Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, January 21, 2009

இப்படியும் சிலர்........

யாரைப் பற்றிச் சொல்லப்போகிறேன் என்று எல்லோருக்குமே தெரியும் என்று நினைக்கிறேன், என் என்றால் இன்றைய நாளில் இந்த பதிவு வருவதால் தான். நேற்றைய நாள் என்பது யாவருக்குமே முக்கியமான நாள் ( எல்லா வகையிலுமே). அதிகமானவர்களால் எதிர்பார்க்கப்பட்டிருந்த நாள் அல்லவா இது.

ஒபாமா அமெரிக்காவின் அதிபராக தெரிவு செய்யப்பட்ட தினத்திலன்று பொதுவாக எல்லா அமெரிக்கர்களும் சீ........... சீ......... ஏனைய நாட்டவர்களும் தான் சுய நினைவு இல்லாது திண்டாடிக்கொண்டிருந்தனர். (நேரடியான அனுபவம் தான்.) எங்கள் கல்லூரியில் அன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் வழமை போல் நடைபெறவில்லை. எமது ஆசிரியர்கள் யாவருமே ஒபாமாவுக்கு வாக்களித்த போதும் ஒபாமாவே வெற்றியடைவார் என்று தெரிந்திருந்த போதும் கூட அவர்களால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. (சாதாரமாக இருக்கக் கூடியவிடயமா இது..)

நேற்றைய நாள் ஒபாமாவின் பேச்சிலிருந்து அவரின் குணத்தை நன்கே அறிந்துகொண்டதாக ஒரு நினைப்பு என்னுள். நான் செய்வேன், என்னால் செய்ய முடியும் என்று சொல்லும் அரசியல்வாதிகளின் மத்தியில் நாங்கள் செய்வோம், செய்ய முடியும் (இன்னும் பல இருக்கின்றன, என் பார்வையில் இது பெரிதாகத் தெரிந்தது) என்று சொன்னதனூடு புரிந்துகொண்டேன். "நான்" என்ற அகன்காரத்துக்குரிய சொல்லைத் தனது பேச்சில் சேர்த்துக் கொள்ளவே இல்லை அந்த பெரிய மனிதர்.



நகைச்சுவையான விடயம் என்னவென்றால் (ஒபாமாவை ஒரு உன்னதமான உயர்ந்த மனிதராக நினைப்பவர்களுக்கு மட்டுமே) சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் போது தடுமாறிக்கொண்டது. (ஆணைக்கும் அடிசறுக்கும் என்று இதைத் தான் சொல்வார்களோ) அதன் பின்னர் கிடைத்த ஒபமாவின் புன்னகை - அடடா வர்ணிக்கத் தெரியாதுங்கோ எனக்கு......

அதை விட ஒபாமா என்ற பெரிய மனிதர் செய்த ஒரு நல்ல விடயம் இந்த சிந்துவுக்கே புரியக் கூடிய ஆங்கிலத்தில் பேசியது தான்.. நன்றிங்கோ......
அப்படி பேசினாருப்பா.........
மறுபடியும் நன்றி.......