காலத்தைக் காரணம் காட்டிய - நீ
காலம் சேர்த்து வைத்த
நம்மை நினைக்காதது
உன் தவறே
என்கிறாயா...
நினைவுகளுடன் இருந்த என்னை
நிஜங்களுடன் இணைக்க
நினைத்த நீயா
கனவென மறந்தாய் அனைத்தையும்
என்கிறாயா....
கனவுகள் மறந்தாலும்
நனவுகள் மறவாது
என்று
வசனம் பேசிய உன்னால்
நனவையே கனவாக்க
முடிந்ததேயானால்
நிஜத்துக்கு ஆதாரம்
என்னவென்று கேட்கிறாயா
பதில் இல்லை என்னிடம்
8 comments:
கவிதை அருமை சிந்து
கவி வரிகள் அருமை... தொடருங்கள்...
உங்களுக்கு நானும் சுவையார்வ பதிவர் விருது கொடுத்து இருக்கிறேன்... இங்கே.. http://shanthru.blogspot.com/2009/07/blog-post_20.html அதனை உங்கள் பயணம் எனும் இடுகையில் தெரியப்படுத்தி இருக்கிறேன். இங்கு http://vsinthuka.blogspot.com/2009/07/blog-post_07.html . மறந்துவிட்டிங்களா அல்லது எனது விருதை ஏற்றுக் கொள்ளவில்லையா...
"குமரை நிலாவன் said...
கவிதை அருமை சிந்து"
நன்றி
"சந்ரு said...
கவி வரிகள் அருமை... தொடருங்கள்..."
நன்றி
"சந்ரு said...
உங்களுக்கு நானும் சுவையார்வ பதிவர் விருது கொடுத்து இருக்கிறேன்... இங்கே.. http://shanthru.blogspot.com/2009/07/blog-post_20.html அதனை உங்கள் பயணம் எனும் இடுகையில் தெரியப்படுத்தி இருக்கிறேன். இங்கு http://vsinthuka.blogspot.com/2009/07/blog-post_07.html . மறந்துவிட்டிங்களா அல்லது எனது விருதை ஏற்றுக் கொள்ளவில்லையா..."
நீங்க என்னை மன்னிக்கணும். நீங்கள் அனுப்பிய நேரம் எனக்கு பரீட்சை நடந்து கொண்டு இருந்தது. அதன் காரணமாக அதிகமாகப் பதிவு இடாமல் இருந்தான். நீங்க தந்த பரிசை எப்படி ஏற்காமல் இருக்க முடியும்.
இரண்டு மூன்று முறை படித்து விட்டேன் கவிதை வரிகள் அருமையக இருக்கிறது!
"இசக்கிமுத்து said...
இரண்டு மூன்று முறை படித்து விட்டேன் கவிதை வரிகள் அருமையக இருக்கிறது!"
நன்றி. ஆனால், எனக்கு ஒரு சந்தேகம்.. எதற்காக நீங்க இரண்டு மூன்று தடவை வாசித்தீங்க?
நன்றாக இருக்கிறது.
THANKS VATHEESHAN ANNA
Post a Comment