வைரமுத்துவின் ஒரு கவிதை கேட்ட பின் மரத்தைப் பற்றி என்ன எழுதலாம் என்று யோசித்தே, வைரமுத்துவுக்கும் என்றைக்கும் மனிதனை விட மரங்களை விருப்பமோ என்னவோ, மரத்துக்கு சார்பாக எழுதலாம் என்று நினைத்தேன். எல்லா பாகங்களுமே மனிதனை விட சிறந்ததாகவே இருக்கிறது மரத்துக்கு என்பதைப் புரிந்தும் கொண்டேன்.
வேர்
தன்னை எல்லோரும்
பார்க்கவேண்டும் என்று
மனிதன் போல்
வேர் நினைத்தால்
சோலைகளும்
பாலைவனங்களாக
கிளை
மனிதன் போல்
தங்களுக்கு
முந்தியடித்துக் கொண்டாலும்
பிறருக்கு நிழல் தருவதற்கே
மனிதன் போல் தன்னை உயர்த்தவல்லவே
இலை
மனிதன் போலல்லாது
இளமையிலும் முதுமையிலும்
அழகாக இருக்கும் இலை
இறக்கும் போதும்
மரண ஓலம் இல்லாமல்
காய்
கனியிருக்கும் மரங்களில்
தனக்கு மதிப்பில்லை
என்ற போதும்
தன்னை அழிக்காது
உருமாறும் உதவியாளி
(அடிச்சு சாப்பிடும் மாங்காய் தான் சுவை மாம்பழத்தை விட என்று சொன்னால், அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை)
கனி
அரியது
மனிதனின் நற்குணங்கள் போல்
இனியது
அறுசுவைகளில் ஒன்றாக
தப்பினால் குப்பையில்
வேண்டாப்பொருளாக
12 comments:
ம்..வாசித்தேன்
ரொம்ப நன்றி
அட!! என்ன அழகான சிந்தனை!!
சிந்துவுக்கு மட்டும் எப்ப்டி இப்படி கருத்துள்ள கவிதைகள்!!...
ரொம்ப நன்றி..
என்ன அண்ணா நக்கலா? சும்மா எழுதினேன்.
நல்லா இருக்கு,,,,மற்ற பதிவுகளும்
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
சிந்து சரியாதான் சொல்லுறீங்க... எந்த மரமாவது இன்னொரு மரத்த லவ் பண்ணுதா.. இந்தமனுசந்தான் அப்டியொரு அநியாயத்த பண்ணுறான்...
மொத்ததில மரம் ஸ் பெட்டர் தான் மனுஷன். பட் மரத்துக்கு சிந்துமாதிரி பதிவெழுததெரியாது என்ன.. அதுல கூட மரம் மத்தவங்கள கஷ்டபடுத்தேல பாத்தீங்களா..
உண்மை தான், எல்லா விடயங்களிலும் மரம் தான் உயர்ந்தது.
//பட் மரத்துக்கு சிந்துமாதிரி பதிவெழுததெரியாது என்ன.. அதுல கூட மரம் மத்தவங்கள கஷ்டபடுத்தேல பாத்தீங்களா..//
மரத்துக்கவது வைரமுத்து சிந்து என்று சிலர் இருக்கிறார்கள், ஆனால் இந்த சிந்துவுக்கு யாருமே இல்லையே, மற்றவர்களை கஷ்டப் படுத்துவதாலோ? LOLzzzzzzzzzzz
இப் என்னங்க உங்க பேருல ஒரு பதிவு வேணுமோ எழுதிட்டா போச்சு.. தலைப்பு "வங்காளத்தில் ஒரு சிந்தாமணி". தலைப்ப யாரும் காப்பி அடிச்சிடாதீங்க..
நன்றாக இருக்கிறது
நல்ல இருக்கிறது பிடிக்கல்லையா அஷ்வின்.
நன்றி வதீஸ் அண்ணா...
Post a Comment