ஒரு முறை மட்டுமே
உறங்கக் கூடிய
மெத்தை..
அது தான் கடவுள்
அதிக நாட்கள்
உறங்குவதற்கு
அனுமதித்தானோ....?
நாம் எண்ண முடியாத
அந்த நாட்களை
நம் உறவுகள்
எண்ணின நமக்காகவே
கனவுகள் காணத்
துடித்த காலம்
அந்த மெத்தையில்
உறங்கிய காலம்
கனவையே மறக்க
வைத்தது
நான் வாழ்ந்த
உலகம்
என்றென்றும் நன்றி
சொல்வேன் அந்த
மெத்தைக்கும்
அந்த சுகத்தைத்
தருவித்த
அன்னைக்கும்......
எதைப் பற்றி எழுதி இருக்கிறேன் என்று புரிகிறதா? புரிந்தால் சொல்லுங்க. புரியாட்டியும் சொல்லுங்க. பின்னூட்டலில் சொல்கிறேன்.
பி.கு: நன்றி சசீ அண்ணா. உங்கள கவிதையை வாசித்த பின்னர் தோன்றியதாலேயே எழுதினேன்.
6 comments:
புரிஞ்சா ஏன் இன்னும் பார்த்திட்டு இருக்கோம் ??????
என்ன பிரபா அண்ணா எவ்வளவு தெளிவாக சொல்லியும் புரியவில்லையா? நீங்க எங்க அதிகமாக நேரம் (காலம்) தூங்கினீங்க?
ஒரு முறை மட்டுமே
உறங்கக் கூடிய
மெத்தை..
அது தான் கடவுள்
அதிக நாட்கள்
உறங்குவதற்கு
அனுமதித்தானோ....?
அருமை
தாயின் கருவறைதான்
"
நிலாவன் said...
ஒரு முறை மட்டுமே
உறங்கக் கூடிய
மெத்தை..
அது தான் கடவுள்
அதிக நாட்கள்
உறங்குவதற்கு
அனுமதித்தானோ....?
அருமை
தாயின் கருவறைதான்"
சரியான பதில்....
"ஒரு முறை மட்டுமே
உறங்கக் கூடிய
மெத்தை..
அது தான் கடவுள்
அதிக நாட்கள்
உறங்குவதற்கு
அனுமதித்தானோ....?"
அழகாய் கற்பனைத்துள்ளீர்கள் சிந்து
யாரேனும் ஒருவரின் கவிதைக்கேனும் எனது கற்பனை அடித்தளமாய் இருந்ததை எண்ணினால் எனக்கும் மகிழ்ச்சிதான்.
இன்னும் எழுதுங்கள் சிந்து
இந்த தமிழுக்காய் எழுதுங்கள்.
தமிழைக் காதலிப்பதால் எழுதக் கூடியதாக உள்ளது சசீ அன்ன, இவை கவிதைகளா என்பதை neenka தான் சொல்ல வேண்டும்
Post a Comment