Saturday, March 28, 2009

திருப்பு முனை


என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள்.. காரணம், என் வாழ்க்கையையே திருப்பிப் போட்ட இந்த நாளை எப்படி மறக்க முடியும். இவள் என்ன சொல்கிறாள் என்று நினைக்கிறீர்களா? அது தானுங்க இந்த சிந்து என்றவள் இந்த பங்களாதேசத்துக்கு வந்து இன்றுடன் ஒரு வருடம் முடிகிறது, அதைப் பற்றித் தான் இங்க அலம்பலாம் என்று பதிவை எழுதத் tதொடங்கினேன். அது எப்படிப் போய் முடியும் என்று தெரியாது.
வாழ்க்கையில் பிரச்சனைகள் இருந்த போதும், அம்மாவும் அண்ணாவும் இருக்கிறார்கள் தானே என்ற துணிவில் இருந்த அந்த நாட்களை நினைக்கையில், எதையோ இன்று இழந்த உணர்வு. (எல்லா விடயங்களையும் நான் பகிர்ந்துகொள்ளும் உறவுகள் - காதல் விடயங்களாக இருந்தாலும் கூடவே.. என் காதலா என்று கேட்க்கக் கூடாது, அது என் வகுப்பு நண்பர்களுடைய காதல்கள்..)
என் வாழ்க்கையைத் திருப்பியது மட்டும் அல்லாமல் வாழ்கை என்பதை சிறிதளவேனும் கற்பித்த காலப் பகுதியும் இதுவே (வாழ்க்கை என்பதை அறிந்ததால் தான் வாழ்க்கையே வேண்டாம் என்று தோன்றியதோ)
சாதிக்க வேண்டும் என்று தோன்றிய காலம் போய் வாழ்க்கையின் வேதனையான காலம் என்னையும் எட்டிப் பார்க்கத் தொடங்கியதும் இந்த நாசமாகிப் போன காலப் பகுதியில் தான்.
இங்கு வந்ததில், நான் அறிந்து ஒரே ஒரு நன்மை மட்டும் தான். பல நல்ல உறவுகள் கிடைத்தன, முக்கியாமாக் வெற்றிக் குடும்பத்தின் (வானொலித் துறையில் நாட்டம் அதுகம் என்பதால் அம்மாவை தொடர் நாடகம் பார்க்க விடாமல் சூரியன் பண்பலை கேட்ட காலம், அம்மா கேட்பார் "நீ அவங்களைப் பற்றி எதுக்கு என்கிடா சொல்ற, அவங்களுக்கு உன்னைத் தெரியுமா?" நான் யாரு நான் சொல்வேன் "எனக்குப் பிடித்தவர்களைப் பற்றி நான் கதைப்பதில் என்ன தப்பு இருக்கிறது. சினிமா நடிகர்களைப் பற்றி எல்லோரும் கதைக்கிறாங்களே, அது எதுக்கு?" அம்மா பாவம் எதுவும் பேச மாட்டாங்க (இப்ப எல்லாக் கதைகளையும் அவங்களிடம் சொல்ல முடியாமல் இருப்பதையிட்டும் கவலை தான். இந்த ஒரு வருட காலப் பகுதியில் நடந்தவற்றைச் சொல்வதற்கு ஒரு மாத காலப் பகுதி காணுமா என்பது கேள்விக் குறிதான் (அது தான் வருகிற ஆடியில் ஊருக்குப் போறேனே) நட்பு மற்றையது பதிவுலக உறவுகள்...(நான் அதிகம் கற்றுக் கொண்டது இங்கே தான்) இதை எல்லாம் விட்டால் என்ன நல்ல விடயங்கள் என்று பார்க்கப் போனால், யாவுமே மனதில் நிற்காதவை (கேட்ட விடயங்கள் அதிகமாக நடந்ததால் தான்) ஆனால் கிடைத்த பல உறவுகளைத் தவற விட்டதும் இங்கு தான் என்பது சோகக் கதை சொந்தக் கதை..

ஒரு வருடம் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகிறது என்று புரிந்துகொண்டேன். (அப்புறம் ஒரு நிமிடமே மாத்துகிறது, நீங்கள் என்ன ஒரு வருடம் என்றீங்க என்று குண்டக்க மண்டக்க எல்லாம் கேட்கப்படாது)
iந்த ஒரு வருடத்தில் நடந்த பல விடயங்களை மறக்க வேண்டியுள்ளது, ஆனால் முடியாவில்லை (மன வலியைக் குறைக்க வழி சொல்லுங்கள்)....
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று" (வள்ளுவர் நிச்சயமாக இப்படி எழுதி இருக்க மாட்டார் - எனக்குத் தெரிந்த தமிழில் எழுதியுள்ளேன். தமிழ்ப் பற்றாளர்கள் மன்னிக்க வேண்டும்.)
வாழ்க்கைக்கு ஒத்து வருமா என்பது சந்தேகம் தான்....

பி.கு: எழுத்துப் பிழைகள் அதிகம் இருந்திருந்தால் மன்னிக்கவும்.... அவசரமான பதிவு..

Friday, March 27, 2009

நண்பியே....

எங்கிருந்தோ வந்த - இரு
சுதந்திரப் பறவைகள்
கூண்டுப் பறவைகளானதால்
அன்றொரு நாள் உறவாளிகளாக
வேறொரு கூண்டுப் பறவை
வந்தந்ததால்
இன்னொரு நாள் பகையாளிகளாக
சமாதானக் கூண்டுப் பறவைகளால்
வேறொரு நாள் அயலாளிகளாக
இன்னும் எத்தனை
கூண்டுப் பறவைகளால்
பிறிதொரு நாள் ............

Thursday, March 26, 2009

யாரடி....?

உன்னிடம்
சொல்லக் கூடாத விடயங்கள்
சொல்லப்படும் போது
நான் கூட
சிந்திப்பதில்லை
நீ கூடவா சிந்திக்கவில்லை..
எதற்காகச் சொல்கிறேன் என்பதை..

உன்னிடம்
சொல்லக் கூடாது
என்று நினைத்த
பல விடயங்கள்
தானாகவே
வெளிவருகின்றனவே
எதற்காக என்பதை
அறிவாயா?

Monday, March 23, 2009

காதலர்கள்...

என்ன பதியலாம்..............................

என்ன பதியலாம் என்று நினைத்த போது எந்த விடயமுமே மனதில் எட்டவில்லை, எனவே வழமை போல என் வீட்டு வேலையைச் செய்யத் தொடங்கிய போது தான் என் அறைத் தோழிக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது தான் என் நீண்ட நாள் சந்தேகம் நினைவுக்கு வந்தது. எனக்கு வந்த சந்தேகத்தை உங்கள் முன்னிலையில் வைத்து உங்கள் கருத்துக்களையும் அறியலாம் என்ற நோக்கத்தில் எழுதும் பதிவு தான் இது.

என் பங்களாதேசத்து வாழ்க்கையிலிருந்து அறிந்த / பெற்ற அனுபவம் தான் இது என்று சொல்லலாம். (என் சொந்த அனுபவம் தான் ஆனால் இந்த சம்பவம் எனக்குத் தான் என்று கருதுவது தப்பு)

என்ன சும்மா அலட்டுகிறேனோ? வாங்க விசயத்துக்குப் போகலாம்..

முதலாவது கேள்வி இது தான்...

காதலிப்பவர்கள் தொலைபேசியில் பேசும் போதோ அல்லது இணையத்தில் கதைக்கும் போதோ மெல்லமாகப் பேசுவது ஏன்? அவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்று நான் ஒட்டுக் கேட்பதும் இல்லை அப்படிக் கேட்டாலும் எனக்கு விளங்கப் போவது இல்லை, காரணம் அவர்கள் பேசுவது அவர்களுக்கே விளங்குகிறதா என்பது மட்டுமல்ல, பலர் பிற மொழிகளில் பேசுவார்கள் ( சிங்களம், பங்களா அல்லது பங்காளி, கமாய், நேபாளி, உருது).

மற்றவர்களுடன் பேசும் போதே மெதுவாகப் பேசும் அவர்கள் தங்கள் காதலர்களுடன் பேசும் போது என்றால் கேட்கவா வேண்டும். அவர்கள் பேசுகிறார்களா என்ற சந்தேகம் பலமுறை எனக்கு மட்டுமல்ல என் நண்பிகளுக்கும் தான்.

இதன் காரணம் என்ன, (மற்றவர்கள் கேட்டுவிடுவார்கள் என்றோ)?

காதலித்தால் அந்த இயல்பு தானாகவே வந்துவிடுமா? அப்படி மெல்லமாகக் கதைக்க வேண்டும் என்றால் காதலிக்கத் தான் வேண்டுமா? (இந்தக் கேள்வி கேட்பதற்குக் காரணம், நான் பொதுவாக சத்தமாகத் தான் கதைப்பேன் - மெதுவாகப் பேச நினைத்த போதும் முடிவதில்லை - உதவிலக் வரவேற்கப்படுகின்றன)

காதலிக்கும் பெண்கள் மட்டுமா இல்லை ஆண்களும் மெல்லமாகத் தான் பேசுவார்களா? உங்களுக்குத் தான் இந்தக் கேள்வி? பதில் சொல்வது உங்கள் கையில்த் தான் இருக்கிறது.....

Saturday, March 21, 2009

ஏனடா..?

ஏன் சந்தித்தாள் உன்னை

தானாகவே

வாழவிரும்பியவளை

நீயாக மாற்றியதால்

தன்னை இழந்தவளாய்....


எதையுமே சாதிக்கத்

தெரியாதவளாயிருந்தவள்

உன்னைக் கண்டதும்

எப்படி

சாதிக்கத் தொடங்கினாள்

தன்னாலேயே

கட்டுப்படுத்த முடியாத

அவள் கோபம்

எங்கு போனது

உன்னைக் கண்டதும்

உன்னுள்ளே உறங்தவளாக

உன் எண்ணங்களுக்குக்

கட்டுப்பட்டவளாக....

Thursday, March 19, 2009

காதலா..?

கவிதைக்கு - நீ

காதலியாகலாம் உனக்கு

உனக்குக் காதலியாக

வரவேண்டும் என்பது...

பேராசை

****************************

காதல் பாடல்களுக்கே

தடையான

இடத்தில் இருக்கும் - நீ

காதலித்தால்...

*****************************

உன்னை நான்

வெறுப்பதற்கு - நீ

போட்ட நாடகம்

எனக்கு உன்மீதான

காதலைப் பெருக்கியதேடா..

Tuesday, March 17, 2009

எழுதத் தெரியாமல் எழுவது..

தன்மையாம் என்னுள்
முன்னிலையாம் - நீ
கலந்ததால்
படர்க்கைச் சிலர்
அள்ளித் தெளித்த
வார்த்தைகள்
நம்மை மீண்டும்
தன்மையாகவே
மாற்றிவிட்டதடா..




கண்ணுக்குள்

நீயடி என்று

பொய் சொல்ல

மறுத்த நீ

என் இதயமே

நீயடி என்று

சொன்ன பொய்யை

நினைத்து

யோசிக்கிறேன்

யோசிக்கத் தெரியாதவளாக..

என்னை யோசிக்க வைக்க

யோசிக்காமல் - நீ

எடுத்த முடிவு கூடப்

பலரை யோசிக்க வைத்ததடா?