Wednesday, January 13, 2010

காரணம்

காரணமில்லாமல்
காரியமோ மனிதனோ வாழ்க்கையோ
யாவுமே பொய்யடி என்றாள் அன்று
அதே காரணம் காரணமின்றி
இன்று

ஏன் எதற்கு எப்படி
என்று
கேள்வி கேட்டு வளர்ந்தும்
காரணம் ஏதும் தெரியாமல்
இன்று

எப்படி என்றாலும்
எதற்காக என்றாலும்
ஏன் என்றாலும்
மௌனமே பதில்
இன்று

எதிர்காலம் பற்றி
முன்னே திட்டமிடுபவள்
எதிர்காலமா?
அது என்ன என்கிறாள்
இன்று

இதற்கெல்லாம் காரணம் கேட்டால்
என்னிடமே காரணமா
என்ற வெறித்துக் கிடக்கும்
சிரிப்பு தான் மீதமாக
இன்று

காரணமில்லாத பலர்
காரணமில்லாத விடயங்கள்
காரணமில்லாத காரணிகள்
காரணமில்லாத சந்தர்ப்பங்கள்
காரணமில்லாத சந்திப்புகள்
யாவுமே
அவள் காரணம் சொல்லாமைக்கு
காரணம் இன்று

9 comments:

sathishsangkavi.blogspot.com said...

அழகான கவிதை

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Sinthu said...

நன்றி, உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

காரணம் தெரிய வரும்போது அதன் அர்த்தமும் புரிந்து விடும்..
நல்ல வார்த்தை விளையாட்டு..

Admin said...

எங்கேயோ போய்விட்டிங்க சிந்து....

பொங்கல் வாழ்த்த்துக்கள்...

கருணையூரான் said...

நீங்கள் எழுதிய காரணம் எனக்கு புரியவில்லை
ஆனால் எல்லாம் பன்மையிலே வருகிறதே அதுவா காரணம்..lol

தமிழ் said...

இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

பாத்திமா ஜொஹ்ரா said...

sweet

Admin said...

அனைத்து நண்பர்களுக்கும்
பொங்கல் வாழ்த்த்துக்கள்

Sinthu said...

//ரிஷபன் said...
காரணம் தெரிய வரும்போது அதன் அர்த்தமும் புரிந்து விடும்..
நல்ல வார்த்தை விளையாட்டு..//
நன்றி ரிஷபன்
காரணமில்லாமல் எழுதிய கவிதையின் அர்த்தம் புரிந்தென்ன பயன்.

நன்றி சந்ரு அண்ணா.

//கருணையூரான் said...
நீங்கள் எழுதிய காரணம் எனக்கு புரியவில்லை
ஆனால் எல்லாம் பன்மையிலே வருகிறதே அதுவா காரணம்..lol//
காரணமில்லாமல் எழுதிய கவிதைக்கு காரணத்தை எங்கு போனாலும் கண்டுபிடிக்க முடியாது.

இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் திகழ்.

//பாத்திமா ஜொஹ்ரா said...
sweet//
Thanks