Monday, January 11, 2010

Cherie Blair உம் ஆண்களும்




என்னடா தலைப்பு கொஞ்சம் சிக்கலா இருக்கிறதே என்று நினைக்கிறீங்களா ? Cherie Blair உம் பெண்களும் என்று போட்டால் அது ஒரு விசயமே இல்லை என்று கண்டுக்க மாட்டீங்க என்ற பயம் தான்.

இந்த வருடத்தில் (சீ சீ என் வாழ்வில்) மறக்க முடியாத ஒரு நாளாக இன்று மாறியதே எதிர்பார்த்திராதது. எல்லாவற்றுக்கும் காரணம் அம்மணி Cherie Blair தான். மிக அருகில் ஒரு சந்தர்ப்பம், தவற விட மறுக்குமா நெஞ்சம். வாழ்க்கையில் சந்திப்புகள் சகஜமானாலும் சிலருடனான சந்திப்புகள் எப்போதுமே மனதில் நீங்காதவை. அப்படித் தான் இதுவும்.

எவ்வளவு தான் வயது வந்தாலும் இப்பவும் நல்ல இளமையாகவே இருக்கிறார் என்று சொன்னால் நம்புவீங்களா தெரியவில்லை (அவரை முதுமையாக தோற்றும் சில படங்கள் இணையத்தில் இருப்பதால் சொன்னேன்.) அவர் மட்டும் தான் இளமை என்றால் அவர் பேச்சு இருக்கிறதே அது இப்பவுமே சுறுசுறுப்பாகத் தான் இருக்கிறது.

Cherie Blair ஐ அறிமுகப் படுத்தும் போது distinguish என்று சொல்லி அறிமுகப் படுத்தியதால், எதோ மொழிகளில் பேதம் இல்லை என்று பேசுவாரோ என்று நினைத்தேன்; அவர் ஆண்கள் பெண்கள் என்ற பேதம் இல்லை என்று ஆரம்பித்தவர் தான் பெண்களின் முன்னேற்ற வழிகளையும் ஆங்காங்கே தன அனுபவங்களையும் பகிர ஆரம்பித்தார். பெண்களின் நிலைமைகளில் அதிகமாக நாட்டமுடையவர் என்று எனக்கு இப்ப தானே தெரிந்தது (என் அவரைப் பற்றிக் கேள்விப் பட்டதே இல்லையா என்று கேட்டால், உண்மையாகவே இது வரை காலமும் Cherie Blair மீது எனக்கு நாட்டம் இல்லை, அதனால் அறிந்து கொள்ள நினைக்கவுமில்லை.

அவரது குடும்பத்திலேயே முதலாவதாக பல்கலைக்கழகம் சென்ற பெண் இவர் தானாம், ஆனாலும் பெண் என்ற வகையில் படித்து முடித்தவுடன், வேலை இல்லாமல் திண்டாடியதாகவும் சொன்னார். வேலை தேடும் வேளையில் எல்லா வேலைத் தலங்களும்
WOMEN ARE NOT SUPPOSSED TO BE HERE என்ற வசனத்தையும்
WHY SHOULD WOMEN BE HERE? என்ற கேள்வியும் மட்டுமே கொண்டிருந்ததாகக் கூறினார் (சத்தியமாக இந்த சொட்பதங்கலையே சொன்னார்; இதே வசனம் இதே கேள்வி - நம்பித் தானாகனும், ஏனென்றால் அது தான் உண்மை....) இறுதியாக வந்த இடம் தான் அவர் கணவரது. இனிய காதல் கதை அது (அதைக் கேட்டு நீங்க மயங்கக் கூடாதே, ஆகையால் அது வேண்டாம்.) கல்யாணத்தின் பின்னர் அங்கே வேலை இல்லை (அது தான் அவர் கணவன் அலுவலகத்தில்). ஆனாலும் இவர் யார் பெண்ணுரிமை என்றே வாழ்பவராச்சே, வேலை செய்யாமளிருப்பாரா?
கடைசியாக ஒரு விடயம் (ஆண்கள் பாவம் அதனால சொல்கிறேன்..)
எப்படித் தான் பெண்ணுரிமைக்காக உழைத்தாலும், அவரின் கொள்கை நியாயமாக இருந்தது, ஏன் என்று கேக்கிறீங்களா? ஒரு வசனம் சொன்னார், என்ன என்று தானே கேக்கிறீங்க.............
இனி வரும் காலத்தில் எல்லா பெண்களும் வேலை செய்ய வேண்டும் ஆண்களுக்குப் பதிலாக அல்ல ஆண்களுக்கு சமனாக (இப்படித்தான சொன்னாங்க என்றீங்களா.......... இந்தக் கருத்துப் பட தான் எதோ ஆங்கிலத்தில் சொன்னாருங்க................)
இன்னும் நிறைய இருக்கு, அப்புறமாக சொல்கிறேனே...
பங்களாதேசத்தில் இன்று ஒரு முக்கிய நிகழ்வு ஆசிய பெண்கள் பல்கலைக்கழகவளாகத்தில் நடைபெற்றது. சிட்டகாங் (Chittagong) நகரத்தின் திறப்பு Cherie Blair க்கு வழங்கப் பட்டது. அதாவது "Key of the city Chittagong" - இந்த நகரத்தில் இவர் எல்லா உரிமைகளும் உடையவராக்கப்பட்டார் (ஏதாவது புரிகிறதா? - குழப்பிவிட்டேன் போல இருக்கிறது, பரவாயில்லை - முடிந்தளவு பின்னூட்டத்தில் விபரிக்கிறேன்.)

5 comments:

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்....

Sinthu said...

நன்றி...

கருணையூரான் said...

இவ யாரு இந்த இடம் எங்கை இருக்கு எல்லமே புதிசாதான் இருக்கு .....அவ சொன்ன நல்ல விசயத்தை பொறுக்கிடிங்க வாழ்த்துக்கள்

Sinthu said...

//கருணையூரான் said...
இவ யாரு இந்த இடம் எங்கை இருக்கு எல்லமே புதிசாதான் இருக்கு .....அவ சொன்ன நல்ல விசயத்தை பொறுக்கிடிங்க வாழ்த்துக்கள்//
உங்களுக்குத் தெரியாதா? கேட்டு சொல்றேனே....? (கேக்க வேண்டியாக்களிடம் கேட்டால் பதில் தானே வரும்.)

Sinthu said...

யாராவது சிரிச்ச திருப்ப சிரிக்கணும் என்பாங்க, அதனால.......
:)
வருகைக்கு நன்றி