தன் கையே தனக்குதவி என்று
எல்லாம் என் செயல் என்றவன்
எல்லாம் அவள் செயல் என்றானே
அம்மா என்றெல்லவா அழைப்பான்
இன்றென்ன மாற்றமோ
அஞ்சலி என்கிறான்
அவனால் தொலைபேசி தூக்கப் படுவதே
அவன் அம்மா அழைத்தால் மட்டுமே
அது நேற்று வரையா...?
நான் அழைக்காவிட்டால்
யாரடா அழைப்பால் அவளை
என்கிறான் இன்று
காதலிக்கிறாயா?
என்று ஏளனம் செய்தவனா - இன்று
காதலியை பகல்க் கனவில் காண்கிறான்
கடவுள் நம்பிக்கை
இல்லாதவனே
அழைக்கிறான் "கடவுளே"
காதல் வராதா என்னுள்ளே என்று
புலம்புகிறான் இன்னொருவன்..........
19 comments:
சுத்தமா புரியவில்லை.. யாருக்கும் தகவல் அனுப்ப வரைந்த கவிதையா இது..?
மீளவும் வாசித்துப் பார்ப்போம்..
//காதலிக்கிறாயா?
என்று ஏளனம் செய்தவனா - இன்று
காதலியை பகல்க் கனவில் காண்கிறான்//
ஒன்றுமே புரியவில்லை.. ;(
"சுபானு said...
சுத்தமா புரியவில்லை.. யாருக்கும் தகவல் அனுப்ப வரைந்த கவிதையா இது..?"
யாருக்கு தகவல் சொல்ல. சும்மா தோரியத்தை வடித்தேன். காதலி இல்லை என்பது தான் இப்போது பலரது கவலையாம், அது தான் இந்தக் கவிதை..
காதல் இல்லாததால் தான் சந்தோசமாக இருக்கிறேன், அது பிடிக்கல்லையா உங்களுக்கு..
"சுபானு said...
மீளவும் வாசித்துப் பார்ப்போம்..
//காதலிக்கிறாயா?
என்று ஏளனம் செய்தவனா - இன்று
காதலியை பகல்க் கனவில் காண்கிறான்//
ஒன்றுமே புரியவில்லை.. ;("
புரியாத புதிர் தான் காதல் என்பதால் தான் உங்களுக்கு இந்தக் காதல்க் கவிதை புரியவில்லையோ?
புரியவேயில்லை..
//புரியாத புதிர் தான் காதல் என்பதால் தான் உங்களுக்கு இந்தக் காதல்க் கவிதை புரியவில்லையோ?//
யார் சொன்னது புரியாத புதிர் காதல் என்று.. காதலைப் புரியாதவர்களுக்குத்தான் அது புதிர்..
அப்படியானால், அனுபவப்பட்ட உங்களுக்கே விளங்கவில்லையா, அப்படியானால் என் கவிதையில் தான் எதோ பிழை இருக்கிறதா?
காதல் அனுபவம் இல்லை, அதனால் தான் இந்த குழப்பம் எனக்கு..
வேண்டாம் நான் வரவில்லை.. இந்த விளையாட்டுக்கு.. எனக்கு அனுபவமும் இல்லை.. கவிதையும் விளங்கவில்லை.. என்னை விடுங்கள்.. (பேசாமல் விளங்கி விட்டது என்றே முதல்லேயே சொல்லியிருக்கலாம்)
இப்ப விளங்கிவிட்டது என்று சொல்லுங்க. விட்டிடுறேன்..
ஆனாலும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
இனி எழுதப் படும் கவிதைகள் எல்லாராலும் புரியக் கூடியவையாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தியுங்கள்.. lol......
புரிந்துவிட்டது, புரிந்துவிட்டது.
அப்பாடா, நான் தப்பித்தேன் LOL
தப்பிக்கிறதுக்கு இப்படியும் ஒரு வழியா?
என்ன அக்கா வருமா ..?, வராதா...?
மொக்கை புரியும் எங்களுக்கு,
காதல் புரியாதா?
என்ன பகல்க் கனவை ..பகல் கனவு என மாற்றவும்...மற்ற படி ..எனக்கு காதல் புரிகிறது ..
-ஆண்ட்ரு சுபாசு
வெட்டி மொக்கை குடும்பம்.
அப்பாடா உங்களுக்காவது புரிந்துள்ளதே............ என் கவிதை எனக்கு புரியாத போது, உங்களுக்குப் புரிந்தது அதிசயம் தான்..
ஆஹா... நான் புரிந்து கொண்டேன் காதல் வயப்பட்ட ஒருவனின் புலம்பல்கள் தானே இவை! :)
am i right?
ஐயயோ....... எனக்கே தெரியாதே..
இருக்கலாம்..
//ஐயயோ....... எனக்கே தெரியாதே..
இருக்கலாம்..
இருக்கலாம் என்கிறதிலேயே இருக்கு என்றுதானே அர்த்தம்.. அப்போ நான் முதல் இட்ட பின்னுட்டங்கள் சரிதானே..
வாழ்த்துக்கள்..
உண்மை தான், ஆனால் யாருக்கும் தகவல் அனுப்பும் நோக்கம் இல்லை...
எதுக்கு வாழ்த்துக்கள், புரியாத கவிதைகளை எழுதவா?
சிந்து! உன் படைப்புலளைத் தொடர்ந்து படிப்போருக்குத்தான் புரியும்!
:)
Post a Comment