத்து எழுத வைத்தவர்கள் பலர். அவர்களை எல்லோருக்கும் நன்றி... அவர்களது ஆதரவு இல்லை என்றால் இந்தப் பதிவே இருந்திருக்காது..


இது எனது நூறாவது பதிவாக இருந்தாலும், நான் எழுதியவை பல அர்த்தமற்றவை என்பது தான் உண்மை. நல்ல பதிவுகள் என்று பார்க்கப் போனால் விரல் விட்டு எண்ணக் கூடியனவாகவே இருக்கும்.


பதிவுலகம் எனக்குப் புகட்டிய பாடம் பல, என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக தன்னை மாற்றிக் கொண்டதும் அதுவே... எந்தக் காரணத்தைக் கொண்டும் தன்னை நான் மறக்கக் கூடாது என்பதற்காக நிறைய அனுபவங்களைத் தந்துவிட்டது.


என்னையும் எழுதத் தூண்டும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள்..