Thursday, December 11, 2008

என் பார்வையில் காதல் என்பது

காதல் என்பது புனிதமானது என்பதை நான் அறிவேன் ஆனால் அதற்கான வரைவிலக்கணம் அறியாது தேடுகிறேன் (அறிந்தவர்கள் சொல்லலாம்). காதலின் உள்ளார்ந்த தத்துவம் புரிதல் என்று நினைக்கிறேன். இரு மனங்கள் ஒன்றிக்கும் போது காதல் மலர்வதாக சொல்கிறார்கள். காதல் என்ற பெயரில் பலர் பலரது வாழ்க்கையை ஏலம் போடுகிறார்கள் என்பதை நான் நினைவறிந்து இவ்வுலகை பார்த்ததிலிருந்து சொல்கிறேன்(என்ன அனுபவமா என்று கேக்கிறீர்கள் அப்படி இருந்தால் சொல்கிறேனே). இங்கெல்லாம் ஒருவரின் மனதை காதலிக்கிறேன் என்று சொல்லி அவர்களின் சொத்துகளை காதலிப்பவர்கள் அதிகம் (உண்மையாக காதலிப்பவர்கள் அடிக்க கூடாது). என்னை காதலித்து அவன் அல்லது அவள் ஏமாற்றிவிட்டான் அல்லது ஏமாற்றிவிட்டாள் என்று ஒருவனோ அல்லது ஒருத்தியோ சொன்னால் எனக்கு கோபம் தான் வரும் (ஏன் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது) ஏன் என்றால் அவளோ அல்லது அவனோ உண்மையாக காதலிக்கவில்லையே. காதல் என்ற பெயரில் அத்தனை நாளும் என்ன செய்தார்கள் என்று என்னை கேட்க வேண்டாம். சினிமாக்களில் மட்டுமே காதலுக்காக எல்லாம் செய்யும் காதலர்களை காண முடிகிறது. நியமான வாழ்க்கையில் அவர்களை விரல் விட்டு எண்ணலாம்.
ஏன் பார்வையில் காதல் என்பது என்று தலைப்பை போட்டிவிட்டு சொல்லாமல் போகிறாளே என்று நினைக்கிறேர்களா? சொல்கிறேன் கேளுங்கள் காதலை சுவாசிக்கிறேன் அதனால் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
இன்னும் இருக்கின்றன அவை மற்றுமோர் பதிவில்......
வரட்டா.............?
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

6 comments:

Hamshi said...

காதலை சுவாசிக்கிறீங்களா? அப்போ Oxygen ஐ இல்லையா? இதையே எல்லோரும் follow பண்ணினால் scientist பூமியைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. Any how, Nice statements , Sinthu,Wel done.
Keep going. மீண்டும் இன்னொரு blog இல் சந்திப்போம்.

Sinthu said...

scientist கவலைப்படுவதற்கு நானா காரணம்...........
அவங்களுக்கி விஞ்ஞானத்தில் நம்பிக்கை எனக்கு காதல்/அன்பு இவற்றில் நம்பிக்கை. அது தான் இப்படி...........

Hamshi said...

அதற்காக எல்லோரும் காதலை சுவாசிக்கலாம் என்ற நப்பாசையில் உயிரை விட முடியுமா?

Sinthu said...

உண்மையாக காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

Sinthu, although I don't have wisdom about it, i was really suprised that you have skills in Arts too. Keep it up Sinthu.....We will always support you...

Sinthu said...

Thanks da Keetha