உன்னால் மட்டும் - என்
மனநிலையைப்
புரிந்துகொள்ள முடிகிறதே
எப்படி...........?
என்னாலேயே
சமாதானப் படுத்த என்னை
கட்டிப் போடும் - நீ
சதாரணவளாக
இருக்க முடியாது.
தனிமையைப் புரிய வைத்த
அற்புத உறவு
அழுகைக்கு ஓய்வு தந்த
ஆலோசகர்
உணர்வுகளைப் புரிய வைத்த
ஆசான் நீ மட்டுமே..
சிறிய தவறுகளையே
பெரிதாக - நீ
காட்டியதால்
தவறுகளைத்
தவிர்த்துக் கொண்டேன்..
வாழ்க்கையை
நெறிப் படுத்திய
உன் சுருதி, நாதம்
என்றென்றும் என்னுடன்......
19 comments:
கவிதை முழுதும் அருமை
\\வாழ்க்கையை
நெறிப் படுத்திய
உன் சுருதி, நாதம்
என்றென்றும் என்னுடன்.\\
இது மிகவும் அருமை.
நன்றி ஜமால் அண்ணா....
arumaiyana kavithai
"MayVee கூறியது...
arumaiyana kavithai"
thanks.......
thanks for ur coming also...
என்னாலேயே
சமாதானப் படுத்த என்னை
கட்டிப் போடும் - நீ
சதாரணவளாக
இருக்க முடியாது.
தனிமையைப் புரிய வைத்த
அற்புத உறவு
அழுகைக்கு ஓய்வு தந்த
ஆலோசகர்
உணர்வுகளைப் புரிய வைத்த
ஆசான் நீ மட்டுமே..
வாழ்க்கையை
நெறிப் படுத்திய
உன் சுருதி, நாதம்
என்றென்றும் என்னுடன்......
கவிதை அருமை ..
உங்களுடைய கவிதைகளுக்கு வாழ்த்துக்கள். பங்களாதேஸின் நடைமுறைவாழ்க்கை மற்றும் கல்விமுறை பற்றியும் கொஞ்சம் எழுதினால் நாங்களும் தெரிந்துகொள்ளலாம். காரணம் இந்தநாட்டில் நம்மவர்கள் குறைவு. சாதகமாக இருந்தால் நானும் போய் குடியேறலாம் என்கிற யோசனையும் இருக்கிறது.
nandraaga eruku
enum koncham muyad c seitherukalam
கவிதைகள் அனைத்தும் அழகு..மற்ற பதிவுகளையும் பொறுமையாக படித்து கருத்திடுகிறேன். வாழ்த்துக்கள்
உலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. . அந்த சினிமாக்கள் எவை..?
அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.
உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும். வங்க மொழி படமான Rupantor பற்றியும் எழுதியுள்ளேன்.
அள்ளிதர நட்புடன்
சூர்யா
"
நிலாவன் கூறியது...
கவிதை அருமை .."
நன்றி
"ஈழச்சோழன் கூறியது...
உங்களுடைய கவிதைகளுக்கு வாழ்த்துக்கள். பங்களாதேஸின் நடைமுறைவாழ்க்கை மற்றும் கல்விமுறை பற்றியும் கொஞ்சம் எழுதினால் நாங்களும் தெரிந்துகொள்ளலாம். காரணம் இந்தநாட்டில் நம்மவர்கள் குறைவு. சாதகமாக இருந்தால் நானும் போய் குடியேறலாம் என்கிற யோசனையும் இருக்கிறது."
எழுதலாம் தான் அதற்கு அனுபவம் பத்தாது எனக்கு.. ஏன் என்றால் அதிகம் வெளியிடங்களுக்கு செல்ல நேரம் கிடைப்பதில்லை. மற்றும் குடிஎருவதா? அதற்கு பங்களா (இந்த நாட்டு மொழி )தெரியாட்டி இருந்து வேலை இல்லை.. உங்களுக்கு நம்ம நாட்டு சாப்பாடும் கிடைக்காது... நாங்க இங்க தான் இருக்கணும் (பரவாயில்லை இது ஒரு அமெரிக்கன் பல்கலைக் கலக்கம், இதற்கும் இந்த நாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் இடம் மாத்திரம் இங்கு....
வாழ் நினைத்தால் வாழலாம் என்று நீங்கள் நினைப்பவராக இருந்தால் வாங்க
நல்வரவு.. வாங்க... வாங்க...
நீங்க சொனதட்காகவாவது எழுதுகிறேன்..
"kuppan கூறியது...
nandraaga eruku
enum koncham muyad c seitherukalam"
உண்மையைச் சொன்னதற்கு நன்றி....கண்டிப்பாக முயற்சிக்கிறேன்
" வண்ணத்துபூச்சியார் கூறியது...
கவிதைகள் அனைத்தும் அழகு..மற்ற பதிவுகளையும் பொறுமையாக படித்து கருத்திடுகிறேன். வாழ்த்துக்கள்
உலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. . அந்த சினிமாக்கள் எவை..?
அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.
உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும். வங்க மொழி படமான Rupantor பற்றியும் எழுதியுள்ளேன்.
அள்ளிதர நட்புடன்
சூர்யா"
நன்றி....
உங்கள் வலைப்போவுக்கு கண்டிப்பாக நான் வரத் தான் வேண்டு ஏன் எனில் இங்கு தமிழ் படமே பார்க்க முடியாதே....
வருகைக்கு நன்றிகள்....
சிந்து
அன்பின் சிந்து,
வணக்கம்!
இன்று வலச்சரத்தில்
உங்களைப்ப்ற்றி
எழுத உள்ளேன்.
வந்து பின்னூட்டத்தில்
கலந்து கொள்ளவும்
தேவா.ஒரு பின்னூட்டம்
பத்தாது..100 பின்னூட்டம்
நீ போட வேண்டும்..
மனநிலையைப் புரிந்து கொள்பவனைக் காட்டிலும் உண்மையான நண்பன் வேறு யாரும் இருக்கமுடியாது.. அது சங்கீதமே ஆனாலும்...
அருமையாக இருக்கிறது...
//சிறிய தவறுகளையே
பெரிதாக - நீ
காட்டியதால்
தவறுகளைத்
தவிர்த்துக் கொண்டேன்..//
புரிந்துணர்விருந்தால் வாழ்க்கை நிச்சயம் இனிக்கும். தொடர்க, கவிதைப்பயணமும், புரிந்துணர்வும்!
"
thevanmayam கூறியது...
அன்பின் சிந்து,
வணக்கம்!
இன்று வலச்சரத்தில்
உங்களைப்ப்ற்றி
எழுத உள்ளேன்.
வந்து பின்னூட்டத்தில்
கலந்து கொள்ளவும்
தேவா.ஒரு பின்னூட்டம்
பத்தாது..100 பின்னூட்டம்
நீ போட வேண்டும்.."
நேரத்திடம் அனுமதி பெற்றே கருத்து போட வேண்டி உள்ளதால் கொஞ்சம் தாமதாம் வராம விடல்லையே.. இன்று கிடைத்த நேரத்தைப் பயன் படுத்தியுள்ளேன்....
"
ஆதவா கூறியது...
மனநிலையைப் புரிந்து கொள்பவனைக் காட்டிலும் உண்மையான நண்பன் வேறு யாரும் இருக்கமுடியாது.. அது சங்கீதமே ஆனாலும்...
அருமையாக இருக்கிறது..."
அப்படியான நண்பர்கள் கிடைப்பதும் அருமையே..
நன்றி...
"
அன்புமணி கூறியது...
//சிறிய தவறுகளையே
பெரிதாக - நீ
காட்டியதால்
தவறுகளைத்
தவிர்த்துக் கொண்டேன்..//
புரிந்துணர்விருந்தால் வாழ்க்கை நிச்சயம் இனிக்கும். தொடர்க, கவிதைப்பயணமும், புரிந்துணர்வும்!"
முயற்சிக்கிறேன்....
நன்றி..
இந்த சிறியவளின் வலைத் தளத்தையும் ஒரு பொருட்டாகக் கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி...
"என்னாலேயே
சமாதானப் படுத்த என்னை
கட்டிப் போடும் - நீ
சதாரணவளாக
இருக்க முடியாது."
சிந்து! நிஜம், உண்மை, அழகு.....
மிகவும் அருமை.
"பிரபு கூறியது...
மிகவும் அருமை"
thanks........
Post a Comment