Saturday, February 28, 2009

சிந்திக்காதது...

உன் நடிப்பை

யதார்த்தம்

என்றெண்ணியது - என்

தவறாக மட்டுமே

இருக்க முடியும்

***************************

இல்லை இல்லை

நீயுமில்லை

நானுமில்லை

என்ற போதே

நினைத்திருக்க

வேண்டும் - நீ

ஒன்றுமில்லை

என்ற போது

சிந்தித்து என்ன

பயன்

இப்போது தான்

நாமுமில்லை

என்றாகிவிட்டதே....

Friday, February 27, 2009





ஏதாவது பதிய வேண்டும் என்று எண்ணிய போது தான் வலைத் தளத்தில் எடுத்த இந்த படங்களின் ஞாபகம் வந்தது...
எதோ போடலாம் என்று தோன்றியதால் தான் இந்தப் பதிவு...

சந்தேகம் ஒன்று வந்தது.. ( எல்லாவற்றையும் நம்பக் கூடாது என்று முடிவு எடுத்ததால் எல்லாம் சந்தேகமாவே இருக்கிறது...)
இதைத் தான் உயிருள்ள காதல் என்பார்களோ.........?
எனக்கு அனுபவம் இல்லாத காரணத்தால் தா இந்த சந்தேகம் என்று நினைக்கிறேன்...
தெரிந்தவர்கள் சொல்லவும்................

Thursday, February 26, 2009

மெத்தை.....

ஒரு முறை மட்டுமே
உறங்கக் கூடிய
மெத்தை..
அது தான் கடவுள்
அதிக நாட்கள்
உறங்குவதற்கு
அனுமதித்தானோ....?

நாம் எண்ண முடியாத
அந்த நாட்களை
நம் உறவுகள்
எண்ணின நமக்காகவே

கனவுகள் காணத்
துடித்த காலம்
அந்த மெத்தையில்
உறங்கிய காலம்

கனவையே மறக்க
வைத்தது
நான் வாழ்ந்த
உலகம்

என்றென்றும் நன்றி
சொல்வேன் அந்த
மெத்தைக்கும்
அந்த சுகத்தைத்
தருவித்த
அன்னைக்கும்......

எதைப் பற்றி எழுதி இருக்கிறேன் என்று புரிகிறதா? புரிந்தால் சொல்லுங்க. புரியாட்டியும் சொல்லுங்க. பின்னூட்டலில் சொல்கிறேன்.

பி.கு: நன்றி சசீ அண்ணா. உங்கள கவிதையை வாசித்த பின்னர் தோன்றியதாலேயே எழுதினேன்.

Tuesday, February 24, 2009

ஏமாற்றம்......

எனக்காக மற்றவர்கள்

என்பதை விட

மற்றவர்களுக்காக - நான்

என்பது
சந்தோசமானதே

மற்றவர்கள்

என்னைத் தப்பாகப்

பயன்படுத்தாத

வரை...



உறவுகள் ஏற்படுத்தப்

படுபவை தான்

பல உறவுகளை முறித்து

உருவாகும் உறவு

தேவையானது

தானா..?

Sunday, February 22, 2009

பெண்களின் பெயர்....

பெண்கள் தங்கள் பெயரின் பின் தங்கள் தந்தையின் பெயரைப் போடுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். இதை தப்பு என்றவர்கள் என் பக்கம். ஆனால் பெயருக்குப் பின்னால் போடுவது தப்பு இல்லை என்பவர்கள் உங்கள் பக்க நியாயத்தையும் சொல்லலாம்.


என்ன வாசிக்கிறீங்களா....?

அது வேறு ஒன்றும் இல்லை. எனக்கு வந்த சின்ன சந்தேகம் தான். சின்ன வயதில் அப்பாவின் பெயரை முன்னுக்கு போட்டு எழுதிய நான் காலப் போக்கில் எனது பெயரை முன்னுக்குப் போட்டதும் உண்டு (முதல் பெயரை முன்னுக்கு போட வேண்டும் என்று பலர் சொன்ன காரணத்தால்). அது தான் first name, surname எண்டெல்லாம் இருக்கே. அதன் பின்னர் சொந்தமாக சிந்திக்கத் தொடங்கிய போது அப்பாவின் பெயரையே முன்னுக்கு போடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்.

கல்யாணத்துக்கு அப்புறம் கணவனின் பெயரை பின்னுக்கு போடுவதில் எனக்கு எந்த எதிர்க் கருத்தும் கிடையாது.

இனி

என் கருத்துக்கு வரலாம்....

அப்பா என்பவர் இல்லாமல் மகள் என்பவள் ஒரு போதுமே பிறந்திருக்க முடியாது. அது மட்டும் அல்லது எமக்கு முன்பு பிறந்து, எமக்கு பிறப்பைத் தந்த ஒரு நன்றிக் கடனுக்காக நாம் அவரின் பெயரை முன்னுக்கு போடலாமே. எமக்கு என்று பல உறவுகளை ஏற்படுத்தித் தந்த உறவுகளில் அப்பா என்பவருக்கு ஒரு பெரிய பொறுப்பு இருந்தே தீருகிறது. கணவன் என்று பார்க்கும் பொது எமக்கு பின்னர் வந்து சேருகின்ற உறவு. அதுவும் ஒரு 25 or 26 வயதுக்கு அப்புறமாக வரும் உறவு ( இந்த வயதுக்கு முன்னர் கல்யாணம் செய்தவர்கள் அடிக்கக் கூடாது. நான் அப்பாவி பாருங்கோ).

அதனால் முன்பு வந்த உறவை முன்பும் பின்பு வந்த உறவை பின்னும் போடுவது தப்பு இல்லை என்று சொல்ல வாறன். நீங்கள் என்ன செய்ய வாறீங்கள் என்பது எனக்குத் தெரியாது..

உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள நான் தயார்.................... என் கருத்தில் இருக்கும் பிழைகளையும் சுட்டிக் காட்டலாம்..

வாங்கோ வந்து எசிப்போட்டாவது போங்கோ...

Friday, February 20, 2009

அன்புக் கவலை

அன்பால் மலர்ந்த

உறவு காதலாக

மட்டுமா இருக்கலாம்....

அண்ணன் தங்கை

உறவாகவும்

இருக்கலாமே.....


காரணம் இல்லாத - உன்

சந்தேகத்தால் - நம்

அன்பு அழிந்து

போகப் போவதில்லையே

நம் உறவை

முடிவெடுக்க

வேண்டியவர்கள்

நாம்................

நாம் மட்டுமாகவே

இருக்க முடியும்

உறவு என்பது

தப்பாகப் பயன்படுத்தப்

படாத வரை

நட்பு என்பது

வளர்ந்த வண்ணமே

இருக்கும்.............................

பி.கு: இது சும்மா கிறுக்கியது தான்............

Thursday, February 19, 2009

நீங்க இறக்கும் நாள் பார்க்க வேண்டுமா...?

என்ன இவள் இப்படி எல்லாம் சொல்றாளே என்று நினைக்கிறீங்களா?
அது வேறு ஒன்றும் இல்லை. சும்மா வலைத் தளங்களை உலவும் போது ஒரு தளம் கிடைத்தது என்று என் நண்பி தந்தது தான்........................
இதில் எந்த அளவு உண்மை என்று அறியேன். ஆனால் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதால் தருகிறேன் (எதையா? இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று....... இறப்பைக் கூட விடாமல் அதையும் கண்டு பிடிக்கிறாங்கப்பா..........) நான் பார்த்த வரைக்கும்
இந்த இறப்பு நாள் கணிக்கப்பட்டது தவறு. (உண்மையான சாவு நாள் இல்லை எண்டு தான் சொல்றேன் நம்புங்கப்பா..........)
அந்த தளத்தைப் பார்க்க விரும்பிறவங்க வாங்க

இதை நம்புங்க என்று சொல்லவில்லை................
இப்படி எல்லாம் ஏமாத்திறாங்க என்று சொல்ல வாறன்.............

ஒரு மனிதன் தன் வேலையையே பார்க்கவே நேரம் இல்லையாம் இவங்களுக்கு எப்படித் தான இப்படி எல்லாம் நேரம் கிடைக்கிதோ...........?

Wednesday, February 18, 2009

பெரியவராகக் கருதப்படுபவர்

நான் எழுதப் போவது வில்லங்கமான விடயமாகவே இருந்தாலும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.... யாராவது இவங்களுக்கு (அது தான் நான் சொல்லப்போறவங்களுக்கு) வேண்டப் பட்டவங்க இருந்தால், மன்னிக்கணும்....
எதோ சொல்ல வேண்டு என்று தோன்றியது... சில வேளைகளில் நான் பெண் என்ற காரணத்தினாலோ தெரியவில்லை....


உங்கள் நாட்டைத்

தாயக நினைத்து

சுதந்திரம் கேட்ட - நீங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு

தாயானவளை - ஒரு

பொருட்டாகவே கருதாதது....?

Monday, February 16, 2009

மசாலா....8

வார்த்தை
வார்த்தைகளின்
வலிமை தெரிந்த நீயா
வார்த்தைகளைத் தூவினாய்
இடியாக.....

கடதாசி
என்னுடன்
பேச தயக்கமானால்
எழுதி இருக்கலாமே
வெற்றுக் கடதாசியாகவாவது

Saturday, February 14, 2009

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்..




என்னை பொறுத்த வரை ஒரு பொண்ணு ஒரு ஆணைக் காதலிப்பது தான காதல் என்று இல்லை. நாம் இயற்கையைக் கூடக் காதலிக்கலாம் என்பது என் கருத்து ( யாராவது எதிர்க் கருத்து வைத்திருந்தாள் சொல்லுங்க)

அதை விடுங்க காதலிப்பவர்களுக்கும் காதலிக்காதவர்களுக்கும் என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்......

பி.கு: நண்பர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் சொல்லலாம் என்பதை என் ஆசிரியர்களிடமிருந்து அறிந்து கொண்டாதால் இந்தப் பதிவு....

...வாழ்த்துக்கள்...
பி.கு 2: காதலர் தினம் என்றாலே சிவப்பும் இளஞ்சிவப்பும் தானாம் என்று என் பிரிய வானொலி வெற்றியில் கேட்ட ஞாபகம் அது தான் எல்லாம் அந்த நிறங்களிலே தரப்பட்டுள்ளன.

Thursday, February 12, 2009

நம்பிக்கை...

எனக்கு நீண்ட நாளா இருக்கிற ஒரு சந்தேகம் உங்களால் முடிந்தால் தீர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்...

நம்ப நட, நம்பி நடவாதே என்று பெரியவர்கள் எல்லோரும் சின்ன பிள்ளைகளுக்கு சொல்வதைக் கேட்டிருப்பீங்க. ஏன் சிலர் உங்களைக் கூடச் சொல்லியிருப்பர்கள் (நீங்க சின்னப் பிள்ளைகளாக இருந்த போது). இது ஒரு பொருள் இல்லாத கருத்து என்பது என் கருத்து. நீங்க எப்படி..?
நான் இவ்வாறு கருதுவதற்கு என்னிடம் விளக்கம் இருக்கிறது....கொஞ்சம் கீழே போங்கோ....

*
*

*
*

*

*
*
*
*
*


வந்திட்டீங்களா .... எல்லோருக்கும் கணக்கு ( Maths/Math) கற்பிப்பது மாதிரி சொல்றேன் புரிந்து கொள்க.
A,B,C என்று 3 பேர். நம்பி நடவாதே என்பதன் படி, A என்பவர் B, C என்பவர்களை நம்ப மாட்டார். B என்பவர் C, A என்பவர்களை நம்ப மாட்டார். C என்பவர் A, B என்பவர்களை நம்ப மாட்டார். மொத்தத்தில் யாருமே யாரையும் நம்ப மாட்டார்கள். இதுக்குள்ள அவர்கள் எப்படி நம்ப நடப்பது.
என்ன நான் சொன்னது சரி தானே...
3 பேருக்கே இப்படி என்றால் உலகத்தில எத்தனை பேர் இருக்கிறாங்க. அப்பா........

இந்த நம்ப நட, நம்பிநடவாதே சொல்ற அதே பெரியவர்கள் தான் நம்பிக்கை தான் வாழ்க்கை என்றும் சொல்றாங்க. இதில் எதை நாங்க ( அது தான் என்னைப் போல இருக்கிற சின்னப் பிள்ளையால்) கடைப்பிடிப்பது....

பி.கு:உங்கள் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன. எதிர்க் கருத்துகளையும் நீங்கள் தரலாம். சரியாக இருந்தால் கடைப்பிடிக்க நான் தயார்..என்ன சொல்றீங்களா... எண்ணப் ஏச விரும்பிரார்ந்களும் ஏசலாம்....

Wednesday, February 11, 2009

வார்த்தை

வார்த்தைகளின்
வலிமை தெரிந்த நீயா
வார்த்தைகளைத் தூவினாய்
இடியாக.....

உன் வார்த்தைகளால்
காயப் பட்டவளில்
நானும் ஒருத்தி
அதிகமாக
காயப்படுத்தப்பட்டவள் - நான்
ன்பதால் தப்பித்தாய்

என் வார்த்தை உன்னைக்
காயப்படுத்தியதாய்
சொன்ன நீ
உன் வார்த்தைகளால்
என்னைக் காயப்படுத்தி இருக்க
வேண்டியதில்லையே...

Tuesday, February 10, 2009

மசாலா....7

தவறு

நீ நினைத்ததை - நான்
புரிந்துகொள்ளவில்லை

என்பதற்காக
கோபித்துக் கொண்ட - நீ

நான் சொன்னதையே
புரிந்துகொள்ளவில்லையே

செலவு

அதிக செலவாளியாகிவிட்டேன்

என்று சொல்லும் - நீ

எப்படி, எதற்காக

செலவழித்தாய்

என்று சிந்தி

மனிதனாவாய்....
வாழத் தகுதியுடையவளாவாய்

குடும்பத்துக்கு உரியவலாவாய்

Monday, February 9, 2009

மசாலா.......6

பணம்
உன் பணத்தால்
எதை வாங்கிவிடலா
என்று நினைக்கிறாயோ
அது என் கையில்
பணத்திற்காக
வாழ்பவளல்ல - நான்
வாழ்வதற்காக
சம்பாதிப்பவள்

வாழ்
வந்தது வந்துவிட்டது
என்று நினைக்கிறாயா
எதற்காக வந்தது என்று
சிந்தி
நடந்தது நடந்துவிட்டது
என்று நினைக்கிறாயா
எதற்காக நடந்தது என்று
சிந்தி

Sunday, February 8, 2009

மசாலா.....5

நண்பியா/எதிரியா...

உணர்வுகளின் உன்னத

இடத்தை அடையாவிட்டாலும்

உணர்வுகளை

மதிக்க கற்றுக்கொள்....

அன்பு

விலகி இருப்பதால்

விலகிவிட்டேன் என்று நீ

நினைத்தது தவறு......

நீ

என்னைப் பற்றித்

தெரிந்துமா - என்

மீது கோவப்பட்டாய்

கேட்டிருந்தால்

விளக்கத் தயாராக

இருந்தேனே

இன்றும் காரணம்

தெரியாதவளாக

வாழ்க்கை

காண்பதெல்லாம்

கனவாகி இருந்தால்

கனவுலக தேவதையாகியிருப்பேன்

நனவாகின சில

அதனாலே இங்கே.....

Saturday, February 7, 2009

சங்கீதம்

உன்னால் மட்டும் - என்
மனநிலையைப்
புரிந்துகொள்ள முடிகிறதே
எப்படி...........?

என்னாலேயே
சமாதானப் படுத்த என்னை
கட்டிப் போடும் - நீ
சதாரணவளாக
இருக்க முடியாது.

தனிமையைப் புரிய வைத்த
அற்புத உறவு
அழுகைக்கு ஓய்வு தந்த
ஆலோசகர்
உணர்வுகளைப் புரிய வைத்த
ஆசான் நீ மட்டுமே..

சிறிய தவறுகளையே
பெரிதாக - நீ
காட்டியதால்
தவறுகளைத்
தவிர்த்துக் கொண்டேன்..

வாழ்க்கையை
நெறிப் படுத்திய
உன் சுருதி, நாதம்
என்றென்றும் என்னுடன்......

Friday, February 6, 2009

மசாலா......4

நான்
நினைவுகளுடன்
மட்டுமே வாழும் - நான்
நினைவாகவே இருந்திருந்தால்..

சாதனை
கனவுகளில்
தோற்ற - நீ
வாழ்க்கையை
வென்றது
வரலாறே...

அனுபவம்
ஆசானை விட
அதிகம் கற்பித்தது - நீ
காரணம்
நேரம் ஒதுக்க
வேண்டியதில்லை
உன்னிடமிருந்து
கற்றுக் கொள்வதற்கு...

Thursday, February 5, 2009

மசாலா.......... 3

கவிதையின்

வரைவிலக்கணத்தைக்

கவிதையாகவே

சொன்ன - நீ

ஒரு கவிதை

****************************
கனவிலே நான்

கண்ட நனவு

நனவிலே

கனவானகிறது

*****************************

என் கண்ணீரைத்

துடைக்க - நீ

சொட்டிய கண்ணீர்

என்றென்றும்

நன்னீராக..

****************************

எந்த மொழியையும்

புரிந்து கொள்ளாத - நான்

உன் மௌன மொழியைப்

புரிந்து கொண்டதால்

காதலியாக.....

Wednesday, February 4, 2009

எல்லாரும் சேர்ந்து சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோமா?





என்ன அப்படி பாக்கிறீங்க..  
இன்று இலங்கையின் சுதந்திர தினமாம்.. உண்மையா?  

நம் நாட்டிலேயே  
அந்நியராக்கப்பட்ட  
அடிமைகள்...  

அங்கே சகல  
மரியாதைகளுடன்  
நடப்பது...?  
ஏதோ சுதந்திர தினமாம்  
சொல்கிறார்கள்..  

ரத்த வெறியுடன்  
கொண்டாடப்படுவது 
தான் சுதந்திர தினமோ...
 
இரத்தம் குடித்து,  
இன்னொருவனின்  
துன்பத்தில் வாழ்வது  
ஒரு வாழ்க்கை....  

சாபங்களின் மத்தியில்  
போலியான வாழ்க்கை  
எத்தனை நாட்களுக்கு...  

வெள்ளைக்காரனை  
விரட்டினார்களாம்  
சுதந்திரம் கிடைத்ததாம்  
சமூகக் கல்வி படித்திருந்தால்  
மட்டுமே  
அறியக்கூடிய நிலையில்  
நம்மவர்கள்  
ஒருபோதும் சுதந்திரமாக  
இருக்கவில்லை அவர்கள்....  

இனியாவது கிடைக்குமா  
சுதந்திரம்  
நாமும் கொண்டாட....



Monday, February 2, 2009

பிரியம்


தாய் மண்/அம்மா

விலகினால் அன்பு  
கூடும் என்ற போது  
புரியவில்லை அன்று  
விலகியதால் புரிகிறது இன்று.

பிரியும் பிரியம் 
பிரியும் போது புரியும் 
என்றவரைப் பார்த்து 
சிரித்த என்னைப் பார்த்து
சிரிக்கும் பலர்......
 
பிரிவுக்கு முற்றுப்புள்ளி 
வை என்ற கணத்தில்  
பிரிவு நமக்கு  
முற்றுப்புள்ளி வைத்தது 
ஏன்....?  

அன்று எனக்காக அழ
ஆயிரம் உறவுகள் 
இன்று 
பல உறவுகளுக்காக  
நான் அழுகிறேன்

Sunday, February 1, 2009

மசாலா ......2

பனித்துளி மழைத்துளி 
இரண்டையும் ரசிக்க 
கண்ணீர்த்துளி மட்டும்
தனிமையிலா..?
                                                   
                                                                

                                                                              
அக்கம் பக்கம் யாருமில்லை
நிசப்தமே பரவிய 
அதிகாலைப் பொழுது
தென்றலின் ஓசை நாதமாக
நிசப்தத்தைக் கலைத்திடுமோ..?


                                                                        
கானல் நீரையே 
பார்த்து வளந்த உனக்கு
எல்லாமே 
பாலைவனம் தானடி....