Wednesday, February 18, 2009

பெரியவராகக் கருதப்படுபவர்

நான் எழுதப் போவது வில்லங்கமான விடயமாகவே இருந்தாலும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.... யாராவது இவங்களுக்கு (அது தான் நான் சொல்லப்போறவங்களுக்கு) வேண்டப் பட்டவங்க இருந்தால், மன்னிக்கணும்....
எதோ சொல்ல வேண்டு என்று தோன்றியது... சில வேளைகளில் நான் பெண் என்ற காரணத்தினாலோ தெரியவில்லை....


உங்கள் நாட்டைத்

தாயக நினைத்து

சுதந்திரம் கேட்ட - நீங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு

தாயானவளை - ஒரு

பொருட்டாகவே கருதாதது....?

20 comments:

SASee said...

யார் மகானாக இருந்தாலும்
மனிதன்......!
ஒன்றுக்காய் உயிரையே
கொடுக்கும் ஒருவன்
அதே நேரம் அவன் இன்னொன்றை மறந்து விடுகிறான்.

ஒன்றை இழந்துதான்
இன்னொன்றை பெறமுடியும்
(இது பொருளியல் தத்துவம்)

என்ன செய்ய..? இது உலக நியதி

Kumky said...

குழப்பமாக இருக்கின்றது....
இது எதைப்பற்றி..?

Sinthu said...

"ஒன்றை இழந்துதான்
இன்னொன்றை பெறமுடியும்
(இது பொருளியல் தத்துவம்)

என்ன செய்ய..? இது உலக நியதி"
அதற்காக உண்மை நிலைமையை விட்டுக் கொடுத்து விட முடியாதே............

"
கும்க்கி கூறியது...
குழப்பமாக இருக்கின்றது....
இது எதைப்பற்றி..?"

அண்ணா உங்களுக்கே விளங்கவில்லையா அப்படி என்றால் யோசிக்கப் பட வேண்டிய விடயம் தான்.

Kumky said...

தேசம் முக்கியமா இல்லை வீடு முக்கியமா எனும்போது தேசமே முக்கியமென முடிவெடுத்திருப்பாரோ..

Kumky said...

எல்லாவற்றையும் பெண்ணிய கண்ணோட்டத்திலேயே பார்ப்பது சரிதானா எனவும் யோசிக்கவேண்டும் சிந்து.

Sinthu said...

அண்ணா என் பக்க நியாயத்தைச் சொல்லுவது என் கடமை அதே மாதிரி உங்க பக்கம் நியாயம் இருந்தா சொல்லுங்க...... நல்ல கருத்துக்களை வரவேற்ப்பது என் வழக்கம்............. என் மீது தவறு இருந்தாலும் கூட...

SASee said...

உண்மை அதுதான் என்றால்
மகானாக இருந்தாலும் அது பிழை தான்

இதை நான் என் அம்மாவின் பக்கம் இருந்து சொல்கிறேன்

Prapa said...

உங்க தத்துவம் மிக சரி .

Anonymous said...

எனக்கு உங்களுடைய ஈமெயில் விலாசத்தை அனுப்பி வைக்கவும்.
அருண்

kuma36 said...

1000 நல்லவங்களை காப்பாத்த ஒரு ஒரு நல்லவனை இழப்பதோ பறிகொடுப்பதோ தவறாக இருக்க முடியாது!!!

Sinthu said...

"SASee கூறியது...
உண்மை அதுதான் என்றால்
மகானாக இருந்தாலும் அது பிழை தான்

இதை நான் என் அம்மாவின் பக்கம் இருந்து சொல்கிறேன்"
நீங்க சொல்வது சரி..........

"
பிரபா கூறியது...
உங்க தத்துவம் மிக சரி ."
நன்றி பிரபா அண்ணா..

"கலை - இராகலை கூறியது...
1000 நல்லவங்களை காப்பாத்த ஒரு ஒரு நல்லவனை இழப்பதோ பறிகொடுப்பதோ தவறாக இருக்க முடியாது!!!"
உங்கள் கருத்தை வழி மொழிகிறேன் ஆனால் நீங்கள் சொல்வது வேறு நான் சொன்னது வேறு கலை அண்ணா.............

Sinthu said...

"Arun கூறியது...
எனக்கு உங்களுடைய ஈமெயில் விலாசத்தை அனுப்பி வைக்கவும்.
அருண்"

அண்ணா நீங்க எந்த அருண்............... எண்டு சொல்லுங்க........... தப்பாக நினைக்காதீங்க எனக்கு நிறைய அருண் அண்ணாக்கள் இருக்கிறார்கள் அது தான்.....

திவா said...

தாய்நாட்டிற்காக பலதியாகங்களைச் செய்து பலகொள்கைகளைக் கடைப்பிடித்து அறவழியிலே பலவற்றினை நடார்த்தி சாதித்துக்காட்டிய உலகமே வணங்கும் ஒரு தேசபிதா அவர் என்பதில் ஒருவித மாற்றுக்கருத்துக்களும் கிடையாது.
ஆனால் தனிப்பட்ட ஒரு மனிதராக அவரைப்பார்த்தால் அவர் ஒன்றும் உதாரணப் புருஷரோ அல்லது உன்னத மனிதரோ கிடையாது என்பது எனது கருத்து...
(இருந்தாலும் உலகமே உயர்ந்த உத்தமர் எனப் போற்றி வணங்கும் ஒருவரை அற்ப மனிதன் நான் விமர்சிப்பது நல்லதல்ல என்பதும் எனக்குப் புரிகிறது.. மன்னிக்கவும்)

Sinthu said...

தன்னைத் தானே தாழ்த்திப் பேச வேண்டாமே......... ஏன் உங்களை நீங்களே தாழ்த்த வேண்டும்...
திவா அண்ணா.......

Anonymous said...

சிந்து, நானும் சிந்தித்ததுண்டு.....

Sinthu said...

Good Keetha.........
சிந்திப்பதால் சீக்கிரமே முன்னுக்கு வந்திடுவீங்க. என்னைப் பாருங்க ஒரு சிந்தனையே இல்லாமல் ஏனோ தானோ என்று இருக்கிறேன்.

குமரை நிலாவன் said...

இரண்டு நாட்களாக யோசித்தேன்
இது எதை பற்றி என்று ....
புரிந்து விட்டது ...

"அவர் செய்தது தியாகம் "

அப்படி அவர் அவுங்களை ஒரு
பொருட்டாக நினைத்திருந்தால்
இந்தியா நிலைமை என்ன?


அகிம்சை என்ற வார்த்தையையே
யாரவது நினைவுப்படுத்த வேண்டும் .
இது என்னோட கருத்து

Sinthu said...

"
நிலாவன் கூறியது...
இரண்டு நாட்களாக யோசித்தேன்
இது எதை பற்றி என்று ....
புரிந்து விட்டது ...

"அவர் செய்தது தியாகம் "

அப்படி அவர் அவுங்களை ஒரு
பொருட்டாக நினைத்திருந்தால்
இந்தியா நிலைமை என்ன?


அகிம்சை என்ற வார்த்தையையே
யாரவது நினைவுப்படுத்த வேண்டும் .
இது என்னோட கருத்து"

மனைவியின் நிலைமையை மட்டும் நினைக்கச் சொல்லவில்லையே.........வேறு பல தலைவர்களும் இருக்கிறார்கள்............

குமரை நிலாவன் said...

இது சின்ன கிராமத்திலிருந்து
பெரிய நாடு வரை
இந்த பிரச்சினை இருக்கிறது
ஒருசிலர் மட்டுமே
சிறப்பிக்கப்படுகிறார்கள்
மற்றவர்கள் ஒரு பொருட்டாக
மதிக்கப்படுவதில்லை ....
உண்மைதான் ...

Sinthu said...

"
நிலாவன் கூறியது...
இது சின்ன கிராமத்திலிருந்து
பெரிய நாடு வரை
இந்த பிரச்சினை இருக்கிறது
ஒருசிலர் மட்டுமே
சிறப்பிக்கப்படுகிறார்கள்
மற்றவர்கள் ஒரு பொருட்டாக
மதிக்கப்படுவதில்லை ....
உண்மைதான் ..."
ஏழைகளின் சிறியவர்களின் கருத்துக்கள் சரியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை என்பது கசப்பான உண்மை தான். அந்த நிலை மாறாத வரை நம் நிலைமை இப்படியே தான்.