Friday, February 6, 2009

மசாலா......4

நான்
நினைவுகளுடன்
மட்டுமே வாழும் - நான்
நினைவாகவே இருந்திருந்தால்..

சாதனை
கனவுகளில்
தோற்ற - நீ
வாழ்க்கையை
வென்றது
வரலாறே...

அனுபவம்
ஆசானை விட
அதிகம் கற்பித்தது - நீ
காரணம்
நேரம் ஒதுக்க
வேண்டியதில்லை
உன்னிடமிருந்து
கற்றுக் கொள்வதற்கு...

5 comments:

துஷா said...

வாழ்க்கை என்பது போராட்டம் அதில் நீ வெற்றி பெற்றால் சாதனை தோற்றுப்போனால் அனுபவம்

சாதனைகள் உன்னை வெளி உலகிற்க்கு அழைத்துச் செல்லும் ஆனால் அனுபவங்கள் தன் உன்னையும், வெளி உலகையும் உனக்கே உணர்த்திச் செல்லும்

குமரை நிலாவன் said...

அனுபவம் அருமை
சில நேரங்களில் அனுபவப்பாடங்கள்
மதிக்கப்படுவதில்லை .

இது என்னுடைய கருத்து.

Anonymous said...

நினைவுகளுடன்
மட்டுமே வாழும் - நான்
நினைவாகவே இருந்திருந்தால்

அருமய்
நல்ல இருக்கு

Sinthu said...

"அனுபவங்கள் தன் உன்னையும், வெளி உலகையும் உனக்கே உணர்த்திச் செல்லும்"
துஷா அக்கா என்னுடன் கூட இருந்துமா இப்படிச் சொல்றீங்க....

உங்கள் கருத்து வரவேற்கத் தக்கது.. காரணம் அது தான் உண்மை...

நன்றி நிரோ..

Anonymous said...

ஆசானை விட
அதிகம் கற்பித்தது - நீ
காரணம்
நேரம் ஒதுக்க
வேண்டியதில்லை
உன்னிடமிருந்து
கற்றுக் கொள்வதற்கு...

அனுபவம்.....
அருமையாக உள்ளது சிந்து!!!!!