Monday, January 11, 2010

Cherie Blair உம் ஆண்களும்




என்னடா தலைப்பு கொஞ்சம் சிக்கலா இருக்கிறதே என்று நினைக்கிறீங்களா ? Cherie Blair உம் பெண்களும் என்று போட்டால் அது ஒரு விசயமே இல்லை என்று கண்டுக்க மாட்டீங்க என்ற பயம் தான்.

இந்த வருடத்தில் (சீ சீ என் வாழ்வில்) மறக்க முடியாத ஒரு நாளாக இன்று மாறியதே எதிர்பார்த்திராதது. எல்லாவற்றுக்கும் காரணம் அம்மணி Cherie Blair தான். மிக அருகில் ஒரு சந்தர்ப்பம், தவற விட மறுக்குமா நெஞ்சம். வாழ்க்கையில் சந்திப்புகள் சகஜமானாலும் சிலருடனான சந்திப்புகள் எப்போதுமே மனதில் நீங்காதவை. அப்படித் தான் இதுவும்.

எவ்வளவு தான் வயது வந்தாலும் இப்பவும் நல்ல இளமையாகவே இருக்கிறார் என்று சொன்னால் நம்புவீங்களா தெரியவில்லை (அவரை முதுமையாக தோற்றும் சில படங்கள் இணையத்தில் இருப்பதால் சொன்னேன்.) அவர் மட்டும் தான் இளமை என்றால் அவர் பேச்சு இருக்கிறதே அது இப்பவுமே சுறுசுறுப்பாகத் தான் இருக்கிறது.

Cherie Blair ஐ அறிமுகப் படுத்தும் போது distinguish என்று சொல்லி அறிமுகப் படுத்தியதால், எதோ மொழிகளில் பேதம் இல்லை என்று பேசுவாரோ என்று நினைத்தேன்; அவர் ஆண்கள் பெண்கள் என்ற பேதம் இல்லை என்று ஆரம்பித்தவர் தான் பெண்களின் முன்னேற்ற வழிகளையும் ஆங்காங்கே தன அனுபவங்களையும் பகிர ஆரம்பித்தார். பெண்களின் நிலைமைகளில் அதிகமாக நாட்டமுடையவர் என்று எனக்கு இப்ப தானே தெரிந்தது (என் அவரைப் பற்றிக் கேள்விப் பட்டதே இல்லையா என்று கேட்டால், உண்மையாகவே இது வரை காலமும் Cherie Blair மீது எனக்கு நாட்டம் இல்லை, அதனால் அறிந்து கொள்ள நினைக்கவுமில்லை.

அவரது குடும்பத்திலேயே முதலாவதாக பல்கலைக்கழகம் சென்ற பெண் இவர் தானாம், ஆனாலும் பெண் என்ற வகையில் படித்து முடித்தவுடன், வேலை இல்லாமல் திண்டாடியதாகவும் சொன்னார். வேலை தேடும் வேளையில் எல்லா வேலைத் தலங்களும்
WOMEN ARE NOT SUPPOSSED TO BE HERE என்ற வசனத்தையும்
WHY SHOULD WOMEN BE HERE? என்ற கேள்வியும் மட்டுமே கொண்டிருந்ததாகக் கூறினார் (சத்தியமாக இந்த சொட்பதங்கலையே சொன்னார்; இதே வசனம் இதே கேள்வி - நம்பித் தானாகனும், ஏனென்றால் அது தான் உண்மை....) இறுதியாக வந்த இடம் தான் அவர் கணவரது. இனிய காதல் கதை அது (அதைக் கேட்டு நீங்க மயங்கக் கூடாதே, ஆகையால் அது வேண்டாம்.) கல்யாணத்தின் பின்னர் அங்கே வேலை இல்லை (அது தான் அவர் கணவன் அலுவலகத்தில்). ஆனாலும் இவர் யார் பெண்ணுரிமை என்றே வாழ்பவராச்சே, வேலை செய்யாமளிருப்பாரா?
கடைசியாக ஒரு விடயம் (ஆண்கள் பாவம் அதனால சொல்கிறேன்..)
எப்படித் தான் பெண்ணுரிமைக்காக உழைத்தாலும், அவரின் கொள்கை நியாயமாக இருந்தது, ஏன் என்று கேக்கிறீங்களா? ஒரு வசனம் சொன்னார், என்ன என்று தானே கேக்கிறீங்க.............
இனி வரும் காலத்தில் எல்லா பெண்களும் வேலை செய்ய வேண்டும் ஆண்களுக்குப் பதிலாக அல்ல ஆண்களுக்கு சமனாக (இப்படித்தான சொன்னாங்க என்றீங்களா.......... இந்தக் கருத்துப் பட தான் எதோ ஆங்கிலத்தில் சொன்னாருங்க................)
இன்னும் நிறைய இருக்கு, அப்புறமாக சொல்கிறேனே...
பங்களாதேசத்தில் இன்று ஒரு முக்கிய நிகழ்வு ஆசிய பெண்கள் பல்கலைக்கழகவளாகத்தில் நடைபெற்றது. சிட்டகாங் (Chittagong) நகரத்தின் திறப்பு Cherie Blair க்கு வழங்கப் பட்டது. அதாவது "Key of the city Chittagong" - இந்த நகரத்தில் இவர் எல்லா உரிமைகளும் உடையவராக்கப்பட்டார் (ஏதாவது புரிகிறதா? - குழப்பிவிட்டேன் போல இருக்கிறது, பரவாயில்லை - முடிந்தளவு பின்னூட்டத்தில் விபரிக்கிறேன்.)

Saturday, January 9, 2010

இருந்தும் இல்லாமல்

உணர்வு நரம்புடையதாயினும்
உறவிலா இடத்தில்
இருந்தும் இல்லாமல்

உறவுகளுடன் பிணைந்த
உணர்வால் பிரிவென்பது
இருந்தும் இல்லாமல்

பிரிவென்பது உடலுடையதாயினும்
மனமிருக்கையில் கானல் நீர்
இருந்தும் இல்லாமல்

நான் ஏது நீ இன்றி
நீ ஏது நான் இன்றி
நீ இல்லாத நானும் நானில்லாத நீயும்
இருந்தும் இல்லாமல்

Thursday, January 7, 2010

நட்புக்குள் பொறாமை ஏது?

மொட்டை மாடியிலிருந்து அந்த நகரத்தையே ஆராய்ச்சி செய்வபவள் போல வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் புவி.அவளின் மன ஓட்டத்தில் எதோ ஓரிடத்தில் எதோ தடங்கள் ஏற்பட்டது போல "What the hell is going around me?" என்று கத்தினாள்.

எதை நினைத்து இப்படி ஓலமிட்டாள் என்று அவளும் அறிந்திருக்கவில்லை, ஆனால் ஏதோ ஒன்று அவள் மனதை நெருடிக் கொண்டிருப்பதை உறைந்தவள் முன்னையநாள் பிற்பகல் நடந்த நிகழ்வை நினைவுபடுத்த முற்படுகிறாள்.

அன்றும் வழமை போல வேலையை முடித்துவிட்டு தன்னிருப்பிடம் திரும்பியவள் திடீர் என்று நண்பிகளின் அறைக்கு விரைந்தாள் (அது அவளுடைய வழைமையும்
கூட). அங்கு நடைபெற்ற உரையாடல் அவளின் மனதை அழமாகப் பதித்தது.

"ஏனடி புவி நம்மகிட்ட இதை மறைத்தாள்," வேணியின் அழுகையுடன் கூடிய குரல் மூடியிருந்த கதவையும் தாண்டி ஒலித்தது.

சந்தியா ஏதோ சொல்லி முடிக்க "அப்படி என்ன மறைத்திட்டாள்? அப்படி மறைத்தாலும் என்ன? அவள் என் உண்ட Best friend ஓ? ஏன் அழுகிறாய்?" இது சந்தியாவின் பொன்னான வாயால் வந்த அற்புதமான வார்த்தைகள்.

அழுகையிலும் அவளுக்கு வந்த கோவம் அனைவரையும் சுட்டெரிப்பது போல் இருந்தது. ஏதாவது ஏசிவிடுவாளோ என்று ஒருகணம் எல்லாரும் திகைத்திருக்க, ஏமாற்றமே பதிலானது.

"சொன்னாலும் சொல்லாட்டிலும் புவி என் best firend தான்," என்று வேணியின் மனம் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

"அவள் யாரிட்டையோ கடன் எல்லாம் வாங்கினாளாமே, உனக்கு தெரியுமடி," என்கிறாள் இன்னொருத்தி.

"ஏன்டி இது என்ன அவளுக்கு புதுசா?" மறுபடியும் சந்தியா குறுக்கிட்டாள்.

புவிக்கு எதுவுமே விளங்கவில்லை. அவள் எப்போது யாரிடம் கடன் வாங்கினால் என்று யாருக்குமே புரியாத நிலையில் அந்த சுவரோரத்தில் அப்படியே இருந்துவிட்டாள்.
உரையாடல் நீண்ட நேரமாக நீடித்துக் கொண்டிருந்தது.அன்று அவள் நண்பிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது, அவர்கள் புவியைப் பற்றிப் பேசத் தொடங்கியிருந்தனர்.

அவளுக்கு அப்படி காசு வேண்டும் ஏன்டா அவள் நம்ம யார் கிட்டையாவது கேட்டிருக்கலாமே. என் கேக்கல்ல என்று கேட்டுவிடலாமா? என்றாள் வேணி.

"அவள் எப்படிக் கேட்பாள், அவள் தான் என்கிட்ட நிறையத் தாரம் வாங்கிட்டாளே, மறுபடியும் எப்படிக் கேக்கிறது எண்டு தான் ஜோதியிடம் வாங்கிட்டாள்," மறுபடியும் சந்தியா குறுக்கிடவே மௌனமானாள் வேணி.

அவள் சின்ன சின்ன களவு வேறை செய்கிறது மட்டுமில்லாமல் எங்களைப் பற்றி வேறை பிள்ளையளிடம் சொல்கிறாளாம் என்ற முறைப்பாடுகளும் புவி மீது சுமத்தப்படுகின்றது.
இனி எதையும் கேட்க முடியாதவள் தன் அறைக்கு திரும்பினாள் புவி. நேரம் எவ்வளவோ தாண்டியும் அறைக்கு வராத வேணிக்கு தவறிய அழைப்பு (Missed call) ஒன்றையும் போட்டுவிட்டு அவள் வரும் முன்னரே உறங்கிவிட்டாள்.

ஒருவாறாக எல்லாம் முடிய, இன்றைக்கு ஒரு வழி செய்ய வேண்டும் என்று முடிவுடன் வந்தால் வேணி. இவள் என்ன இப்பவே நித்திரை கொள்கிறாள் என்று நினைத்த வேணி "எழும்படி புவி, ஏன் இப்படி தூங்கிறாய்" என்று எதுவும் தெரியாதவள் போல எழுப்ப புவியின் தூக்கமும் கலைத்தது. ஆனால் எழுந்திருந்தாலும் அவள் எழுந்ததாகக் காட்டிக் கொள்ளவுமில்லை.
தூங்கிறவனை எழுப்பலான் தூங்கிற மாதிரி நடிப்பவனைத் தான் எழுப்ப முடியாதே, அது தான் இங்கேயும்.
பல நிமிடங்களின் பின்னர் எதுவுமே தெரியாதவள் போல எழும்பினாள் புவி. அருகில் அப்போதும் அவளுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேணி இருந்தாள். அவளைப் பொருள்ப் படுத்தாதவளாக மெல்ல குளியலறைக்கும் நுழைந்தாள் புவி.

"என்ன இவள் எதுவுமே கேண்டுக்காமல் போறாள்," இது வேணியின் புலம்பல். அந்தக் கசப்பான உரையாடலைக் கேட்ட பின் புவியால் வேணியுடன் வழமை போல பேச முடியவில்லை.ஆனாலும் செய்யாத குற்றங்களுக்குப் பலியாக அவள் விரும்பவுமில்லை. உரையாடலின் இடையில் புகுத்தப் பட்ட ஜோதி என்பவளை சந்திப்பதே முடிவாக முடியும் என்று புறப்பட்டாள்.

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல புவி அவளின் அறையை நீங்கவும் ஜோதி தென்பட்டாள்.
"Jhoti, I have to talk to you darling," என்றாள் புவி.
"Ok, sure dear. I also have come to discuss with you something, so what's up? You look awful," என்றாள் ஜோதி.
"Nothing da, but..." என்று இழுத்த புவியை இடைமறித்தாள் ஜோதி.
"But what?"
"Did I borrow something from you? I mean money or something,"
ஜோதி யோசித்துவிட்டு "Yep, Santhya borrowed for you."
"What are you saying, Jyoti? என்றால் புவி எதுவுமே தெரியாதவளாக.
"She said like that da," என்றவளை இடைமரித்தாளாள் புவி, "what did she say?"
"She said that you needed some money."
எதுவும் அறியாதவளாக "Ok, but I didn't get that money. Anyhow you will be given your money. Thanks da," என்று அவளிடமிருந்து விடைபெற்றாள்.

களவு என்றும் எதோ பேசப் பட்டது அவள் நினைவுக்கு வர அதைப் பற்றி ஆராய முனைதாள். அன்று ஒரு நாள் அவளும் சந்தியாவும் கணணியரையிலிருந்த பேனாவை எடுத்தனர் (அன்று என் பேனையை யாரோ எடுத்திட்டாள், so நான் இதை எடுக்கிறேன் என்று சந்தியா தான் எடுத்தாள்.)
வேறு ஒரு நாள், சந்தியா பசிக்கிறது என்று சொல்ல புவி தான் dining hall இலிருந்து biscuit எடுத்துக் கொடுத்தாள் (வழமையாக அவள் நண்பிகள் செய்வதைத் தான் அவளும் செய்தாள் என்பது சந்தியாவைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது.தனிமையில் யோசிக்கும் போது தான் புவிக்கு எல்லாமே ஞாபகத்துக்கு வந்தது. சந்தியா ஏன் இப்படி தன் நண்பிகளிடம் சொல்கிறாள் என்று.
ஜோதியிடமிருந்து காசு வாங்கிய விடயமோ, biscuit எடுத்த விடயமோ யாருக்கும் தெரியாக் கூடாது என்று சந்தியா சொல்லியிருந்ததை நினைவுபடுத்தினாள் புவி.
அதற்கான காரணம் இப்போது அவளுக்கு எல்லாமே புரிய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் புவி என்பவள் அந்த நண்பிகள் குழுவில் இல்லாத நேரம் சந்தியாவுக்கு வேணி தான் நெருங்கிய நண்பி. இப்போது புவி தன் இடத்தைப் பிடித்துவிட்டளோ என்ற பயம் சந்தியாவுக்கு வரவே அவர்களைப் பிரிக்க இந்த நாடகம்.
எல்லாவற்றையும் நினைக்க அவள் கண்ணிலிருந்து கண்ணீர் அருவியாகப் பாய்ந்தது.
"இதை எல்லாம் சொன்னால் யார் தான் நம்புவார்களோ," என்று வீரிட்டு அழுதாள் அந்த அப்பாவி.
யாரோ அழும் குரல் கேட்ட அவ்வழியே சென்ற ஜோதி மெல்ல எட்டிப் பார்த்தாள்.
விவரங்கள் யாவற்றையும் சொல்லி கதறிக் கதறி அழுதாள் புவி. அன்று முழுதுமே அறைக்கு வராத புவியைத் தேடி வந்த வேணியின் காதில் புவி சொன்ன அத்தனையுமே இடியாக விழுந்தது.
நேற்று புவி சந்தியாவின் அறைக்கு வந்த விடையத்தையும் ஊகித்துக் கொண்டவள், ஓடிவந்து புவியைக் கட்டி அணைத்தாள்.
தனக்கு மட்டுமே நெருங்கிய நண்பியாக இருக்க வேண்டும் என்ற சந்தியாவின் கற்பனை நனவாகவே முடியாமல் கானல் நீராகியது.

Tuesday, January 5, 2010

நாள்

நாள் என்றவுடன் என்னடா இவள் சொல்ல வாறாள் என்று நினைக்கிறீங்களா? சும்மா நாள் என்றவுடன் நினைவு வந்ததை சிறு வரிகளாக.........

அதிகாலை
சூரியனின் வருகையால்
ஒளி பெரும் நேரம்
நாளின் தொடக்கமாக.
நமக்குத் தான்
சிறிது சலிப்பு
எழும்பி அந்நாளை
தொடங்குவதற்கு...

மதியம்
விடுமுறை நாட்களின் அதிகாலை
கல்லூரி நாட்களின் நீண்ட நேரம்
குட்டித் தூக்கம் என்றென்றும் வரவேற்க
தூங்கலாம் கனி திறந்தே.

மாலை
சுகந்தமான காற்றுடன்
அளவான வெளிச்சம்
என்றென்றும்
பசுமையான நினைவுகளையே
மீட்க சுவையான நேரம்.

இரவு
வீட்டு வேலைகளின் நச்சரிப்புகள் தீர
கனவுலகுக்கு தாவ
நினைக்கும் மனங்களுக்கு
இதுவே மனநின்மதி
அவசரமான மறுநாளை எதிர் கொள்ள முன்...

Saturday, January 2, 2010

புதிய ஆரம்பம்

தவறுகள் திருத்தப் பட வேண்டியவை என்ற வகையில் தவறாக எடுக்கப் பட்ட என் முடிவை திருத்திக் கொள்ளலாமே என்ற முடிவுடன் இவ்வருட முதல்ப் பதிவு இதோ...
அனைவருக்கும் என் இனிய பிந்திய புதுவருட வாழ்த்துக்கள்.
இது இந்த வருடத்துக்கான முதல்ப் பதிவு மட்டுமல்ல இதுவே நான் பதிவு எழுதத் தொடக்கி ஒரு வருடம் கடந்து எழுதும் முதல்ப் பதிவு (இதை முதலே சந்தோசமாக கொண்டாடியிருக்கலாமோ?)

கலக்கலுடன் தொடங்கலாமே இந்த பதிவை..
உண்மை வடிவங்களை மாற்றும் கலை நம்மளுக்கு அத்துப்படி என்று சொல்லும் சிலர் இப்படி எல்லாம் சொல்றாங்களாம், வாசியுங்க.

1. தோடுடைய செவியின், இவன் யாருடைய பொடியன், காடுடைய சுடலை, இது யாருடைய படலை.
2. பாலும் தெளி தேனும் பாணும் பருப்புமிவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன், கோலம் செய், துங்கக் கருபுகத்துத் தூமகனே, சங்கக் கடைத் திறப்பைத் தா.
3. ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவர், கோபம் வரும் பொது மட்டும் தூசனம் பேசுவார்.

இதை நான் சொல்லவில்லை, யாரோ சொன்னாங்க, தட்டச்சு செய்தது மட்டுமே என்னது (நான் நல்ல பிள்ளைங்க; சொன்னால் நம்பவா போறீங்க..)

நம் வாழ்க்கையின் தொடக்கம் அம்மா, அவருடனேயே இந்த தொடக்கத்தியும் ஆரம்பிக்கலாமே என்று தான், அம்மாவுக்காக.

பாசத்தின் இருப்பிடம்
அன்னை என்ற பெயருடன்
ஆதரவாய் நமக்கு
இன்பத்தியே தரும் அவளுக்கு
ஈகை கடமியாகிறது
உதவியை மட்டுமே செய்து
ஊக்கிவிக்கும்
எல்லாமே நமக்காக
ஏனென்றே கேட்காமல்
ஐயமும் இல்லாமல்
ஒரு கதை பேசாமல்
ஓடி ஓடி செய்யும் அவளுக்கு
ஔவியம் கூட செய்வதில்லை சில பிள்ளைகள்.

பி.கு: "அவள்" என்ற சொற்பதம் கவிதைக்காக மட்டுமே.

Saturday, October 17, 2009

hostel இலிருந்து பார்

பார் காதலித்துப் பார் என்ற கவிதையை லோஷன் அண்ணா ஃபெயில் பண்ணிப்பார் என்று மாற்றி அமைத்ததைத் தொடர்ந்து ஆதிரை (கடலேறி) அண்ணா பல்கலை வந்து பார் என்ற தலைப்பைத் தத்துருவமாக வடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அண்ணா 3 A எடுத்துப்பார் என்ற தலைப்பிலும் சுபாங்கன் அண்ணா பதிவு எழுதிப்பார் என்ற தலைப்பிலும் எழுது கலக்கிவிட்டார்கள். இப்படியான திறமையான பதிவர்களின் வரிசையிலே நீயும் எழுதலாமே சிந்து (நீ திறமையானவலா என்ற கேள்வியை இங்கே கேக்க வேண்டாமே) என்று ஒரு சின்ன ஆசை. அது தான் உங்க......... சும்மா........





கவிப் பேரரசு வைரமுத்து தன பாவம் இந்தக் கவிக் கீல்கரசி கூட கவிதை எழுத வந்திட்டாலே என்று வாசித்து நொந்து போகாமல் இருக்கட்டும் என்பதற்காக இந்தக் கவிதையை இங்கே பிரசுரிக்கிறேன்..





hostel இலிருந்து பார்
உன் வாழ்க்கை
வட்டமே மாறியதை
உன்னுள்ளே
உணர்வாய்
எத்தனை பேர் இருந்தாலும்
நீ மட்டும்
சுதந்திரப் பறவையாய் உணர்வாய்
நீ சாதரணமானவளாக இருந்தும்
வானிலிருப்பதாய் உணர்வாய்
உன் நடத்தை உனக்கே வியப்பாய்த்
தெரியும்
வாழ்க்கையே புதிதாய்
உணர்வாய்

hostel இலிருந்து பார்
இனி எங்கு சென்றாலும்
வாழ்ந்துவிடலாம் என்பாய்
சந்தூச்த்தைக் கொண்டாட
நண்பிகளை அழைப்பாய்
நள்ளிரவில் நண்பிகளின்
குரலுக்காய் விளித்திருபபாய் - வரும் வரை
missedcall இடுவாய்
வந்துவிட்டால் தூங்கிவிடுவாய்
பல மாடிகள் தள்ளி இருந்தும்
ஒரே அறையில் இருப்பதாய் உணர்வாய்
நீயே வாழ்க்கையின் அதிஷ்டசாலி என்பாய்


சோகம் வரும் வரை
சந்தோசத்துக்காய் மட்டுமே
hostalகள் என்பாய்
இது என் மாடி வீடு என்பாய்
hostel இலிருந்து பார்

சந்தோசத்தில் மோதி மோதியே
உடைந்து போக
உன்னால் முடியுமா?

உண்மை நட்பை
புரிந்து கொள்ள வேண்டுமா?

குதுகலத்தின் உச்சத்தை

அடைய வேண்டுமா?

நண்பர்களே
வாழ்க்கையாக வேண்டுமா?

உன்னுள்ளே தன்னம்பிக்கை

பிறக்க வேண்டுமா?


hostel இலிருந்து பார்

homesick என்ற வார்த்தை மனப்படமாகும்

உன் மொழியில் கலப்படம் தெரியும்

உன் பேச்சில் கருத்துக்கள் மறையும்

சந்திப்புகள் மெல்ல மெல்ல சகயமாகும்

hostel இலிருந்து பார்


புதிய நட்புகளில் இணைந்து இணைந்தே

வாழ வேண்டுமா?
சண்டை சச்சரவுகளில் நுழைந்து நுழைந்தே
மீண்டு வர வேண்டுமா?


உனக்குப் பிரதியீடாக நீயே வேண்டுமா?

நண்பிகளை எதிரியாக்கவும்
எதிரிகளை நண்பிகளாக்கவும்
முடிய வேண்டுமா?


hostel இலிருந்து பார்
சின்னச் சின்ன சந்தோசங்களில்

மூழ்க முடியுமே
அதற்காகவேனும்
உன்னைப் பார்த்து முறைத்த பெண்ணின்
வாயிலிருந்து ஒரு hi வேண்டுமா
அதற்காகவேனும்
எதிரியும் உன்னுடன் உனக்காக
நடை போட வேண்டுமா
அதற்காகவேனும்

hostel இலிருந்து பார்
புதிய புதிய
அனுபவங்களில் நீ
இணைக்கப் பட வேண்ட
அதற்காகவேனும்
அழுதுகொண்டே சிரிக்கவும்
சிரித்துக்கொண்டே அழவும்
அதற்காகவேனும்
இன்ப துன்பங்களை
மாற்ற முடியுமே
அதற்காகவேனும்
hostel இலிருந்து பார்



சொர்க்கம் நரகம்

இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்



பி.கு: இக்கவிதை பொதுவாகப் பெண்களுக்கு, அதுவும் வெளிநாடு சென்று hostel இல் தங்கிப் படிப்பவர்களுக்கும் பெண்களுக்கு மிகப் பொருத்தமானது..

இதுவே என் கடைசிப் பதிவாகவும் இருக்கலாம்.. சில மாற்றங்கள், சில கஷ்டங்கள் இந்த பதிவுலகாலும் ஒரு பெண் என்ற வகையில்......

Saturday, October 10, 2009

சண்டைகள் இப்படியும் வரலாம்..


நேற்றுத் தான் தூயா அக்காவின் Farm Ville பற்றிய பதிவைப் படித்துவிட்டு, Farm Ville இப்படி பிரபலமாகி விட்டதா என்ற கேள்வியுடன் எனது விவசாயத்தை ஆரம்பித்தேன். இணையத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் புதிதாக நட வேண்டிய பயிர்களையும் நடாமல், அறுவடை செய்ய வேண்டிய பழங்களையும் அறுவடையும் செய்யாமல் கவலையுடன் திரும்பினேன்.

Farm Ville இல் என்ன முக்கியத்துவம் என்னவென்றால், எங்களுக்காக மட்டுமல்ல, நண்பிகளுக்கும் சேர்த்து தானே விளையாடுகிறோம். அவள் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் அவளுக்கு நேரம் இல்லை என்றால், அவளின் முகப்புத்தகத்தை நாமே திறந்து அறுவடை செய்யக் கூடத் தயங்குவத்தில்லை. இப்படியே சும்மா சின்னச் சின்ன சண்டைகள் Farm Ville வியாளையாடுபவர்களுக்கும் விளையாடாதவர்கலுக்கும் வருவது வழமை..
அப்படியே முடிந்துவிட்டும் என்று நினைத்த நாட்கள் போய். நேற்று சிறிய வாய்ப் பேச்சு, பெரிதாக்கி ஒரு பதினைந்து நிமிடங பேசாமல் இருக்கிற அளவு சண்டையாகிவிட்டது.
முகப்புத்தகத்தில் Farm Ville க்கு எதிராக குழு ஆரம்பித்ததே சண்டைக்குக் காரணமானது. நண்பிகள் எழ்வரில் இருவர் வேறு கட்டடத்தில் இருப்பதால் இரவு 12 மணிக்கு அப்புறம் எம்முடன் இருப்பதில்லை, அதனால நாங்கள் இவர் தான் கூடியிருந்தோம். Farm Ville இவரிடமும் இருந்தாலும் மூவர் மட்டுமே விளைய்டாடுவதுண்டு. அதனால் விளையாடாத இருவரும் சேர்ந்து தங்கள் குழுவின் பெருமைகளைப் பேச, நாங்கள் யார் சும்மா விடுவமா ஏட்டிக்குப் போட்டியாக பேச்சுகள் தொடர்ந்தன.
அவர்கள் சொன்னார்கள், வெட்டியாக முகப் புத்தகத்தில் இருந்து Farm Ville விளையாடி நேரத்தை நாங்கள் வீனாக்குகிரோமாம். நாங்கள் விடுவமா, அதுவும் நான், வழமையாகவே என் வாய் சும்மா இருக்காது, அதுக்குள்ளே இப்படி வர "உங்களளவு நாங்க படிக்கிறோம், அதே நேரத்தில் Farm Ville ஆயும் manage பன்னிரமே, நாங்கள் talented ஆனா ஆக்கள். நீங்களும் நாங்களும் ஒரே நேரம் தானே தூன்கிரம், படிக்கிறம், வீட்டு வேலை செய்கிறோம்," - இது நான். காரணம் எல்லோரும் ஒன்றாக படித்து ஒரே நேரம் தான் தூங்குவது வழமை. நான் சொன்ன இந்த வார்த்தை ஒருத்தியைக் காயப்படுத்தவே அவள் நான் சொன்ன அந்த "talented" என்ற சொல்லைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.
இது ஒரு படியாக இந்தப் பிரச்சனை முடிய...
அவர்கள் தொடங்கிறார்கள், Farm Ville விளையாடும் ஒருவரே எண்கள் குழுவில் அங்கத்தவர் என்று. அவள் விட்டப் அதில்லை, காரணம் அவளாக இந்தக் குழுவில் இணையவில்லையே, எங்களில் ஒருத்தி அவளது முகப் புத்தகத்தினைத் திறந்து அவளையும் அங்கத்தவராக்கிவிட்டாள். அவள் தொடங்கினால், 'நீ என்னுடைய முகப் புத்தகத்தைத் திறக்கலாம், ஆனால் எனக்கு விருப்பமில்லாத குழுவில் என்னை இணைத்தது கேவலம்." அவளை இந்தக் "கேவலம்' என்ற சொல் காயப் படுத்த அவள் ஆரைக்குப் போவதாகக் கிளம்பினாள், அவளும் இவளும் ஒரே அறை என்பதால் சண்டை சிறிதே நீடித்தது. காரணம் இருவரும் ஒன்றாகவே அறைக்குப் போக வேண்டும்.
அப்படியாக அவர்கள் இனி Farm Ville பற்றிக் கதைக்க மாட்டோம் என்ற முடிவைச் சொல்ல, நாங்கள் மூவரும் சந்தோசம் என்று ஒன்றாகவே சொல்ல, அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
பதினைந்து நிமிட அமைதியின் பின்னர், எங்களுக்குப் பசிக்கிது என்று தொடங்கினார்கள், எண்கள் மூவரிடமுமிருந்து எந்தப் பதிலும் கிடைக்காததால், இரவு சாப்பிடாமல் எடுத்து வைக்கப் பட்ட சாப்பாட்டை மெல்லத் திறந்தார்கள், நாங்கள் அசையவே இல்லை. இப்ப சாப்பிடப் போறீங்களா இல்லையா என்று ஒருத்தி தொடங்கினாள். ஒருவரை விட்டுவிட்டு எவருமே சாப்பிடுவது வழக்கமால. ஒருவர் சாப்பிடாவிட்டால் எல்லாரும் பட்டினி என்பதால், அவர்களுக்காகவே கொஞ்சமாவது எல்லோரும் சாப்பிடுவோம். சாப்பிட்டு முடித்தால், சண்டை மெல்லத் தனிய ஆரம்பித்தது. வேண்டாமடா இனி இதைப் பற்றியே கதைக்க வேண்டாம் என்று நினைத்து, தூங்கலாம் என்று முடிவெடுத்தோம்.
அவர்கள் இருவரும் தங்கள் அறைக்கு செல்லவே, நாங்களும் எங்கள் கட்டிலிலே தூங்க ஆரம்பித்தோம். ஒருத்திக்கு நித்திரை வரவில்லை என்று, மற்றவர்கள் இருவரையும் தூங்க விட்டாளா..........? இல்லவே இல்லை...
இப்படித் தான் ஒவ்வொரு நாளும் உறங்குவதற்கு 2, 3 மணி ஆகும்...
எப்படியோ.............. Farm Ville கூட எங்களுக்குள் சண்டை வரக் காரணமாகிவிட்டது. நல்ல வேலை அந்தக் கோபம் எல்லாம் பதினைத்து நிமிடங்கள் தான், இல்லை என்றால் ஒரு அறையில் அவர்கள் இருவரும், நாங்க மூவரும் கதைக்காமல் இருந்திருப்போமே........
வழமையாக இருவருக்கு ஒரு கட்டில், மூவருக்கு இருகட்டில் ஒன்றாகத் தான் போடப் பட்டிருக்கும், இனி எப்படி
நண்பிகள் யாவரும் ஒரே அறையில் வசிக்க வேண்டும் என்பதட்கால நாங்க போட்ட நாடகமே நாங்கள் மூவரும், அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கக் காரணமானது....
பேச்சு எச்சாகி சண்டையாகியது வியப்பானது, காரணம் இப்படிப் பல பிரச்சனைகள் நடந்தாலும், அதை நாங்க பெரிதாக எடுப்பதில்லை. ஆனால் இந்த Farm Ville இப்படி இரு பிரச்சினையக் கிளப்பும் என்று நாம் நினைக்கவே இல்லை...

பி.கு: படங்கள் எனது தோட்டத்தில் எடுக்கப்பட்டவை...