எனக்கும் விருதா..............?
அதிசயம் ஆனால் உண்மை என்று பத்திரிகையில் படித்து தான் தெரிந்த எனக்கு, இந்த வலையுலகத்தில் பல அதிசயங்கள் நிகழ்ந்துவிட்டன (இந்த
விருதுகளைத் தான் சொன்னேன்....)
எனக்கு சந்ரு அண்ணா ஒரு விருது கொடுத்து இருக்கிறார். எதுக்காகக் கொடுத்தார் என்று என்க்குத் தெரியாது. அவருக்கு ஒரு நன்றி சொல்லாவிட்டால் எப்படி.. நன்றி அண்ணா....
இந்த வலையுலகத்தில் என்னையும் ஆர்வப்படுத்தப் பலர் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது ரொம்பவே சந்தோசமா இருக்கிறது. விருதில ஒரு சொல் "scrumptious" இந்த சொல்லை நான் சாப்பாட்டுக்குத் தான் அதிகமாகப் பயன்படுத்துவேன். (என்னடா இவள் சாப்பாட்டைப் பற்றியே அதிகம் நினைப்பீர்களோ? என்று கேக்கிறீங்க என்று புரிகிறது.) ஆனால் விருதில போட்டிருப்பதன் அர்த்தம் வேறாக இருந்தாலும், இந்த சொல்லைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது சாப்பாடு தான் (உண்மையை சொல்லி இருக்கிறேன், நம்புங்க..)
இந்த விருதை இன்னும் பத்து பேருக்குக் கொடுக்கணுமாம், ஆனால் நான் இதை ஆறு பேருக்குத் தான் கொடுக்கப் போகிறேன். அவங்க இவங்க தான்.......
தமிழ்த்துளி
அருண் பிரசாத்
ஹிஷாம் முஹம்மத்
கலை - இராகலை
வதீஸ்வருணன்
கார்க்கி
பி:கு: நான் ஆறு பாருக்குத் தான் விருது வழங்கி இருக்கிறேன் என்பதற்காக் நீங்களும் ஆறு பேருடன் நிறுத்தி விடாதீங்க. பத்து பேருக்கு கொடுங்க.
9 comments:
விருது பெற்ற உங்களுக்கும், உங்கள் மூலம் விருது பெறுவோருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்து(க்)கள் சிந்து
மிக்க நன்றி சிந்து!
பாடங்கள் தொடங்கிவிட்டனவா?
நன்றி சந்ரு அண்ணா, சுபாங்கன் அண்ணா, தேவா அண்ணா...
பாடங்கள் தொடங்கிவிட்டன...
அதிகம் பெண்கள் தான் professors ஒரு ஆண்கள் இருக்காங்க, ஆனால் அவங்களும் கல்யாணம் கட்டிட்டாங்க.... sight அடிக்க முடியல்ல... boring..............
உங்கள் விருதுக்கு மிக்க நன்றி சிந்து.
நேரம் காரணமாக வலையுலக பக்கம் முன்புபோல வரமுடிவதில்லை.
மிகவிரைவில் மீண்டும் வந்து எழுதுவேன்
//அதிகம் பெண்கள் தான் professors ஒரு ஆண்கள் இருக்காங்க, ஆனால் அவங்களும் கல்யாணம் கட்டிட்டாங்க.... sight அடிக்க முடியல்ல... boring..............//
ஆஹா நீங்களுமா.... சொல்லவே இல்ல...
விருது பெற்றதுக்கும் கொடுத்ததுக்கும் வாழ்த்துக்கள்
எனது தளத்தை பார்க்கவும்!
Post a Comment