Sunday, December 28, 2008

கவிதை என்று சொல்லி உங்களை குழப்பும் ஒரு புது முயற்சி

உன்னை காதலிக்க வேண்டும்

என்பதற்காக தானோ

இதுவரை நான்

இயற்கையை கூட

காதலிக்கவில்லை.

________________________________________

நான் உன்னுள் அடக்கம் என்று - நீ

அன்று சொன்னதன் அர்த்தத்தை

இன்று தான்

உணர்ந்தேன் - ஆனால்

நான் இன்று உன்னை

அடையமுடியாத

இக்கட்டான சூழ்நிலையில்.

மீண்டும் வருவேன் - நீ

ஒரு சுதந்திர பறவையாக

மாறி இருக்கும் போது...

________________________________________

வருவாய் என்று காத்திருந்த

போது வராத நீ

வர வேண்டாம் என்று நினைத்த

போது வந்ததன் காரணம்..

________________________________________

என் கிறுக்கல்களையும்

கவிதையாக்கும் உனக்கு

நான்

என்ன கைமாறு செய்வது..

_________________________________________

பி.கு: சும்மா கிறுக்கினேன். பிடிக்கவில்லை என்றாலும் கருத்து தெரிவிக்கலாம். அதுக்காக குண்டக்க மண்டக்க என்று சொன்ன எனக்கு புரியாது. எதையும் தெளிவா சொல்லணும்.

10 comments:

Hamshi said...

சிந்து அவர்களே! உங்களின் கவிதையில் நீ, நீ என்று சொல்லியுள்ளீர்களே? யார் அந்த "நீ"? என்பதை கொஞ்சம் புரியும்படியாக சொல்ல முடியுமா?

Anonymous said...

சிந்து அவர்களே! உங்களின் கவிதையில் நீ, நீ என்று சொல்லியுள்ளீர்களே? யார் அந்த "நீ"? என்பதை கொஞ்சம் புரியும்படியாக சொல்ல முடியுமா?

Hamshi said...

கவிதை ரொம்ப ரொம்ப அருமை. காதலை அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.

Sinthu said...

"சிந்து அவர்களே! உங்களின் கவிதையில் நீ, நீ என்று சொல்லியுள்ளீர்களே? யார் அந்த "நீ"? என்பதை கொஞ்சம் புரியும்படியாக சொல்ல முடியுமா?"
நீ என்பது சந்தர்ப்பங்களை பொறுத்து மாறும்...

"நீ என்பது சந்தர்ப்பங்களை பொறுத்து மாறும்..."
நன்றி
"காதலை அனுபவித்து எழுதியுள்ளீர்கள்"
அப்படியா........
இதுவரையும் நான் காதலித்தது இப்பவும் காதலிப்பது என் அம்மா, அண்ணா, நாடு.......
இதுவரை வேறு யாரையும் காதலிக்க வேண்டும் என்று நினைக்கவில்ல. சந்தர்ப்பமும் வரவில்லை.....

துஷா said...

சிந்து கவிதைகள் யாவும் அருமை
வாழ்த்துக்கள் தெடர்ந்து எழுதுங்கள்

Anonymous said...

"உன்னை காதலிக்க வேண்டும்

என்பதற்காக தானோ

இதுவரை நான்

இயற்கையை கூட

காதலிக்கவில்லை."

அருமையான வரிகள் சிந்து!!!!!
வாழ்த்துக்கள்.

Sinthu said...

thxs to not ask tht who is my lover.

Villai said...

கவித்துணுக்குகள் எல்லாம் நல்லாஇருக்கு

கார்க்கிபவா said...

ம்ம்.. நல்ல தொடக்கம். தொடர்ந்து எழுது

Sinthu said...

" Rupan கூறியது...
கவித்துணுக்குகள் எல்லாம் நல்லாஇருக்கு"
நன்றி ரூபன் அண்ணா சும்மா கிடைத்த நேரத்தில் எழுதியது.
பாராட்டியமைக்கு மீண்டும் நன்றி....



"கார்க்கி கூறியது...
ம்ம்.. நல்ல தொடக்கம். தொடர்ந்து எழுது"
நன்றி கார்க்கி அண்ணா.
ஆனால் என் இதற்கு முந்திய பதிவுக்கு யாருமே பின்னூட்டல் வழங்கவில்லை. ஏன் என்றால் காதல் கவித்தையை பார்த்த எல்லோருக்கும் அந்த அலம்பலை பார்க்க மனம் வரவில்லை போல. நெஞ்க்களுமா?
எடி சிந்து அசிங்கமா இருக்கு என்றாவது சொல்லுங்கோ..........lol..