Saturday, December 13, 2008

"யாகாவாராயினும் நா காக்க.........."

என்னடா இவள் வள்ளுவரின் திருக்குறளை எல்லாம் சொல்லி பழைய பல்லவி பாட போகிறாள் என்று நினைக்க வேண்டாம். இது என் வாழ்க்கையில் (அனுபவம் தான்) நடந்தது. என் பேச்சு தான் எனக்கு பலமும் பலவீனமும் (ஏன் என்று கேட்பது புரிகிறது). என் பேச்சினால் நான் பலரை கவர்ந்தாலும் அதே பேச்சினால் பல நல்ல நண்பர்களை இளந்ததும் உண்டு. நான் இப்படி தான் பேசுவேன் என்று தெரிந்திருந்தாலும் எனது பேச்சினை தவறாக நினைத்தவர்கள் பலர் ( நண்பர்கள் உட்பட - அப்போ அவர்கள் நண்பர்களா என்று கேட்ட வேண்டாம்). சில சந்தர்ப்பங்களில் ஒரு விடயத்தை நேரடியாக சொன்னால் பலர் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்திருக்கும் ஆனால் பல சந்தர்ப்பங்களில் என்னை மறந்து ஏதோ பேசுவது என்று ஏதோ பேசியது நினைவிருக்கிறது (அதனால் நிறையவே பாதிக்கபட்டிருக்கிறேன், பலர் பாதிக்கபட்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை).
என்னை போல் பலர் பேச்சினால் மாட்டியிருப்பார்கள். நானும் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பது கசப்பான உண்மை தான் (சிரிக்காதீங்க). பேச்சை குறைக்க ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கப்பா...... இப்பகூட ஏதோ எழுதுவதென்று ஏதோ ஏதோ எல்லாம் எழுதுகிறேன்.
எனது பதிவுகள் பற்றி உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
ஏதாவது சொல்லுங்கபா. பரவாயில்லை நல்லா இல்லை என்றாவது சொல்லுங்களேன்.
நண்பர்களுடன் கூட எதையுமே சிந்தித்து கதையுங்க என்பது என்னுடைய சின்ன
அறுவுரை ( நீங்க எப்படி வேண்டும் என்றாலும் எடுக்கலாம்).

5 comments:

கார்க்கிபவா said...

இன்மேல தவறாமல் படிச்சு கருத்து சொல்றேன் :)))))

221 said...
This comment has been removed by the author.
Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ஆரம்பத்துல எழுதும்போது எங்கட அனுபவங்கள் சொந்தக் கதைகள்தான் வரும். அப்படியே தொடர்ந்து எழுதினா தட தட என்று வளர்ந்து எல்லாமும் பற்றி எழுதிவீங்க பாருங்கோ... ஜமாய்ங்கோ... நாங்க படிச்சு கருத்துச் சொல்றோம்.

Word Verification இனை எடுத்தால் நல்லாயிருக்குமே. :-0

Sinthu said...

thanks annas
i just created this blog but i don't know how to developed it. i'm trying to do my best.

Anonymous said...

sinthu, neengal solla varuvathu purikirathu. mudiyathathu ennu ethuvume illai sinthu..."vettiyin padikal tholviyin kanikal".ungalathu thunivaana aarambaththai vaalthukiren.