Thursday, February 12, 2009

நம்பிக்கை...

எனக்கு நீண்ட நாளா இருக்கிற ஒரு சந்தேகம் உங்களால் முடிந்தால் தீர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்...

நம்ப நட, நம்பி நடவாதே என்று பெரியவர்கள் எல்லோரும் சின்ன பிள்ளைகளுக்கு சொல்வதைக் கேட்டிருப்பீங்க. ஏன் சிலர் உங்களைக் கூடச் சொல்லியிருப்பர்கள் (நீங்க சின்னப் பிள்ளைகளாக இருந்த போது). இது ஒரு பொருள் இல்லாத கருத்து என்பது என் கருத்து. நீங்க எப்படி..?
நான் இவ்வாறு கருதுவதற்கு என்னிடம் விளக்கம் இருக்கிறது....கொஞ்சம் கீழே போங்கோ....

*
*

*
*

*

*
*
*
*
*


வந்திட்டீங்களா .... எல்லோருக்கும் கணக்கு ( Maths/Math) கற்பிப்பது மாதிரி சொல்றேன் புரிந்து கொள்க.
A,B,C என்று 3 பேர். நம்பி நடவாதே என்பதன் படி, A என்பவர் B, C என்பவர்களை நம்ப மாட்டார். B என்பவர் C, A என்பவர்களை நம்ப மாட்டார். C என்பவர் A, B என்பவர்களை நம்ப மாட்டார். மொத்தத்தில் யாருமே யாரையும் நம்ப மாட்டார்கள். இதுக்குள்ள அவர்கள் எப்படி நம்ப நடப்பது.
என்ன நான் சொன்னது சரி தானே...
3 பேருக்கே இப்படி என்றால் உலகத்தில எத்தனை பேர் இருக்கிறாங்க. அப்பா........

இந்த நம்ப நட, நம்பிநடவாதே சொல்ற அதே பெரியவர்கள் தான் நம்பிக்கை தான் வாழ்க்கை என்றும் சொல்றாங்க. இதில் எதை நாங்க ( அது தான் என்னைப் போல இருக்கிற சின்னப் பிள்ளையால்) கடைப்பிடிப்பது....

பி.கு:உங்கள் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன. எதிர்க் கருத்துகளையும் நீங்கள் தரலாம். சரியாக இருந்தால் கடைப்பிடிக்க நான் தயார்..என்ன சொல்றீங்களா... எண்ணப் ஏச விரும்பிரார்ந்களும் ஏசலாம்....

12 comments:

கவின் said...

மிஸ்... நல்லாதான் படம் நடத்துறியள்...

கவின் said...

எனக்கு நீண்ட நாளா இருக்கிற ஒரு சந்தேகம் உங்களால் முடிந்தால் தீர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்...
************
ரொம்பத்தான் நம்பிக்கை... தீர்த்து வைக்க என்னாலை எல்லாம் முடியாதுங்க

Sinthu said...

"
கவின் கூறியது...
மிஸ்... நல்லாதான் படம் நடத்துறியள்...

February 13, 2009 12:15 AM


கவின் கூறியது...
எனக்கு நீண்ட நாளா இருக்கிற ஒரு சந்தேகம் உங்களால் முடிந்தால் தீர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்...
************
ரொம்பத்தான் நம்பிக்கை... தீர்த்து வைக்க என்னாலை எல்லாம் முடியாதுங்க"

ஐயோ எனக்கு எப்படிப் படிப்பிப்பது எண்டு தெரியாதே....
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்க விடை கிடைக்கலாம்.

NIRo said...

ondum velangala!!!!!!
teacher!!!!!!!!!

திவாகரன் said...

///இது ஒரு பொருள் இல்லாத கருத்து என்பது என் கருத்து. நீங்க எப்படி..?///


அன்று நம் பெரியவர்கள் எத்தனையோ நல்ல புத்திமதிகளைச் சொல்லி இருந்தாலும், அவற்றில் அநேகமானவற்றின் பொருள் நமக்குப் புரிவதில்லை..
அதற்காக பொருளற்றவைஎனக் கூறிவிட முடியுமா?

உதாரணத்துக்கு "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்"...... ????????????
இது சரிதானா?
ஒருவரின் தோற்றத்தைப் பார்த்து அவரின் உள்ளத்தை எடைபோடச் சொல்கிறார்களா நம் பெரியவர்கள்?
இது உண்மையெனில் என் முகத்தைப் பார்த்து எல்லோரும் பயந்து ஓடி விடுவார்கள்..

அதற்காக பழமொழிகள் பிழையென நாம் கூறுவது தவறு. ஆக அவற்றில் இருக்கும் நுண்ணிய கருத்துக்கள் நமது சிற்றறிவுக்குப் புலப்படுவதில்லை...

Sinthu said...

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றால் ஒருவர் ஒரு நேரத்தில் என்ன மன நிலையில் இருக்கிறார் என்பதை அவரின் முகம் காட்டுமாம் என்று தான் பொருளே தவிர ஒருவரின் மனதை அறிய முடியாது காரணம் மனித மனம் குரங்கு என்பார்களே எனவே அது நேரத்துக்கு நேரம் மாறிக்கொண்டு தான் இருக்கும்.. ஆனால் பழமொழி சொல்லும் கருத்து உண்மையே............
என் கருத்து இது
வேறு காரணம் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Sinthu said...

u will understand Niro...............

வதீஸ்வருணன் said...

இந்த வலை பதிவை பற்றி நான் அண்மையிலேயே அறிந்து கொண்டேன். நல்ல சந்தேகம். எமது முன்னோர்கள் கூறிய நல்ல ஒரு வாழ்க்கைக்கு உதவக்கூடிய தத்துவம். ஆனால் அறிந்தவரை இதற்கான விளக்கம் இதுதான் என நான் நினைக்கின்றேன். அதாவது "நம்ப நட" என்பதற்கு மற்றவர்கள் நம்பும் படியாக முதலில் நீ இருக்க பழகிக்கோ. அதாவது பேச்சோ அல்லது பழக்க வழக்கங்களாகவோ இருக்கலாம்."நம்பி நடவாதே" என்பதற்கு, இன்னும் ஒருவரை நம்பி நீ இருக்காதே அதாவது இன்னும் ஒருவருடைய தயவை நீ நம்பி இருக்க முற்படாதே, இதுதான் எமக்கு சிறிய வயதில் அந்த குறித்த தத்துவம் மூலம் பெரியவர்கள் கூறிய அறிவுரை.மற்றும்படி இது ஒரு பொருள் இல்லாத கருத்து என்பது முற்றிலும் தவறு.

Thusha said...

"என் முகத்தைப் பார்த்து எல்லோரும் பயந்து ஓடி விடுவார்கள்.. "


ஏன் அண்ணா பூந்தோட்டத்தில் உங்கலைப் பார்த்து ஒருத்தரும் ஓடின மாதிரி தெரியலையே ஒரு வேலை மலேசியாவிலா ஒடுரங்களா ..............

Sinthu said...

அண்ணா நன்றி..............
நல்ல விளக்கம்
புரிய வைத்தமைக்கு நன்றி....

Anonymous said...

k
i wil try

கீர்த்தனா said...

"NIRo கூறியது...
ondum velangala!!!!!!
teacher!!!!!!!!!"

நிறோவுக்கு கொஞ்சம் தெளிவாக படிப்பித்து விடுங்க சிந்து.....