Monday, December 15, 2008

வழி இருந்தால் சொல்லுங்கப்பா.........

உங்களுக்கு நான் மிகவும் நல்ல பழக்கவழக்கங்கள் கொஞ்சம் சொல்ல போகிறேன். எனக்கு இந்த பழக்கங்கள் இருக்கிறதா என்று கேகிறேங்க போல. சத்தியமாக சொல்கிறேன் அத்தனையும் என்னிடமே வீடு கட்டி குடிகொண்டுவிட்டன. நான் நினைத்தும் விரட்ட முடியவில்லை (அது தான் சொன்னேன்).
வாங்க சொல்கிறேன் ஏனென்றால் நல்ல குணங்கள் தானே...
அதிகம் பேசுவேன்
சில நேரங்களை என்ன பேசுகிறேன் என்று எனக்கே தெரியாது (அப்படி என்றால் மற்றவர்களுக்கு எப்படி விளங்கும். கொடுமை.....) முன்னைய பதிவில் சொல்லியிருக்கிறேன் எனவே மறுபடியும் அலம்புவது விரும்பவில்லை.
அதிகமாக கோவப்படுவேன்
யார்மீதாவது கோவம் வந்தால் உடனே வெளிக்காட்டிவிடுவேன். இடம், பொருள், ஏவல் என்றெல்லாம் சொல்வார்களே அதை எல்லாம் கணக்கிலேயே எடுப்பதில்லை இவள்(யாரது..? நான் தான் என்றால் நம்புவீர்கள் என்று தெரியும்).
பிறர் பிரச்சினைகளை தீர்க்க நினைத்து நான் பிரச்சினையை வாங்கி இருக்கிறேன்
அவர்களின் பிரச்சினையை என்னிடம் சொல்ல நான் அதற்கு தீர்வு சொல்ல அது எனக்கே பாதகமாய் முடிந்துவிடும். அவர்கள் சேர்ந்துவிடுவார்கள் (அப்போ என்பாடு .... இன்னும் புரியவில்லையா..? அது தான்).
எளிதில் எல்லோரையும் நம்புவது
பல சந்தர்ப்பங்களில் ஏமாந்திருக்கிறேன். இந்த காரணத்தால் சில வேளைகளில் சில விடயங்கள் உண்மையாக இருக்கும் ஆனால் நான் நம்புவதில்லை.
பிறருக்கு உதவி செய்ய நினைத்து என் வேலைகளை இறுதி நேரத்தில் செய்து முடிப்பேன்.
உதவி கேட்பவர்களுக்கு மறுப்பு தெரிவிப்பதில்லை (என்னால் செய்யக்கூடிய வேலையாக இருந்தால் சிலவேளைகளில் தெரியாத வேலை என்றாலும் முயற்சிப்பதுண்டு)- அவ்வளவு இலக்கிய மனம் சொன்னால் நம்பனும்.
எல்லோரிடமும் அதிக அக்கறை கொள்ளுதல்.
என்னவர்கள் என்று நான் நினைத்தவர்கள் தப்பு செய்தால் உடனே சொல்லிவிடுவேன். எப்படி எப்போது சொல்ல வேண்டும் என்று என்றெல்லாம் எனக்கு தெரியாதுப்பா ஆனால் சொல்லிவிடுவேன் (பாதிக்கப்பட்டவர்கள் மன்னிக்க வேண்டும்).
முக்கியமான ஒன்றை மறந்துவிட்டேனே..
தாழ்வு மனப்பாங்கு தான் என்னுடன் சிறு வயதிலிருந்தே ஒட்டிக்கொண்டிருக்கும் ஒட்டுண்ணி. சில விடயங்கள் தெரிந்திருந்தாலும் சொல்வதற்கு முன்வருவதில்லை. ஏன் என்ற கேள்வியை என்னுள்ளேயே பமுறை கேட்டும் விடை கிடைக்கவில்லை.

இன்னும் என்ன நல்ல குணங்கள் இருக்கின்றன என்னில்...? இப்போதைக்கு இவ்வளவு தான் தோன்றியது. என்ன எழுதி வைத்த சொல்லுவாங்க ஞாபகம் இருந்ததை சொன்னேன்பா....வழி இருந்தால் சொல்லுங்கப்பா என்று தான் சொன்னேன். வசித்தவர்கள் வழி சொல்லயுங்க இல்லை என்றால் உங்களின் நல்ல பழக்கவழக்கங்கள் கொஞ்சத்தை எடுத்துவிடுங்க.
வழி சொல்லுங்க ......

11 comments:

கார்க்கிபவா said...

நல்லதும் கெட்டதும் சேர்ந்தவன் மனிதன்.. யாருக்குத்தான் இல்ல?

Sinthu said...

You are correct anna but I must correct my behavior, isn't it?
Plz anna give some advice.
thaxs 4 ur suppot..........

துஷா said...

"நல்லதும் கெட்டதும் சேர்ந்தவன் மனிதன்.. யாருக்குத்தான் இல்ல?"

அதன் தலைவரே சொல்லிட்டாரு இல்ல தொடங்குங்க உங்க வேலைய..........

Anonymous said...

sinthu, i can tell one thing that you understand yourself well, it is only enough you to do many good things.....i think, i have nothing to tell you da.....sinthu, u always tell me, "think positive..." ah..

Poornima Saravana kumar said...

நானும் உங்கள மாதிரி தாங்க:))

ரணங்கள் said...

nallathan eruku anna

தேவன் மாயம் said...

///எளிதில் எல்லோரையும் நம்புவது
பல சந்தர்ப்பங்களில் ஏமாந்திருக்கிறேன். இந்த காரணத்தால் சில வேளைகளில் சில விடயங்கள் உண்மையாக இருக்கும் ஆனால் நான் நம்புவதில்லை.
பிறருக்கு உதவி செய்ய நினைத்து என் வேலைகளை இறுதி நேரத்தில் செய்து முடிப்பேன்.
உதவி கேட்பவர்களுக்கு மறுப்பு தெரிவிப்பதில்லை (என்னால் செய்யக்கூடிய வேலையாக இருந்தால் சிலவேளைகளில் தெரியாத வேலை என்றாலும் ///

சாரி! வேலையிருக்கு எனக்கு என்று சொல்லிப்பாருங்களேன்!!
நீங்க சொன்னது பெரும்பாலும் எல்லொருக்கும் உண்டு!!!
தேவா...

Sinthu said...

" ரணங்கள்
nallathan eruku anna"
அண்ணா இல்ல........
தங்கை என்று நினைக்கிறேன்.
எனக்கு 19 வயது இப்பதான்முடிந்திருக்கிறது.

" thevanmayam கூறியது...
///எளிதில் எல்லோரையும் நம்புவது
பல சந்தர்ப்பங்களில் ஏமாந்திருக்கிறேன். இந்த காரணத்தால் சில வேளைகளில் சில விடயங்கள் உண்மையாக இருக்கும் ஆனால் நான் நம்புவதில்லை.
பிறருக்கு உதவி செய்ய நினைத்து என் வேலைகளை இறுதி நேரத்தில் செய்து முடிப்பேன்.
உதவி கேட்பவர்களுக்கு மறுப்பு தெரிவிப்பதில்லை (என்னால் செய்யக்கூடிய வேலையாக இருந்தால் சிலவேளைகளில் தெரியாத வேலை என்றாலும் ///

சாரி! வேலையிருக்கு எனக்கு என்று சொல்லிப்பாருங்களேன்!!
நீங்க சொன்னது பெரும்பாலும் எல்லொருக்கும் உண்டு!!!
தேவா..."
அனுபவமா அப்படியே சொல்றீங்க...

Sinthu said...

"PoornimaSaran கூறியது...
நானும் உங்கள மாதிரி தாங்க:))"
என்ன அக்கா உங்களுக்குமா?
அப்போ உங்களால் வழி சொல்ல முடியாதா..?

சரவண வடிவேல்.வே said...

நீங்கள் சொன்னதில் "கோபம்" தவிர மற்ற அனைத்தும் எனக்கும் உள்ளது.

"எளிதில் எல்லோரையும் நம்புவது"... அதிலும் பெண்கள் என்றால் உடனே நம்புவது..

"தாழ்வு மனப்பாங்கு"... ஒருவேளை மற்றவர்கள் நம்மை தவறாக நினைத்து விடுவார்களா என்ற பயம்...

Sinthu said...

நீங்கள் சொன்னதில் "கோபம்" தவிர மற்ற அனைத்தும் எனக்கும் உள்ளது.
வாழ்க வளமுடன்..

"எளிதில் எல்லோரையும் நம்புவது"... அதிலும் பெண்கள் என்றால் உடனே நம்புவது..
அப்போ நீங்க உருப்பட்ட மாதிரி தான். என் என்றால் பொண்ணுங்க அப்படி (எப்படி என்று கேக்காதீங்க) பேசுவாங்க என்று எனக்கு தெரியும்.

"தாழ்வு மனப்பாங்கு"... ஒருவேளை மற்றவர்கள் நம்மை தவறாக நினைத்து விடுவார்களா என்ற பயம்...

சரியா சொல்லி இருக்கிறீங்க அண்ணா...
என் வலைபூவுக்கு வந்தமைக்கு நன்றி.........