Monday, February 2, 2009

பிரியம்


தாய் மண்/அம்மா

விலகினால் அன்பு  
கூடும் என்ற போது  
புரியவில்லை அன்று  
விலகியதால் புரிகிறது இன்று.

பிரியும் பிரியம் 
பிரியும் போது புரியும் 
என்றவரைப் பார்த்து 
சிரித்த என்னைப் பார்த்து
சிரிக்கும் பலர்......
 
பிரிவுக்கு முற்றுப்புள்ளி 
வை என்ற கணத்தில்  
பிரிவு நமக்கு  
முற்றுப்புள்ளி வைத்தது 
ஏன்....?  

அன்று எனக்காக அழ
ஆயிரம் உறவுகள் 
இன்று 
பல உறவுகளுக்காக  
நான் அழுகிறேன்

24 comments:

Anonymous said...

//அன்று எனக்காக அழ
ஆயிரம் உறவுகள்
இன்று
பல உறவுகளுக்காக
நான் அழுகிறேன்//
:)

Prapa said...

நாங்கெல்லாம் இருக்கிறோமில்ல ........

குமரை நிலாவன் said...

கவலை வேண்டாம்மா ...

இந்த நிலையும் மாறிவிடும்..

Sinthu said...

என்ன கவின் அண்ணா ஒரே குறியீடாவே இருக்கு..

என் மீதான அக்கரைக்கு என்றும் கடமைப் பட்டவலாக்..சிந்து
நன்றி பிரபா அண்ணா..


நன்றி நிலவன் அண்ணா. ஆனால் மாறும் மாறும் என்று சொல்லியே ஏமாற்றப்பட்டவர்கள் நாங்கள்..

கார்க்கிபவா said...

/நன்றி நிலவன் அண்ணா. ஆனால் மாறும் மாறும் என்று சொல்லியே ஏமாற்றப்பட்டவர்கள் நாங்க//

நெஞ்சை பிழியும் உண்மை.. என்ன சொல்வது? புரியாமல் நிற்கிறோம்.

Sinthu said...

Yes u r correct karki anna...
thanks for ur coming...(After long time)

தேவன் மாயம் said...

விலகினால் அன்பு
கூடும் என்ற போது
புரியவில்லை அன்று
விலகியதால் புரிகிறது இன்று///

போகப்போக நிறைய புரியும்..

தேவன் மாயம் said...

பிரிவுக்கு முற்றுப்புள்ளி
வை என்ற கணத்தில்
பிரிவு நமக்கு
முற்றுப்புள்ளி வைத்தது
ஏன்....? //

விதி...

தேவன் மாயம் said...

அன்று எனக்காக அழ
ஆயிரம் உறவுகள்
இன்று
பல உறவுகளுக்காக
நான் அழுகிறேன்///

அழவேண்டாம்!!
பொறுமையுடன் இரு..

Anonymous said...

கவிதை நல்ல இருக்கு சிந்து
தாய் மண்ணைப் பிரிந்ததை விட அங்கு நடக்கும் விடயங்களே அதிக வேதனையை ஏற்படுத்துகின்றது அடுத்தது என்ன நடக்கும் என்று ஆண்டவனுக்கும் தெரியவில்லை போலும்

தமிழ் மதுரம் said...

அன்று எனக்காக அழ
ஆயிரம் உறவுகள்
இன்று
பல உறவுகளுக்காக
நான் அழுகிறேன்//

ஏக்கங்களின் பிரதிபலிப்புக்களோடு வாழ்வது தான் தமிழனின் வாழ்வாகி விட்டது.
ஒரு சின்ன வேண்டுகோள்: உங்கள் புறொபைலில் உள்ள வயதை எடுங்கோ.. அண்ணா என்று கூறிப் பின்னூட்டம் இடும் போது உங்கள் கருத்துக்கள் மழுங்கடிக்கப்ப்ட்டு விடும். காரணம் நீங்கள் இளையவர் என்று ஏனையவர்கள் கருதுவதால். இதுவும் இன்னொரு அண்ணாவின் ஆதங்கம்...

Anonymous said...

nala eruku aana enga erunthu copy panurenga endru than theyreyala

kuma36 said...

//அன்று எனக்காக அழஆயிரம் உறவுகள் இன்று பல உறவுகளுக்காக நான் அழுகிறேன்///

மிகவும் உருக்கமான வரிகள்

Sinthu said...

"thevanmayam கூறியது...

போகப்போக நிறைய புரியும்"

எல்லோரும் எல்லோரையும் புரிந்தால் பிரச்சினையே இல்லையே.... தேவா அண்ணா..

"விதி..."
வாய் விட்டு சொல்லக் கூட வழி இல்லாமல் நம்மவர்கள்..

"அழவேண்டாம்!!
பொறுமையுடன் இரு.."
எப்படி.....?

Sinthu said...

"
துஷா கூறியது...
கவிதை நல்ல இருக்கு சிந்து
தாய் மண்ணைப் பிரிந்ததை விட அங்கு நடக்கும் விடயங்களே அதிக வேதனையை ஏற்படுத்துகின்றது அடுத்தது என்ன நடக்கும் என்று ஆண்டவனுக்கும் தெரியவில்லை போலும்"

நீங்கள் சொல்வது சரி துஷா அக்கா...

Sinthu said...
This comment has been removed by the author.
Sinthu said...

"
NIRo கூறியது...
nala eruku aana enga erunthu copy panurenga endru than theyreyala"
எப்படிக் கண்டு பிடித்தீர் நிரோ.. என் மனதிலிருந்து தான் copy பண்ணினேன்..
உண்மை நிலைமையைச் சொல்லி இருக்கிறேன்..

Sinthu said...

நன்றி கலை அண்ணா..

Prapa said...

நிரோ நல்ல பதில் கிடைச்சிருக்குமே ! சூப்பர் சிந்து .

Sinthu said...

"கமல் கூறியது...

ஏக்கங்களின் பிரதிபலிப்புக்களோடு வாழ்வது தான் தமிழனின் வாழ்வாகி விட்டது.
ஒரு சின்ன வேண்டுகோள்: உங்கள் புறொபைலில் உள்ள வயதை எடுங்கோ.. அண்ணா என்று கூறிப் பின்னூட்டம் இடும் போது உங்கள் கருத்துக்கள் மழுங்கடிக்கப்ப்ட்டு விடும். காரணம் நீங்கள் இளையவர் என்று ஏனையவர்கள் கருதுவதால். இதுவும் இன்னொரு அண்ணாவின் ஆதங்கம்..."

என்னைத் தங்கையாக ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. வயதை எடுத்து விட்டேன். நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால், என் வயதை வைத்து என் கருத்தை மதிப்பிடுபவர்கள் ஒரு போதுமே உண்மை நிலைமையைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். உண்மை நிலைமை தெரிந்தவர்கள் என்னுடைய கருத்தை மதிப்பவர்கள் என்று நம்புகிறேன். வருகைக்கும் அக்கறைக்கும் நன்றி....

ஆதவா said...

இன்று பல உறவுகளுக்காக
நான் அழுகிறேன்

யாருக்காகவோ அழுபவர்கள்தான் தெய்வங்கள் ஆகிறார்கள்...... நீங்கள் அழுதிருந்தீர்களேயானால் ஒரு தெய்வமாகிறீர்கள்...

கவிதை பிரமாதமாக இருக்கிறது

ஆதவா said...

பிரிவைக் கூட தாங்கிவிடலாம்... ஆனால் இழப்பைத் தாங்க முடியாது....

காயங்கள் படும் காலமிது.... ஆறும் காலமும் விரைவில் வரும்

ஆதவா said...

பிரிவைக் கூட தாங்கிவிடலாம்... ஆனால் இழப்பைத் தாங்க முடியாது....

காயங்கள் படும் காலமிது.... ஆறும் காலமும் விரைவில் வரும்

Sinthu said...

"
ஆதவா கூறியது...
இன்று பல உறவுகளுக்காக
நான் அழுகிறேன்

யாருக்காகவோ அழுபவர்கள்தான் தெய்வங்கள் ஆகிறார்கள்...... நீங்கள் அழுதிருந்தீர்களேயானால் ஒரு தெய்வமாகிறீர்கள்...

கவிதை பிரமாதமாக இருக்கிறது"

மனிதர்களாகவே மதிக்கப் படாதவர்களில் நானும் ஒருத்தி அப்புறம் எப்படிக் கடவுளாவது

"
ஆதவா கூறியது...
பிரிவைக் கூட தாங்கிவிடலாம்... ஆனால் இழப்பைத் தாங்க முடியாது....

காயங்கள் படும் காலமிது.... ஆறும் காலமும் விரைவில் வரும்"
நம்பி நம்பியே கெட்டுப் போனவர்கள் நா...