என்ன அப்படி பாக்கிறீங்க..
இன்று இலங்கையின் சுதந்திர தினமாம்.. உண்மையா?
நம் நாட்டிலேயே
அந்நியராக்கப்பட்ட
அடிமைகள்...
அங்கே சகல
மரியாதைகளுடன்
நடப்பது...?
ஏதோ சுதந்திர தினமாம்
சொல்கிறார்கள்..
ரத்த வெறியுடன்
கொண்டாடப்படுவது
தான் சுதந்திர தினமோ...
இரத்தம் குடித்து,
இன்னொருவனின்
துன்பத்தில் வாழ்வது
ஒரு வாழ்க்கை....
சாபங்களின் மத்தியில்
போலியான வாழ்க்கை
எத்தனை நாட்களுக்கு...
வெள்ளைக்காரனை
விரட்டினார்களாம்
சுதந்திரம் கிடைத்ததாம்
சமூகக் கல்வி படித்திருந்தால்
மட்டுமே
அறியக்கூடிய நிலையில்
நம்மவர்கள்
ஒருபோதும் சுதந்திரமாக
இருக்கவில்லை அவர்கள்....
இனியாவது கிடைக்குமா
சுதந்திரம்
5 comments:
neega sollvathu sare
இலங்கைக்கு திரும்பிபோகிற நோக்கமில்லையோ?. இவன் கோத்தபாயாட ஆட்கள் தினமும் தமிழாட்கள் எழுதுகிற வலைப்பதிவை அலசுறாங்கள் எண்டு கேள்வி..
"ஈழச்சோழன் கூறியது...
இலங்கைக்கு திரும்பிபோகிற நோக்கமில்லையோ?. இவன் கோத்தபாயாட ஆட்கள் தினமும் தமிழாட்கள் எழுதுகிற வலைப்பதிவை அலசுறாங்கள் எண்டு கேள்வி.."
நீங்க சொல்வது உண்மை தான்..ஆனால், நான் தமிழரின் நிலையைச் சொன்னேனே தவிர யாரையும் சார்ந்து சொல்லவில்லையே.. ஒரு நாட்டு சுதந்திரமடைந்துள்ளது என்றால் நாட்டிலுள்ள சகல மக்களும் சேர்ந்து தான் சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும்.
thank Niro....
சிறிலங்காவின் தேசியக்கொடி தமிழர்களுக்கு எதிராக இருக்கின்றது. சிறிலங்காவின் அரசியல் யாப்பு தமிழர்களுக்கு எதிரானதாக இருக்கின்றது. சிறிலங்காவின் சட்டமும், நீதியும் தமிழர்களுக்கு எதிராக இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக சிறிலங்கா ஓர் இறைமை இல்லாத நாடாக இருக்கின்றது.
இப்படிப்பட்ட ஒரு நாடு சுதந்திர தினம் கொண்டாடத்தான் வேண்டுமா?
1948-02-04 சுதந்திரம் கிடைத்த நாளல்ல... நமது உரிமைகள் பறிக்கப்பட்ட ஒரு கரிநாள்...
Post a Comment