Saturday, September 19, 2009

காதல், அழகு, கடவுள், பணம் - நினைவில் இருப்பவை...

தொடர் பதிவு ஒருவகை உத்தி - காரணம், நம்மளை மாட்டி விடுபவர்களை நாம் மாட்டி விட எங்களுக்குக் கிடைக்கின்ற அறிய சந்தர்ப்பம். நான் இப்போ சொன்னது போல வழமையாக நான் தான் சதீஸ் ஐ வம்பில் மாட்டி விடுவேன், இப்போது அவர் என்னை மாட்டி விட்டுவிடர். அது தாங்க என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்ததே அந்தப் புண்ணியவான் தான்..

ஒருவர் கேட்டு அதை உடனே செய்யவில்லை என்றால் அவரது மனம் கஷ்டப் படுமே அது தான் பதிவை உடனேயே போட்டு விடலாம் என்று தொடங்கிவிட்டேன்..(உண்மையான காரணம் யாருக்குத் தெரியும் - புனித ரமழானின் காரணத்தால் பல்கலைக்கழகத்தில் ஏழுநாட்கள் விடுமுறை... அது தான் உடனேயே பதிவு போடுவதற்குக் நேரம் கிடைத்தது.)

காதல்

இந்த வார்த்தை தான் இந்த உலகம் முழுவதும் பரவி வாழ்கின்ற ஒன்று... யாரையாவது பார்த்து நீங்கள் காதலிக்கிறீர்களா என்றால் இல்லை என்பார்கள், இல்லை என்றால் ஆம் என்பார்கள்.. இல்லை என்பவர்களிடம் ஏன் நீங்கள் உங்களுடைய அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, தங்கை, தம்பி யாரையுமே காதலிக்கவில்லையா என்றால், அது வேறை இது வேறை என்பார்கள்.. திருமணம் என்று பார்க்கப் போனால், காதல் திருமணம் என்ற பெயரில் கல்யாணம் முடிந்து, அதற்கு அப்பால், சண்டைகளே வாழ்க்கையான பல யோடிகளைப் பார்த்திருக்கிறேன். அதை எல்லாம் பார்த்து காதல்த் திருமணம் செய்தால் இது தான் நிலை என்று சொல்பவர்களையும் பார்த்திருக்கிறேன்; ஆனால் என்னைப் பொறுத்த வரை இது காதலாகவே முடியாது, எதோ ஒரு ஈர்ப்பின் காரணமாக் ஒன்று சேர்ந்த யோடிகள், குடும்பம் என்று வரும் போது வருகின்ற கஷ்டங்களால், அன்பை விற்று விற்றுவிடுகின்றன.
காதல் எந்தக் காலகட்டத்திலும் அன்பால் மட்டுமே நிரப்பப்பட்ட ஒன்று, ஆனால் அதே அதிகமானால் எதிபார்ப்புகலாலேயே அருந்துவிடுக்கிறது (நிறையக் காதலர்களைப் பார்த்த பின் எடுக்கப் பட்ட முடிவு.)


அழகு
அழகாய் ரசிக்கலாம், ஆனால் அபகரிக்க நினைக்கக் கூடாது என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்; அது உண்மை தான். மனிதன் என்பவன் எவ்வளவு அழகாய் அடைத்திருந்தாலும் அதை விட அழகானதை அடைய வேண்டும் என்று நினைப்பவன், ஆனால் இயற்கையில் எவ்வளவு அழகான விடயங்கள் இருக்கின்றனவே, அதை சேமிக்க வேண்டும் என்று நினைத்ததே கிடையாது. எல்லா அழகையும் விட இயற்கையின் அழகே என்னை அதிகம் வசப்படுத்துவது, காரணமே இல்லாமல் இரசித்து அம்மாவிடம் ஏச்சு வாங்கிய நாட்கள் பல (எமிலாந்தாமல் நடந்து வா சிந்து என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள்.) இப்போதும் நண்பிகளிடமும் ஏச்சு வாங்குவதுண்டு.

கடவுள்
எம்மை மீறிய சக்தி, நமக்காகவே படைக்கப் பட்ட சக்தி, வாழ்க்கையின் பயங்கரத்தை உணர்த்தும் சக்தி...என்னைவிட அதிகமாக நம்புகின்ற ஒருவர் கடவுள் தான். எதற்காகவும் விட்டுக் கொடுக்காத ஒருவரும் அவரே.. கடவுள் ஒருவர் என்ற நோக்கத்துடன், எல்லா ஆலயங்களுக்கும் செல்வது என் வழமை. எல்லா விடயங்களையும் நான் பகிர்ந்து கொள்வதும் அவரே. அடிக்கடி நான் கேட்டவற்றைக் கொடுக்காவிட்டால் சின்னச் சின்ன சண்டைகளுடன் தொடர் கதையாக நிகழும். நான் தவறு செய்ததினால் தான் கடவுள் நான் கேட்டதைத் தரவில்லை என்ற நம்பிக்கையில் அவர் மீதான நம்பிக்கை இப்போதும் பெருகிக் கொண்டே செல்கிறது. எந்தக் கால கட்டத்திலும் அன்பு செலுத்தப் பட வேண்டியவர் என்று அடிக்கடி நினைப்பேன். எவெரேனும் கடவுளைக் குறை சொன்னால் அவர்கள் மேல் தான் தப்பு என்பதைப் புரிய வைப்பதில் முன்னிட்பேன்.

பணம்
இது இல்லாவிட்டால் எவ்வளவு பெரிய புண்ணியவானாக இருந்தாலும் வாழ முடியாது. பணமா குணமா என்று கேட்க்கப்படும் கேள்விக்கு அதிகமானவர்களின் பதில் பணமாகவே அமைகிறது. பணம் இல்லாத காரணத்தால் மட்டுமே பலர் பலரால் புறக்கணிக்கப் பட்டத்தை என் வாழ்நாளின் பல பாகங்களில் கண்டிருக்கிறேன். பணம் இல்லாததால் நான் அனுபவித்த துன்பங்களும் பல (இதானால் குணத்துக்கு நான் முன்னுரிமை கொடுக்கவில்லை என்று நினைக்க வேண்டாம் - எனக்கு இந்த இரண்டுமே வேண்டும் என்பது தான் உண்மை..)வாழ்க்கையின் எந்த மூளையையும் இது தட்டும் வரை மக்களிடையே பிரச்சனை தான். உறவுகள் பாசத்தால் இணைக்கப் பட்டவை என்று கூறுவதெல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதது (அதற்காக எல்லா உறவுகளையும் சொல்ல வரவில்லை...) இப்போதெல்லாம் சில உறவுகள் பணத்தை நம்பியே என்பது தான் உண்மை...

3 comments:

Subankan said...

காதல் - தெளிவாக் குழப்பறீங்க

அழகு - எனது கருத்தும் அதுதான்

கடவுள் - அவரவர் கருத்து, நம்பிக்கை. நோ கொமென்ட்ஸ்

பணம் - எனக்கும் ஏற்பட்ட அனுபவங்கள். ஆனால் பணத்தால் எதையும் அளவிடுபவர்கள் ஒருநாள் குணத்துக்குக் கட்டுப்படுவார்கள் என்பதும் அனுபவம்தான்.

Admin said...

காதல் => ம்ம்ம்ம்

பணம் விளக்கம் அருமை ஏழைகளை அழவைத்து பணக்காரன் கையில் இருந்து ஏழை படும் கஷ்டங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கின்றது இந்தப்பணம்.

Sinthu said...

சுபாங்கன் அண்ணா அவர்களே,,,,,,,,,,, எல்லாமே தானா வரித்து என்ன செய்யச் சொல்றீங்க... நீங்களும் பதிவெழுதனும்
தயாராகிடுங்க...


சந்ரு அண்ணா இது தான் வாழ்க்கை தந்த பரிசு, அனுபவம்
இரண்டுமே..