Sunday, July 26, 2009

நினைவுகள்

பள்ளிப் பருவமா? இதைத் தான் நான் இப்போது அதிகமாக நினைத்துக் கொள்வேன், காரணமே இல்லாமல். எனக்கு இது இரண்டாவது தொடர் பதிவு. என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்தவர் சுபாங்கன் அவர்கள். நன்றிகள் கோடி (காரணம் என்னை எல்லாம் தொடர் பதிவுக்கு அழைக்கிறீங்க...)

பள்ளிப் பருவம் என்று எடுத்துக் கொண்டால் சொல்வதற்கு நிறைய விடயங்கள் இருக்கும், ஆனால் எதை சொல்வது என்று தெரியவில்லை.
பள்ளிப் பருவத்தின் ஒவ்வொரு வருடத்திலும் நிகழ்ந்த ஒவ்வொரு விடயங்கள் உங்களுடன் இப்போது...

நாட்டு சூழலின் காரணமாக அளவெட்டி, வலிகாமம் இலிருந்து இடம் பெயர்ந்து துன்னாலை, கரவெட்டி க்கு எனது நான்காவது வயதில் என் அம்மாவுடனும் அண்ணாவுடனும் வந்தேன். அழுகையுடன் ஆரம்பமான பாலர் பாடசாலை அறிமுகங்கள் இப்போதும் இனிமையான நினைவுகளாக (காரணம் கேக்கிறீங்களா என்னுடன் அப்போது படித்த நண்பர்கள் சிலர் இப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள்). கற்றல் என்பது என்ன என்று தெரியாத காலத்திலேயே கற்றது வேடிக்கையாக இருந்தாலும், அதுவே இன்றைய கல்விக்கு அத்திவாரம் என்கின்ற போது பெருமையாக இருக்கின்றது.

பாலர் பாடசாலையை முடித்த பின்னர், என் அண்ணா படித்த காசிநாதர் வித்தியாலயத்திலேயே என்னையும் அம்மா சேர்த்துவிட்டார். ஆரம்ப காலத்திலேயே அம்மாவுடன் பாடசாலைக்கு சென்றிருந்தாலும் பின்னர் அண்ணாவுடன் செல்லப் பழகிக் கொண்டேன்.

இரண்டாவது ஆண்டிலே வகுப்பறைகள் மாறுவது புதிய விடயம் - முதலாம் ஆண்டில் ஒரு வகுப்பில் விடுவார்கள், அப்புறம் ஒரு வருடத்தின் பின்னர் வேறு இடத்துக்கு மாற வேண்டும் . இரண்டாவது ஆண்டில் அது தான் முதல் அனுபவம், வகுப்பு மாறி அதற்காக எம்மைப் பழக்கப் படுத்த வேண்டும் (இங்க தாங்க எனக்கு பிரச்சனையே வந்திச்சு). என்னால் அந்த வகுப்பறையை சாதாரணமாகப் பழக்கப் படுத்திக் கொள்ள முடியவில்லை.

அப்புறம் மூன்றாவது ஆண்டு. அந்தப் பாடசாலையின் நடுத்தர ஆண்டு, நன்கே பாடசாலை பலகிவிட்டலும். தவணை முடிவில் அம்மாவின் பின்னர் நின்று கொண்டு தான் ஆசிரியரிடம் மதிப்பெண் அட்டையை வாங்குவேன் (ரிப்போர்ட்) (ஏனடி நீ அம்மாவின் சீலையை விட்டு எப்ப வெளியே வருவாய் என்று அதிபர் கேட்டது இப்போதும் மனதிலே...)

அப்படியா நான்காம் ஆண்டுக்கு வந்தாச்சு. முன்பெல்லாம் கோவம், நேசம் என்று பலருடன் சண்டை போடும் காலம். அப்படித் தான் ஒரு நடனத்துக்காக என் தோழியின் அத்தையின் உதவியை நாடினேன், சில நாட்களின் பின்னர் அவளுடன் கதைக்காமல் விடவே அவள் என் அத்தை தானே உனக்கு அன்று சேலை கட்டிவிட்டார், அதற்கான கூலியத் தா என்று (இப்போது நினைக்கையில் சிருப்பாக இருந்தாலும், அக்காலத்தில் அது பெரியதே....)

ஐந்தாம் ஆண்டு, ச்சொலர்ச்திப் (Scholarship), நாங்கள் படிப்பதை விட எங்கள் பெற்றோர்கள் தான் படிப்பார்கள். என்னை விட என் அம்மா கஷ்டப்பட்டார் என்று தான் சொல்லுவேன். எவ்வளவு தூரம் படித்தேன் என்று தெரியவில்லை, சித்தியடைந்ததால் வந்த பணம் மாத்திரம் என் படிப்புக்கு கை கொடுத்தது என்பேன்.

அந்நாளில் அதிகம் பேசாதவளாக இருந்தாலும் இந்நாளில் அதிகம் பேசுபவளாக மாற்றிக் கொண்டேன் (அப்படியே பேசாமல் இருந்திருக்கலாமோ என்று நினைப்பதும் உண்டு - முடிவதில்லை)
இப்படியே நீண்ட வாழ்க்கையில் இப்போது பல மாற்றங்கள். அந்த சிறு வயது வாழ்க்கையையே இப்போதும் விரும்புபவளாக இருந்தாலும்முடியாதவளாக..


இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பவர்கள்
ஹிஷாம்
சதீஷன்
கலை

பி.கு: இந்த பதிவுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. என் வாழ்க்கையிலே என்னால் மறக்க முடியாத பதிவு; காரணம் நான் முதன் முதலாக வீட்டிலிருந்து இந்தப் பதிவை எழுதியுள்ளேன்..

14 comments:

Admin said...

என் சிந்து நீங்கள் உங்கள் இடுகையை தமிழிஸ் இல் இணைப்பதில்லை ( உங்கள் ஓட்டையே போடுறிங்க இல்லை)

Admin said...

அளவுக்கு அதிகமா அடம் பிடிப்பிங்க போல இருக்கு.... இன்னும் கொஞ்சம் விரிவா எழுதி இருக்கலாம் போல தோன்றுது....

அவசரத்தில் பல எழுத்துப் பிழைகள் ஏற்பட்டிருக்கின்றன பார்க்கவும் சிந்து...

Nathanjagk said...

//ஏனடி நீ அம்மாவன் சீலையை விட்டு எப்ப வெளியே வருவாய் //
ஏன் வர​வேண்டும் என்று ​தோன்றுகிற சிலசமயம்! இயல்பாய் இனிமையாய் இருக்கிறது நீங்கள் நினைவுகளை தொகுத்த பாங்கு. ​தொடர்பதிவு வளர வாழ்த்துக்கள்!!

ஆபிரகாம் said...

இந்த பதிவுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. என் வாழ்க்கையிலே என்னால் மறக்க முடியாத பதிவு; காரணம் நான் முதன் முதலாக வீட்டிலிருந்து இந்தப் பதிவை எழுதியுள்ளேன்
!!!!!!!!!
வீட்டில் இனைய இனைப்பு இருக்கிறதா???எப்படி பெற்றீர்கள்??
அந்த நாள் ஞாபகம்!

Subankan said...

Interesting...!

குறை ஒன்றும் இல்லை !!! said...

ம்ம்... நல்லா இருக்கிறது..

Hisham Mohamed - هشام said...

தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி.....
விடுமுறையை சந்தோசமாக கழிக்க வாழ்த்துக்கள் சிந்து.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல மலரும் நினைவுகள்..

Sinthu said...

I'll do that Chanru anna,
Sorry fo my mistakes. I'll definitely rectify them.

@ஜெகநாதன்...
Thanks

@ ஆபிரகாம்...
Yes. I have, but I don't have time to spend here.


@Subankan
Thanks

@ குறை ஒன்றும் இல்லை !!!
not really

@ Hisham Mohamed - هشام
You are always welcome

@குறை ஒன்றும் இல்லை !!!
even If it were irritated, I would remember... LOL

நேசமித்ரன் said...

நல்ல பதிவு
பின்னூட்டிய மற்ற நண்பர்கள் சொன்னது போல இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம்

SShathiesh-சதீஷ். said...

நினைவுகள் நல்லா இருக்கு சிந்து. வீட்டுக்கு போனவுடன் நினைவுகள் மலர்ந்தனவோ? என்னை தொடர்பதிவிட்க்கு அழைத்ததற்கு நன்றிகள். விரைவில் சந்திப்போம்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

எங்கிருந்தாலும் உடனடியாக இந்த பக்கத்திற்கு வரும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்.. மீறினால் ஜக்கம்மாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்....
http://yellorumyellamum.blogspot.com/2009/07/blog-post_28.html

Sinthu said...

"நேசமித்ரன் said...
நல்ல பதிவு
பின்னூட்டிய மற்ற நண்பர்கள் சொன்னது போல இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம்"
முயற்சி செய்கிறேன்..

" சத்தியமூர்த்தி சதீஷன். said...
நினைவுகள் நல்லா இருக்கு சிந்து. வீட்டுக்கு போனவுடன் நினைவுகள் மலர்ந்தனவோ? என்னை தொடர்பதிவிட்க்கு அழைத்ததற்கு நன்றிகள். விரைவில் சந்திப்போம்."
இப்ப தாம் மறுபடியும் இங்கே வந்துவிட்டேனே..

குறை ஒன்றும் இல்லை !!! said...
எங்கிருந்தாலும் உடனடியாக இந்த பக்கத்திற்கு வரும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்.. மீறினால் ஜக்கம்மாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்....
http://yellorumyellamum.blogspot.com/2009/07/blog-post_28.html
Sure..

Sinthu said...

Sorry Pradeep. Umfortunately I have deleted your somment. I'm really Sorry for that. I'll definitely learn tamil as you said, but there is a problme at my home do I have made those spelling midtake. I did this bofore too bdcause of time.. Sorry,..